13) சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்
நூல்கள்:
துஆக்களின் தொகுப்பு
சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்
اَلْحَمْدُ للهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِيّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا
அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(B]ன் முபா(B]ர(க்)கன் பீ[F]ஹி ஃகைர மக்பி[F]ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(B]னா
இதன் பொருள் :
தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல.
ஆதாரம்:(புகாரி: 5458, 5858)
அல்லது
اَلْحَمْدُ للهِ الَّذِيْ كَفَانَا وَأَرْوَانَا غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ
அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா[F]னா வ அர்வானா ஃகைர மக்பி[F]ய்யின் வலா மக்பூ[F]ர்
இதன் பொருள் :
உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனது அருள் மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமல்ல.
ஆதாரம்:(புகாரி: 5459)
அல்லது
اَلْحَمْدُ للهِ
அல்ஹம்து லில்லாஹ்
என்று கூறலாம்.
ஆதாரம்:(முஸ்லிம்: 4915)