Tamil Bayan Points

பாங்கு இகாமத் இடையே துஆ

முக்கிய குறிப்புகள்: மாற்றப்பட்ட நிலைப்பாடுகள்

Last Updated on March 10, 2022 by

துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்

437 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ زَيْدٍ الْعَمِّيِّ عَنْ أَبِي إِيَاسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ رواه ابوداود

பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்கள் : அபூதாவூத் (437), திர்மிதீ (196), அஹ்மத் (11755), முஸ்னத் அபீயஃலா (4147), பைஹகீ (2013), தப்ரானீ-அவ்ஸத் (4053), அத்துஆ-தப்ரானீ (483), அத்துஆ -பைஹகீ (60), முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக் (1909)

இச்செய்தி இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் ஸைத் அல்அம்மீ என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.