நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்புகள் – 1
மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
அல் குர்ஆனும், ஆதாரப்பூர்வமான செய்திகளும் நபி (ஸல்) அவர்களுக்கு மகத்தான சிறப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று நமக்கு அறிவித்துக்கொண்டிருக்கிறது.
இன்னும் அல்லாஹ் தஆலா மற்ற நபிக்கோ, மனிதர்களுக்கோ கொடுக்காத சிறப்புகளை அவர்களுக்கு வழங்கியிருக்கிறான்.
நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்புகளை பொருத்த வரை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியது. இந்த சிறப்புகள் மற்ற இறைத்தூதர்களுக்கு உரியது கிடையாது.
இந்த உம்மத்திற்கு விதிக்கப்பட்ட சட்டங்களில் நபிகளாருக்கும் மட்டும் குறிப்பானது. இதில் சில சட்டங்களில் நபிமார்களும் அடங்குவார்கள்.
நபியவர்களின் தனிச்சிறப்புகளை அறிவதின் பயன்.
ஒருவருடைய நல்ல குணாதியசயங்களையும், தனிச்சிறப்புகளையும் அறியும் போதுதான் அவரின் மீது அண்பு அதிகரிக்கும். நபி (ஸல்) அவர்களின் மீது அண்பு வைப்பது, நேசம் வைப்பது ஒவ்வொரு முஸ்லிமான அனைத்து நபர்கள் மீதும் கல்மையாகும்.
நாம் ஒவ்வொரு நபர்களும் நபி (ஸல்) அவர்களின் நேசம் வைத்திருந்தாலும் இந்த செய்திகளை அறிவதின் மூலம் அந்த அண்பும் பாசமும் அதிகரிக்கும்.
நபி (ஸல்) அவர்களுக்குரிய தனிச்சிறப்புகள்.
இந்த வரிசையில் ஏனைய நபிமார்களுக்கும், ஏனைய மனிதர்களுக்கும் கொடுக்கப்படாத சிறப்புகளை பார்க்கலாம்.
முந்திய தூதர்கள் அவர்களின் இடத்திற்கு உட்பட்ட சமுதாயத்திற்கு மட்டும் அனுப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு மட்டுமில்லாமல் உலகம் முழுவதிற்கும் தூதாராக இருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனித சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல் ஜின் சமுதாயதிற்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள்.
முஹம்மதே நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்கும் உம்மை அனுப்பியுள்ளோம். மனிதர்களில் இதை அதிகமானோர் அறியமாட்டார்கள்.
முஹம்மதே அகிலத்தார்கள் அனைவருக்கும் அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.
மனிதர்களே நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.
முஹம்மதே இக்குர்ஆனை செவியுறுவதற்காக ஜின்களில் ஒரு கூட்டத்தினரை உம்மிடம் நாம் அனுப்பியதை எண்ணிப்பார்ப்பீராக அவை அவரிடம் வந்த போது வாயை மூடுங்கள் என்று கூறின. ஓதி முடிக்கப்பட்ட போது எச்சரிப்போராக தனது சமுதாயத்திடம் திரும்பின.
எங்கள் சமுதாயமே மூஸாவுக்கு பின் ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். அது தமக்கு முன் சென்றதை உன்மைபடுத்துகிறது. உன்மைக்கும் நேரான பாதைக்கும் அது வழிகாட்டுகிறது எனக்கூறின.
எங்கள் சமுதாயமே அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதிலளியுங்கள் அவரை நம்புங்கள். அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முன்னிருந்த இறைத்தூதர்கள் எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளது:
1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்கüல் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது.
2. தரை முழுவதும் சுத்தம் (-தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. (எனவே,) என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் (அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தயம்மும் செய்து கொள்ளட்டும்;)
3. (முந்தைய இறைத்தூதர்கள் எவருக்கும் அனுமதிக்கப்படாத) போரில் கிடைக்கப் பெறும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது.
4. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூதாயத்தாருக்கு மட்டுமே தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டுள்ளேன்.
5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை புரியும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முன்னர் வாழ்ந்த (இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பெற்றுள்ளன:
1. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். நான் சிவப்பர் கறுப்பர் (என்ற பாகுபாடின்றி) அனைவருக்கும் தூதராக அனுப்பப்பெற்றுள்ளேன்.
2. போரில் கிடைக்கப்பெறும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னிருந்த (இறைத்தூதர்) எவருக்கும் அவை அனுதிக்கப்படவில்லை.
3. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தூய்மை யானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப் பட்டுள்ளது. (என் சமுதாயத்தாரில்) யாரேனும் ஒருவருக்குத் தொழுகை(யின் நேரம்) வந்து விட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தொழுதுகொள்வார்.
4. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் (அவர் களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய மதிப்புக் கலந்த) அச்சம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் வெற்றியளிக்கப்பெற்றுள்ளேன்.
5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப் பெற்றுள்ளேன். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்) தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்து விட்டல், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களிலிருந்தும், நபிமொழியிலிருந்தும் நபி (ஸல்) அவர்கள் இந்த உலகம் முழுவதற்கும் இறைத்தூதராக அனுப்பட்டவர்கள் என்றும், அவர்கள் ஜின், மனித சமுதாயத்திற்கும் தூதராக இருக்கிறார்கள் என்றும் யூதர்கள், நிராகரித்தவர்கள் யாராக இருந்தாலும் நபி (ஸல்) அவர்களைத்தான் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் விளங்க முடிகிறது.
அல்லாஹ் இந்த தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கிய தனிச்சிறப்புகளில் அவர்களை இறுதி தூதராக ஆக்கியது. இந்த இடத்திற்கு நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு யாரும் வர இயலாது. அப்படி யாராவது நானும் தூதர்தான் என்று வாதிட்டால் அவன் பொய்யனவான்.
முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
அபூ ஹுரைரா (ர-) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்கüடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே(பற்களால்) பற்றிக்கொண்டு அதி-ருந்து சிறிது உண்டார்கள். பிறகு “நான் மறுமை நாüல் மனிதர்கüன் தலைவன் ஆவேன். (அந்நாüல்) அல்லாஹ் (மனிதர்கüல்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெüயில் எதன் மூலம் ஒன்றுதிரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்கüடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள் ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) “உங்களுக்கு எத்தகையை (ஆபத்தான) நிலை நேர்ந்திருக் கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்கமாட்டீர்களா?’ என்று கேட்பார்கள். அப்போது மனிதர்கüல் சிலர் வேறு சிலரிடம், “(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர்.
ஆகவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்கüடம் சென்று “நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்க ளுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் (“நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்) கோபம்கொண்டிருக் கிறான். இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்தி-ருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது’ என்று கூறிவிட்டு “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள்.
உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்கüடம் சென்று “நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள் “என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார் களுக்கும் இருப்பது போல் விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பிரயோகித்துவிட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! என்று கூறிவிட்டு, “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள்’ என்பார்கள்.
அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்கüடம் சென்று, “இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்கüல் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் “என் இறைவன் இன்று என் மீது (கடுங்)கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப்போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்-யுள்ளேன். -அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டி யுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்கüடம் சென்று “மூசாவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடய தூதுவத்தினை வழங்கியும் உங்கüடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள் “இன்று என் இறைவன் (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம்கொண்ட தில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்பாடாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்கள் ஈசா (அலை) அவர் கüடம் சென்று, “ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டி-ல் சிறுவராய் இருந்தபோதே மனிதர்கüடம் பேசினீர்கள். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்பார்கள்.
அதற்கு ஈசா (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை.- (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) நீங்கள் வேறெவரிட மாவது செல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து “முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்கüல் இறுதியானவர். உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான்.
பிறகு “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி “இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்’ என்பேன். அதற்கு “முஹம்மதே! சொர்க்கத்தின். வாசல்கüல் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்கüலும் மக்களுடன் இணைந்து நுழைந்துகொள்ளலாம்’ என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்க வாச-ன் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் “மக்காவிற்கும் (யமனிலுள்ள) “ஹிம்யர்’ எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ அல்லது “மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ தூரமாகும்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:
1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிட மாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்.
6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது. இதை அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபித்துவமும், தூதுத்துவமும் என்னோடு முடிந்து விட்டன. எனக்குப்பின்னால் எந்த நபியும் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது -புகழப்பட்டவர்- ஆவேன். நான் அஹ்மத் -இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ- அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் ஹாஷிர்- ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத் தூதர்கüல்) இறுதியானவர் ஆவேன். இதை ஜுபைர் பின் முத்இம் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்: 4696) ➚வது செய்தியில் நான் இறுதியானவர் எனக்குப்பின்னால் எந்த நபியும் இல்லை என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ர-) அவர்கüடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு) அமர்ந்திருந்தேன்.
(ஒரு முறை) அபூஹுரைரா (ர-) அவர்கள் கூறினார்கள்: “பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவர்கள் வரும் போது நாங்கள் என்ன செய்ய வேண்டு மென்று நீங்கள் உத்திரவிடுகின்றீர்கள்?” என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு, “அவர்கüல் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்கüன் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்கüடம் கேட்க விருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களிலிருந்தும், நபிமொழிகளிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி தூதர் என்பது தெளிவாகின்றது. அத்தோடு இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தனிச்சிறப்பு என்றும் தெரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது சத்தியம்.
அல்லாஹ் தஆலா தனது திருமறையில் பல இடங்களில் சூரியன், சந்திரன் போன்ற பல படைப்பினங்களின் மீது சத்தியம் செய்து பல விஷயங்களை சொல்கிறான். ஆனால் மனித படைப்பில் மனிதர்களில் நபி ஸல் அவர்களைத்தவிர யாரும் மீதும் அல்லாஹ் சத்தியம் செய்து சொல்ல வில்லை. இது நபி (ஸல்) அவர்களுக்குள்ள தனிச்சிறப்பையே காட்டுகிறது. ஆகையால் இதை வைத்து கொண்டு மனிதர்கள் மற்ற மனிதர்கள் மீது சத்தியம் செய்யலாம் என்று விளங்கி கொள்ளக்கூடாது. படைத்த இறைவன் யாரும் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்வான்.
அல்லாஹ் தஆலா லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தைப்பற்றி குர்ஆனில் சொல்லிக்கொண்டு வரும் போது…
உமது வாழ் நாளின் மீது சத்தியமாக! அவர்கள் தமது (காம) போதையில் தட்டழிந்தனர்.
அல்லாஹ் தனது திருமறையில் நபிமார்களை அழைக்கும் போது அவர்களின் பெயர்களைக் கொண்டு கூப்பிடுகிறான். ஆனால் நபி (ஸல்) அவர்களை அழைக்கும் போது அவர்களை தூதரே, நபியே என்று அழைக்கிறான்.
ஒருவர் தனக்கு கீழ் உள்ளவரை அழைக்கும் போது அவரின் பெயரைச்சொல்லி அழைப்பதும் உண்டு. பெரும்பாலும் அவரிடம் இருக்கும் மிக உயர்ந்த தன்மைகளைச் சொல்லி அழைப்பதும் உண்டு. இப்படித்தான் நபி (ஸல்) அவர்களை அழைக்கும் போது அவர்களிடம் இருந்த மிக உயர்ந்த பண்பான நபித்துவத்தையும், தூதுத்துவத்தையும் சொல்லி அழைக்கிறான்.
அத்தோடு மனிதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைக்கும் போது சாதரண மக்களை அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பது போன்று அழைக்க கூடாது என்றும் தடுத்திருக்கிறான்.
உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்.
நபிகள் நாயகததிற்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளில் இந்த ஜவாமிவுல் கலிம் என்பதும் ஒன்று. அதாவது நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையை பேசுவார்கள். அதில் பல விஷயங்கள் பொதிந்திருக்கும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:
1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்.
6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது. இதை அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை பார்த்தால் ஒரிரு வார்த்தைகள் பல பொக்கிஷங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதற்கு உதாரணமாக புகாரியில் இடம் பெற்றுள்ள முதலாவது செய்தியை எடுத்துக்கொள்ளலாம்.
அறிஞர் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறும் போது இந்த செய்தியில் மொத்த கல்வியில் மூன்றில் ஒன்றாக இருக்கிறது. இதில் எழுபது விதமான சட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
நூல்: ஜாமிவுல் உலூம் வல் ஹிகம் பக்கம் (5)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளில் எதிரிகளின் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களைப்பற்றியான பயத்தை அல்லாஹ் போட்டது. எதிரிகள் ஒரு மாத கால அளவு தூரத்தில் இருந்தாலும் நபி (ஸல்) அவர்களைப்பற்றியான அச்சம் இருந்து கொண்டே இருக்கும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:
1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிட மாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்.
6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது. இதை அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒருங்கிணைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பப் பட்டுள்ளேன். (எதிரிகüன் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் விதைக்கப்பட்டு எனக்கு உதவப்பட்டுள்ளது. (ஒரு முறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங் களுடைய சாவிகள் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.”
இதை அபூஹுரைரா (ர-) அவர்கள் அறிவித்து விட்டு, “நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள். நீங்கள் அந்தக் கரூவூலங்களை (தோண்டி) வெüயே எடுத்து (அனுபவித்துக்) கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள்.
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயர் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்)க்குத் திரும்பி வந்து, “(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப்போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன்.
நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள்’ வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.
இந்த சிறப்பை பொருத்த வரை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டதுதான் என்றாலும் நபித்தோழர்களும் நபி (ஸல்) அவர்கள் இறந்திருந்ததற்குப்பின் பல நாடுகளை வெற்றி கொண்டார்கள்.
(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப் படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.
(அல்குர்ஆன்: 28:1-3)➚
அபூ ஹுரைரா (ர-) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப் பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்கüடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே(பற்களால்) பற்றிக்கொண்டு அதி-ருந்து சிறிது உண்டார்கள். பிறகு “நான் மறுமை நாüல் மனிதர்கüன் தலைவன் ஆவேன். (அந்நாüல்) அல்லாஹ் (மனிதர்கüல்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெüயில் எதன் மூலம் ஒன்றுதிரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும்.
சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்கüடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள் ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) “உங்களுக்கு எத்தகையை (ஆபத்தான) நிலை நேர்ந்திருக் கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்கமாட்டீர்களா?’ என்று கேட்பார்கள். அப்போது மனிதர்கüல் சிலர் வேறு சிலரிடம், “(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர்.
ஆகவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்கüடம் சென்று “நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்க ளுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் (“நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்) கோபம்கொண்டிருக் கிறான். இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்தி-ருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது’ என்று கூறிவிட்டு “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள்.
உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்கüடம் சென்று “நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள் ளான்.7 எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள் “என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம்கொண்டுள் ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார் களுக்கும் இருப்பது போல் விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத் தினருக்கு எதிராகப் பிரயோகித்துவிட்டேன்.8 நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!’ என்று கூறிவிட்டு, “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள்’ என்பார்கள்.
அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்கüடம் சென்று,ன “இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்கüல் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் “என் இறைவன் இன்று என் மீது (கடுங்)கோபம்கொண்டுள் ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப்போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்-யுள்ளேன். -அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.9- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டி யுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெ வரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்கüடம் சென்று “மூசாவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடய தூதுவத்தினை வழங்கியும் உங்கüடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள் ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள் “இன்று என் இறைவன் (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம்கொண்ட தில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்பாடாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டி யுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்கள் ஈசா (அலை) அவர் கüடம் சென்று, “ஈசாவே! நீங்கள் அல்லாஹ் வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டி-ல் சிறுவராய் இருந்தபோதே மனிதர்கüடம் பேசினீர்கள். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு ஈசா (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை.- (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டி யுள்ளது! (ஆகவே,) நீங்கள் வேறெவரிட மாவது செல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து “முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்கüல் இறுதியானவர். உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி “இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்’ என்பேன். அதற்கு “முஹம்மதே! சொர்க்கத்தின். வாசல்கüல் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்கüலும் மக்களுடன் இணைந்து நுழைந்துகொள்ளலாம்’ என்று கூறப்படும்.
என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்க வாச-ன் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் “மக்காவிற்கும் (யமனிலுள்ள) “ஹிம்யர்’ எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ அல்லது “மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ தூரமாகும்” என்று கூறினார்கள்.
முஃகீரா பின் ஷுஅபா (ர-) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்கüடம் “தங்கüன் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்?)” என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்டார்கள்.
ஒவ்வொரு நபிமார்களுக்கும் வேதத்தையும், ஞானத்தையும் வழங்கியுள்ளான். தன்னுடைய நபிமார்களை உன்மைபடுத்துவதற்காக ஏராளமான சான்றுகளையும் வழங்கியுள்ளான். அந்த சான்றுகளில் நபிமார்களுக்கு மிகவும் முக்கியமானதாக அவர்களுடைய கால கட்டத்தில் மிகப்பெரிய சான்றாக அமைந்தது.
இதே பொன்று நபி (ஸல்) அவர்களுக்கும் ஏராளமான சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சான்றுகளில் மிகவும் முக்கியமானதாக இந்தக்குர்ஆன் இருந்து கொண்டுருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருüய வேத அறிவிப்பு(வஹீ)தான். ஆகவே, நபிமார்கüலேயே மறுமை நாüல், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இதை அபூஹுரைரா (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த திருக்குர்ஆன் மற்ற முந்திய வேதங்களை விட வித்தியாசமானது.
முந்திய வேதங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உரியதாக பொருந்தக்கூடியதாக இருந்தது. குர்ஆன் கியாம நாள் வரை இதுதான் வேதமாகும். இதற்கு பிறகு எந்த வேதமும் இல்லை.
முந்திய வேதங்கள் அந்த சமுதாயத்தாயவர்களால் பாழ்படுத்தப்பட்டது. இந்தக்குர்ஆன் இறைவனால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. கியாம நாள் வரை இந்தக்குர்ஆனில் எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்படும்.
இதை அல்லாஹ் தஆலா தன்னுடைய திருன்றையில் சொல்லிக்காட்டுகிறான்.
இந்தக்குர்ஆனை நாமே இறக்கினோம் நாமே பாதுகாப்போம்.
இந்தக்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு மிகப்பெரிய அற்புதமானதாக இருக்கிறது என்பதற்கான சான்றுகள் குர்ஆனில் நிறைந்து காணக்கிடைக்கின்றன. குர்ஆனில் விஞ்ஞானத்தை சொல்லக்கூடிய ஆயத்துகள். மகத்துவத்தை பற்றி சொல்லக்கூடிய வசனங்கள், இப்படி என்னென்ன துறைகள் இருக்கிறதோ அத்துனை துறைகளுக்கும் வழகாட்டக்கூடியதாகவும் அதைப்பற்றிய செய்திகளை சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. இதுவே குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய அற்புதம் என்பதற்கான சான்றுகளாக இருக்கின்றன.
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளில் நபி (ஸல்) அவர்களின் வின்வெளிப்பயனமும் ஒன்று.
இந்த வின்வெளிப்பயனத்தில் நபி (ஸல்) அவர்களின் பூத உடலோடு இந்த உலகத்தை விட்டு ஒரு இரவில் பாலஸ்தீனில் உள்ள பைதுல் முகத்தஸ் சென்று அங்கிருந்து வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் ஏழு வானத்தையும் கடந்து பைதுல் மஃமூர் சென்று பிறகு இறைவனுடன் திறைக்கப்பால் நின்று உரையாடி ஜந்து நேரத்தொழுகையும் வாங்கி வந்தார்கள்.
இதற்கு குர்ஆனிலும் நபிமொழித்தொகுப்புகளிலும் நிறைய ஆதுôரங்கள் காணக்கிடைக்கின்றன.
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தல்வையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார்.
இந்த வசனங்களில் ஜிப்ரயீல் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அவர்களின் அசல் தோற்றத்தில் பார்த்தது. சித்ரதுல் முன்தஹாவைப்பார்த்தது. இறைவனோடு உரையாடிய ஆகிய சம்பவங்களை அல்லாஹ் நமக்கு தெரிவிக்கிறான்.
வின்வெளிப்பயனத்தைபற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகையில்… நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (இறையில்லம் கஅபா அருகில்) ஹத்தீமில் …. .அல்லது ஹிஜ்ரில்…. படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவார் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.
-அறிவிப்பாளர்கüல் ஒருவரான அனஸ் (ர-) அவர்கள், “இங்கிருந்து இது வரையில் அவர் பிளந்தார்” என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள்.
அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் என்னருகி-ருந்த (அனஸ் (ர-) அவர்கüன் நண்பர்) ஜாரூத் (ரஹ்) அவர்கüடம், “அனஸ் (ர-) அவர்கள், “இங்கிருந்து இது வரையில்…… என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஜாரூத் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கüன் நெஞ்சின் காறை யெலும்பி-ருந்து அடிவயிறு வரை ….அல்லது நெஞ்சின் ஆரம்பத்தி-ருந்து அடிவயிறு வரை…. என்ற கருத்தில் அனஸ் (ர-) அவர்கள் கூறினார்கள்” என்று பதிலüத்தார்கள்.-
பிறகு அ(ந்த வான)வர் (ஜிப்ரீல்) எனது இதயத்தை வெüயிலெடுத்தார். பிறகு, இறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டு, எனது இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (எனது இதயம், மூடி) வைக்கப்பட்டது. பிறகு கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது.
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கüல் ஒருவரான) அனஸ் (ர-) அவர்கüடம் ஜாரூத் (ரஹ்) அவர்கள், “அது புராக் எனும் வாகனம் தானே அபூஹம்ஸா அவர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ர-) அவர்கள், “ஆம், (அது புராக் தான்.) அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும்” என்று கூறினார்கள்.-
பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை ஜிப்ரீல் முதல் வானத்திற்கு அழைத்துச் சென்று அதன் கதவைத் திறக்கும்படிக் கூறினார். அப்போது, “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüத்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்குஅவர், “முஹம்மது” என்று பதிலüத்தார். “(அவரை அழைத்து வரச் சொல்-) அவரிடம் ஆள் அனுப்பப் பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்” என்றார். “அவரது வரவு நல்வர வாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. அப்போது (அந்த வானத்தின் காவலர்) கதவைத் திறந்தார். நான் அங்கு சென்றடைந்த போது அங்கு ஆதம் (அலை) அவர்கள் இருந் தார்கள். (என்னிடம் ஜிப்ரீல்) “இவர்கள் உங்கள் தந்தை ஆதம். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று கூறினார். அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு, ஆதம் (அலை) அவர்கள், “(என்) நல்ல மகனும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!” என்று சொன்னார்கள். பிறகு (என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல்) இரண்டாம் வானத்திற்கு உயர்ந்து அதைத் திறக்கும்படிச் சொன்னார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüக்க, உங்களுடன் (இருப்பவர்) யார்?” என்று வினவப்பட்டது. (அதற்கு) அவர், “முஹம்மது” என்று பதிலüத்தார், “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப் பட்டது. அவர், “ஆம்” என்று பதிலüத்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. பிறகு (அந்த வானத்தின் காவலர் கதவைத்) திறந்தார். நான் அங்கு சென்றடைந்த போது, அங்கு யஹ்யா (அலை) அவர்களும், ஈசா (அலை) அவர்களும் இருந்தனர். -அவ்விருவரும் சிற்றன்னையின் மக்களாவர்.-134 இது யஹ்யா அவர்களும், ஈசா அவர்களும் ஆவர். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் (அவர்கள் இருவருக்கும்) சலாம் சொன்ன போது அவர்கள் சலாமிற்கு பதில் கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும், “நல்ல சகோதரரும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்துக்) கூறினர். பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படிக் கூறினார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüத்தார். “உங்களுடன் (இருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மது” என்று பதிலüத்தார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப் பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்” என்று பதிலüத்தார். “அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப் பட்டது. பிறகு (அந்த வானத்தின் கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்த போது அங்கு யூசுஃப் (அலை) அவர்கள் இருந்தார்கள். “இவர்கள் தாம் (இறைத்தூதர்) யூசுஃப். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்களும் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு, “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் நான்காம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்குமாறு சொன்னார். “யார் அது” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüத்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மது” என்று பதிலüத்தார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டி ருந்ததா?” என்று வினவப்பட்ட போது, “ஆம்” என்று அவர் பதிலுரைத்தார். “அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (எனக்கு வாழ்த்துச்) சொல்லப்பட்டு(க் கதவும்) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்த போது அங்கு இத்ரீஸ் (அலை) அவர்கள் இருந்தார்கள். “இவர்கள் தாம் இத்ரீஸ் (அலை) அவர்கள். இவர்களுக்கு சலாம் கூறுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்களும் எனக்கு பதில் சலாம் கூறினார்கள். பிறகு, “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்தும்) சொன்னார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஐந்தாம் வானத்திற்கு வந்து சேர்ந்து அதைத் திறக்கும்படிச் சொன்னார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüத்தார். “உங்களுடன் (இருப்பவர்) யார்?” என்று வினவப்பட்டது. அவர், “முஹம்மது” என்று பதிலüத்தார். “(அவரை அழைத்து வருமாறு) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப் பட்டது. அவர், “ஆம்” என்றார். “அவர் வரவு நல்வரவாகட்டும். அவர் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப் பட்டது. நான் அங்கு சென்றடைந்த போது ஹாரூன் (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். “இவர்கள் தாம் ஹாரூன். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் சொன்னார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு அவர்கள், “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் ” என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு என்னுடன் அவர் ஆறாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படிக் கூறினார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüத்தார். “உங்களுடன் யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மது” என்றார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்” என்றார். (அந்த வானத்தின் காவலர்,) “அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொன்னார். அங்கு நான் சென்றடைந்த போது மூசா (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். “இவர்கள் தாம் மூசா. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு, “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். நான் (மூசா -அலை- அவர்களைக்) கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். “தங்கள் அழுகைக்கு என்ன காரணம்?” என்று அவர்களை நோக்கிக் கேட்கப்பட்டது. அவர்கள், “என் சமுதாயத் தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள், எனக்குப் பிறகு அனுப்பப் பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தி-ருந்து சொர்க்கம் புகுவார்கள் என்பதால் தான் அழுகிறேன்” என்று பதிலüத்தார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஏழாவது வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி ஜிப்ரீல் கூறினார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüத்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று வினவப்பட்ட போது அவர், “முஹம்மது” என்று பதில் சொன்னார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப் பட்டது. அவர், “ஆம்” என்றார். (அந்த வானத் தின் காவலர்,) “அவரது வரவு நல்வரவா கட்டும், அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொன்னார். நான் அங்கு சென்றடைந்த போது, இப்ராஹீம் (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். “இவர்கள் தாம் உங்கள் தந்தை. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் உரைத்தார்கள். அவர்கள், “நல்ல மகனும், நல்ல இறைத் தூதருமான இவரது வரவு நல்வரவாகட்டும்” என்று வாழ்த்துச் சொன்னார்கள். பிறகு, (வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) “சித்ரத்துல் முன்தஹா’ என்னும் இடத்திற்கு நான் கொண்டு செல்லப் பட்டேன். அதன் (இலந்தைப்) பழங்கள் (யமனில் உள்ள) “ஹஜர்’ எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானை கüன் காதுகள் போ-ருந்தன. “இது தான் சித்ரத்துல் முன்தஹா” என்று ஜிப்ரீல் (அறிமுகப் படுத்திக்) கூறினார். அங்கு (அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து ஓடி வருகின்ற) நான்கு ஆறுகள் இருந்தன. இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் இரண்டு ஆறுகள் வெüயே இருந்தன. “ஜிப்ரீலே! இவ்விரண்டு ஆறுகள் எவை?” என்று நான் கேட்டேன். அவர், “உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை)வையாகும். வெüயே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்” என்று பதிலüத்தார்கள். பிறகு, “அல் பைத்துல் மஃமூர்’ (எனும் “வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறை யில்லம்’) எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்து. பிறகு என்னிடம் ஒரு பாத்திரத்தில் மதுவும், ஒரு பாத்திரத்தில் பாலும் இன்னொரு பாத்திரத்தில் தேனும் கொண்டுவரப்பட்டது. நான் பாலை (தேர்ந்து) எடுத்தேன். (பிறகு அதைக் குடித்தேன்.) அப்போது ஜிப்ரீல், “இது தான் நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும்” என்று கூறினார்கள். பிறகு என் மீது ஒவ்வொரு தினத்திற்கும் ஐம்பது (வேளைத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் திரும்பி வந்த போது மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், “உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?” என்று கேட்டார்கள். “ஒவ்வொரு நாளும் ஐம்பது (வேளைத்) தொழுகை (கட்டாயக் கடமையாக நிறை வேற்றும்படி) எனக்கு உத்தரவிடப் பட்டது” என்று நான் பதிலüத்தேன். உஙகள் சமுதாயத்தார் ஒரு தினத்திற்கு ஐம்பது வேளைத் தொழுகையைத் தாங்கமாட் டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுக்கு முன் மக்கüடம் அனுபவப் பட்டுள்ளேன். பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் உங்கள் சமுதாயத்தினருக்காக (தொழுகை யின் எண்ணிக்கையைக்) குறைத்துக் தரும்படிக் கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். (இறைவனிடம் குறைத்துத் தரும்படி கேட்டேன்) இறைவன் (ஐம்பதி-ருந்து) பத்தை எனக்குக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பி வந்தேன். முன் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். அப்போது (நாற்பதி-ருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பி வந்தேன். அப்போதும் முன் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும் படி) கூறினார்கள். நான் (இறைவனிடம்) திரும்பிச் சென்றேன். எனக்கு (முப்பதி-ருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் முன்போலவே (குறைத்து கேட்கும் படி) கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். எனக்கு (இருபதி-ருந்து பத்து குறைக்கப்பட்டு) தினந்தோறும் பத்து (வேளைத்) தொழுகைகள் (தொழும்படி) உத்தரவிடப்பட்டது. நான் (மூசா -அலை- அவர்கüடம்) திரும்பி வந்தேன். அப்போதும் அவர்கள் முன் போலவே சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். ஒவ்வொரு நாளும் ஐந்து (வேளைத்) தொழுகைகள் (நிறை வேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது. நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பி வந்தேன். அப்போது”உங்களுக்கு என்ன உத்தரவிடப் பட்டது?”என்று கேட்டார்கள். ஒவ்வொரு நாளைக்கும் ஐந்து (நேரத்) தொழுகைகள் எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று சொன்னேன். “ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகைகளை உங்கள் சமுதாயத் தினர் தாங்கமாட்டார்கள். உங்களுக்கு முன்பே மக்களுடன் பழகி நான் நன்கு அனுபவப் பட்டுள்ளேன். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று உங்கள் சமுதாயத்தினருக்காக இன்னும் குறைத்துத் தரும்படிக் கேளுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், “(கடமையான தொழுகைகüன் எண்ணிக்கைûயைக் குறைத்துத் தரும்படி பலமுறை இறைவனிடம்) எனக்கே வெட்கமேற்படும் வரையில் நான் கேட்டு விட்டேன். ஆகவே, நான் திருப்தி யடைகிறேன்; (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொள்கிறேன்” என்று கூறினேன். பிறகு (அந்த இடத்தை) நான் கடந்த போது, (அல்லாஹ்வின் தரப்பி-ருந்து) “நான் என் (ஐந்து நேரத் தொழுகை எனும்) விதியை நடைமுறைப்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகü-ருந்து ஐந்து நேரமாகக் குறைத்துக் கடமையை) எüதாக்கி விட்டேன்” என்று ஒரு (அசரீரிக்) குரல் ஒ-த்தது.
நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்புகளில் இதுவும் மிகவும் உன்னதமானது. அதுமட்டுமில்லாமல் இது நபி (ஸல்) அவர்களின் இறைவனின் தூதர் என்பதற்கும் மிகவும் சான்றாக அமைகின்றது.
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராகமாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன.
அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற் காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.
போர்க் களங்களிலும் பங்கெடுத்து, கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கினார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை. “உம்மை இறைவன் காப்பான்” என்ற இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. (அல்குர்ஆன்: 5:67)➚
இப்படி அறை கூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிரூபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.
இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் அவர்கள் என்றோ கொல்லப் பட்டிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கான நிரூபணம்.
என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதாரணமாக இன்றைய உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.
அன்றைய நிலையில் இவரைப் போல் சர்வ சாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாக பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து, தாம் கூறுவது இறை வாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிரூபித்தார்கள்.
நூல்: பீ.ஜே அவர்களின் குர்ஆன் விளக்கம்.
பொதுவாக மன்னுடைய தனித்தன்மைகளில் மன்னில் எதைக்கொண்டு போட்டாலும் அதை சாப்பிட்டு விட்டு அந்தப்பொருளை தன்னுடைய இனமாக ஆக்கிக்கொள்ளும்.
ஆனால் இறைத்தூதர்களுடைய உடலை அது சாப்பிட்டு தன்னுடைய இனமாக ஆக்கிக்கொள்ளாது.
உங்களுடைய நாட்களில் வெள்ளிக்கிழமை சிறந்த நாளாகும். இந்த நாளில்தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார். இந்த நாளில்தான் மரணமடைந்தார். இந்த நாளில்தான் முதலாவது ஊதுதலும் இரண்டாவது ஊதுதலும் நடைபெறும். எனவே என் மீது ஸவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்து வைக்கப்படுகிறது. அதற்கு ஸஹாபாக்கள் நீங்கள் மரணித்து மன்னாகிவிடும் போது எங்களுடைய ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்து வைக்கப்படும் ? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் நபிமார்களின் உடல்களை சாப்பிடக்கூடாது என்று பூமிக்கு தடைவிதித்து விட்டான் என்று கூறினார்கள்.
(நஸாயீ: 1374) ➚,(அபூதாவூத்: 1047) ➚,(இப்னு மாஜா: 1085, 1636) ➚,(அஹ்மத்: 16162) ➚,
ஹவ்லுல் கவ்ஸர் (சிறப்பு தண்ணீர் பந்தல்)
அல்லாஹ் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்கிய தனிச்சிறப்புகளில் ஹவ்லுல் கவ்ஸர் என்ற நீர்த்தடாகமாகும்.
இந்த நீர்த்தடாகத்தின் பற்றி பல்வேறு சிறப்புகள் வந்துள்ளன. அந்த சிறப்பை அறியும் போதுதான் அதன் மகிமை தெரிய வரும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (“அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான் “(வானவர்) ஜிப்ரீலே! இது என்ன?” என்று கேட்டேன். அவர் “இதுதான் உங்கள் இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸர்” என்றார். “அதன் மண்’ அல்லது “அதன் வாசனை’ நறுமணமிக்க கஸ்தூரியாகும். இதை அனஸ் பின் மா-க் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“வாசனை’யா(தீப்)? “மண்ணா'(தீன்)? என்பதில் அறிவிப்பாளர் ஹுத்பா பின் காத் (ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்..