சூழலைக் காக்கும் சுகாதாரப் பெருநாட்கள்
இஸ்லாத்தில் இரு பெருநாட்கள் உள்ளன. ஒன்று அண்மையில் நடந்த முடிந்த ஈதுல் ஃபித்ரு எனும் நோன்பு பெருநாள் எனும் சகைத் திருநாள்.
இன்னொன்று, இனி வரவிருக்கின்ற ஈதுல் அல்ஹா எனும் தியாகப் பெருநாள்.
இரண்டு பெருநாட்களும் தர்மத்தின் அடிப்படையில் அமைந்தவையாகும். நோன்புப் பெருநாளின்போது பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன்பு உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். இது நோன்பில் ஏற்பட்டிருக்கும் குறைகளைக் களைந்து விடுகின்றது என்று மார்க்கம் போதிக்கின்றது.
அந்த அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வழக்கம் போல் இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அரிசி, தேங்காய், மசாலா போன்ற மளிகைச் சாமான்களுடன் கூடிய உணவுப் பொருட்கள் விநியோகிப்பட்டன.
தவ்ஹீது சிந்தனை தலை தூக்காத காலத்தில் ஃபித்ரு ஸதக்கா என்பது பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள் முஅத்தின்கள் ஆகியோரிடமே கொண்டிருந்தது. 93 கொடுக்கப்பட்டுக் நகரத்திலோ, கிராமத்திலோ உள்ள மக்களின் ஃபித்ரு தைக்கா மொத்தமும் இவ்விரு வகையினரிடம் மட்டுமே குவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அதில் தல்ஹீது ஜமாஅத் முழுக் கவனம் செலுத்தி, தகுதியான ஏழைகளுக்கு அதை மடைமாற்றம் செய்து 93 புரட்சியை ஏற்படுத்தியது. அத்துடன் ஒரு குறிப்பிட்ட செல்வந்தர்கள் மட்டுமே ஃபித்ரு ஸதக்கா கொடுக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அன்றாட வாழ்வதாரத்திற்குச் சக்தி பெற்ற அனைவரும் இந்தத் தர்மத்தை அளிக்க வேண்டும் என்ற சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியதால் ஃபித்ரு ஸதக்கா வழங்கும் மக்களின் எண்ணிக்கை சமுதாயத்தில் அதிகரித்து. தகுதி உள்ள ஏழைகளுக்குப் போய்ச் சேர வழிவகுத்தது. இதன் மூலம் சமுதாயத்தில் ஏனழகள் இவ்வளவு இருக்கின்றார்களா என்று அறியவும் இது வகை செய்தது.
இதுபோன்று தியாகப் பெருநாளில் பலியிடப்படும் ஆடு, மாடுகளின் இறைச்சியானது. வசதியுள்ளவர் தங்களது சொந்த பந்தங்களுக்குள் பரிமாறுகின்ற பண்ட மாற்றாக இருந்து வந்தது. ஆம்! இந்தச் செல்வந்தர். வசதி படைத்த மற்றொரு சொந்தக்காரருக்கு இறைச்சியைக் கொடுத்து அனுப்புவார். பதிலுக்கு அவர் தன் வீட்டில் அறுப்பதை இவருக்குக் கொடுத்து அனுப்புவார். குர்பானி இறைச்சியை சொந்த பந்தங்களுக்குக் கொடுப்பது தவறில்லை. ஆனால் இவர் வீட்டிலிருந்து அவருக்கும் அவர் வீட்டிலிருந்து இவருக்கும் மாறி மாறி கொடுத்து விட்டு. ஏழைகளைச் சென்றடையாத நிலை இருந்தது.
மொத்தத்தில் பணக்காரர்களிடம் குர்பானி மட்டும் இறைச்சி மறுபடியும் மறுபடியும் பலவிவரும் பண்ட மாற்றாக இருந்து வந்தது. அதை மாற்றி, ஏழை எளியவர்களை அடையாளங்கண்டு, அவர்களை நோக்கிக் குர்பானி இறைச்சியைத் திருப்பிவிட்டு தவ்ஹீது ஜமாஅத் சாதனை படைத்தது.
அறுக்கப்படும் ஆடுகள், மாடுகளின் தோல்கள் பள்ளிவாசல்களில் அர்ப்பணிக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் தோல் வரவுகள் கொழுத்த சேமிப்பாகவே இருந்தது. மத்ரஸாக்களுக்கு அளிக்கப்பட்டு மத்ரஸாவின் நிர்வாகச் செலவுகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. தவ்ஹீது ஜமாஅத் தலையெடுத்த பின் இந்த நிலையை மாற்றி ஆடு, மாடுகளின் தோல் வரவுகள் நபிவழிப்படி ஏழைகளின் மருத்துவம் மற்றும் அவர்களின் இன்னபிற தேவைகளின் பயன்பாட்டுக்காகத் திருப்பி விடப்பட்டது.
அதேபோன்று குர்பானி எனும் வணக்கத்தைப் பணக்காரர்கள் மட்டுமே செய்ய வேண்டும். அன்றாட வாழ்வாதாரம் பெற்ற சாமானியர்களுக்கு அது சாத்தியமில்லை என்ற நிலை இருந்தது.
அதிலும் நபிவழிப்படி மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளில் ஏழு பேர்கள் கூட்டுச் சேர்ந்து கூட்டுக் குர்பானி கொடுக்கலாம் என்ற நபி வழியை சமுதாயத்தில் தவ்ஹீது ஜமாஅத் செயல்பட வைத்தது.
அடிப்படையில் இவ்விரு பெருநாட்களும் ஏழைகளுக்கான பெருநாட்களாக அமைந்திருக்கின்றன.
இவ்விரு பெருநாட்களிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளில் போய் நின்று முஸ்லிம்கள் மது அருந்துவதில்லை. அதனால் பெருநாட்களில் டாஸ்மாக் இத்தனை கோடிகள் வருவாய் ஈட்டின என்று அரசாங்கம் பெருமையாக லாபக் கணக்கு போட்டுக் காட்டுவதில்லை.
இவ்விரு கோடிக்கணக்கில் நாட்களில் ஆற்றில் முஸ்லிம்கள் இறங்கி ரசாயனக் கலவைகளைக் கரைத்து ஆற்றை மாசுப்படுத்துவதில்லை. ஆற்றங்கரைகளில் மலம், ஜலம் கழித்து இயற்கை நீராதாரங்களை நீர் நிலைகளை அகத்தப்படுத்துவதில்லை.
அதேபோன்று முஸ்லிம்கள், பட்டாசுகளை வெடித்து கோடிக்கணக்கான பொருளாதாரத்தைக் கரியாக்குவதில்லை. குழந்தைகள், முதியோர்கள் குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளை சுவாசிக்க விடாமல் மூச்சுத் திணறும் அளவுக்குக் காற்றை, சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவதில்லை. கால்நடைகளை, பறவைகளை வெடிச்சத்தத்தின் மூலம் பதறவும் சுதறவும் விடுவதில்லை.
பண்டிகை நாட்களில் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக மாடுகளை வதை செய்வதுடன் அல்லாமல் மாடுகளுடன் மோதி, தங்களது உயிர்களை மாய்த்துத் துக்கம் அனுஷ்டிப்பதில்லை. சேவல்களை மோதவிட்டு அவற்றை சித்ரவதை செய்வதில்லை. அதனால் ஏற்படும் கலவரத்தில் மனித உயிர்கள் பலியாவதில்லை.
மொத்தத்தில் இவ்விரு பெருநாட்களும் ஏழைகளைக் காக்கும் பெருநாட்களாக மட்டும் அல்லாமல் சூழலைக் காக்கும் சுகாதார நாட்களாகவும் அமைத்திருக்கின்றன.
ஏனென்றால் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கமாகும். அதனால் இவ்விரு பெருநாட்களிலும் இறை வணக்கம் என்பது தான, தர்மம் என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
(இதுவே) அல்லாஹ்வின் இயற்கை மார்க்கமாகும். அதன் மீதே மனிதர்களை அவன் படைத்துள்ளான்.