உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா?
கேள்வி-பதில்:
நவீன பிரச்சனைகள்
உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா?
வட்டி வாங்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளதைப் போன்று வட்டி கொடுப்பதையும் தடுத்துள்ளார்கள்.
வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி).
நூல்: முஸ்லிம் (3258)
எனவே வங்கியில் லோன் வாங்கி வட்டி செலுத்துவது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. படிப்பு வகைக்காகவும் இவ்வாறு செய்வது கூடாது. வங்கியிலிருந்து கடன் தொகையை வாங்கிக் கொண்டு வட்டி செலுத்தாமலிருக்க ஏதேனும் வழி இருந்தால் அந்த வழியைக் கடைப்பிடிக்கலாம்.