இஸ்லாம் பரிபூரணமான மார்க்கம்
ஆன்மீக ரீதியாகயும், ஆன்மீகம் அல்லாத வகையிலும் உலகில் எண்ணற்ற கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் விட இஸ்லாமிய மார்க்கம் தனித்து விளங்குகிறது. இவ்வாறு ஏனைய வழிமுறைகளைக் காட்டிலும் இஸ்லாத்தை வேறுபடுத்திக் காட்டுகிற அம்சங்களில் முக்கியமான ஒன்று, அதனுடைய பரிபூரணமான தன்மை. இதோ இறைமறையில் இறைவன் குறிப்பிடுவதைப் பாருங்கள்.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாகப் பொருத்திக் கொண்டேன்.
இஸ்லாம் என்பது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது அல்ல! ஏக இறைவனால் தூதர் வழியாக வழங்கப்பட்ட மார்க்கம் என்பதை மேலுள்ள வானத்தின் மூலம் அறிய முடிகிறது. அதுமட்டுமல்ல! இஸ்லாம் என்பது அரைகுறையான கொள்கையல்ல! இறைவனால் வழங்கப்பட்ட பரிபூரணமான வாழ்க்கை நெறி என்பதையும் அறிய முடிகிறது. இப்படியான சிறப்பை வேறு கொள்கைகள் எதிலும் காண இயலாது.
ஆனால், இன்று சில குறைமதியாளர்கள் இஸ்லாத்தின் போதனைகளை ஆழ்ந்து கவனிக்காமல் அனிப்புல் மேயும் விதமாக மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, இஸ்லாமியர்கள் செய்யும் தவறுகளை இஸ்லாம் என்று எண்ணிக் கொண்டு விமர்சனங்களை அள்ளிவீசிக் கொண்டிருக்கிரார்கள். சகட்டு மேனிக்கு இஸ்லாத்தைக் குறைகூறித் திரிகிறார்கள்.
உண்மையில் இஸ்லாமிய சட்டங்களைப் பல கோணங்களில் உன்னிப்பாகப் பார்த்தால் அதிலுள்ள ஒவ்வொரு சட்டமும் கட்டுப்பாடும் மனிதன் சிறப்பாக வாழ்வதற்கு அடித்தளம் அமைத்திருப்பதை அறிய முடியும்.
சில கொள்கைகள் இறைவளைப் பற்றி மட்டும் பேசுகின்றன. சிலதோ பொருளாதாரத்தைப் பற்றி மட்டும் பேசுகின்றன. சிலதோ தனிமனித ஒழுக்கத்தைப் பற்றி மட்டும் பேசுகின்றன. சிலதோ சமூக வாழ்வில் பங்கெடுப்பது பற்றி மட்டும் பேசுகின்றன.
இப்படி வாழ்வோடு தொடர்புடைய சில விசயங்களைப் பற்றி மட்டும் பேசுபவையாகத் தான் பிற கொள்கைகள் இருக்கின்றன. இதற்கு மாறாக, இஸ்லாமிய மார்க்கமோ மனிதனின் வாழ்வோடு தொடர்புடைய அனைத்திற்கும் வழிகாட்டுவதாக இருக்கிறது.
இப்படிச் சொல்வது நூறு சதவீதம் உண்மை என்பதை அதன் போதனைகளை கவனிப்பவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். முஹம்மது நபி காலத்தில் வாழ்ந்த மக்கள் கூட இதை விளங்கி அன்றைய காலத்திலேயே பொது சபையில் பகிரங்கமாகச் சாட்சி சொல்லி இருக்கிறார்கள். இதற்குரிய சான்றைப் பார்ப்போம், வாருங்கள். நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ்10ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா? எனக் கேட்டார்கள். நாங்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதருமே நன்கறிவர்!” என்றோம்.
அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது (குர்பானி கொடுப்பதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்!” என்றோம்.
பிறகு “இது எந்த மாதம்?” என அவர்கள் கேட்டதும் நாங்கள் “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்!” என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு, “இது துல்ஹஜ் மாதம் அல்லவா?” என அவர்கள் கேட்சு, நாங்கள் “ஆம்!” என்றோம்.
பிறகு “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வும் அவது தூதருமே நன்கறிவர்!” என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு “இது புனிதமிக்க நகரமல்லவா?” எனக் கேட்சு, நாங்கள் “ஆம்!” என்றோம்.
பிறகு “உங்களுடைய (புனிதமிக்க) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள் (மறுமை)வரை புனிதமானவையாகும்!” என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்து விட்டேனா?” எனக் கேட்டார்கள். மக்கள் “ஆம்!” என்றனர்.பிறகு அவர்கள், “இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள்
வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரைவிட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விட வேண்டாம்!” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: (புகாரி: 1741, 4603)
இந்தச் சம்பவம் நபிகளாரின் வாழ்நாளின் இறுதியில் நடந்தது. ஹஜ்ஜதுல் விதா என்று சொல்லப்படுகிற இறுதி ஹஜ்ஜின் போது நபிகள் நாயகத்திற்கும் மக்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இது.
இறைவன் புறத்தில் இருந்து வழங்கப்பட்ட செய்திகளில் எதுவும் விடுபடாமல் அனைத்தையும் அல்லாஹ்வின் தூதர் (ແນນ) அவர்கள் மனிதகுலத்திற்குச் சமர்ப்பித்து விட்டார்கள் என்பதற்கு அந்தப் பெருந்திரளான மக்கள் அன்றே சாட்சி பகர்ந்தார்கள்.
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விசயம் என்னவென்றால், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக அங்கீகரித்து அதை முழுமைப்படுத்தி விட்டதாக இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறானே அந்த வசனம் இந்தச் சபையில் தான் இறைத்தூதருக்கு அருளப்பட்டது. இதற்கான சான்றைப் பார்ப்போம்.
தாரிக் இப்னு யுஹாப்(ரஹ்) அறிவித்தார்:
யூதர்கள் உமர்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் ஓர் இறைவசனத்தை ஒதுகிறீர்கள், அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால் அந்தாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்று கூறினர். உமர்(ரலி), அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாளில் இறைத்தூதர்(ஸல்)அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்’ என்று கூறினார்கள்.
நூல்: (புகாரி: 4606)
இஸ்லாம் முழுமை அடைந்து விட்டது: அதை அப்படியே முஹம்மது நபி மக்களிடம் ஒப்படைத்து விட்டார்கள் என்பதற்கு மேலுள்ள நபிமொழிகள் சான்றுகளாக இருக்கின்றன.
இஸ்லாமிய மார்க்கம் எவ்விதக் குறையும் குறைவும் இல்லாத வாழ்க்கை நெறியாகத் திகழ்வதை தபிகளார் காலத்திலேயே முஸ்லிம் அல்லாத மக்களும் அறிந்திருந்தார்கள். வாழ்வோடு தொடர்புடைய சின்னஞ்சிறு விசயம் கூட இந்த மார்க்கத்தில் போதிக்கப்பட்டுள்ளதை விளங்கி இருந்தார்கள். இக்கருத்தைப் பிரதிபலிக்கும் சம்பவத்தைப் பாருங்கள்.
தபித்தோழர்களுள் ஒருவரான அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது: சல்மான்
எங்களிடம் இணைவைப்பாளர்கள் (சார்பாக ஒருவர்) “உங்கள் தோழர் (தபியவர்கள்) உங்களுக்கு மலஜலம் கழிக்கும் முறையைக் கூட கற்றுத் தருவதாக நான் கருதுகிறேன்” என்று (ஏளனமாகக்) எது மிகச் சரியானதோ அதை நோக்கி கூறினார். அதற்கு நான், “ஆம் (உண்மை தான்): எங்களில் ஒருவர் (மலஜலம் கழிக்கச் சென்றால்) வலக் கரத்தால் துப்புரவு செய்யக் கூடாதென்றும் (மலஜலம் கழிக்கும்போது) கிப்லாவை முன்னோக்கக் கூடாதென்றும். கெட்டிச்சாணம், எலும்புகள் ஆகியவற்றை (துப்புரவு செய்வதற்காகப் பயன்படுத்தக் கூடாதென்றும் அன்னார் (முஹம்மது நபி) எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், உங்களில் ஒருவர் மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும் கூறினார்கள்” என்றேன்.
நூல்: (முஸ்லிம்: 437)
அடிப்படையான இயற்கை தேவைகளைக் கூட எப்படி நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று போதிக்கிற அற்புதமான மார்க்கம் இஸ்லாம். இதோ சான்றுக்கு ஒரு நபிமொழியைப் பாருங்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில்
அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, நாடியை வளர்ப்பது, பல் துலக்குவது. நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது. (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். (இந்த ஹதீஸை எனக்கு வெற்றி பெறுவோமாக!
அறிவித்த முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், பத்தாவது விஷயத்தை நான் மறந்துவிட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று கூறினார்கள்.)
நூல்: (முஸ்லிம்: 436)
இப்படி, ஒருவர் شم விசயத்திலும் தம்முடைய குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த விசயத்திலும் எப்படி இருக்க வேண்டும் என்கிற ஆழமான அழகான வழிகாட்டுதல் இஸ்லாமிய மார்க்கத்தில் நிறைந்து இருக்கிறது. இத்தகைய போதனைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. புத்தகங்கள் போதாது. இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்.
இந்தக் குர்ஆன் வழிகாட்டுகிறது. நற்செயல்கள் செய்யும் இறைநம்பிக்கையாளர்களுக்குப் பெரும் கூலி உண்டு என்றும், மறுமையை நம்பாதவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயார்படுத்தியுள்ளோம் என்றும் நற்செய்தி கூறுகிறது.
இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு உதாரணத்தையும் விவரித்துள்ளோம். மனிதன் அதிகமானவற்றில் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை நன்கு நினைவுகூரும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.
அருள்மறை குர்ஆனிலும், அதற்கு விளக்கமாக வாழ்ந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களது வாழ்விலும் மனித குலம் மேன்மையுடன் வாழ்வதற்குரிய வழிகாட்டுதல் குறைவின்றி இருக்கிறது.
சுருக்கமாகச் சொல்வதென்றால் இஸ்லாம் என்பது குறிப்பிட்ட விசயத்தில் மட்டும் மனிதளை நெறிப்படுத்துகின்ற கொள்கை அல்ல! ஒட்டுமொத்த வாழ்க்கை நெறியாகத் திகழ்கிறது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவனுக்கு அனைத்து வகையிலும் சீரிய முறையில் வழிகாட்டுகிறது. இதைப் பற்றிப் பிடித்து, வழுவாமல் கடைப்பிடித்து ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!