கோள் சொல்லுதல் – கண்டனமும் தண்டனையும்

நூல்கள்: இஸ்லாம் கூறும் தீய பண்புகள்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

 

கோள் சொல்வது தடைசெய்யப்பட்டதாகும்

(கோள் சொல்லுதல் என்பது குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ரீதியில் ஒருவரின் பேச்சை மக்களுக்கு மத்தியில் பரப்புவதாகும்.)

قال اللَّه تعالى:﴿هَمَّازٍ مَشَّاءٍ بِنَمِيمٍ﴾

அல்லாஹ் கூறுகிறான்:
அவன் குறைபேசித் திரிபவன், கோள் சொல்லிக்கொண்டு நடப்பவன்.
(அல்குர்ஆன்: 68:11)➚

وقال تعالى: ﴿مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴾.

அல்லாஹ் கூறுகிறான்:
(பதிவு செய்வதற்குத்) தயாராக உள்ள கண்காணிப்பாளர் அவனிடம் இருக்கும் நிலையிலேயே தவிர அவன் எந்த வார்த்தையையும் பேசுவதில்லை.
(அல்குர்ஆன்: 50:18)➚

وعَنْ حذَيْفَةَ رضي اللَّه عنهُ قالَ:

قال رسُولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « لا يَدْخُلُ الجنةَ نمَّامٌ-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கோள் சொல்பவன் சுவனம் புகமாட்டான்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),

(புகாரி: 6056) ,(முஸ்லிம்: 168, 169, 170)

وعَنْ ابن عَباسٍ رضي اللَّه عَنْهُمَا

أنَّ رَسُول اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : مرَّ بِقَبريْنِ فقال : «إنَّهُمَا يُعَذَّبان وَمَا يُعَذَّبَانِ في كَبيرٍ بَلى إنَّهُ كَبيرٌ : أمَّا أحَدُهمَا فَكَانَ يمشِي بالنَّمِيمَةِ وأمَّا الآخرُ فَكَانَ لا يسْتَتِرُ مِنْ بولِه –
متفقٌ عليه وهذا لفظ إحدى روايات البخاري قالَ العُلَماءُ : معْنَى: «وما يُعَذَّبَانِ في كَبيرٍ أيْ كبير في زَعْمِهما وقيلَ: كَبِيرٌ تَرْكُهُ عَلَيهما.

நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளை கடந்து சென்றார்கள். அப்போது “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். அவர்கள் மிகப் பெரும்பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. என்றாலும் அது (ஒரு வகையில்) பெரிய பாவம்தான். அவ்விருவரில் ஒருவரோ கோள் சொல்லித் திரிபவராக இருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும் போது (தமது உடலை) மறைக்காதவராக இருந்தார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

(புகாரி: 6055) ,(முஸ்லிம்: 491)

وعن ابن مسْعُودٍ رضي اللَّه عنْهُ

أنَّ النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : « ألا أُنَبِّئكُم ما العَضْهُ ؟ هي النَّمِيمةُ القَالَةُ بيْنَ النَّاسِ رواه مسلم

நபி (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “அல்அள்ஹு” (பொய், அவதூறு) என்றால் என்னவென்று உங்களுக்கு நான் அறிவிக்க வேண்டாமா? என்று கேட்டுவிட்டு, ‘அது மக்களிடையே கோள் சொல்வதாகும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),

(முஸ்லிம்: 5080)

குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பது போன்ற அச்சமிருந்தாலே தவிர தேவையின்றி மக்களின் பேச்சுக்களையும், செய்திகளையும் ஆட்சியாளர்களிடம் கூறுவது கூடாது

 

قال اللَّه تعالى: ﴿وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ﴾

பாவத்திலும் அநியாயத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!
(அல்குர்ஆன்: 5:2)➚

 

இரட்டை முகத்தானுக்கு ஏற்படும் இழிவு

 

قال اللَّه تعالى: يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَى مِنَ الْقَوْلِ وَكَانَ اللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا

அல்லாஹ் கூறுகிறான்:
அவர்கள் மக்களிடமிருந்து மறைந்து கொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்விடமிருந்து மறைய முடியாது. அவன் விரும்பாத பேச்சை அவர்கள் பேசி, இரவில் திட்டம் தீட்டிய போது அவன் அவர்களுடனே இருந்தான். அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 4:108)➚

وعن أبي هُريرةً رضي اللَّه عَنْهُ قالَ:

قالَ رسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « تَجدُونَ النَّاسَ معادِنَ : خِيارُهُم في الجاهِليَّةِ خيارُهُم في الإسْلامِ إذا فَقُهُوا وتجدُونَ خِيارَ النَّاسِ في هذا الشَّأنِ أشدَّهُمْ لهُ كَراهِيةً وتَجدُونَ شَرَّ النَّاسِ ذا الوجْهيْنِ الذي يأتي هؤلاءِ بِوجْهِ وَهؤلاءِ بِوَجْهِ – متفقٌ عليه

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களை நீங்கள் பலதரப்பட்ட மூலகங்களாகக் காண்கிறீர்கள். மார்க்க அறிவைப் பெற்றுக் கொண்டால் அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள் இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் அவர்களில் அதிகமாக இதை வெறுப்பவர்கள் தாம். மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

(புகாரி: 3493, 3494) ,(முஸ்லிம்: 4945)

وعنْ محمدِ بن زَيْدٍ أنَّ نَاسًا قَالُوا لجَدِّهِ عبدِ اللَّه بنِ عُمْرو رضي اللَّه عنْهما:

إنَّا نَدْخُلُ عَلَى سَلاطِيننا فنقولُ لهُمْ بِخلافِ ما نتكلَّمُ إذَا خَرَجْنَا مِنْ عِندِهِمْ قال : كُنًا نعُدُّ هذا نِفَاقاً عَلى عَهْدِ رسولِ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم رواه البخاري

மக்கள் சிலர் என்னுடைய பாட்டனார் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், நாங்கள் எங்கள் மன்னர்களிடம் செல்கின்றோம். அவர்களிடமிருந்து வெளியேறியதும் (அவர்களைப் பற்றி) நாங்கள் என்ன பேசிக் கொள்வோமோ அதற்கு நேர் மாறானதையே அவர்களுக்கு (முன்னிலையில்) நாங்கள் கூறுவோம் என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், இப்படி (உள் ஒன்று பேசி புறமொன்று) பேசுவதை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் நயவஞ்சகமாகக் கருதிவந்தோம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸைத்,

(புகாரி: 7178)

இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!