நான் காதலிக்கும் பெண்ணை, பெற்றோர் மறுக்கின்றனர்
முக்கிய குறிப்புகள்:
குடும்ப வழக்குகள்
மகனின் புகார்
நான் காதலிக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணை, எனக்கு திருமணம் செய்து வைக்க, எனது பெற்றோர் மறுக்கின்றனர். நான் என்ன செய்வது?
தீர்வு
உங்களது விருப்பத்தை பெற்றோர்களுக்கு முடிந்த வரை புரிய வையுங்கள். அதைத் தாண்டி,
- நீங்கள் விரும்பக் கூடியவர் மார்க்க அடிப்படையில் தகுதி இல்லாதவர் என்று அவர்கள் மறுத்தால் அதை மீறுவது, உங்கள் மீது குற்றமாகி விடும்.
- அவ்வாறு இல்லாமல் இன வெறி, குல வெறி போன்ற காரணத்துக்காகவோ,
- பெண்வீட்டார் பொருளாதாரத்தில் ஏழை என்பதற்காகவே,
- பெண்வீட்டார் சமுதாயத்தில் மதிப்பு குறைந்தவர் என்பதற்காகவே தகுதியுள்ள துணையை அவர்கள் மறுத்தால் அவர்களை மீறுவது உங்கள் மீது குற்றமாகாது.
இறைவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் மனிதனுக்கு கட்டுப்படுதல் இல்லை என்பது நபி மொழி. (புகாரி: 7144)
எனவே, நியாமில்லாத காரணத்திற்காக அவர்கள் மறுத்தால், பெற்றோர்களை மீறுவது உங்கள் மீது குற்றமாகாது.