சொத்துப்பங்கீடு உதாரணம் – 1

முக்கிய குறிப்புகள்: வாரிசுரிமைச் சட்டங்கள்

தாய், தந்தைக்கு தனித்தனியாக  6ல்1

இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.

அவருக்கு(இறந்தவருக்கு)ச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு.
அல்குர்ஆன் (4: 11)

 

மனைவிக்கு 8ல்1

இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிமார்களுக்கு எட்டில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.

உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியர்களுக்கு உண்டு.
அல்குர்ஆன் (4: 12)

 

மீதமுள்ளது பிள்ளைகளுக்கு

மீதமுள்ள சொத்துக்கள் மகனுக்கு இரண்டு பங்கு மகளுக்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும்.

‘இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு’ என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் (4: 11)