இறைநம்பிக்கையாளர்களின் இலக்கணங்கள்
இறைநம்பிக்கையாளர்கள் யார்? என்ற கேள்விக்கு இறைவனே தனது திருமறையில் பல இலக்கணங்களை சொல்லித் தருகிறான். அவற்றை வரிசையாகப் பார்ப்போம்!
அல்லாஹ்மீதும், அவனது தூதர்மீதும் நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித ஐயமும் கொள்ளாமல் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரே இறைநம்பிக்கையாளர்கள். அவர்களே உண்மையாளர்கள். (அல்குர்ஆன்: 49:15)➚
இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ள மாட்டார்கள்
இறைநம்பிக்கையாளர்கள், இறைநம்பிக்கையாளர்களை விட்டு விட்டு, இறைமறுப்பாளர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே தவிர யாரேனும் அவ்வாறு செய்தால் அவருக்கு அல்லாஹ்விடம் எந்த ஒன்றும் இல்லை. தன்னைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு எச்சரிக்கிறான். அல்லாஹ்விடமே மீளுதல் உள்ளது. (அல்குர்ஆன்: 3:28)➚
மார்க்க விஷயத்தில் உங்களை எதிர்த்துப் போரிடாமலும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருப்போருக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களிடம் நீதியாக நடப்பதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதியாக நடப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன்: 60:8)➚
அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறெதுவும் எங்களை ஒருபோதும் அணுகாது. அவனே எங்கள் பாதுகாவலன். இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்: 9:51)➚
இறைநம்பிக்கை கொண்டோரைக் கவலையுறச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதே இரகசியப் பேச்சாகும். அல்லாஹ்வின் நாட்டமின்றி அது அவர்களுக்குச் சிறிதும் தீங்கிழைக்காது. இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைக்கட்டும். (அல்குர்ஆன்: 58:10)➚
அல்லாஹ், அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். (அல்குர்ஆன்: 64:13)➚
இறைநம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் பயந்து நடுங்கி விடும். அவனது வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் அது அவர்களுக்கு இறைநம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவன்மீதே நம்பிக்கை வைப்பார்கள். அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து செலவிடுவார்கள். அவர்களே உண்மையான இறைநம்பிக்கையாளர்கள். அவர்களுக்குத் தமது இறைவனிடம் அந்தஸ்துகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு. (அல்குர்ஆன்: 8:2-4)➚
யார் இறைநம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் போரிட்டார்களோ அவர்களும், (அவர்களுக்குப்) புகலிடம் தந்து உதவியோருமே உண்மையான இறைநம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் மதிப்புமிக்க உணவும் உள்ளது. (அல்குர்ஆன்: 8:74)➚
இறைநம்பிக்கையாளர்கள் ஒட்டுமொத்தமாகப் புறப்பட்டுச் செல்லக்கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு பிரிவினர் (மட்டும்) புறப்பட்டிருக்கலாமே! ஏனெனில் அவர்கள் மார்க்கக் கல்வியைக் கற்று, தமது கூட்டத்தாரிடம் அவர்கள் திரும்பி வரும்போது அவர்களை எச்சரிப்பார்கள். இதனால் அவர்கள் (தீமைகளைத்) தவிர்த்துக் கொள்ளலாம். (அல்குர்ஆன்: 9:122)➚
நீங்கள் இதைக் கேள்விப்பட்டபோது, இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தம்மைப் (போன்ற பிற இறைநம்பிக்கையாளர்களைப்) பற்றி நல்லெண்ணம் கொண்டு, “இது பகிரங்கமான அவதூறு” என்று கூறியிருக்கக் கூடாதா? (அல்குர்ஆன்: 24:12)➚
இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! இதனால் நீங்கள் அருள் வழங்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 49:10)➚
தொழுகை, இறைநம்பிக்கையாளர்கள்மீது நேரம் குறிக்கப்பட்டக் கடமையாகும். (அல்குர்ஆன்: 4:103)➚
இறைநம்பிக்கையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன்: 8:19)➚
இறைநம்பிக்கையாளர்களில் தர்மங்களை வாரி வழங்குவோரையும், தமது உழைப்பைத் தவிர (தர்மம் செய்ய) வேறெதுவும் கிடைக்காதவர்களையும் அவர்கள் குறை கூறுகின்றனர்; அவர்களைக் கேலியும் செய்கின்றனர். அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்: 9:79)➚
பின்னர் நமது தூதர்களையும், இறைநம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவோம். இவ்வாறே, இறைநம்பிக்கையாளர்களைக் காப்பாற்றுவது நமது கடமையாகும். (அல்குர்ஆன்: 10:103)➚
(யூனுஸ் நபியான) மீனுடையவரையும் (நினைவுகூர்வீராக!) அவர் கோபமாக வெளியேறியபோது, அவரை நெருக்கடிக்குள்ளாக்க மாட்டோம் என எண்ணிக் கொண்டார். “உன்னைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை; நீ தூயவன்; நான் அநியாயக்காரர்களில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து பிரார்த்தித்தார். எனவே நாம் அவருக்குப் பதிலளித்து, அவரைத் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம். இவ்வாறே இறைநம்பிக்கையாளர்களைக் காப்பாற்றுவோம். (அல்குர்ஆன்: 21:87)➚,89)
விபச்சாரம் செய்தவன், ஒரு விபச்சாரியையோ அல்லது இணைவைப்பவளையோ தவிர்த்து வேறு எவரையும் மணமுடிக்க மாட்டான். (அதுபோல) விபச்சாரி, விபச்சாரம் செய்த ஒருவனையோ அல்லது இணைவைப்பவனையோ தவிர்த்து வேறு எவரையும் மணமுடிக்க மாட்டாள். இது, இறைநம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன்: 24:3)➚
அவர்களுக்கிடையே தூதர் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அவர்கள் அழைக்கப் பட்டால் “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்று கூறுவதே இறைம்பிக்கையாளர்களின் பதிலாக இருக்கும். அவர்கள்தான் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன்: 24:51)➚
நபியே! தமது தலைமுக்காடுகளைத் தொங்கவிட்டுக் கொள்ளுமாறு உமது மனைவியருக்கும், உமது பெண் மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும் கூறுவீராக! அதுவே அவர்கள் அறியப்படுவதற்கும், தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்புடையது. அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 33:59)➚
அறிவுரை கூறுவீராக! இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை பயனளிக்கும். (அல்குர்ஆன்: 51:55)➚
مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا لِيَجْزِيَ اللَّهُ الصَّادِقِينَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ إِنْ شَاءَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا
அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உண்மைப்படுத்திய மனிதர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் தமது இலட்சியத்தை நிறைவேற்றியோரும் உள்ளனர். அவர்களில் (அதற்காகக்) காத்திருப்பவர்களும் உள்ளனர். அவர்கள் சிறிதும் (தமது நிலையை) மாற்றிக் கொள்ளவில்லை.உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்காக அல்லாஹ் கூலி வழங்குவான் என்பதும், அவன் நாடினால் நயவஞ்சகர்களைத் தண்டிப்பான் அல்லது அவர்களை மன்னிப்பான் என்பதுமே இதற்குக் காரணம். அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 33:23)➚,24)
இறைநம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நமது கடமையாகி விட்டது. (அல்குர்ஆன்: 30:47)➚
1.இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்.
2. அவர்கள் தமது தொழுகையில் பணிவுடன் இருப்பார்கள்.
3. அவர்கள் வீணானவற்றைப் புறக்கணிப்பார்கள்.
4. அவர்கள் ஸகாத்தையும் வழங்குவார்கள்.
5,6,7.அவர்கள், தமது மனைவியர் அல்லது அடிமைப் பெண்களைத் தவிர (மற்றவர்களிடம்) தமது கற்புநெறியைப் பேணிக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள். ஆனால் இதற்குப் புறம்பாக யார் (தவறான வழிகளைத்) தேடுகிறார்களோ அவர்களே வரம்பு மீறியவர்கள்.
8. அவர்கள், தம்மை நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றையும், தமது வாக்குறுதியையும் பேணிக் கொள்வார்கள்.
9. அவர்கள் தமது தொழுகைகளில் பேணுதலாக இருப்பார்கள்.
10, 11. அவர்களே ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தைச் சொந்தமாக்கிக் கொள்வோர். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 23:1-11)➚