கிலாஃபத் ஒரு பார்வை
ஒவ்வொரு தனிமனிதனும் ஓட்டுமொந்த மனித குலமும் சிறந்து விளங்குவதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் இஸ்லாம் வழங்கி இருக்கின்றது.
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்களான அல்குர்-ஆன் மற்றும் தபிமொழிகளைப் படிக்கும் போது இதைப் புரிந்து கொள்ள முடியும்.
அவற்றை அறியாத சரியாகப் புரித்து கொள்ளாத லெ முஸ்லிம்கள் தாங்களும் வழிகெடுவதோடு பிறரையும் வழிகெடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
குறிப்பாக கிலாஃபத் எனும் பெயரில் உலகில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடைமை என்றும் இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத பகுதிகளில் வாழ்வது குற்றம் என்றும் தவறான பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மார்க்கம் அல்லாஹ்வுக்குரியது மார்க்கத்தை நிலை நாட்டுங்கள் போன்ற குர்ஆனின் சில வசனங்கள் மற்றும் சிலநபிமொழிகளுக்குத் தவறான பொருளைக் கற்பித்துக் கொண்டு மக்களைக் குழப்புவதோடு, குறிப்பாக இளைஞர்களை மூளைச் சலைவை செய்து வழிகேட்டின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மார்க்கத்தை நிலைநாட்டப் போர் புரியவும் குர்ஆன் வழிகாட்டுவதாகத் தவறாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இதுபோன்ற நபர்களால்தான் இஸ்லாமிய மார்க்கம் தவறாகச் சித்தரிக்கப்படுகிறது.
முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தைப் பற்றி தவறாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் இந்த அரைவேக்காடுகளின் செயல் அமைந்துள்ளது.
உண்மையில், இஸ்லாமிய மார்க்கம் எந்த விஷயத்தையும் அடுத்தவர்மீது திணிப்பதற்கு எள்ளளவும் அளிக்கவில்லை. இஸ்லாத்திற்குள்வருவதற்கும், இதில்இருப்பதற்கும் எவரையும் இல்லாம் நிர்பந்திக்கவில்லை. அனுமதி
இப்படியிருக்க இந்த மார்க்கம் உலகில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தச் சொல்லி முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்துகிறது என்பதெல்லாம் குர்.ஆனை அரைகுறையாகப் புரித்து கொண்டு பேசும் அறிவற்ற வாதமாகும். நபிமார்களின் வாழ்க்கையில் நிறைய போதனைகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, பிற சமய மக்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
முஸ்லிம்கள் பிற சமய மக்களுடன் நட்புடனும் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கு நபிகளாரின் வாழ்க்கையில் அற்புதமான வழிகாட்டுதல்கள் இருக்கின்றன.
குறிப்பாக, இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டங்களைக் கடைபிடிக்காத நாடுகளில் வாழ்வதற்கு முஸ்லிம்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை.
இதுபற்றி இந்த ஆக்கத்தில் ஆதாரங்கள் அடிப்படையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே கிலாபத் எனும் பெயரில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதே முஸ்லிமின் லட்சியம் என்று பிதற்றுவோரின் வாதங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு தவறாக உள்ளது என்பதை இச்சிறிய ஆக்கத்தில் விளக்கியுள்ளோம்.
மேலும் அநீதிக்கு எதிராகப் புரியுமாறுதான் இஸ்லாம் கூறியுள்ளது. இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டவோ, மார்க்கத்தைப் பரப்பவோ போர் புரிய வேண்டும் என்று இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளோம்.
மார்க்கத்தின் பெயரால் கிலாபத் என்று இளைஞர்களிடையே மூளைச்சலவை செய்யும் கூட்டத்திடம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் தலையாய நோக்கம்.
நம் அனைவரது நல்ல நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ் அருள்புரிவானாக!
கிலாஃபத் என்ற அரபுச் சொல்லுக்குப் ‘பிரதிநிதி’ என்று பொருள். அதாவது ஒருவரின் இடத்திற்கு அவருக்குப் பிறகு இன்னொருவரை நியமித்தல் என்பதாகும். பிரதிநிதியாகும் நபருக்கு கலீஃபா எனப்படும்.
ஒரு தந்தை மளிகை கடையொன்றை தடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு அவரது மகன் அந்தக் கடையைப் பார்த்துக் கொள்வார் எனில் அப்போது அவரது மகன் அந்தக் கடைக்கு கலீஃபாவாகிறார். அந்த முறைமை சிலாஃபத் ஆகிறது.
முதல் மனிதரான முதல் ஆதம் (அலை) அவர்களையும் அவர்களது சந்ததிகளையும் படைக்கவிருப்பதை இறைவன் வானவர்களிடம் தெரிவித்தான். அப்போது. ‘பூமியில் இரத்தம் சிந்துவோரையா உருவாக்கப் போகிறாய்?’ என்று வானவர்கள் ஆட்சேபணை தெரிவித்தார்கள். ‘நீங்கள் அறியாததை நானறிவேன்’ என இறைவன் பதிலளித்தான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلئِكَةِ إِنِّي جَاعِلٌ فِي ا ملْ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاء وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
“வழித்தோன்றல்களை ஏற்படுத்தும் ஒரு படைப்பை பூமியில் உருவாக்கப் போகிறேன்” என்று வானவர்களிடம் உமது இறைவன் கூறியபோது, “குழப்பம் செய்து, இரத்தம் சிந்தக் கூடியவர்களையா அதில் நீ உருவாக்கப் போர் போகிறாய்? நாங்கள்தான் உன்னுடைய புகழைக் கொண்டு உன்னைப் போற்றுகிறோமே! உன்னைத் தூயவன் என்று கூறுகின்றோமே!” என்று அவர்கள் கூறினர். “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்” என்று அவன் கூறினான்.
குர்ஆன் கூறும் இச்சம்பவத்தில் ஆதமையும் அவரது சந்ததியையும் குறிக்க ‘கலீஃபா’ என்ற சொல்லே இடம்பெறுகிறது.
பூமியில் கலீஃபாவை படைக்கப்போகிறேன் என இறைவன் கூறியதாக அவ்வசனத்தில் இடம்பெற்றுள்ளது.
அதாவது முதல் மனிதர் ஆதமைப் படைக்கப் போகிறேன். அவருக்குப் பிறகு அவரின் இடத்தில் இன்னொருவர் தோன்றுவார். பிறகு அவரின் இடத்தில் இன்னொருவர் என்று தலைமுறை தலைமுறையாகத் தோன்றுவார்கள் என்பது அதன் அர்த்தமாகும். இந்தக் கருத்தை கலீஃபா என்ற சொல் தாங்கி நிற்கிறது.
இது கிலாஃபத் – கலீஃபா எனும் சொல்லிற்கு மொழி ரீதியிலான பொருளாகும். எனினும் சொல் வழக்கில் இதற்கு வேறு பொருளும் உண்டு.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்குப் பிறகு தனது வழியில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை கலீஃபாக்கள் என குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வுக்கு அஞ்சும்படியும், (உங்களுக்கு நியமிக்கப்படும் ஆட்சியாளர்) கருப்பு நிற அடிமையாக இருந்தாலும் அவருக்குச் செவிசாய்த்துக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் நான் உங்களுக்கு அறிவுரை சொல்கிறேன். ஏனெனில் எனக்குப் பின் உங்களில் வாழ்பவர்கள் அதிகம் கருத்து வேறுபாடுகளைக் காண்பார்கள். அப்போது நீங்கள் என்னுடையை வழிமுறையையும், நேர்வழி பெற்ற நேர்மையான கலீஃபாக்களின் வழிமுறைகளையும் பின்பற்றுங்கள். அதைப் பற்றிப் பிடித்து கடைவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இர்ஃபாள் பின் ஸாரியா (ரலி)
நூல்: (திர்மிதீ: 3600)
இந்த நபிமொழியின் படி கிலாஃபத் என்பது நபிகள் நாயகம் வழங்கிய ஆட்சியைக் குறிக்கிறது. நபிகள் நாயகத்திற்குப் பிறகு அவர்களின் வழியில் நேர்மையான ஆட்சியை வழங்கும் ஆட்சியாளர்களே கலீஃபாக்கள் ஆவர் என்பதையும் இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
எனவே தான் நபிகள் நாயகத்திற்கு பிறகு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) ஆகியோர் கலீஃபாக்கள் என அழைக்கப்படுகின்றனர்.
நவீன உலகில் கிலாஃபத் எனும் பெயரில் பல்வேறு ஏமாற்றுவேலை நடைபெறுகிறது.
தங்களது உலக ஆதாயத்திற்காக வேண்டி கிலாஃபத் பெயரால் மக்களை ஏமாற்றுகின்றனர். கிலாஃபத் எனும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவப் போகிறோம் என இளைஞர்களின் மூளைச்சலவை செய்கின்றனர்.
பொதுவாக மக்களைத் தவறான கருத்திற்கு அழைக்கும் எந்தவொரு வழிகெட்ட கூட்டமும் நாங்கள் தவறான பாதைக்கு அழைக்கிறோம் என ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு அழைத்தால் அவர்களது நோக்கம் நிறைவேறாது. மக்களும் அதற்கு ஆதரவு தர மாட்டார்கள்.
மக்கள் ஆதரவைப் பெற அவர்களிடம் ஆதரவு பெற்ற அம்சத்தைக் கூறிய அதன் பெயராலேயே தவறான பாதைக்கு அழைப்பார்கள்.
முஸ்லிம்களிடம் குர்ஆனும் முஹம்மது நபிகள் (ஸல்) அவர்களின் போதனைகளும் முக்கியத்துவம் பெற்றவையாக இருப்பதால் முஸ்லிம்களைக் கவர நினைப்போர் இதன் பெயரிலேயே தவறான கருத்தைத் திணிக்க முற்படுகின்றனர்.
தங்களது உலகத் தேவைக்காகக் குர்ஆனின் பெயரையும், முஹம்மது நபிகளின் பெயரையும் தவறாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் கூட்டம் காலம் காலமாகவே இருந்து வருகிறது.
சாதாரண பேரீச்சம்பழ வியாபாரிகள் கூட பழத்தை விற்க நபிகளாரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
இந்த வகை பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று நபிகள் நாயகம் கூறினார்கள் என, நபி கூறாததைப் பொய்யாகச் சொல்லி விற்பனை செய்வதைப் பார்க்கிறோம்.
அதுபோலவே இஸ்லாமிய ஆட்சியை அமைக்கப் பாடுபடப் போகிறோம் எனும் பெயரில் மூளைச்சலவை செய்பவர்களும் குர்ஆனின் பெயரைப் பயன்படுத்தித் தமது கருத்தைப் பரப்புகின்றனர்.
ஒவ்வொரு முஸ்லிமும் கிலாஃபத் ஆட்சி அமையப் பாடுபட வேண்டும். அது அனைத்து முஸ்லிம்களின் கடமையாகும்’ என்கின்றனர். அதுமட்டுமின்றி ‘இஸ்லாமிய’ ஆட்சியல்லாத பகுதியில் அங்கு நடைபெறும் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு வாழ்வது இறைவனுக்கு இணை கற்பிக்கும் மாபெரும் பாவமான செயலாகும்’ என வாதிடுகின்றனர்.
இந்த வகையில் முஸ்லிமின் ஒரே குறிக்கோள் கிலாஃபத் தான், இஸ்லாமிய ஆட்சிதான் என்பது இவர்களின் வாதமாகும்.
இஸ்லாத்தின் பார்வையில் இவர்களின் வாதம் தவறானதாகும். அது எவ்வாறு என்பதை விரிவாகப் பார்ப்போம்.
முஸ்லிம்கள் அவசியம் செய்ய வேண்டிய அனைத்துச் செயல்பாடுகளையும் திருக்குர்ஆன் கூறுகிறது. நபிகள் நாயகம் விளக்கியுள்ளார்கள். அவற்றை
முஸ்லிம்கள் பின்பற்ற திருக்குர்ஆனையும், நபிகள் கட்டளைகளையும் தான்.
தொழுகை, நோன்பு, ஜகாத் ஹஜ் என இஸ்லாத்தின் அடிப்படையான வணக்க வழிபாடுகளைப் பற்றித் திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது. நபிகள் நாயகமும் அவற்றை எப்போது எப்படி நிறைவேற்ற வேண்டும் என தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
வணக்க வழிபாடுகள் அல்லாத நடைமுறை சார்ந்த பல்வேறு விஷயங்களைக் கூட தெளிவான வழிகாட்டுலுடன் குர்ஆன் எடுத்துச் சொல்கிறது.
பிறரது வீட்டில் நுழைவதாக இருந்தால் அனுமதி பெற்ற பிறகே உள்ளே செல்ல வேண்டும் என்கிறது. பார்க்க: (அல்குர்ஆன்: 24:27) ➚
கடன் அடிப்படையிலான கொடுக்கல் வாங்கலை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.பார்க்க: (அல்குர்ஆன்: 2:282) ➚ விருந்துண்ண அழைக்கப்பட்டால் பேச்சில் வயித்து விடாமல் உடனே கிளம்பி விட வேண்டும் உத்தரவிடுகிறது. பார்க்க: (அல்குர்ஆன்: 33:53) ➚
பேச்சிலும் நடையிலும்’ நடுநிலையை கடைபிடிக்க வேண்டும். அதிக சப்தத்துடன் பேசக் கூடாது. ஆணவத்துடன் நடக்க கூடாது என்று அறிவுறுத்துகிறது. பார்க்க: (அல்குர்ஆன்: 31:18-19) ➚
சொத்துக்களை எவ்வாறு பங்கிட வேண்டும்? என கற்றுத் தருகிறது. பார்க்க: (அல்குர்ஆன்: 4:11-12) ➚
இவ்வாறு பல்வேறு விஷயங்களை விரிவாகவும் நிறைவாகவும் திருக்குர்.ஆஸ் கூறுகிறது.
இங்கே விளக்க நாம் என்னவென்றால் இப்படிப் முற்படுவது பலவற்றைத் திருக்குர்ஆன் மனிதர்களுக்கு வழிகாட்டியிருக்கும் போது இஸ்லாமிய ஆட்சியை நிறுவப் பாடுபடுவது முக்கியம் என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்லியிருப்பார்கள் அல்லவா?
திருக்குர்ஆனில் எங்கேயும் கிலாஃபத் ஆட்சியை நிறுவ முஸ்லிம்கள் பாடுபட வேண்டும் எனக் கூறப்படவில்லை. கிலாஃபத் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு முன்னுள்ள ஒரே தீர்வு என்றோ, அதை அடைய முயற்சிக்க வேண்டும் என்றோ வேண்டியது திருக்குர்ஆனில் எந்தவொரு வசனத்திலும் இல்லை. நாயகத்தின் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆன் தான் கூறவில்லை. நபிகள் நாயகம் அவர்களாவது கூறியுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை.
நபிகள் நாயகம் அவர்களும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முயற்சி செய்யுங்கள் என்று உத்தரவிடவில்லை.
பொதுவாக நபிகள் நாயகம் முஸ்லிம்களுக்கு ஒவ்வொன்றுக்குமான வழிகாட்டுதலை வழங்குவார்கள். முழுமையான நோன்பை எடுத்துக் கொண்டால் அதை எந்த நேரத்தில் துவங்கி, எந்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் வழிகாட்டியுள்ளார்கள்.
ஜகாத் எப்போது கொடுக்க வேண்டும்? யாருக்குக் கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் முழுமையாக வழிகாட்டியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் கடைபிடிக்கும் ஹஜ் எனும் புனித யாத்திரையை எடுத்துக் கொண்டால் அதை எவ்வாறு செய்ய வேண்டும்? எந்த நாளில் எங்கே தங்க வேண்டும்? எந்த நாளில் எந்த வணக்க வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்று பல விஷயங்களைக் கற்றுத் தந்துள்ளார்கள்.
தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளைப் போல கிலாஃபத்தும் முஸ்லிம்களுக்கு அவசியமானது என்றால் அந்த கிலாஃபத்தை அமைக்க எவ்வாறு பாடுபட வேண்டும்? என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று பல்வேறு வழிகாட்டுதல்களை நபிகள் நாயகம் அவர்கள் வழங்கியிருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.
கிலாஃபத் அமைய முஸ்லிம்கள் பாடுபட வேண்டும் என்றோ, “அதை நிறுவ இந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்றோ எந்தவொரு உத்தரவையும் நபிகள் நாயகம் பிறப்பிக்கவில்லை.
இதிலிருந்தே கிலாஃபத் எனும் வாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை அறியலாம்.
முஸ்லிம்கள், இஸ்லாமிய ஆட்சியை அமைக்கவே பாடுபட வேண்டும், முஸ்லிமல்லாத பிறர் ஆட்சியில் வாழக்கூடாது. அது பாவம் என்கிறார்கள் அல்லவா? இக்கருத்து திருக்குர்ஆனுக்கே எதிரானதாகும்.
முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வை எடுத்துக் கொள்வோம்.
முஹம்மது நபியைப் பொறுத்தவரை அவர்கள் திடீரென்று வானிலிருந்து இறங்கவில்லை. சாதாரண மக்களைப் போல மக்காவில் பிறந்து வாழ்ந்து வந்தார்கள். தமது நாற்பதாம் வயதில் தன்னை இறைவனின் தூதர் என்று அறிவித்தார்கள். அதற்கான சான்றுகளைச் சமர்ப்பித்தார்கள். மக்களும் முஹம்மது நபியை நம்பத் துவங்கினார்கள்.
தன்னை இறைத்தூதர் என்று அறிவித்த பிறகும் மக்காவில் 13 வருட காலம் வாழ்ந்தார்கள்.
அந்த 13 வருட காலத்தில் சிறிது சிறிதாக முஹம்மது நபியை நம்புவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
எளினும் ஒப்பீட்டளவில் மிகவும் சிறுபான்மையாக அவர்கள் இருந்ததால் மக்காவில் உள்ள பெரும்பான்மையினர் அவர்களை நகக்கினார்கள். பல்வேறு சித்திரவதைகளை அவர்கள் அனுபவித்தார்கள்.
கஅபாவில் தொழுவதற்குத் தடுக்கப் பட்டார்கள். நபியவர்கள் தொழும் போது ஒட்டகக் குடலை நபியின் மீது போட்டுத் துன்புறுத்தினார்கள். பல அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்.
இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டு பொறுமை காத்தார்களே தவிர, கிலாஃபத் பேர்வழிகள் பிதற்றிக் கொண்டிருப்பதைப் போல ஆயுதம் தூக்கவில்லை. பிறர் ஆட்சியில் வாழ்வது பாவம் என்று பிதற்றிக் கொண்டிருக்கவில்லை. பொறுமை காக்குமாறே அறிவுரை வழங்கினார்கள்.
கப்பாப் இப்னு அல்அரத் (ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி ‘எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்டோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்கள் இடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும். (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையை தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அந்தக் கொடுமையானறது, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! விவகாரம் مه (இஸ்லாத்தின்) முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’விலிருந்து ‘ஹள்ரமவ்த்’ வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்ச மாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்’ என்றார்கள்.
நூல்: (புகாரி: 6943)
முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளைப் பட்டியலிட்டு நபிகள் தாயகத்திடம் பொறுமையையே. கூறுகிறார்கள். முறையிடும் போது, கடைப்பிடிக்குமாறு பிற்காலத்தில் இந்தத் துன்பமெல்லாம் நீங்கும். என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார்கள்.ஏன் அவசரப்படுகிறீர்கள் என்று கண்டிக்கின்றார்கள்.
இப்படியான துன்பங்களுடன் நபிகள் நாயகமும், முஸ்லிம்களும் மக்காவில் 13 வருட காலம் வாழ்ந்தார்கள்.
பிறர் ஆட்சியில் வாழக்கூடாது என்றால் மக்காவில் 13 வருட காலம் தங்கியிருக்க வேண்டியதில்லையே? அதுவும் அத்தனை துன்பங்களை, துயரங்களைத் தாங்கி கொண்டு வாழ வேண்டியதில்லையே!
“ஒரு முஸ்லிம், கிலாஃபத் எனும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ்தான் வாழ வேண்டும். பிறர் ஆட்சியில் வாழ்வது பாவம், உலகில் எங்கே இஸ்லாமிய அடிப்படையில் ஆட்சி நடைபெறுகிறதோ அங்கு செல்கிறேன் ‘ என்று இறைத்தூதராக ஆன புதிதிலேயே அறிவித்திருக்க மாட்டார்களா?
அப்படி எதுவும் சொல்லாததிலிருந்தே இவர்கள் கூறுவதைப் போன்ற க்ருத்தாக்கம் இஸ்லாத்தில் இல்லை என்பதை அறியலாம்.
மக்காவில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்ட துவக்க காலத்தில் ஒரு சிலர் அபிசீனியாவிற்குச் சென்றார்கள். மக்காவில் இஸ்லாத்தைச் சரியாகப் பின்பற்ற முடியாத சூழ்நிலையே இதற்குக் காரணம். எனினும் அபிசினியா முஸ்லிம் நாடு அல்ல. அங்கு இஸ்லாமிய ஆட்சி எதுவும் இல்லை.
மக்காவின் நிலையுடன் அபீசீனியா நிலையை ஒப்பிட்டால் மலைக்கும் வித்தியாசம் இருந்தது. மடுவுக்குமான
மக்காவில், ‘இறைவன் ஒருவனே!’ என்று சொல்லக்கூட உரிமையில்லாமஸ் இருந்தது. தொழுகை நிறைவேற்ற அனுமதியில்லை. கஅபாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு உள்ளிட்ட எல்லையற்ற துன்பங்களை அனுபவித்து வந்தார்கள்.
ஆனால் அபிசீனியாவில் நிலைமை இதற்கு நேர் எதிராக இருந்தது. அங்கு முஸ்லிம்கள். தங்களது மத நம்பிக்கையுடனும், வழிபாட்டு சுதந்திரத்துடன் வாழ அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் அனைத்து சமூக சமய மக்களும் தத்தமது மத உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ வழியுள்ளதைப் போல இதற்கு நெருக்கமான நிலையில் அன்றைக்கு அபிசீனியா இருந்தது.
எனவே முஸ்லிம்கள் அபிசீனியா நோக்கிச் சென்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் இவ்வாறு செல்வதைத் தடுக்கவில்லை.
பிறர் ஆட்சியின் கீழ் வாழக்கூடாது என்றால் கிறித்தவ மத அடிப்படையில் ஆட்சி நடைபெற்ற அபிசினியாவுக்குச் செல்ல நபிகள் நாயகம் அனுமதித்திருப்பார்களா?
இதை யோசித்தாலே இஸ்லாமிய ஆட்சியில் தான் வாழ வேண்டும். பிறர் ஆட்சியில் ஜனநாயக நாட்டில் வாழ்வது பாவம் எனும் கருத்து தவறான வாதமாகும் என்பதை அறியலாம்.