அஸ்ஸலாத்து கைருன் மினன்னவ்ம் என்று கூற ஆதாரம் உண்டா?
ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூற நபிமொழியில் ஆதாரம் உள்ளதா?
பதில்:
உண்டு.
தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் ஃபஜர் தொழுகைக்கான பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறப்பட்டு வருகின்றது.
இந்த நடைமுறைக்கு சரியான நபிமொழிகளில் ஆதாரம் இல்லை என்று தற்காலத்தில் சிலர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால் இவர்கள் கூறுவது உண்மையல்ல. ஃபஜர் தொழுகைக்கான பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று சொல்வது தொடர்பாக வரும் செய்திகளில் சில பலவீனமாக இருந்தாலும் பலவீனமில்லாத சரியான செய்தியும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்வரும் செய்தி இதற்கு ஆதாரமாக உள்ளது.
نا محمد بن عثمان العجلي ، نا أبو أسامة ، عن ابن عوف ، عن محمد بن سيرين ، عن أنس قال :
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பாங்கு சொல்பவர் ஃபஜருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று கூறிய பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூறுவது நபிவழியாகும்.
இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
எனவே ஃபஜ்ர் தொழுகைக்கான பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறுவது நபிகளார் கற்றுக்கொடுத்த முறையாகும். இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.