சிறிய செய்திகள் மனனம் செய்வோம்-2
சிறிய செய்திகள் மனனம் செய்வோம்-2
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்.
ஆதாரம் :(புகாரி: 5984)
பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
ஆதாரம் :(புகாரி: 6023)
நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும்.
ஆதாரம் :(புகாரி: 2989)
தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.
ஆதாரம் :(புகாரி: 2989)
இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும்.
ஆதாரம் :(புகாரி: 2989)
கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்ல மாட்டான்.
ஆதாரம் :(புகாரி: 6056)
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்.
ஆதாரம் :(புகாரி: 48)
இடக் கையால் உண்ணாதீர்கள்
ஆதாரம் :(முஸ்லிம்: 4107)
தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை
ஆதாரம் :(முஸ்லிம்: 5447)
எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளிலி)லிருந்து பிற முஸ்லிலிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிலிம் ஆவார்.