படைத்தவனின் பாதையை நோக்கிய பயணம்!
நாம் வாழும் இந்த உலகில் பல கோடானகோடி மக்கள் வாழ்கிறார்கள். எல்லா மனிதர்களுமே ஒரே மார்க்கத்திலும், கொள்கையிலும், கோட்பாட்டிலும் இல்லை. ஒவ்வொரும் தனித்த சில கூட்டங்களாகவும், சில கொள்கையுடைவர்களாவும் பிரிந்து, பிளவுபட்டுக் கிடக்கின்றனர். இப்படி இருக்கிற சமூகத்தில் யாருக்கும் வழங்கப்படாத சிறப்புகள் நிறைந்த கண்ணியங்களைப் பெற்றுத் தருகின்ற இந்த (தவ்ஹீத் எனும்) நேரிய பாதையில் நாமெல்லாம் பயணித்து வருகிறோம். ஏகனுக்கே புகழனைத்தும்!
நாம் பயணிக்கும் இந்த சத்தியப் பாதையில் அனைவரும் சங்கமிக்க நாம் செய்த முயற்சிகள் என்ன? நேர்வழிக்கு அழைத்து வர செய்ய வேண்டிய காரியங்கள் என்ன? என்பதை அறிந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.
இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக மக்களுக்கு அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களுமே மக்களை வழிகேட்டியிருந்து காத்து, இறைவனின் (பாதையை) நேர்வழியை நோக்கி அழைத்து வருவதையே பணியாகக் கொண்டு தங்கள் வாழ்நாளின் இறுதிமூச்சு வரை பயணித்தார்கள்.
நபி நூஹ் (அலை) 950 வருடங்கள் வாழ்ந்தார்கள். நபியாக இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து இறுதிகாலம் வரை தன் சமூகத்தாரை நேர்வழி நோக்கி அழைப்பதையே முழுநேரப் பணியாகக் கொண்டு பயணித்தார்கள். தன்னுடைய அழைப்புப்பணியை எப்படி செய்தேன் என்பதை இறைவனிடம் பிரார்த்தைனையில் கொட்டித் தீர்க்கிறார்கள்.
“என் இறைவனே! நான் இரவிலும் பகலிலும் எனது சமுதாயத்தை (நேர்வழிக்கு) அழைத்தேன்.ஆனால், எனது அழைப்பு வெருண்டோடுவதையே அவர்களுக்கு அதிகரித்தது” என்று கூறினார்.
தன்னுடைய சமூகத்தை படைத்தவனின் பாதையை நோக்கி இரவு, பசுலாக அழைத்தார். ஆனால் அவர்களோ நேர்வழியின் மகிமையை அறியாமல் வெருண்டோடினார்கள்.
நபி இப்ராஹிம் (அலை) தன்னுடைய சமூகத்தாரை தேர்வழியை நோக்கி அழைத்த நிகழ்வை இறைவன் எடுத்துரைக்கிறான். தன் திருமறையில்
இப்ராஹீமையும் (தூதராக அனுப்பினோம்.) அவர் தமது சமுகத்தினரை நோக்கி “அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள்! அவனையே அஞ்சுங்கள். நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
தன் சமூக மக்கள் நேர்வழியை விட்டுத் தவறி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, நான் மட்டும் நேர்வழியில் இருப்பது சிறந்ததல்ல, தன்னுடைய சமூக மக்களும் நேர்வழி பெற வேண்டும் என்ற சுயநலமில்லா ஒரு உன்னத உழைப்பை நபிமார்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
தன்னைச் சுற்றியிருக்கின்ற. தன்னோடு நெருங்கிப் பழகுகின்ற, இன்ப துன்பங்களில் நம்மோடு பங்கெடுக்கின்ற நமது உடன் பிறவா சகோதரர்களை நேர்வழியை நோக்கி அழைப்பதில் நம்முடைய நிலை என்ன?
இறைவனால் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதர்கள் அனைவர்களுமே சில விஷயங்களில் சுயநலமுடயவர்களாகத் தான் இருக்கிறார்கள். உதாரணமாக காலகட்டம் சமீபத்திய கொரோனாவின் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிப் போட்டது. அனைத்து நபர்களையும் சுயநலமாக்கியது. நான் நன்றாக இருந்தால் போதும், தன்னுடைய குடும்பத்தாரில் யாரும் நோயால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது, தெருங்கிப் பழகுகின்ற யாரும் நோயால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு குடும்ப மற்றும் நண்பனின் சுயநலத்தோடு தன்னுடைய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்கும். நண்பனுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டார்கள். உள்ள முன்பாகவே
இப்படியான எதற்கு? முன்னெச்சரிக்கைகள் ஏன் இப்படியான அச்சங்கள்? ஒருவர் இந்த (கொரோனோ) நோயினால் பாதிக்கப்பட்டால் ஆம்புலன்ஸ் வசதிகள் குறைவு, மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை; ஆக்ஸிஜன் வசதிகள் இல்லை. மீள்வது கடினம். உடலாலும், மனதாலும் பாதிப்புகள் அதிகம். காரணங்களே இப்படியான செய்ய வைத்தது. முன்னேற்பாடு
இந்த உலகத்தின் நோய்களிலிருந்து தன்னையும், தன்னுடைய குடும்பத்தாரையும். தன்னோடு நெருங்கிப்பழகுகின்ற நண்பர்களையும் தடுக்க ஓடும் மனிதன் மறுமையின் இறைவனின் கடும்பிடியிலிருந்து பாதுகாக்க ஓடாமல் இருப்பது ஏன்?
நம்முடைய குடும்பத்தார். நம்மோடு இருக்கிற நண்பர் நேர்வழியை விட்டும் தவறியிருக்கிறார்களே! பாதையில் இதே அசத்தியப் பயணித்தால் இறைவனிடம் இருக்கும் மிகக் கொடூரமான நரகத்தில் தூக்கி எறியப்படுவார்களே! என்று நபிமார்களுக்கு இருந்த சிறு வருத்தம் கூட நம்மில் இன்றைக்கும் பலரிடத்தில் ஏன் இல்லை?
நான் மட்டும் சுவனம் சென்றால் போதும்; என்னைச் சுற்றியுள்ள என்னோடு இருப்பவர். என்னுடைய குடும்பத்தார்கள், தாய், தந்தை மனைவி, பிள்ளைகள் நரகத்திற்குச் சென்றால் எனக்கென்ன? என்ற உள்ளத்தினுடைய வார்த்தைகள் தான் அவர்களை நேர்வழிக்கு அழைப்பதை விட்டும் நம்மைத் தடுக்கிறதா? நான் எப்படி அவ்வாறு நினைப்பேன் என்று நமது கோப வார்த்தைகள் ‘இல்லை’ என்று மறுத்தாலும் நமது செயல்பாடுகள் அப்படித்தானே உள்ளது. இதுவெல்லாம் சுயநலமான வாழ்க்கையாகத் தெரியவில்லையா?
அசத்தியப் பாதையில் இருக்கும் யார் மீதும் சிறிதும் அக்கறை கொள்ளாமலும், அவர்களை நேர்வழிப்படுத்த முயற்சிக்காதவர்களும் நிச்சயம் சுயநலவாதிகள் தான் என்பதை நாம் ஆணித்தரமாகச் சொல்ல இயலும்.
நபிகளாரால் செதுக்கப்பட்ட தோழர்கள் ஆரம்ப காலத்தில் தனக்குக் கிடைத்த இந்த சத்தியக் கொள்கையை தன்னோடு இருக்கின்ற சக நண்பர்களுக்கு எடுத்துச் சொல்வதையே வழக்கமாக வைத்திருந்தார்கள் என்பதற்கு மிக அற்புதமான உதாரணமாக அமைந்த செய்தி இதோ!
கஅப் இப்னு மாலிக் (ரலி) கூறினார்கள்:
நாங்கள் ஹஜ் செய்ய மக்காவிற்க்கு வந்தோம். ஹஜ் முடிந்த இரண்டாவது நிளத்தில் அகாபாவில் சந்திக்கலாம் என்று நபி(ஸல்) அவர்களிடம் பேசி முடிவு செய்தோம். அதன்படி நபிகளார் அவர்களை சந்திக்கத் தயாரானோம். அப்போது எங்களது தலைவர்களில் சிறப்புமிக்க ஒருவரான ஆபூஜாபிர் எனப்படும் அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னு ஹராம் என்பவரையும் உடன் அழைத்துக் கொண்டோம். எங்களுடன் வந்தவர்களில் அதுவரை இஸ்லாமை ஏற்காமல் இருந்தவர்களுக்கு இதைப் பற்றி எதையும் கூறவில்லை. அபூஜாபிருக்கு இஸ்லாமை பற்றி விளக்கம் கொடுத்தோம். “அபூஜாபிரே! நீங்கள் எங்கள் தலைவர்களில் ஒருத்தர். நீங்கள் நாளை நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறி இஸ்லாமை ஏற்க அழைப்புக் கொடுத்தோம். நாங்கள் நபி (ஸல்) அவர்களை அகபாவில் சந்திக்க இருக்கிறோம் என்பதையும் சொன்னோம். அவர் எங்களின் அழைப்பை ஏற்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். (ஹதீஸின் சுருக்கம்..)
மேலுள்ள செய்தியில் நபித்தோழர்கள் தங்கள் ஏற்ற இந்த சத்திய மார்க்கத்தை நம்மோடு நெருங்கி இருக்கும் நண்பர்களுக்கும் இந்த மார்க்கத்தை சொல்லி அழைப்புக்கொடுக்க வேண்டும் என்பதையே முதன்மையாக கொண்டிருந்தார்கள்.
நபி(ஸல்) குடும்பத்தாரையும். அவர்கள் தன்னுடைய தன்னை சார்ந்து இருப்பவர்களையும் சத்தியத்தை நோக்கி அழைப்பதில் சோர்ந்து விடவில்லை. பிறரது மரணத்தருவாயிலும் கூட சத்தியத்தை நோக்கி அழைப்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, நோய் விசாரிக்க நபி(ஸல்) அவர்கள் அவனிடம் வந்து அவனுடைய தலைமாட்டில் அமர்ந்து, “இஸ்லாத்தை ஏற்றுக் கொள்”! என்றார்கள்.உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையப் பார்த்தான். அப்போது அவர், “அபுய் காஸிம் (நபி(ஸல்) அவர்களின்) கூற்றுக் கட்டுபடு” என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான்.உடனே நபி(ஸல்) அவர்கள்,”இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
நூல்: (புகாரி: 1356)
தன்னிடம் பணிபுரிந்த சிறுவன் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருக்கின்றார் என்ற நிலை அறிந்து அவனை சந்திக்கச் சென்ற நபிகளார் இதே நிலையில் அவர் மரணித்தால் தோலை;யி கரித்து விடும் மிகக் கொடூரமான தரகத்தை இறைவன் தந்துவிடுவானே என்ற அச்சத்தினால் நபிகளார் அசத்தியத்திலிருந்து சத்தியப் பாதைக்கு அழைப்புக் கொடுத்தார்கள்.
இன்றைக்கு நம்மில் பலர் இஸ்லாத்தில் இருக்கும் மாற்றுக் கருத்துடையவர்களிடம் இஸ்லாத்தை வாழ்வில் கடைப்பிடியுங்கள் என கூறுவதே சாத்தியமற்ற விஷயமாக உள்ளது. இப்படி இருக்கும் போது மாற்று மதத்தைச் சார்ந்தவர்களிடம் எவ்வாறு இஸ்லாத்தை எடுத்துரைப்போம்?
ஆனால், ஏற்காதவர்களையும், நபிகளார் கொள்கையுடைவர்களையும் நோக்கி அழைப்பத்தைத்தான் கொண்டிருந்தார்கள் அழைப்பு இதோ… இஸ்லாத்தை மாற்றுக் இஸ்லாத்தை நோக்கமாகக் என்பதை உணர்த்தும்
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்)
நேர்வழியைப் பின்பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.
இறை வாழ்த்துக்குப் பின் (விஷயம் என்னவென்றால்) இஸ்லாமை ஏற்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள்) (ஏற்றுக் கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்பு பெறுவீர்கள். (நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால்) அல்லாஹ் உங்களுக்குச் சோ வேண்டிய நன்மைகளை இருமடங்காகத் தருவாள். நீங்கள் புறக்கணித்தால் (உங்கள் நாட்டுக் குடிமக்களான) குடியானவர்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாமை ஏற்காமல் போவதன் குற்றமும்) உங்களையே சேரும்.
“வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது அல்லாஹ்வை விட்டுவிட்டு நம்மில் சிலர், சிலரைக் கடவுளர்களாக ஆக்கக் கூடாது’ என்ற எங்களுக்கும் உங்களுக்குமிடையிலான பொதுவான கோட்பாட்டுக்கு வாருங்கள்” என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறிவிடுங்கள். (ஹதீஸின் சுருக்கம்)
நூல்: (புகாரி: 4553)
நபிகளார் ஹெராக்ளியஸ் எனும் மாற்றுக் கொள்கையைச் சேர்ந்த ரோமாபுரி மன்னருக்கு கடிதத்தை அனுப்பி இஸ்லாத்தை ஏற்க அழைப்புக் கொடுத்தார்கள் என்பதுதான் இந்தச் செய்தியிலிருந்து தெளிவாகிறது.
இஸ்லாத்தை ஏற்க என் குடும்பத்தாருக்கும். உறவினர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் இஸ்லாம் குறித்த நற்கருத்துக்களை சொல்லி இஸ்லாத்தை ஏற்க அழைப்புக் கொடுத்தேன். ஆனால், அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்ற எண்ணத்தோடு இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு கடந்து செல்கிறோம்.
அபூஹீரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தவ்ஸ் குலத்தார் (இறைவனுக்கு) மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க) மறுத்து விட்டனர். அவர்களுக்கெதிராகத் தாங்கள் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் என்று மக்களும் எண்ணினர். (ஆனால்) நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டு வந்து விடுவாயாக” என்று (நல்வழி வேண்டிப்) பிரார்த்தித்தார்கள்.
நூல்: (புகாரி: 6397)
ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் என்னால் முடிந்த வரை ஒருவரையாவது அசத்தியப் பாதையை விட்டும் நேர்வழியை நோக்கி அழைத்து வருவேன் என்ற ஒரு குறிக்கோளை உள்ளத்தில் உறுதி கொண்டவர்களாக இருந்தால்தான் அந்த இலக்கை அடைய முடியும்.
நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின் போது அலீ (ரலி) அவர்களின் கையில் கொடியைக் கொடுத்து விட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களின் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது ரபுகளின் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக் கொள்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்..)
(நூல்: (புகாரி: 4210)
அரேபியர்களில் யார் சிவப்பு ஒட்டகம் வைத்திருக்கிறாரோ அவர் சிறப்பாகப் பார்க்கப்படும் வழமை இருந்தது. நமக்குப் புரியும் வகையில் சொல்வதாக இருந்தால் பல கோடிகளுக்கு மதிப்பான காரை ஒருவர் சொந்தமாக்கிக் கொள்வதைப் போன்று!
நாம் ஒரே ஒருவரை இந்த சத்தியக் கொள்கையை நோக்கி அழைத்து வருவது, சிவப்பு ஒட்டகத்தை விடச் சிறந்தது. இன்றைக்கு நம்மில் யாரிடமும் சிகப்பு ஒட்டகமில்லாமல் இருக்கலாம்.
இப்படியான சிறந்த சிறப்பிற்குரிய சிவப்பு ஒட்டகத்தின் நன்மையை நாம் மரணிப்பதற்குள்ளாக அடைகின்ற வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவன் இந்தச் சிறப்புகள் நிறைந்த வாய்ப்பை நமக்குத் தர பிரார்த்திப்போமாக!