எடையைக் கூட்டும் இனிய திக்ருகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

பொதுவாக கொள்கைச் சகோதரர்களிடம் சிறிய சிறிய அமல்கள் செய்வதில் கவனமின்மை இருந்து வருகின்றது. ஆனால் சிறிய அமல்கள் பெரிய பலன்களைப் பெற்றுத் தரும் வகையில் அமைந்து விடுகின்றன. நாளை மறுமையில் ஒவ்வொருவரும் தமது அமல்களை எடை போடுகின்ற மீசான் என்னும் தராசைச் சந்தித்தே ஆக வேண்டும். இதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.

தராசு உண்மையே!

அந்நாளில் (நன்மை, தீமைகளை) எடை போடுதல் உண்மையாகும். யாருக்கு அவரது (நன்மையின்) எடைகள் கனத்து விட்டதோ அவர்களே வெற்றியாளர்கள்.

யாகுக்கு அவரது (நன்மையின்) எடைகள் இலேசாகி விட்டதோ, அவர்களே நமது வசனங்களில் அதியாயம் செய்ததால் தமக்குத் தாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். (அல்குர்ஆன்: 7:8-9)

மறுமை நாளுக்காக நீதமான தராசுகளை ஏற்படுத்துவோம். எனவே. எவரும் சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். கடுகின் விதையளவுக்கு இருந்தாலும் அதையும் கொண்டுவருவோம். கணக்கெடுப்பதற்கு நாமே போதுமானவர்கள்.

(அல்குர்ஆன்: 21:47)

இந்த வசனங்கள் நாளை மறுமையில் நீதமான தராசுகளை நிறுவுவதைத் தெரிவிக்கின்றான நன்மையின் எடை கனத்தோரே வெற்றியாளர்கள்

யாருக்கு அவரது (நன்மையின்) எடைகள் கனத்துவிட்டதோ அவர்களே வெற்றியாளர்கள். யாருக்கு அவரது (நன்மையின்) எடைகள் இலேசாகிவிட்டதோ அவர்கள் தான் தமக்குத் தாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 23:102-103)

திருப்தியான வாழ்வு

யாருக்கு. அவரது (நன்மையின்) எடைகள் கணத்துவிட்டதோ அவர் திருப்தியடைந்த வாழ்வில் இருப்பார்.

யாருக்கு. அவரது (நன்மையின்) எடைகள் இலேசாகிவிட்டதோ அவருடைய தங்குமிடம் “ஹாவியா” தான்.

(அல்குர்ஆன்: 101:6-9)

மஹ்ஷர் மைதானத்தில் நன்மை தட்டு கனத்தவர் சொர்க்கத்திற்குச் செல்வார். தட்டு இலேசானவர் தங்குமிடம் நரகமாக ஆகி விடும். அதனால் நன்மை தட்டு கனமாவதற்கு நாம் நிறைய அமல்கள் செய்வதற்குக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அந்தத் தட்டுகளை நிரப்புவதற்கும் நிறைப்பதற்கும் பெரிய பெரிய அமல்கள் செய்ய வேண்டும் என்று காத்திருக்கத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் பெரிய, பெரிய அமல்களில் நாம் கோட்டை விடுபவர்களாகவே இருக்கின்றோம்.அப்படியிருக்கையில் நாம் சிறிய, சிறிய அமல்களை செய்வதில் மெத்தனமாக இருக்கக் கூடாது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு அழகான முறையில் வழி காட்டியிருக்கின்றார்கள். இதோ அதற்கான எளிய, இனிய வழிமுறைகள்:

தட்டில் கனமானவை; உதட்டில் எளிதானவை

இரண்டு எளிதானவையாகும். தீமை வாக்கியங்கள் நிறுக்கப்படும். நாவுக்கு (நன்மை தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:)

سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.

பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: (புகாரி: 6406))

அனைத்தையும் மிகைக்கும் அரிய நான்கு வார்த்தைகள்!

நபி (ஸல் ) தொழுகைக்குப்பின் அவர்கள் சுப்ஹுத் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், “நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன் .அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:)

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ

وَمِدَادَ كَلِمَاتِهِ

சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி

(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும். அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)

அறிவிப்பவர்: ஜூவைரிய்யா (ரலி)

நூல்: (முஸ்லிம்: 5272)

எடையை கூட்டும் அல்ஹ்மதுல்லாஹ்!

الْحَمْدُ لله

அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்) பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசைநிரப்பக்கூடியதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மாலிக் அல் அஷ் அரி (ரலி)

நூல்: (முஸ்லிம்: 381)

எடையைக் கூட்டும் இனிய 5 விஷயங்கள்

أَنْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَحْ بَحْ خَمْسٌ مَا أَثْقَلَهُنَّ فِي الْمِيزَانِ لَا إِلَهَ إِلَّا اللَّهَ وَاللَّهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَالْوَلَدُ الصَّالِحُ يُتَوَفَّى فَيَحْتَسِبُهُ وَالِدَاهُ أحمد

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஹா! ஆஹா! ஐந்து விஷயங்கள் தராசைக் கனக்க வைக்கும் அதிசயம் தான் என்ன? அவை:

1. லாயிலாஹ இல்லல்லாஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை)

2. அல்லாஹ் அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)

3. சுப்ஹானல்லாஹ் தூய்மையானவன்) (அல்லாஹ்

4. அல்ஹம்துலில்லாஹ் (அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே )

5. உயிர் கைப்பற்றப்பட்ட நல்ல குழந்தை. அக்குழந்தையின் தந்தையோ அதற்குரிய கூலியை அல்லாஹ்விடம் பெறுவதற்காகக் காத்திருக்கின்றார்.

அறிவிப்பவர்: சவ்பான் (ரலி)

நூல்: (அஹ்மத்: 15107)

ஈடு, இணையற்ற ஏகத்துவக் கலிமா

மறுமைநாளில் படைப்பினங்களுக்கு மத்தியில் எனது சமுதாயத்திலிருந்து ஒருவரை தனியாக பிரித்துக் கொண்டு வந்து அவர் முன் தொன்னூற்று ஒன்பது (நன்மை, தீமை அடங்கிய) பதிவேடுகளை விரித்து போடுவான். ஒவ்வொரு பதிவேடும் அவனது பார்வை எட்டும் தூர அளவிற்கு (விரிந்து) இருக்கும். பிறகு இதில் எதையேனும் நீ மறுக்கின்றாயா? கண்காணிப்பாளர்களான எனது (சங்கைமிகு) எழுத்தர்கள் உனக்கு துரோகம் இழைத்தனர் என்று நீ கூறுகின்றாயா? என்று (அவரிடம்) அல்லாஹ் கேட்பான்.

அதற்கு அவர், ‘இல்லை எனது இறைவனே’ என்று பதிலளிப்பார். உனக்கு ஏதேனும் (தப்பிக்கும் தக்க) காரணம் இருக்கின்றதா? என்று அவன் கேட்பான். அவர், ‘இல்லை எனது இறைவனே’ என்று சொல்வர்.

அதற்கு இறைவன் ‘உனக்கு (தப்பிக்கும் தக்க ) காரணம் இருக்கின்றது; இன்றைய தினம் உனக்கு எதிராக எந்த அநீதியும் ஏற்படாது’ என்று சொல்வான். அப்போது

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறுயாருமில்லை என்று நான் உறுதி மொழிகின்றேன். முஹம்மத் அவனது அடியாரும் தூதரும் ஆவார் என்று உறுதி மொழிகின்றேன்) என்று எழுதப்பட்ட ஒரு சிறிய அட்டை வெளியாகும். உடனே, (அவரை நோக்கி) ‘உனது எடையை வந்து பார்’ என்று அல்லாஹ் கூறுவான்.

‘இத்தனை பதிவேடுகளுடன் (ஒப்பிடும் போது) இந்த சிறிய அட்டை என்ன செய்து விடும்?’ என்று அவர் கேட்பார். அதற்கு, இறைவன்,’நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்’ என்று சொல்வான். இந்த அட்டை ஒரு தட்டிலும் பதிவேடுகள் இன்னொரு தட்டிலும் வைக்கப்படும். பதிவேடுகள் எடை குறைந்து சிறிய அட்டை கனமாகி விடும். காரணம் அல்லாஹ்வின் திருப்பெயருடன் எந்த எடையும் கூடிவிடாது. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ்

நூல்: (திர்மிதீ: 2563)

இந்த ஹதீஸ் நாம் கொள்கை முழக்கமாகக் • கொண்டிருக்கும் ஏகத்துவக் கலிமாவின் சிறப்பைக் கூறுகின்றது. இந்த ஹதீஸ், எடையில் இந்த ஏகத்துவக் கலிமாவுக்கு எந்த ஒன்றும் ஈடாகாது என்று கூறுகின்றது.

இதன் படி ஒருவர், தான் எந்த அமலும் செய்யாமல் சொர்க்கத்திற்குச் சென்று விடலாம் என்று எண்ணிவிடக் கூடாது.

என்ன பாவங்கள் தண்டனையில்லாமல் விடலாம் என்று வந்துவிடக் கூடாது. சொர்க்கம் செய்தாலும் சென்று தவறுதலான புரிதலுக்கு எந்த அமலும் செய்யாமல் ஒருவர் சொர்க்கம் செல்லலாம் என்று ஒருவர் விளங்க முற்பட்டால் குர்ஆனிலும் ஹதீஸிலும் வருகின்ற தொழுகையை நிலை நாட்டுங்கள். ஜகாத்தைக் கொடுங்கள் என்று அமல்கள் தொடர்பான அல்லாஹ்வின் கட்டளைகள் அர்த்தமற்றதாக ஆகிவிடும். இது முதல் விஷயமாகும்.

இரண்டாவதாக, இந்த ஹதீஸ் அடிப்படையில் ஒருவர் பெரும்பாவங்கள் செய்தும் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்று நினைத்தால் பெரும்பாவங்கள் செய்பவர்கள் நரகத்தில் தண்டிக்கப்படுவதாக வருகின்ற ஹதீஸ்கள் அர்த்தமற்றதாக ஆகிவிடும். அதனால் இது போன்ற ஹதீஸ்களுடன் இணைத்துப் பார்க்கும் போது தான் சரியான விளக்கமும் புரிதலும் கிடைக்கும்.

ஒருவர் வாழ்நாள் முழுவதும் அமல்கள் செய்யாமல் இருந்திருப்பார். பெரும்பாவங்களும் செய்திருப்பார். இத்தகையவர் உயிர் தொண்டைக்குழியை அடையுமுன் மரணம் அல்லது அதன் அறிகுறிகள் நெருங்கி விடுகின்றது. இனி அமல்கள் செய்வதற்கும் அவகாசமில்லாமல் ஆகி விடுகின்றார்.

இத்தகையவர் தூய் உள்ளத்துடன் பாவம் மன்னிப்பு கேட்கும் போது அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். அது போன்ற மனிதரை தான் இது குறிக்கின்றது என்று விளங்கும் போது மேலே நாம் கண்ட தவறான புரிதலுக்கு இடமில்லாமல் ஆகிவிடுகின்றது. இந்த அடிப்படையில் இந்த ஹதீஸை விளங்கிக் கொண்டு நன்மை தட்டுகளை கனக்கச் செய்கின்ற திக்ர் – நல்லமல்கள் நாளும் செய்வோமாக! நாளை மறுமையில் திருப்தியான சொர்க்க வாழ்வைப் பெறுவோமாக!