கொரோனா போன்ற நோய்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?
கொரோனா ஆறு மாதத்தில் உலகை விட்டு போய் விடும் என்று ஒரு ஆலிம் ஜும்மா உரையில் சொன்னார். இதற்கு ஆதாரம் உள்ளதா?
பதில்
மார்க்க அடிப்படையிலும் வரலாற்று ரீதியிலும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொய்யான கற்பனையாகும். அவர் கூறியது போல் ஆறு மாதத்தில் ஒழியவில்லை.
இதை நாம் கண்டு வருகிறோம்.
கொரோனா மட்டுமின்றி மேலும் பல கொள்ளை நோய்கள் மிக அதிக காலம் நீடித்த வரலாறுகள் உள்ளன.
ஒரு வருடம் நீடித்த சார்ஸ்
சார்ஸ் எனும் வைரஸ் தாக்கம் 2002 ஆகஸ்டில் ஹாங்காங்கில் துவங்கி 2003 ஜுலை வரை நீடித்துள்ளது.
இரு வருடங்கள் நீடித்த இன்ஃபுலுயன்ஸா
இன்ஃபுளுயன்ஸா எனும் கொள்ளை நோய் 1918 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது 1919 ஆண்டு வரி நீடித்தது. ஐந்து கோடிப் பேர் மரணித்தனர். ஐம்பது கோடிப் பேர் பாதிக்கப்பட்டனர்.
இதற்கு தடுப்பூசியோ மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதே கால கட்டத்தில் ஏற்பட்ட பன்றிக் காய்ச்சலும் இரு ஆண்டுகள் நீடித்தன.
இரு ஆண்டுகள் நீடித்த ஏசியன் புளூ
ஏசியன் ஃப்ளூ (ASIAN Flu)
1956ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட இந்தக் கொள்ளை நோய் காரணமாக 20 லட்சம் பேர் மாண்டனர். சிங்கப்பூர், அமெரிக்கா ஹாங்காங் அகிய நாடுகளையும் இது தாக்கியது இது 1958 ஆம் ஆண்டு வரை நீடித்தது.
4 ஆண்டுகள் நீடித்த கொள்ளை நோய்
1347 முதல் 1351 வரை உலகை அச்சுறுத்திய பெரும் கொள்ளை நோயால் சுமார் 20 கோடி மக்கள் இறந்தார்கள்.
ஏழு ஆண்டுகள் நீடித்த கருப்புக் கொள்ளை நோய்
கி.பி. 1346-ல் தொடங்கி 1353 வரை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் தாண்டவமாடிய கொள்ளை நோய் இது. இந்தக் கொள்ளைநோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 7.5 கோடியிலிருந்து 20 கோடி வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது
20 ஆண்டுகள் நீடித்த பிளேக் நோய்
கிபி 165.: ஆன்டனைன் பிளேக் (Antonine Plague) ஆண்டனைன் பிளேக் நோய் முதலில் ஐரோப்பாவின் நாடோடி இன மக்களைத் தாக்கியது பின்னர் ஜெர்மனியினர் மற்றும் ரோமானியர்களைத் தாக்கியது
20 ஆண்டுகளுக்கு மேல் இதன் பாதிப்பு நீண்டது. ரோமானிய பேரரசர் மார்கஸ் அரிலியசும் இதற்கு பலியானார்.
இப்படி நீண்ட காலம் தொற்று நோய்கள் நீடித்துள்ளன. ஆறு மாதத்தில் கொள்ளை நோய்கள் ஒழிந்து விடும் என்பது தவறான கூற்றாகும்.