அல்லாஹ்வின் உதவி வருவதற்கான காரணங்கள்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவைக் கொண்டு உபதேசம் செய்தவனாக இந்த உரையை ஆரம்ப்பம் செய்கிறேன் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா கூறுகிறான்.

إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைப்பவர் அறவே இல்லை. இன்னும், அவன் உங்களை கைவிட்டால் அதற்குப் பின்னர் உங்களுக்கு உதவுபவர் யார் (இருக்கிறார்)? ஆகவே, நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பார்களாக!

(அல்குர்ஆன்: 3:160)

முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை மிகைப்பவர் யாரும் இல்லை அவன் உங்களை கைவிட்டு விட்டால் அவனுக்கு பிறகு உங்களுக்கு உதவக்கூடியவர் யார் இருக்கிறார்? முஃமின்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்டவார்கள் எப்போதும் அல்லாஹ்வை சார்ந்து இருக்கட்டும் மேலும் அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

நிச்சயமாக முஃமின்களுக்கு உதவி அல்லாஹ்வின் புறத்திலிருந்தே தவிர வேறு எங்கு இருந்தும் இருக்காது وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ َ அல்லாஹு தஆலா அல் அஸீஸ் மிகைத்தவனாக இருக்கிறான் அவனை யாரும் மிகைத்து விட முடியாது அவன் மிக்க ஞானமுள்ளவனாக இருக்கிறான் அவனுடைய உதவியை எப்போதும் யாரும் மிகைத்து விட முடியாது அல் ஹகீம் அவன் மிக்க ஞானமுள்ளவனாக இருக்கிறான் அவனுடைய உதவியை எப்போது யாருக்கு இறக்கவேண்டும் என்று அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான் அவனுடைய ஞானத்தின் படி அவனுடைய திட்டத்தின் படி அல்லாஹ் தஆலா உதவி செய்கிறான் யார் அந்த உதவிற்குரிய நிபந்தனையை பூர்த்தி செய்கிறார்களோ!

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே அல்லாஹு சுபஹானஹூதஆலா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கலுக்கு கூறுகிறான்:

فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا بَعْدُ وَإِمَّا فِدَاءً حَتَّى تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا ذَلِكَ وَلَوْ يَشَاءُ اللَّهُ لَانْتَصَرَ مِنْهُمْ وَلَكِنْ لِيَبْلُوَ بَعْضَكُمْ بِبَعْضٍ وَالَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ فَلَنْ يُضِلَّ أَعْمَالَهُمْ

ஆக, நீங்கள் (உங்கள் எதிரி நாட்டில் இருந்து உங்களிடம் போர் செய்ய வருகின்ற) நிராகரிப்பாளர்களை (போர்க்களத்தில்) சந்தித்தால் (அவர்களின்) பிடரிகளை வெட்டுங்கள்! இறுதியாக, நீங்கள் அவர்களை மிகைத்துவிட்டால், (அவர்களை கைது செய்து) கயிறுகளில் உறுதியாகக் கட்டுங்கள்! ஆக, அதற்குப் பின்னர் ஒன்று, (அவர்கள் மீது நீங்கள்) உபகாரம் புரியுங்கள்! அல்லது, (அவர்கள் உங்களிடம்) பிணைத்தொகை கொடு(த்து தங்களை

(அல்குர்ஆன்: 47:4)

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலே 13 ஆண்டுகள் சிரமப்பட்டர்கள் பிறகு ஹிஜரத் செய்து வந்ததற்கு பிறகும் அவர்கள் மக்கவுடைய வெற்றி அந்த ஹிஜ்ரி 8 வது ஆண்டு வரை தொடர்ந்து இறை மறுப்பாளர்களால் அச்சுருத்தப்பட்டுக் கொண்டு இருந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல யுத்தங்களை சந்தித்துக் கொண்டு இருந்தார்கள் தொடர்ந்து அந்த இறை மறுப்பாளர்கள் மக்கா நகர காஃபிர்களாலும்,

அந்த மதீனாவை சுற்றி இருந்த காஃபிர்களாலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல சிரமங்களுக்கு ஆளாகிக் கொண்டே இருந்தார்கள் அல்லாஹ் தஆலா சொல்கிறான் நபியே இது அல்லாஹுடைய திட்டம் அல்லாஹுடைய ஒரு ஏற்பாடு அல்லாஹ் நாடி இருந்தால் உங்களுக்காக அவன் முன்பே அவன் பலி வாங்கி இருப்பான் அந்த காபிர்களை அல்லாஹு தஆலா முன்பே அளித்து இருபான் உங்களுக்காக அல்லாஹு தஆலா அவன் பழி தீர்த்து இருப்பான் என்றாலும் உங்களில் அவன் சிலரை சிலரைக் கொண்டு சோதிக்க விரும்புகிறான்:

وَلَكِنْ لِيَبْلُوَ بَعْضَكُمْ بِبَعْضٍ

உங்களில் சிலரைக் கொண்டு சிலரை அல்லாஹு தஆலா சோதிக்க விரும்புகிறான் காஃபிர்களைக் கொண்டு முஃமின்களுடைய ஈமானை அல்லாஹ் சோதிக்கிறான் முஃமின்களுடைய உருதியை அல்லாஹ் சோதிக்கிறான் அவர்கள் மறுமையைத் தேர்ந்தெடுக்கிறார்களா? அல்லது உலகத்தை தேர்ந்தெடுக்கிறார்களா? அல்லாஹுவை பயப்பிடுகிறார்களா? அல்லது பிற மக்களை பயப்பிடுகிறார்களா? மார்க்கத்தை பிடிப்பாக உறுதியாக பின்பற்றுக்கிறார்களா? அல்லது மார்க்கத்தை விட்டு விட்டு பிரமுதுகு காட்டி ஓடுகிறார்களா? இப்படியாக அல்லாஹு தஆலா உங்களை சோதித்து அறிய விரும்புகிறான்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹுடைய இந்த சுன்னா வழிமுறை

سُنَّةَ اللَّهِ فِي الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلُ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلًا

இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் நடைமுறைதான் (இவர்கள் விஷயத்திலும்) பின்பற்றப்படும். அல்லாஹ்வின் நடைமுறையில் எவ்வித மாற்றத்தையும் அறவே நீர் காணமாட்டீர்.

(அல்குர்ஆன்: 33:62)

முந்தியவர்களிலும் அல்லாஹுதஆலாவுடைய இந்த நடைமுறை தொடர்ந்து கொண்டே இருந்தது அல்லாஹுவுடைய இந்த நடைமுறையில் எந்த மாற்றமும் இருக்காது.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹுத்தஆலா நமக்கு அல்குர் ஆனிலே வழிகாட்டுகிறான்,

إِنَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا

நிச்சயமாக இந்த குர்ஆன் மிகச் சரியான (-மிகவும் நேர்மையான, நீதமான, எல்லோருக்கும் பொருத்தமான) மார்க்கத்தின் பக்கம் நேர்வழி காட்டுகிறது. இன்னும், நன்மைகளை செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு, “நிச்சயமாக அவர்களுக்கு பெரிய கூலி உண்டு” என்று நற்செய்தி கூறுகிறது.

(அல்குர்ஆன்: 17:9)

முஃமின்களே நீங்கள் எந்த சரியான பாதையில் நடக்க வேண்டுமோ எந்த பாதையில் நடந்தால் உங்களுக்கு இம்மை மறுமைனுடைய கண்ணியம் வெற்றி இருக்குமோ அந்த பாதைக்கு இந்த குர்ஆன் வழிகாட்டுகிறது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்

لَقَدْ أَنْزَلْنَا إِلَيْكُمْ كِتَابًا فِيهِ ذِكْرُكُمْ أَفَلَا تَعْقِلُونَ

திட்டமாக நாம் உங்களுக்கு ஒரு வேதத்தை இறக்கி இருக்கிறோம். அ(தைப் பின்பற்றுவ)தில் உங்கள் கண்ணியம் இருக்கிறது. நீங்கள் சிந்தித்துப் புரிய வேண்டாமா?

(அல்குர்ஆன்: 21:10)

உங்களுக்கு தேவையான அத்தனை உபதேசங்களும், நல்லுரைகளும் இந்த குர் ஆனிலே இறக்கபட்டு இருக்கிறது நாம் இந்த குர் ஆனிலே இறக்கி வைத்து இருக்கிறோம் أَفَلَا تَعْقِلُون இந்த குர் ஆனை படித்து நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா! அல்லாஹு தஆலா முஃமின்கள் எப்படி இருக்க வேண்டும் அவர்களுக்கு இந்த பூமியில் எப்படி ஆதிக்கம் கிடைக்கும் அவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள் அவர்களுக்கு உயர்வு எதைக் கொண்டு அனைத்தையும் அல்குர்ஆனிலே அல்லாஹு தஆலா மிக அழகாக விளக்கி வைத்து இருக்கிறான்,

மார்க்க அறிஞசர்கள் 12 அடிப்படைகளை கூறுகிறார்கள் இந்த12 அடிப்படைகளை நம்மிடத்தில் முழுமையாக நிறைவேற்றாதவரை முழுமையாக கொண்டு வராதவரை அல்லாஹுவின் அடியார்களே அல்லாஹ் வாக்களித்த அந்த உதவி அல்லாஹ் வாக்களித்த அந்த வலிமையை இந்த பூமியில் முழுமையான ஒரு ஆதிக்கத்தை முஃமின்கள் பெற முடியாது அதிலே முதலாவதாக அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா ஈமானை நிபந்தனையாக்கி வைதுருக்கிறான் ஈமான் இது மிக அடிப்படியான ஓன்று அல்லாஹு தஆலா கூறுகிறான்:

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

நீங்கள் துணிவு இழக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள்; நீங்கள்தான் உயர்ந்தவர்கள் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால்.

(அல்குர்ஆன்: 3:139)

முஃமின்களே! நீங்கள் தைரியம் இழக்க வேண்டாம் நீங்கள் துணிவு இழக்க வேண்டாம் கோளையாகி விட வேண்டாம் பயந்து விட வேண்டாம் கவளைப் பட வேண்டாம் ஏன் وَأَنْتُمُ الْأَعْلَوْنَ நீங்கள் தான் மிகைப்பீர்கள் நீங்கள் தான் வெற்றி கொள்வீர்கள் அல்லாஹ் சொல்கிறான்

إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

நீங்கள் முஃமின்களாக இருந்தால் ஈமான் உள்ளவர்களாக இருந்தால்,

அன்பு சகோதர்களே! இந்த ஈமான் அடிப்படை காரணகமாக இருக்கிறது எதோ ஈமான் என்றால் நாம் மக்தபுகளில் மனப்பாடம் பண்ணுகிறோம் அல்லவா குர் ஆன் ஓதக்கூடிய ஆரம்ப காலத்தில் மனப்பாடம் செய்து கொடுப்பார்கள் ஆமந்து பில்லாஹி வ மலாயிகதிஹி இப்படி கிளிப்பிள்ளையாக அதை மனப்பாடம் செய்வது அல்ல அதை உள்வாங்குவது புரிவது அதை குர் ஆனோடு சேர்த்து விளங்குவது அதை நம்முடைய வாழ்கையில் கொண்டு வருவது நம்முடைய அமல்களில் வெளிப்படுத்துவது அது தான் ஈமான் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா முஃமின்களுக்கு என்ன வா க்குறுதியை கொடுக்கின்றான் சூரா நிஸாவுடைய 141வது வசனத்தை படியுங்கள் அல்லாஹ் சொல்கிறான்:

الَّذِينَ يَتَرَبَّصُونَ بِكُمْ فَإِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِنَ اللَّهِ قَالُوا أَلَمْ نَكُنْ مَعَكُمْ وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ وَنَمْنَعْكُمْ مِنَ الْمُؤْمِنِينَ فَاللَّهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ الْقِيَامَةِ سَبِيلًا

(நயவஞ்சகமுடைய) இவர்கள் (நம்பிக்கையாளர்களாகிய) உங்களுக்கு (சோதனையை) எதிர்பார்க்கிறார்கள். ஆக, அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு வெற்றி (கிடைத்து) இருந்தால், “நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறு(வதுடன் போரில் உங்களுக்கு கிடைத்த செல்வத்தில் அவர்களுக்கும் பங்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்)கிறார்கள். நிராகரிப்பாளர்களுக்கு ஓர் அளவு (வெற்றி கிடைத்து) இருந்தால் “நாங்கள் (உங்களை வெல்ல ஆற்றல் பெற்றிருந்தும்) உங்களை வெற்றி கொள்ளவில்லையே! இன்னும்,

உங்களை நம்பிக்கையாளர்களிடமிருந்து பாதுகாக்கவில்லையா?” என்று கூறு(வதுடன் அவர்களின் ஆதரவை எதிர்பார்க்)கிறார்கள். (இப்படியாக இரு முகத்தை காட்டுகிறார்கள். யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ அவர்கள் பக்கம் சாய்ந்து விடுகிறார்கள்.) ஆக, உங்களுக்கிடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். நம்பிக்கையாளர்கள் மீது (வெற்றி கொள்ள) நிராகரிப்பாளர்களுக்கு ஒரு வழியையும் அல்லாஹ் அறவே ஆக்கமாட்டான்.

(அல்குர்ஆன்: 4:141)

நிச்சியமாக இறைவன் மறுப்பாளர்களுக்கு அல்லாஹுதஆலா இறை நம்பிக்கையாளர்கள் மீது ஆதிக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கவே மாட்டான் ஒருபோதும் அல்லாஹ் அப்படி செய்ய மாட்டான் இங்கு அல்லாஹு தஆலா சொல்ல கூடிய அந்த வாக்கு யாருக்கு ஒரு நாட்டுவர்களை பார்த்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பார்த்து அல்லாஹ் சொல்ல வில்லை ஒருபோதும் அல்லாஹ் அப்படி செய்ய மாட்டன் இங்கே அல்லாஹு தஆலா சொல்ல கூடிய அந்த வாக்கு யாருக்கு ஒரு நாட்டுவர்களை பார்த்தோ அல்லது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பார்த்து அல்லாஹ் சொல்ல வில்லை முஃமின்கள் மீது ஈமான் உள்ளவர்கள் மீது அப்போ அந்த ஈமானை நமக்கு உறுதி படுத்தாதவரை

அன்புக்குரிய சகோதர்களே! அல்லாஹ்விடத்தில் உதவியை பெற முடியாது அல்லாஹு தஆலா நாம் உண்மையானக முஃமின்களாக அல்லாஹ்விடத்தில் எந்த ஈமானைக்கொண்டு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைத்தார்களோ எந்த ஈமானைக்கொண்டு சஹாபாக்கள் ஏற்றார்களோ அத்தகைய ஈமானை அத்தகைய எகீன் இறை நம்பிக்கையை கொண்டு வரவேண்டும் அப்படி கொண்டு வரும்போது அல்லாஹு தஆலா வாக்களிக்கிறான் பாருங்கள் சூரா ஹஜுடைய 38 வது வசனத்தில்

إِنَّ اللَّهَ يُدَافِعُ عَنِ الَّذِينَ آمَنُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ

நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கை கொண்டவர்களை (பாதுகாத்து, அவர்களை) விட்டும் (நிராகரிப்பாளர்களை) தடுத்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லா மோசடிக்காரர்களையும் நன்றி கெட்டவர்களையும் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 22:38)

நம்பிக்கைக் கொண்டவர்களுக்காக முஃமின்கள் சார்பாக அல்லாஹு தஆலா அவன் பாதுப்பு செய்வான் அவன் முஃமின்கள் சார்பாக அவன் யுத்தம் செய்வான் முஃமின்களை அல்லாஹ் பாதுகாப்பான் முஃமின்கள் திணிக்க படக்கூடிய முஃமின்கள் அச்சுறுத்தப் படக்கூடிய முஃமின்கள் மீது போர்தொடுக்ககூடிய எந்த எதிரி எத்தகைய சூழ்சிகளை செய்தாலும் முஃமீன்களை அல்லாஹ் பதுகாப்பான் நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பாதுகாப்பான்,

மேலும், அல்லாஹ் சொல்லுகிறான் சூரா அல்அன்ஃபாலில் சொல்லுகிறான் முஃமின்களுடைய உதவியை குறித்து எப்படி சஹாபாக்கள் வெற்றிபெற்றார்கள் என்பதை விவரிக்ககூடிய முக்கியமான அதியாயன்களிலே சூரா அல் அன்ஃபால் சூரா தவுபா சூரா ஃபதஹ் சூரா முஹம்மது சூரா அஹ்ஸாப் மிக முக்கியமானவை படிக்க வேண்டும் சகோதர்களே அல்லாஹ் சொல்லி காட்டுகிறான் நிச்சியமாக அல்லாஹு தஆலா முஃமின்களுடன் இருக்கிறான்.

إِنْ تَسْتَفْتِحُوا فَقَدْ جَاءَكُمُ الْفَتْحُ وَإِنْ تَنْتَهُوا فَهُوَ خَيْرٌ لَكُمْ وَإِنْ تَعُودُوا نَعُدْ وَلَنْ تُغْنِيَ عَنْكُمْ فِئَتُكُمْ شَيْئًا وَلَوْ كَثُرَتْ وَأَنَّ اللَّهَ مَعَ الْمُؤْمِنِينَ

(காஃபிர்களே!) நீங்கள் தீர்ப்புத் தேடினால் உங்களுக்கு தீர்ப்பு வந்துவிட்டது. (ஆகவே, விஷமத்திலிருந்து) நீங்கள் விலகினால் அது உங்களுக்கு சிறந்தது. நீங்கள் (விஷமத்தின் பக்கம்) திரும்பினால் (நாமும் நம்பிக்கையாளர்களுக்கு உதவ) திரும்புவோம். உங்கள் கூட்டம் அது அதிகமாக இருந்தாலும் உங்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்காது. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 8:19)

முஃமின்களோடு அதாவது அல்லாஹுடைய விஷேசமான உதவியோடு அல்லாஹுடை விஷேசமான ஆதரவோடு அல்லாஹு தஆலா முஃமின்களோடு இருக்கிறான் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் பாருங்கள் சூரா ரூமுடைய 47 வது வசனத்தில்

وَلَقَدْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ رُسُلًا إِلَى قَوْمِهِمْ فَجَاءُوهُمْ بِالْبَيِّنَاتِ فَانْتَقَمْنَا مِنَ الَّذِينَ أَجْرَمُوا وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ

திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை அவர்களுடைய மக்களுக்கு நாம் அனுப்பினோம். ஆக, அவர்களிடம் அவர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தனர். ஆக, குற்றமிழைத்தவர்களிடம் நாம் பழிவாங்கினோம். இன்னும், (தூதர்களை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் உதவினோம்.) நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு உதவுவது நம்மீது கடமையாக இருக்கிறது.

(அல்குர்ஆன்: 30:47)

முஃமின்களுக்கு உதவி செய்வது நம்மீது கட்டாய கடமையாக இருக்கிறது நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கட்டாய கடமையாக இருக்கிறது அன்புக்குறியவர்களே அல்லாஹு சுபஹானஹூதஆலா சூரா காஃபிரிலே சொல்லுகிறான்

إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ

நிச்சயமாக நாம் நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் (சாட்சி சொல்ல) நிற்கின்ற (மறுமை) நாளிலும் உதவுவோம்.

(அல்குர்ஆன்: 40:51)

நிச்சியமாக நாம் நம்முடைய நபிமார்களுக்கு ரசூல்மார்களுக்கு உதவி செய்வோம் மேலும் முஃமின்களுக்கு உதவி செய்வோம் இந்த பூமியிலே நாளை மறுமையில் எழுந்து சாட்சி சொல்லும்போதும் அன்றும் நாம் முஃமின்களுக்கு சாட்சி சொல்லுவோம் அல்லாஹு தஆலா சொல்கிறான் சூரா அல் முனாஃபிக்னுடைய 8 வது வசனத்தில்

يَقُولُونَ لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الْأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ

“நாம் மதீனாவிற்கு திரும்பினால் கண்ணியவான்கள் (ஆகிய நாம்) தாழ்ந்தவர்(களாகிய முஹாஜிர்)களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்ற வேண்டும்” என்று அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்தான் கண்ணியம் உரியது. என்றாலும், நயவஞ்சகர்கள் (இதை) அறியமாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 63:8)

கண்ணியம் வெற்றி இது அல்லாஹுவிற்குவுரியது அல்லாஹுடைய ரசூலுக்கு உரியது முஃமின்களுக்கு உரியது அன்பு சகோதர்களே இப்போது படிக்க பட்ட அத்துணை வசனங்களிலும் அல்லாஹு தஆலா சொல்லி இருக்ககூடிய அந்த வார்த்தையை கவனமாக சிந்தித்து பாருங்கள் அல்லாஹு தஆலா அல்முஃமிநூன் என்ற பதத்தை பயன் படுத்துகிறான் முஃமிளாக இருக்கின்ற வரை

அல்லாஹுவுடைய உதவி நமக்கு உண்டு இந்த ஈமானுக்காக வாழ்கின்ற வரை அல்லாஹுடைய உதவி நமக்கு சத்தியமாக நமக்கு உண்டு இந்த ஈமானில் குறைபாடு இந்த ஈமானில் பலவீனம் இந்த ஈமானில் பின்னடைவு ஏற்ப்பட்டால் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக கண்டிப்பாக மிக பெரிய சோதனை இந்த உலகத்திலும் இருக்கிறது மறுமையிலும் இருக்கிறது அல்லாஹுடைய உதவி என்பது இந்த ஈமானோடு பின்னி பிணைந்ததாக இருக்கிறது.

முஃமின்களுக்கு அல்லாஹுடைய உதவி கண்டிப்பாக கிடைக்கும் அடுத்து கண்ணியதிற்குரியவர்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இந்த ஈமானுக்கு அடுத்து சொல்லக்கூடிய முக்கியமான நிபந்தனை முக்கியாமான அடிப்படை அமலுஸ் ஸாலிஹ் இந்த இறை நம்பிக்கை நல்ல அமல்களோடு எந்த அமலை அல்லாஹ் நம் மீது கட்டாயம் ஆக்கினானோ அது குர்ஆனிலோ அல்லது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவிலோ அந்த கட்டாயமான ஃபர்ளான அமல்கள் முஃமின்களுடைய வாழ்க்கையிலே பாதுகாக்க பட வேண்டும்.

அமல்களை அடிப்படையாக வைத்து நல்ல அமல்களை அடிப்படையாக வைத்து வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும் அல்லாஹ் எவ்வளவு அழகாக சொல்கிறான் பாருங்கள் சூரா நூருடைய 55 வது வசனம் ரெம்ப அழகாக சொல்கிறான்.

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ

உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்: அவர்களுக்கு முன்னுள்ளவர்களை (பூமியின்) ஆட்சியாளர்களாக ஆக்கியது போன்று இப்பூமியில் அவர்களை ஆட்சியாளர்களாக ஆக்குவான். இன்னும், அவர்களுக்காக அவன் திருப்தியடைந்த அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்கு பலப்படுத்தித் தருவான். அவர்களது பயத்திற்கு பின்னர் நிம்மதியை அவர்களுக்கு மாற்றித்தருவான். அவர்கள் என்னை வணங்குவார்கள், எனக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள். இதற்குப் பின்னர் யார் நிராகரிப்பார்களோ அவர்கள்தான் பாவிகள்.

(அல்குர்ஆன்: 24:55)

அல்லாஹு தஆலா வாக்கு கொடுத்துவிட்டான் சகோதர்களே சிந்தித்து பாருங்கள் அல்லாஹு தஆலாவுடைய வாக்கு என்றைக்காவது போயாக இருக்கிறதா? அல்லாஹ் தனது வாக்கை மீருவானா? சொல்கிறான் وعد الله அல்லாஹ் வாக்களித்து விட்டான் யாருக்கு? الذين آمنوا யார் நம்பிக்கை கொண்டார்களோ ஈமானிலே இருக்கிறார்களோ அவர்களுக்கு யார் அவர்கள் எப்படி இருப்பார்கள் وعملوا الصالحات ஸாலிஹான நல்ல அமலகளை செய்வார்கள்,

அவர்களுக்கு என்ன வாக்கு கொடுத்து இருக்கிறான் لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ இந்த பூமியிலே அவர்களுக்கு அவர்களை அல்லாஹுதஆலா ஆட்சியாளராக ஆக்குவான் எப்படி كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ அவர்களுக்கு முன்னால் இருந்த நல்லவர்களை ஆட்சியிலே வைத்தது போன்று பிறகு எப்படி وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْஅல்லாஹ் அவர்களுக்காக ஏற்றுக்கொண்ட போருந்திக்கொண்ட எல்லா மகிழ்ச்சி அடைந்த அந்த தீனை அவர்களுக்கு உருதிபடுத்திகொடுப்பான்.

وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا அவர்களுடைய பயத்திற்க்கு பிறகு அவர்களுடைய அபாயத்தை போக்கி அல்லாஹ் அவர்களுக்கு பாதுகாப்பை அவர்களுக்கு நிம்மதியை கொடுப்பான் பிறகு அல்லாஹ் கூறுகிறான் يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا அவர்கள் அந்த பூமியிலே என்னை வணங்குவார்கள் எனக்கு இணை கற்பிக்க மாட்டார்கள் நல்ல அமல்களை செய்வார்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள் ஸகாத்தை கொடுப்பார்கள் நன்மையை ஏவுவார்கள் தீமையை தடுப்பார்கள்,

அன்பு சகோதர்களே அந்த عمل الصالح அல்லாஹு தஆலா ஈமான் கொண்டு عمل الصالح யார் உறுதியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு அவன் கொடுக்க கூடிய அந்த வாக்கு இந்த பூமியிலே அவன் அவர்களுக்கு ஆட்சியைக் கொடுப்பான் அப்படி ஆட்சியைக் கொடுக்கும்போது அவர்களுடைய அந்த ஆட்சி எத்தகைய ஒரு ஆட்சியாக இருக்கும் என்றால் அவர்கள் இபாதத் ஆட்சியாக வைத்து ஆட்சி செய்வார்கள் அவர்களுகடைய பூமியில் ஷிர்க் இருக்காது அவர்கள் தொழுகைக்கு முக்கியம்துவம் கொடுப்பார்கள் அவர்கள் சமூக ஸகாத்தை நிறைவேற்றுவார்கள் அவர்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையை ஏவுவார்கள் தீமைளிருந்து தடுப்பார் என்று அல்லாஹு தஆலா சொல்கிறான் அன்பு கண்ணியதிற்குரியவர்களே இத்தகைய ஒரு சமுதாயமாக عمل صالح இந்த சமூதாயத்தில் பரவும்போது அல்லாஹுடைய உதவி வரும் இந்த அல்லாஹுடைய உதவிக்கு இரண்டாவது அடிப்படை عمل صالح நல்ல அமல் சமூதாயத்தில் பரவேண்டும் அடுத்து மூன்றாவது நிபந்த்தனை அல்லாஹ் தஆலா கூறுகிறான் இந்த தக்வா இறை அச்சம் அல்லாஹுடைய பயம் இருக்க வேண்டும் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் பாருங்கள்

الشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمَاتُ قِصَاصٌ فَمَنِ اعْتَدَى عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَى عَلَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

மூஸா தன் சமுதாயத்திற்கு கூறினார்: “அல்லாஹ்விடம் உதவிதேடுங்கள்! இன்னும், (உறுதியுடன்) பொறுத்திருங்கள்! நிச்சயமாக பூமி அல்லாஹ்விற்குரியதே. அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதற்கு வாரிசாக்குவான். இன்னும், (வெற்றியின் நல்ல) முடிவு அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே.”

(அல்குர்ஆன்: 7:128)

நிச்சியமாக இந்த பூமி அல்லாஹுவிர்க்கு சொந்தமானது இது யாருக்கும் சொந்த மானது அல்ல இந்த பூமியில் அல்லாஹ் யாரை நாடிகிரானோ யாரை விரும்புகின்றானோ அவர்களுக்கு இந்த பூமியை சொந்த மாக்கிக் கொடுக்கிறான் ஆனால் இறுதி முடிவு இருக்கிறதே வெற்றியின் முடிவு இருக்கிறதே அது இறையட்சமுடையவர்களுக்கு இருக்கிறது. அல்லாஹு தஆலா சொல்லுகிறான்:

وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள் நிச்சியமாக தகுவா உள்ளவர்களோடு அல்லாஹுவை பயன்தவர்களோடு இருக்கிறான் கண்ணியதிற்குறியவர்களே அல்லாஹுடைய பயம் என்பது அது கடமைகளை செய்வதில் வெளிப்படவேண்டும் பாவங்களிலிருந்து விலகுவதில் வெளிப்படவேண்டும் இன்று இந்த தகுவாவில் எந்த அளவு நமது சமூகத்தில் பலவீனம் ஏற்பட்டு இருக்கிறது பாருங்கள் முஸ்லிம் சமுதாயம் என்று சொல்கிறோம் அங்கே மது பரவலாக குடிக்கப்படுகிறது.

அங்கே விபச்சாரம் அனுமதிக்கப் படுகிறது அங்கே தொழுகை பாலாக்கப்படுகிறது. அங்கே ஸகாதுக்கு ஒரு முறை இல்லை இப்படி எத்தனை விதமான தகுவாவுக்கு எதிரான செயல்கள் சமூகத்திலே அங்கீகரிக்கப்பட்டதாக ஏற்றுக்கொள்ளப் பட்டதாக எப்படி நிலைமை மாறி இருக்கிறது என்றால் முஸ்லிம் சமூதாயத்தைப் பற்றி சொல்கிறேன் முஸ்லிம் பெரும்பான்மையாய் இருக்கக்கூடிய இடங்களை பற்றி சொல்கிறேன் அங்கே ஒருவர் ஒருவருக்கு நன்மை ஏவுவது குழப்பத்தை விளைவிப்பதாக கருதபடுகிறது. அங்கு ஒரு முஸ்லிம் செய்யக் கூடிய தீமையிலிருந்து அந்த முஸ்லிமை,

தடுப்பது கழகம் செய்வதாக கருதப்படுகிறது அதனுடைய உருமையில் எல்லை மீறுவதாக கருத படுகிறது அத்தகைய ஒரு ஆபத்தான ஒரு நிலையில் இருக்கிறோம் யோசித்துபாருங்கள் எதிரிகள் நம் மீது சாட்டபடுவது இதைவிட என்ன காரணம் இருக்க முடியும் ஒன்று நன்மை செய்யாமல் இருப்பது பாவத்தை செய்வது இது ஒரு பயங்கரமான நிலை இன்னொரு நிலை என்ன ஒருவரை நன்மைக்கு தூண்டுவது ஒருவர் செய்யக்கூடிய தீமையிலிருந்து ஒருவரை அழகிய உபதேசத்தைக்கொண்டு தடுப்பது இது குற்றமாக கருதப்படுகிறது இது தனி மனித மீறலாக கருதப்படுகிறது இதற்க்கு தடை எங்கே என்று சொன்னால் இந்த சமுதாயம் தீனிலே இஸ்லாமிலே,

எத்தகைய ஒரு பலவீன நிலையை எத்தி இருக்கிறது என்றால் இந்த சமூதாயத்தின் மீது ஏன் எதிரிகள் சாட்டப்பட்ட மாட்டார்கள் அல்லாஹ் பாதுகாப்பானாக அன்புக்குறியவர்களே! தகுவா ! நமக்கு இந்த மார்க்கம் தேவை நமக்கு இந்த பூமி தேவை எதற்காக அல்லாஹுவுடைய இறையச்சத்தை நிலைநாட்டுவதற்காக இந்த ஈமான்படி வாழ்வதற்காகவே தவிர இந்த உலகத்தை அனுபவிப்பதற்காக அல்ல அன்புக்குரியவர்களே!

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா முஃமின்களுக்கு சொல்கிறான் அந்த முஃமின்கள் எத்தகைய சோதனையில் இருந்தாலும் சரி அவர்களுடைய அந்த ஈமானுடைய நிலை எப்படி இருக்குமென்றால் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (எதிரிகளின்) ஒரு பிரிவை (போரில்) சந்தித்தால், நீங்கள் வெற்றி பெறுவதற்காக (போர்க்களத்தில்) உறுதியாக இருங்கள். (-போர் நடக்கும் மைதானத்தை விட்டு விலகி ஓடிவிடாதீர்கள்.) இன்னும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்.

(அல்குர்ஆன்: 8:45)

முஃமின்களே நீங்கள் எதிரிகளின் கூட்டத்தை சந்தித்தால் நீங்கள் உறுதியாக இருங்கள் அல்லாஹுவை அதிகமாக திக்ரு செய்யுங்கள் நீங்கள் வெற்றி அடைவீர்கள் அல்லாஹுவிடத்தில் முன்னோக்கியவர்களாக இருக்க வேண்டும் அதிக திக்ருவுடையவர்க்ளாக இருக்க வேண்டும் அதிகம் துவாவுடையவர்களாக இருக்க வேண்டும் அல்லாஹ் சொல்லி காட்டுகிறான் பாருங்கள்

أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلًا مَا تَذَكَّرُونَ

அல்லது, எவன் சிரமத்தில் இருப்பவருக்கு -அவர் அவனை அழைக்கும்போது (அவருக்கு)- பதிலளித்து, மேலும், (அவருடைய) துன்பத்தை நீக்குவானோ, இன்னும், உங்களை இப்பூமியின் பிரதிநிதிகளாக ஆக்குவானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது அழைத்தாலும் கேட்காத, மனிதர்களுக்கு எந்த நன்மையையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.

(அல்குர்ஆன்: 27:62)

நிர்பந்தத்தில் சிரமத்தில் இன்னல்களில் இருப்பார்கள் அல்லாஹுவிடத்தில் துவா கேட்க்கும்பொழுது அந்த துவாவுக்கு பதில் அளிப்பவர் யார்? அவர்களுடைய சிரமங்களை போக்ககூடியவன் யார் இந்த பூமியிலே உங்களை பிரதிநிதியாக ஆக்ககூடியது யார்? அன்பு சகோதர்களே! அல்லாஹு தஆலா ஒருவன் தான் நம்முடைய துவாக்களை அங்கிகரிக்க கூடியவன் அல்லாஹ் பத்ரு மைதானதிலிருந்து சஹாபாக்களுக்கு சொல்கிறான் பாருங்கள்

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ

உங்கள் இறைவனிடம் நீங்கள் பாதுகாப்புத்தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, “தொடர்ந்து வரக்கூடிய ஆயிரம் வானவர்களின் மூலம் நிச்சயமாக நான் உங்களுக்கு உதவுவேன்” என்று (அல்லாஹ்) உங்களுக்குப் பதிலளித்தான்.

(அல்குர்ஆன்: 8:9)

நீங்கள் அல்லாஹுவிடத்தில் கெஞ்சியபோது அல்லாஹுவிடத்தில் கதறியபோது அல்லாஹு தஆலா உங்களுக்கு பதில் அளித்தான் ஆயிரம் வானவர்களை கொண்டு அல்லாஹ் உங்களுக்கு உதவுவதாக

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹுடைய உதவிக்கு மிக முக்கியமான காரணம் உள்ளம் பரிசுத்தமான நிலையில் அல்லாஹுவை முன்னோகியவர்களாக அல்லாஹ்விடத்தில் இறைஞ்சுவது அல்லாஹுவிடத்தில் துவா செய்வது அடுத்து அன்புக்குரியவர்களே! மிக முக்கியமான அடுத்த காரணம் நமக்கு மத்தியில் பிரிவினைகளே தவிர்ப்பது நமக்கு மத்தியில் பல கூட்டங்களாக பல சமூகங்களாக பிரிந்து இருப்பதை தவிர்ப்பது அல்லாஹுதஆலா எவ்வளவு அழகாக சொல்கிறான் பாருங்கள் சூரா ஆல இம்ரானுடைய 103 வசனத்தை படித்து பாருங்கள்

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

இன்னும், அனைவரும் அல்லாஹ்வின் (வேதம் எனும்) கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள்; இன்னும், பிரிந்து விடாதீர்கள்; இன்னும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள். நீங்கள் எதிரிகளாக இருந்தபோது உங்கள் உள்ளங்களுக்கிடையில் (இஸ்லாமின் மூலம்) அல்லாஹ் இணக்கத்தை ஏற்படுத்தினான். ஆகவே, அவனுடைய அருட்கொடையால் நீங்கள் சகோதரர்களாக ஆகிவிட்டீர்கள். (அதற்கு முன்னர்) நரகக் குழியின் ஓரத்தில் இருந்தீர்கள். ஆக, அதிலிருந்து உங்களை அவன் காப்பாற்றினான்.

(அல்குர்ஆன்: 3:103)

நீங்கள் அல்லாஹுடைய கையிற்றை எல்லோரும் ஒன்று சேர்த்து பற்றி பிடித்து கொள்ளுங்கள் இந்த மார்க்கத்தில் நீங்கள் பிரிந்து விடாதிர்கள் அன்பு சகோதர்களே அல்லாஹுடைய வேதத்தின் மீதும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகட்டுதல் மீதும் முஸ்லிம்கள் ஒன்று சேர்வது தங்களுக்கு மத்தியில் இருக்க கூடிய எல்லா விதமான வேறுபாடுகளையும்,

பிரிவினைகளை இந்த வேதம் சுன்னாவின் அடிப்ப்படையை வைத்து களைந்து விடுவது பிரிவினைகளையும் நமக்கு மத்தியில் இருக்க கூடிய அனைத்து விதமான வேறுபாடுகளையும் நாம் களைந்து விடுவது ஒதுக்கி விடுவது ஒரே சமுதாயமாக ஒன்று சேர்வது இது அல்லாஹுடைய வாக்கு அல்லாஹ் நமக்கு உதவுவான் என்று அந்த வாக்கு உண்மையயாகுவதற்குரிய அடிப்படை காரணம் அல்லாஹுதஆலா சூரா அன்ஃபாலுடைய 46 வது வசனத்திலே கூறுகிறான்

وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

இன்னும், அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; இன்னும், (உங்களுக்குள்) தர்க்கிக்காதீர்கள் (சண்டை சச்சரவு செய்து கொள்ளாதீர்கள்)!. அவ்வாறாயின், நீங்கள் தோற்றுவிடுவீர்கள்; இன்னும், உங்கள் ஆற்றலும் போய்விடும். இன்னும், நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

அல்லாஹு தஆலா சொல்கிறான் நீங்கள் அல்லாஹ்விற்கு கட்டுப் படுங்கள் நீங்கள் கீழ் படியுங்கள் நீங்கள் பேச்சை கேளுங்கள் முதலாவதாக யாருடைய பேச்சை? அல்லாஹுவிற்க்கு கட்டுப்படுங்கள் அல்லாஹுவின் ரசூலுக்கு கட்டுபடுங்கள் அடுத்து உங்களுக்குள் நீங்கள் சண்டை செய்யதிர்கள் உங்களுக்குள் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள் உங்கள்ளுக்குள் நீங்கள் தர்க்கம் செய்யாதீர்கள் உங்களுக்குள் நீங்கள் பிணக்கம் செய்யாதீர்கள்.

எப்போது நீங்கள் உங்களுக்குள் பிரிந்து விடுவீர்களோ சண்டை செயவேர்களோ உங்களுக்குள் வேறுபடுவீர்களோ அப்போதே நீங்கள் தோற்று வேடுவீர்கள் கோழையாகி விடுவீர்கள் உங்களுடைய பலம் அனைத்தும் ஒன்றுமில்லாமல் போகி விடும் உங்களுடைய வலிமை குன்றிவிடும் உங்களுக்கு மத்தியில் எத்தகைய பிரச்சனை ஏற்பட்டாலும் சரி எத்தகைய குழப்பங்கள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சரி நீங்கள் அல்லாஹுடைய இந்த மார்க்கத்தில் ஒரே உம்மத்தா பொறுமையாக இருங்கள் நீங்கள் போறுமையாக உறுதியாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹு தஆலா போருமையளர்க்ளோடு இருக்கிறான்

அன்பு சகோதர்களே இன்று நம்மிடத்தில் இருக்ககூடிய ஒரு பலவீனம் என்று சொல்லலாம் ஒருபக்கம் ஆட்சியாளர்கள் நாடுகளுக்கு சொந்தமானவர்கள் பிரிந்தார்கள் என்றால் இன்னொரு பக்கம் நம்முடைய நாடுகளை போன்று இருக்ககூடிய இடங்களிலே இயக்கங்களாக பிரிந்து கொண்டு இருக்கிறார்கள் எப்படி ஒரு தாய் பிள்ளையை பெற்றடுப்பது போல ஒரு இயக்கம் பல இயக்கங்களை பெற்றடுக்கிறது பல குட்டிகளை போடுகிறது ஒன்றாக சேர்ந்து இருந்தவர்கள் பிருந்து விடுகிறார்கள் ஒற்றுமையாக ஒரே மேடையில் தோன்றியவர்கள்.

அடுத்த மேடையில் தன்னோடு இருந்தவர்களை விமர்சனம் ஏளனம் செய்கிறார்கள் திட்டுகிறார்கள் எதிர்களோடு நட்பு வைப்பது காஃபிர்களோடு தோழமை கொள்ளவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் முஸ்லிம்களுடன் விரோதம் கொள்வதில் அல்லாஹ் பதுகப்பைனாக! கண்ணியதிற்குரியவற்குளே இது மிக ஆபத்தான நிலை நான் சொல்லப்படக் கூடிய இந்த காரணங்கள் இருக்கிறதே அல் குர் ஆனில் அல்லாஹு தஆலா கூருகிறான் என்றால் இவையெல்லாம் இந்த அடிப்படைகள் முழுமையாக வேண்டும் ஓன்று இருக்கிறது மற்றொண்டு இல்லை என்ன பிரயோஜனம் ஈமான் இருக்கிறது عمل الصالح இல்லை அமலுஸ் ஸாலிஹ் இருக்கிறது.

ஆனால், சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை எல்லாம் இருக்கிறது வலிமை இருக்கிறது ஆனால் அல்லாஹ்விடத்தில் துவா கேட்பதில் பெருமை இருக்கிறது எப்படி அல்லாஹ் உதவி செய்வான் ஹுனைன் போரில் ஈமான் இல்லையா? அமலே ஸாலிஹ் இல்லையா? பெருமை ஒன்றே ஒன்று வந்து விட்டது நாம் அதிகமாக இருக்கிறோம் கண்டிப்பாக வெற்றி கொள்வோம் என்று உதவியை அல்லாஹு தஆலா நிறுத்தி விட்டான் அத்தகைய சோதனைக்கு ஆளானார்கள் தியாகம் செய்து உஹது போருக்கு முன்வந்தார்கள் சஹாபாக்களாக இருந்தார்கள் ஆனால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய கட்டளையை மீறினார்கள்,

அங்கே ரசூலுக்கு கீழ் பணிதல் இல்லாமல் போகிவிட்டது 70 சஹாபாக்கள் கொல்லப்பட்டார்கள் அன்பு சகோதர்களே கவனத்திலே நாம் வைக்க வேண்டும் இன்று சமூதாய நீதியாகவும் சரி உலக முஸ்லிம்கள் உலக நாடுகள் அடிப்படையிலும் சரி மிகப் பெரிய பின்னடைவுக்கு நம்முடைய தோல்விக்கு நமுடைய அவமானதிற்க்கும் முக்கியமான காரணம் நாம் பிரிந்து இருப்பது கூட்டங்களாக குழுக்களாக ஜமஆதுகளாக இயக்கங்களாக பிரிவுகளாக கழகங்களாக அல்லாஹ் எவ்வளவு தெளிவாக சொல்லி காட்டுகிறான் பாருங்கள் அல்லாஹ்விற்கு கீழ்படியுங்கள் அல்லாஹுடைய ரசூலுக்கு கீழ் படியுங்கள் உங்களுக்குள் நீங்கள் ஒருபோதும் சண்டை செய்யாதிர்கள் கருத்து வேறுபாடு வருகிறதா? உடனே முடித்து விடுங்கள் அந்த கருத்து வேறுபாடுகளை உங்களுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளை உங்களுக்கு மத்தியில் ஒருவர் மற்றவர்மீது கால்புணர்ச்சி கொள்வதற்கு ஒருவர் மற்றொருவரை விட்டு விளவுவதற்க்கு காரணமாக ஆக்காதீர்கள்,

இஸ்லாமிய சகோதரதுவத்தை முரிக்காதீர்கள் அப்படி செய்தால் அல்லாஹ் சொல்கிறான் நீங்கள் கோழையாகிவிடுவீர்கள் என்று நீங்கள் தோற்று விடுவீர்கள் அன்புக்குரியவர்களே எந்த ரப்பு குர்ஆனை பின்பற்ற வேண்டும்மென்று சொல்கிறானோ எந்த ரப்பு தொழுகையை நிலை நிறுத்த வேண்டுமென்ற சொல்கிறானோ எந்த ரப்பு ஸகாத் கொடுக்க வில்லையென்றால் சோதனை நிகழுமென்று சொல்கிறானோ எந்த ரப்பு விபச்சாரத்தை தடுக்கிரானோ அனாதைகளின் சொத்துகளின் எல்லை மீறுவதை தடுக்கிரானோ,

அதே இப்பதான் அதே குர் ஆனிலே சொல்கிறான் நீங்கள் சண்டை செய்யாதீர்கள் நீங்கள் பிரிந்து விடாதீர்கள் உங்களுக்கு மத்தியில் கழகம் செய்யதீர்கள் அப்படி செய்தால் நீங்கள் தோற்று விடுவீர்கள் உங்களுக்கு தைரியம் சென்று விடும் நீங்கள் சேர்த்து வைத்து இருக்ககூடிய அத்தனை வலிமையையும் அத்தனை பலமும் அத்தனை தயாரிப்பும் ஒன்றுமில்லாமல் போகிவிடும் சகித்து கொள்ளுங்கள் பொறுமையாக இருங்கள் ஒருவர் மூலமாக வரக்கூடிய மனகசப்புகளை நீங்கள் சகித்து கொள்ளுங்கள் நிச்சியமாக அல்லாஹு தஆலா பொறுமையாலர்க்லோடு இருக்கிறான்.

அன்புசகோதர்களே! இறை மறுப்பாளர்களோடு சகிக்கக் கூடிய மக்கள் நாம் அவர்களுடைய இன்னல்களை சகிக்க கூடிய மக்கள் நாம் அப்படி இருக்கும் போது நமுடைய சகோதரன் நமக்கு கொடுக்க கூடிய இன்னல்களை நாம் சகிக்க முடியவில்லை என்றால் எப்படி இந்த சமுதாயத்தை வலிமை படுத்த முடியும் இந்த சமுதாயத்தின் நன்மைக்காக சில இளப்புகளை சந்திக்க வேண்டும் நமக்குள்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக பொறுமையாக இருங்கள்; இன்னும், (உங்கள் எதிரிகளின் பொறுமையை விட) நீங்கள் அதிகம் பொறுமையாக இருங்கள்; இன்னும், (உங்களிடம் சண்டை செய்கிற எதிரிகளுடன்) போருக்குத் தயாராகுங்கள்; இன்னும், (எல்லா நிலையிலும்) அல்லாஹ்வை அஞ்சுங்கள்!

(அல்குர்ஆன்: 3:200)

அல்லாஹ் சொல்கிறான் முஃமின்களே நீங்கள் சகித்து கொள்ளுங்கள் பொறுமையாக இருங்கள் ஒருவர் ஒருவரோடு சகிப்பாக நடந்து கொள்ளுங்கள் ஒருவர் ஒருவரோடு உறுதுணையாக இருங்கள் நிச்சியமாக அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருக்கிறான் அதுபோன்று அன்புக்குரியவர்களே! முஃமின்கள் தங்களுக்கு மத்தியில் ஒருவர் மற்றவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் இறை நம்பிக்கை யாளருக்கு எதிராக ஒருபோதும் இறை மறுப்பாளருக்கு துணை சென்று விட கூடாது அல்லாஹ் ச்கிறான் பாருங்கள்

وَمَنْ يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ

இன்னும், எவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கையாளர்களையும் நேசி(த்து அவர்களுடன் நட்பு வை)க்கிறார்களோ (அவர்கள் அல்லாஹ்வின் படையினர்.) நிச்சயமாக அல்லாஹ்வின் படையினர்தான் வெற்றியாளர்கள்.

(அல்குர்ஆன்: 5:56)

யார் அல்லாஹ்விற்கு துணை நிற்ப்பார்களோ அன்னஹுவை தனது நண்பனாக எடுதுகொள்வாரோ அல்லாஹுடைய ரஸூலை தனது நண்பனாக எடுதுகொள்வாரோ அல்லாஹுடைய ரஸூலுக்கு துணை நிற்ப்பரோ இன்னும் நம்பிக்கைக் கொண்ட முஃமின்களுக்கு துணையாக இருப்பார்களோ அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்களோ அவர்களை நேசர்களாக எடுதுக்கொள்வார்களோ இவர்கள் தான் அல்லாஹுடைய பட்டாலங்கள் இத்தகைய அல்லாஹுடைய ராணுவம்தான் நிச்சியமாக கண்டிப்பாக வெற்றிவயுடையதாக இருக்கும் மேலும் அல்லாஹ் சொகிறான்

وَلَا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَاءَ ثُمَّ لَا تُنْصَرُونَ

இன்னும், அநீதி இழைத்தவர்கள் பக்கம் (சிறிதும்) நீங்கள் சாய்ந்து விடாதீர்கள். அவ்வாறாயின் (நரக) நெருப்பு உங்களை பிடித்துக் கொள்ளும். (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலர்கள் (எவரும்) உங்களுக்கு இருக்க மாட்டார்கள்; பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

(அல்குர்ஆன்: 11:113)

முஃமின்களே அநியாயம் செய்யக்கூடியவர்கள் இணை வைப்பவர்களுடன் நீங்கள் சார்ந்து விடாதீர்கள் அவர்களுக்கு ஆதரவாக சென்று விடாதீர்கள் உங்களை நரக நெருப்பு தீண்டி விடும் நாளை மறுமையில் உங்களுக்கு அல்லாஹுவினிடத்தில் உதவி செய்ய கூடியவர்களில் யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார்கள் அறவே உங்களுக்கு அங்கே உதவி இல்லாமல் போகிவிடும் கணியதிற்குரியவர்க்ளே பல அடிப்படை காரணங்கள் இருக்கிறது.

இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும் ஆவில் பார்ப்போம் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நமக்கு கொடுத்து இருக்க கூடிய இந்த குர் ஆன் இதனுடைய வழிகாட்டுதலை சிந்திக்க வேண்டும் இதனுடைய வழிகாட்டுதலை மக்களுக்கு மத்தியில் பரப்பவேண்டும் இது ஏதோ காலை மாலை இதனுடைய அரபி வாசகங்களை ஓதிவிட்டு மூடி வைப்பதற்காக இறக்க பட்ட வேதம் அல்ல அல்லது இன்று நம்மிலே சிலர் செய்வதைப் போன்று சில சடங்குகளுக்காக,

ஒதப்படுகிற வேதம் அல்ல இந்த குர் ஆன் அல்லது நம்முடைய இபாதத்தில் பொருள் தெரியாமல் ஓதி விட்டு செல்வதற்காக இறக்கப்பட்ட வேதம் அல்ல இறைவனை அஞ்சக்கூடியவருக்கு நேர்வழி காட்டுதற்காக நம்முடைய வாழ்கையை மாற்றக் கூடியதாக நமக்கு நல்லுபதேசம் செய்யக்கூடியதாக நேர் வழிக்கு நம்மை அழைக்க கூடியதாக பாவங்களிலிருந்து நம்மை தடுக்க கூடியதாக நம்முடைய வெற்றியை காட்டகூடியதாக அல்லாஹ் இறக்கிய இந்த வேதம் அல்லாஹு தஆலா இந்த குர்ஆனை சிந்தித்து உணர்ந்து புரிந்து அதனுடைய படிப்பினைகளின்,

வழிகாட்டுதலைகளையும் பினற்றகூடிய நல்ல மக்களாக அல்லாஹ் ஆக்கி அருளுவனாக அல்லாஹு ஸுப்ஹானஹுதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக முஃமின்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அல்லாஹுதஆலா உதவி செய்வானாக அல்லாஹுடைய அடியார்களுக்கு தொந்தரவு தரக்கூடிய அவர்களை அளிக்க கூடிய அவர்களின் இல்லங்களிருந்து துரத்தக் கூடிய யகுதிகளுக்கும் நஸ்ரானிகளுக்கும் அல்லாஹுதஆலா இழிவையும் நஷ்டத்தையும் தோல்வியையும் தந்து அருளுவனாக!

இறைவனிடத்தில் நன் மக்களாய் நம் அனைவரும் இருப்போமாக.! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.