பாக்டீரியாவும் நன்மைக்கே

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

குடிநீரில் எண்ணற்ற நுண்ணியிரிகள் (பாக்டீரியா) காணப்படுகின்றன. இதனால் தான் நீர் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. 

குடிநீர் குழாய்களில் தான் இந்த நுண்ணியிரிகள் அதிகம் காணப்படுகின்றன. இவை குழாய்களின் உள்ளே ஒரு மெல்லிய படலத்தை (பயோபிலிம்) உருவாக்கி, நீர் மாசு படாமல் காக்கிறது.

சுத்திகரிப்பு நிலையங்களைவிட, நுண்ணயிரிகளின் உதவியால் குழாய்களில் தான் குடிநீர் அதிகம் சுத்தம் செய்யப்படுகிறது. இது, முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்படவில்லை.  தற்போதைய ஆராய்ச்சியின் போது எதிர்பாராதவிதமாக ஒரு மில்லி லிட்டர் நீரில் 80 ஆயிரம் நுண்ணியிரிகள் இருப்பது தெரிய வந்தது.

இந்த நன்மை செய்யும் நுண்ணியிரிகளின் செயலை தொடர்ந்து கண்காணித்து வந்த போது, நீரின் பாதுகாப்புக்கு காரணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சுவீடன் பல்கலை ஆராய்ச்சியாளர் கேத்தரின் பால் தெரிவித்தார்.

ஒரு ‘டம்ளர்’ துாய்மையான குடிநீரில் ஒரு கோடிக்கும் அதிகமான நன்மை செய்யும் நுண்ணியிரிகள் உள்ளன. ‘மைக்ராஸ்கோப்’ மூலம் பார்த்தால் இந்த நுண்ணியிரிகளின் பணி தெரிய வரும். இந்த ஆராய்ச்சி குடிநீர் குழாய்களின் அமைப்பை மேம்படுத்த உதவும் என கூறப் படுகிறது.