ஒப்பீடுகளும், உவமைகளும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

ல்லாஹ்வின் தூதர் அவர்கள் மார்க்கத்தை மக்களுக்கு விளக்கும்போது சில ஒப்பீடுகளையும் உவமைகளையும் கூறி விளக்குவார்கள். அந்த அற்புதமான உதாரணங்களில் சிலவற்றை இங்கு காண்போம்.

நல்ல அண்டை வீட்டுக்காரியும், தீய அண்டை வீட்டுக்காரியும்

அபூஹீரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! 93 பெண் (கடமையானதைத் தொழுது தொழுகைகளையும்) அதிகமாகத் தொழுகிறாள். எனினும் அவன் தனது நாவினால் (அண்டை வீட்டாருக்கு தொல்லை கொடுக்கிறாள். (அவனது மறுமை நிலை என்ன)” என்று கேட்டார். அதற்கு “அவள் நரகத்தில் இருப்பாள்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய (உபரியான) தொழுகையும். நோன்பும் குறைவாகவே உள்ளது. அவள் பாலாடைக் கட்டிகளைத்தான்) நர்மம் செய்கிறாள். எனினும் அவள் தனது அண்டைவீட்டாருக்குத் தொல்லை கொடுப்பதில்லை. (அவளது மறுமை நிலை என்ன?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவன் சொர்க்கத்தில் இருப்பாள்” என்று கூறினார்கள்.

நூல்: (இப்னு ஹிப்பான்: 0764)

நல்ல நண்பனும் தீய நண்பனும்.

தபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உங்களுடன் அமர்ந்திருக்கும்) நல்ல நண்பன். தீய நண்பன் ஆகியோருக்குரிய எடுத்துக்காட்டு கஸ்தூரி விற்பவர் மற்றும் கொல்லனின் துருத்தி ஆகியவற்றினுடைய தன்மையைப் போன்றதாகும்.

கஸ்தூரி விற்பவரிடமிருந்து அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் தறுமணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று) உமக்கு இல்லாமல் போகாது.

கொல்லனின் துருத்தி உமது உடலையோ. அல்லது ஆடையையோ எரித்து விடலாம். அல்லது அதிலிருந்து மோசமான துர்வாடையை நீ உணர்ந்து கொள்வாய்.

அறிவிப்பவர் அபூ மூஸா (ரலி)

நூல்: (புகாரி: 2101)

குர்ஆனைப் படிக்கும் முஃமின், முனாஃபிக் குர்ஆனைப் படிக்காத முஃமின், முனாஃபிக்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனைப் படிக்கின்ற (மேலும் அதன்படி செயல்படுகின்ற. இறைநம்பிக்கையாளருக்கு எடுத்துக்காட்டு நார்த்தம் பழத்தின் தன்மையைப் போன்றதாகும். அதன் நறுமணமும் நன்று. அதன் சுவையும் நன்று.

குர்ஆனைப் படிக்காத இறை நம்பிக்கையாளருக்கு எடுத்துக்காட்டு பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதன் இனிப்பானது. (எனினும்) அதற்கு எந்த மணமும் கிடையாது.

குர்ஆனைப் படிக்கின்ற நயவஞ்சகனுக்கு எடுத்துக்காட்டு துளசிச் செடியின் தன்மையைப் போன்றதாகும். அதன் நறுமணம் தன்று. ஆனால் அதன் சுவையோ காப்பானது.

குர்ஆனைப் படிக்காத நயவஞ்சகனுக்கு எடுத்துக்காட்டு குமட்டிக்காயைப் போன்றதாகும். அதற்கு எந்த மணமும் கிடையாது. அதன் சுவையும் கசப்பானது.

அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்ரி (ரலி)

நூல்: (புகாரி: 3020)

குடும்பத்திற்குச் செலவு செய்வதும், பிற நற்காரியங்களுக்குச் செலவு செய்வதும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்காக) நீ செலவிட்ட ஒரு தங்க நாணயம், அடிமையை விடுதலை செய்வதற்காக செலவிட்ட ஒரு தங்க நாணயம், ஏழைக்கு நீ தர்மமாக வழங்கிய ஒரு தங்க நாணயம், உனது குடும்பத்திற்காக நீ செலவிட்ட ஒரு தங்க நாணயம், இவற்றில் நீ உனது குடும்பத்திற்காக செலவிட்ட தங்க நாணயமே மகத்தான நற்கூலியைக் கொண்டதாகும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: (முஸ்லிம்: 1818)

கருத்துரை: இந்த நபிமொழி குடும்பத்திற்காக செலவிடுவதின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. ஏனெனில் குடும்பத்திற்காகச் செலவிடுவது கட்டாயக் கடமையாகும். இதைப் பின்வரும் நபிமொழி எடுத்துரைக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதன் (தரகம் செல்வதற்கு) போதுமான பாவமாகிறது. அவன் ஒருவருக்கு உணவளிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கும் நிலையில் அவருக்கு உணவளிக்க மறுப்பதாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: (முஸ்லிம்: 1819)

இந்நபிமொழி பொதுவானது என்றாலும் குடும்பத்திற்கு உணவளிப்பதற்குப் பொறுப்பேற்றிருக்கும் குடும்பத் தலைவரையும் இது உள்ளடக்கியதாகும்.

ஒரு ஆண் குடுபத்தினருக்கு பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பைப் பற்றி விசாரிக்கப்படுவான்” என்ற நபிமொழியும், நீ உனது குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன” என்ற நபிமொழியும் ஆண்கள் தமது செல்வங்களிலிருந்து செலவு செய்வதினால் அவர்களே பெண்களை நிர்வகிப்பவர்கள்” என்ற இறைவசனமும் இன்னும் பல்வேறு மார்க்க ஆதாரங்களும் குடும்பத்திற்குச் செல்வு செய்ய வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கு கடமையாகும் என்பதை எடுத்துரைக்கிறது.

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதும், அடிமையை விடுதலை செய்வதும், தர்மம் செய்வதும் உபரியான நற்செயல்களாகும். ஒருவரிடம் குறைந்த அளவு பொருளாதாரம் இருக்கும் போது உபரியான காரியங்களை விட கடமையான காரியத்திற்குச் செலவிடுவதே சிறந்ததாகும். அல்லாஹ் போதுமான செல்வத்தை ஒருவருக்கு வழங்கினால் அனைத்து நற்காரியங்களுக்கும் அவர் செலவு செய்வது இறைவனின் நேசத்தைப் பெற்றுத் தரும்.

இறைநினைவு கொள்பவனும், இறைதினைவு கொள்ளாதவனும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது இறைவனை புகழ்வார்த்தைகளைக் கூறி) நினைவுகூர்பவனுக்கும், தினைவு கூராதவனுக்கும் எடுத்துக்காட்டாகிறது (நினைவு கூர்பவன்) உயிரோடு இருப்பவனைப் போன்றும், (நினைவு கூராதவன்) இறந்தவனைப் போன்றும் ஆவார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூசா (ரவி)

நூல்: (புகாரி: 6407)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எங்கு இறைவனை (புகழ்வார்த்தைகளைக் கூறி) நினைவுகூரப்படுகிறதோ அந்த வீட்டிற்கும், எங்கு இறைவனை நினைவு கூரப்படவில்லையோ அந்த வீட்டிற்கும் எடுத்துக்காட்டாகிறது (நினைவு கூரும் வீடு) உயிரோடு இருப்பவனைப் போன்றும், (நினைவு கூராத வீடு) இறந்தவனைப் போன்றும் ஆகும்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி) நூல்: (முஸ்லிம்: 1429)

அழகு, அந்தஸ்துமிக்கவளா? மார்க்கமுடையவளா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்ளப்படுகிறான்.

1. அவளது செல்வத்திற்காக

2. அவளது குடும்ப அந்தஸ்திற்காக

3. அவளது அழகிற்காக

4. அவளது மார்க்கத்திற்காக. மார்க்கமுடையவளைக் கொண்டு நீ வெற்றி பெற்றுக்கொள் (இல்லையெனினல்) உமது இரு கரங்களும் மண்ணாகட்டும். (அதாவது நீங்கள் நஷ்மடைந்தவர்களாகிவிடுவீர்கள்.)

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: (புகாரி: 5090)

கருந்துரை: உலக நடைமுறையில் இந்த நான்கு காரணங்களுக்காகத்தான் ஒரு பெண் திருமணம் முடிக்கப்படுகிறாள். இந்த நான்கில் மார்க்கப் பற்றுடைய பெண்ணை திருமணம் செய்வதுதான் முதன்மையானதாகும். மார்க்கத்துடன் மற்ற காரணங்கள் இணைந்திருப்பது தவறல்ல.

மார்க்கம் தெரிந்தஇறைநம்பிக்கை கொண்ட ஒரு பெண் அழகில்லாதவளாக இருந்தாலும் அவன் இணைவைக்கும் பெண்ணை விடச் சிறந்தவள் ஆவாள். அல்குர்ஆன் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.

இணை வைக்கும் பெண்களை, அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும்வரை திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் பெண் உங்களைக் கவர்த்த போதிலும் அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவளாவாள். இணை வைக்கும் ஆண்கள், இறைநம்பிக்கை கொள்ளும்வரை அவர்களுக்கு (இறைநம்பிக்கை கொண்ட பெண்களைத்) திருமணம் செய்து கொடுக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களைக் கவர்ந்த போதிலும் அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவனாவான். அவர்கள் நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ், தனது ஆணைப்படி சொர்க்கத்தையும் மன்னிப்பையும் நோக்கி அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்குத் தனது வசனங்களை அவன் தெளிவுபடுத்துகிறாள்.

(அல்குர்ஆன்: 2:221)

தர்மம் செய்பவனும், கஞ்சத்தனம் செய்பவனும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(தர்மம் செய்யாத) கஞ்சனுக்கும், தர்மம் செய்பவனுக்கும் எடுத்துக்காட்டாகிறது இருமனிதர்களின் நிலையைப் போன்றதாகும். அவ்விருவர் மீதும் இரும்பால் ஆன இருகவச ஆடைகள் உள்ளது. அவை அவர்களின் கைகளை அவர்களது கழுத்து எலும்புகளை நோக்கி இறுக்கிப்பிடித்துள்ளன. தர்மம் செய்பவன் தனது தர்மத்தை (கொடுக்க) நாடும் போதெல்லாம் அந்த இரும்புக் கவசம் (உடல் முழுவதையும் காக்கும் அளவுக்கு பெரிதாகி அவள் நடந்து செல்லும் போது) அவனது கால்சுவடுகளெல்லாம் மறையும் அளவுக்கு அவன் மீது அது விசாலமாகிவிடுகிறது. கஞ்சத்தனம் செய்பவன் தர்மம் செய்ய நாடும் போதெல்லாம் (இரும்புக் கவசத்தின் எல்லா வளையங்களும் இணைந்து அவன் மீது இறுக்கமாகிவிடுகிறது. அவனது இருகைகளும் அவனது கழுத்து எலும்புகளுடன் (அழுத்தமாக) நெருங்கிவிடுகிறது. அதை விசலாமாக்குவதற்கு அவன் முயற்சிக்கிறான். எனினும் அது விசாலமாகவில்லை.’

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: (புகாரி: 2917)

கருத்துரை: இச்செய்தியில் இரும்புக் கவசம் என்பது மனிதனின் இயற்கைத் தன்மைக்கு உவமையாகக் கூறப்பட்டதாகும். இறுக்கமும், சுடுமையுமே மனிதனின் இயற்கைத் தன்மையாகும். ஆனால் இத்தன்மை தர்மம் செய்வதினால் மாறுகிறது. ஒருவர் தர்மம் செய்வதின் காரணமாக அவரது உள்ளம் விசாலமாகிறது. தர்மம் செய்வதே அவரது வழக்கமாக மாறிவிடுகிறது.

“இரும்புக்கவசம் உடல் முழுவதையும் காக்கும் அளவுக்கு பெரிதாகி, கால்சுவடுகளையும் அழித்து விடுகிறது” என்பதின் கருத்தாகிறது. தர்மம் செய்வதினால் விசாலத்தன்மை கிடைப்பதுடன் நமது பாலங்களும் அதன் அழிக்கப்படுகிறது என்பதாகும். காரணமாக தர்மம் செய்பவரின் செய்யாமல் உள்ளம் கஞ்சத்தனம் மேலும் மேலும் இறுக்கத்திற்குள்ளாகிவிடுகிறது. கொடுக்காமல் இருப்பதே அவரின் வழமையாகிவிடுகிறது. இதன் காரணமாக பாவங்கள் அதிகமாகி மென்மேலும் அவருக்கு இறுக்கம் அதிகரிக்கிறது. உயர்ந்தவனாகிய அல்லாஹ் கூறுகிறான்:-

தம்மிடமுள்ள கஞ்சத்தனத்தை விட்டும் யார் பாதுகாக்கப்படுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் (அல்குர்ஆன்: 59:9)

செலவிடுங்கள்!(அதுவே) உங்களுக்குச் சிறந்ததாகும். தம்மிடமுள்ள கஞ்சத்தனத்தை விட்டும் யார் பாதுகாக்கப்படுகிறாரோ அவர்களே வெற்றியாளர்கள் (அல்குர்ஆன்: 64:16)

பாவம் செய்பவனும், துரோகம் செய்து பாவம் செய்பவனும்

“விபச்சாரக் குற்றம் தொடர்பாக நீங்கள் என்ன (கருத்தைக்) கூறுகிறீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அதைத் தடைசெய்துள்ளனர். அது கியாமத் நாள்வரை தடைசெய்யப்பட்டதாகும்” என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் “ஒரு மனிதன் பத்துப் பெண்களுடன் விபச்சாரம். செய்வ(தினால் ஏற்படும் பாவச்சுமையாகிறது, அவன் தனது அண்டை வீட்டானின் மனைவியுடன் விபச்சாரம் செய்வ(தினால் ஏற்படும் பெரும்பாவத்)தை விட அவனுக்கு இலேசானதாகும்” என்று கூறினார்கள்.

பின்னர் “திருட்டுக் குற்றம் தொடர்பாக நீங்கள் என்ன (கருத்தைக்) கூறுகிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வும், அவனது தூதரும் அதைத் தடைசெய்துள்ளனர். எனவே அது (கியாமத் நாள்வரை) தடுக்கப்பட்டதாகும்” என்று நபித்தோழர்கள் கூறினர்.

”ஒரு மனிதன் பத்து வீடுகளில் திருடுவ(தினால் ஏற்படும் பாவச் சுமையாகிறறது, அவன் தனது அண்டை வீட்டானிடம் திருடுவ(தினால் ஏற்படும் பெரும்பாவத்)தை விட அவனுக்கு இலேசானதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்; மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரலி) நூல்: (அஹ்மத்: 22734)

கருத்துரை: விபச்சாரக் குற்றம் என்பது

மார்க்கம் தடுத்துள்ள பெரும்பாவமாகும். பல்வேறு இறைவசனங்களும், நபிமொழிகளும் இக்குற்றம் குறித்து கடுமையாக எச்சரிக்கை செய்கின்றன. எனவே ஒரு இறைநம்பிக்கையாளர் இப்பாவத்தைச் சாதாரண குற்றமாக கருதமாட்டார்.

பெரும்பாவத்தில் ஈடுபடுவனை விட நம்பிக்கைத் துரோகம் செய்து பெரும்பாவத்தில் ஈடுபடுவன் மிகப் பெரும் பாவி ஆவான்.

சமூகமாக வாழும் மனித வாழ்க்கையில் அண்டை அயலார்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தொழில் ரீதியாக அல்லது வேறு காரணங்களுக்காக ஒருவன் தனது மனைவி மக்களை வீட்டில் விட்டுவிட்டுச் செல்லும் போது அண்டைவீட்டினர் தான் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் ஒருவன் தனது அண்டைவீட்டானுக்கு நம்பிக்கைக்குரியவனாகத் திகழ வேண்டும். அண்டை வீட்டாருக்கு மோசடி செய்வது கூடாது என மார்க்கம் வலியுறுத்துகிறது. அண்டை வீட்டானிடம் நம்பிக்கையாளனைப் போல் நடித்து அவனுக்குத் துரோகம் செய்பவன் இறைவளின் பிடியிலிருந்து தப்பித்துவிட முடியாது என்பதைத்தான் மேற்கண்ட நபிமொழி எச்சரிக்கிறது.

மருத்துவர்கள்,ஆசிரியர்கள், இயக்க நிர்வாகிகள். சமுதாயத் தலைவர்கள், காவல்துறையினர். இராணுவத்தினர், நீதிபதிகள், ஆட்சியாளர்கள் என்று பல பொறுப்புகளில் இருப்பவர்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து பல்வேறு காரணங்களுக்காகத் தமது குடும்பத்தினரை அவர்களின் பாதுகாப்பில் விட்டுச் செல்ல வேண்டிய நிலை மனித வாழ்வில் சர்வ சாதாரணமாக ஏற்படுகிறது. நம்பிக்கை வைக்கப்படும் பொறுப்பில் இருப்பவர்கள் தம்மீது நம்பிக்கை வைத்தவர்களுக்குத் துரோகம் இழைப்பது அவன் செய்யும் ஏனைய பெரும்பாவங்களை விடக் கொடுமையானதாகும். அவர்கள் அதன் விளைவை அறுவடை செய்தே தீருவார்கள்.

இறைச்சட்டத்தில் உறுதிமிக்கவர்களும், உறுதியற்றவர்களும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை. ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது.

கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்ட போது (அதைக் கொண்டு வ அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடத்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த்தனத்தில் இருந்தவர்கள் (தமகிகுள்) ‘நாம் (தண்ணீருக்காக) நமது பங்கில் (கீழ்த்தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்: நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசித் கொண்டார்கள், அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டு விட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். ஒட்டையிட விடாமல்)அவர்களுடைய கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் ஷீர் (ரலி)

நூல்: புகாரி (2493)

கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாத்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது) போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: (புகாரி: 2622)

இறைவழியில் தியாகம் செய்பவரின் சிறப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் போராடுபவரின் நிலையானது. உண்மையாகப் போராடுபவர் யார் என்பது (அவரது எண்ணத்தைப் பொறுத்து) அல்லாஹ்வுக்கே தெரியும் – (அல்லாஹ்வைத்) தொழுதும்.(அவனுக்காக) நோன்பு தோற்றும் வருபவரின் நிலையைப் போன்றதாகும். அல்லாஹ், தன் பாதையில் போராடுபவரின் உயிர்த் தியாகத்தை ஏற்று, அவரை சொர்க்கத்தில் நுழைய வைக்க உத்தரவாதம் அளித்துள்ளான் அல்லது நன்மையுடனோ. போர்ச் செல்வத்துடனோ அவரைத் திரும்பவைக்க உத்தரவாதம் அளித்துள்ளான்.

அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ரலி)

நூல்:  (புகாரி: 2787)