4) அமீர் என்பவர் யார்?

நூல்கள்: அமீருக்கு கட்டுப்படுதல்

அமீர்
தலைமைப் பதவி வகிப்பவர்களுக்குப் பயன்படுத்தப்படும் சொற்கள் குறித்து நாம் இது வரை அறிந்தோம். இனி அமீர் என்ற சொல் யாரைக் குறிக்கும் என்பதைப் பார்ப்போம்.

முதலில் இந்தச் சொல்லின் நேரடிப் பொருள் என்ன என்று பார்ப்போம். அம்ரு என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததே அமீர் எனும் சொல். அம்ர் என்றால் உத்தரவு போடுதல், கட்டளையிடுதல் என்பது பொருளாகும். அமீர் என்றால் கட்டளையிடுபவர், உத்தரவு இடுபவர் என்பது இதன் நேரடிப் பொருளாகும்.

ஒருவரிடம் ஒன்றைச் செய்யுமாறு சாதாரணமாகந் கூறுவதற்கும், கட்டளையிடுவதற்கும் உள்ள வித்தியாசம் நாம் அறிந்தது தான்.

ஒன்றைச் செய்யுமாறு நாம் ஒருவரிடம் கூறினால் அவர் விரும்பினால் அதைச் செய்வார். விரும்பாவிட்டால் செய்ய மறுப்பார். அவரை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

ஒருவர் கட்டளை இடுகிறார் என்றால் அதை நாம் செய்தே ஆக வேண்டும். செய்யத் தவறினால் அவர் நம்மைத் தண்டிப்பார். அதற்கான அதிகாரம் அவரிடம் இருக்கும். வேறு வார்த்தையில் இதைச் சொல்வதாக இருந்தால் யாரிடம் தண்டிக்கும் அதிகாரமும் கட்டாயப்படுத்தும் அதிகாரமும் உள்ளதோ அவர் தான் கட்டளை இட முடியும். எவ்வித அதிகாரமும் இல்லாதவர் கட்டளை பிறப்பிக்க முடியாது.

அமீர் என்று ஒருவரைப் பற்றி கூற வேண்டுமானால் அவர் அதிகாரம் உடையவராக இருக்க வேண்டும். தனது கட்டளையை மீறக் கூடியவரை அவர் தண்டிக்க நினைத்தால் தண்டிக்க சக்தி இருக்க வேண்டும்.

அரபு மொழியில் எத்தனையோ சொற்களின் பொருள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த பொருளில் இருந்து மாறிவிட்டன. ஆனால் அமீர் என்ற சொல் அன்று முதல் இன்று வரை அதிகாரம் உடையவர் என்ற பொருளில் தான் அரபு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

அமைச்சர்கள், ஆளுனர்கள் போன்றவர்களே அங்கே அமீர் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறார்கள்.

அமீர் என்ற சொல்லே நமக்குத் தேவையான விளக்கத்தை அளித்து விடுகிறது.

ஆனால் இன்று ஜமாஅத்தே இஸ்லாமி அமீர், ஜாக் அமீர், அஹ்லே ஹதீஸ் அமீர், இரகசிய இயக்க அமீர் ஆகியோருக்கு துரும்பு அளவுக்குக் கூட அதிகாரம் இல்லை. அவர்களுக்குக் கட்டுப்பட மறுத்தால் அவர்கள் நம்மைச் சிறையில் தள்ள முடியாது. இன்னும் சொல்லப் போனால் இவர்களே மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நிலையில் இருக்கிறார்கள். இதில் இருந்து அமீருக்குக் கட்டுப்படுதல் என்பதை வைத்து இவர்கள் மோசடி செய்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களிடம் இவர்களை அமீர் என்று அறிமுகப்படுத்தினால் கலெக்டர் என்று தான் புரிந்து கொள்வார்கள். மடாதிபதிகளைப் போன்ற தலைவர் என்று புரிந்து கொள்ள மாட்டார்கள்.

இவர்களில் பலர் அரபு நாடுகளிடம் நிதி உதவி கேட்டு கடிதம் எழுதுகிறார்கள். அந்தக் கடிதங்களைப் பார்த்தால் இவர்களின் சாயம் வெளுத்து விடும்.

உதாரணமாக அந்தக் கடிதங்களில் ஜாக் அமீர் என்று தங்களைக் குறிப்பிட மாட்டார்கள். ஜாக் ரயீஸ் என்றே குறிப்பிட்டிருப்பார்கள். அமீர் என்று கூறினால் அரபுகள் கைகொட்டி சிரிப்பார்கள் என்பதால் இப்படி இரட்டை வேடம் போடுகிறார்கள். அரபு அல்லாதவர்கள் மத்தியில் அமீர் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் அரபு மக்களிடம் அமீர் என்று தங்களைக் கூறிக் கொள்ள மாட்டார்கள்.

அகராதி அடிப்படையில் மட்டும் இன்றி இஸ்லாத்தின் அடிப்படையிலும் அமீர் என்றால் அதிகாரம் உள்ளவர் தான்.

ஒரு நாட்டில் பல பகுதிகள் இருக்கும். அனைத்துப் பகுதியையும் ஒரே ஒருவர் நேரடியாக நிர்வாகம் செய்ய முடியாது. எனவே அதிபராக இருப்பவர் ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவரை அதிகாரியாக நியமித்து அவர் மூலம் தான் நிர்வாகம் செய்ய முடியும். இப்படி அதிபரால் சில பகுதிகளை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் தான் இஸ்லாத்தில் அமீர்கள் எனப்படுவார்கள்.

அது போல் ஒரு நாட்டில் ஏராளமான துறைகளை அதிபர் நிர்வாகம் செய்ய வேண்டும். அனைத்தையும் ஒரு அதிபரே செய்ய முடியாது. எனவே குறிப்பிட்ட பணியை அதிபரின் கட்டளைப்படி செய்து முடிக்கும் அதிகாரம் பெற்றவரும் அமீர் எனப்படுவார்.

எவ்வித அதிகாரமும் இல்லாமல் அதிபரால் நியமிக்கப்படாமல் பத்துப் பேர் கூடி ஒருவரை அமீர் என்று கூறிக் கொண்டால் அவர் இஸ்லாத்தில் அமீர் எனக் கூறப்பட மாட்டார்.

அதிபராக இருப்பவர் குறிப்பிட்ட பணிகளுக்காக அமீர் நியமித்தல்

حدثنا عبيد الله بن موسى عن إسرائيل عن أبي إسحاق عن البراء رضي الله عنه قال لقينا المشركين يومئذ وأجلس النبي صلى الله عليه وسلم جيشا من الرماة وأمر عليهم عبد الله وقال لا تبرحوا إن رأيتمونا ظهرنا عليهم فلا تبرحوا وإن رأيتموهم ظهروا علينا فلا تعينونا فلما لقينا هربوا حتى رأيت النساء يشتددن في الجبل رفعن عن سوقهن قد بدت خلاخلهن فأخذوا يقولون الغنيمة الغنيمة فقال عبد الله عهد إلي النبي صلى الله عليه وسلم أن لا تبرحوا فأبوا فلما أبوا صرف وجوههم فأصيب سبعون قتيلا وأشرف أبو سفيان فقال أفي القوم محمد فقال لا تجيبوه فقال أفي القوم ابن أبي قحافة قال لا تجيبوه فقال أفي القوم ابن الخطاب فقال إن هؤلاء قتلوا فلو كانوا أحياء لأجابوا فلم يملك عمر نفسه فقال كذبت يا عدو الله أبقى الله عليك ما يخزيك قال أبو سفيان اعل هبل فقال النبي صلى الله عليه وسلم أجيبوه قالوا ما نقول قال قولوا الله أعلى وأجل قال أبو سفيان لنا العزى ولا عزى لكم فقال النبي صلى الله عليه وسلم أجيبوه قالوا ما نقول قال قولوا الله مولانا ولا مولى لكم قال أبو سفيان يوم بيوم بدر والحرب سجال وتجدون مثلة لم آمر بها ولم تسؤني

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் உஹதுப் போர் நாளன்று அப்துல்லாஹ் பின் ஜூபைரை அம்பெய்யும் வீரர்களுக்கு அமீராக நியமித்தார்கள். அறிவிப்பவர் : பராஃ (ரலி)
நூல் : புஹாரி 4044

الله عنهما قال أمر رسول الله صلى الله عليه وسلم في غزوة مؤتة زيد بن حارثة فقال رسول الله صلى الله عليه وسلم إن قتل زيد فجعفر وإن قتل جعفر فعبد الله بن رواحة قال عبد الله كنت فيهم في تلك الغزوة فالتمسنا جعفر بن أبي طالب فوجدناه في القتلى ووجدنا ما في جسده بضعا وتسعين من طعنة ورمية

முஅத்தா போரின் போது ஸைத் பின் ஹாரிஸாவை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அமீராக நியமித்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
(புகாரி: 4261)

حدثنا عبد الرحمن بن مهدي حدثنا الأسود بن شيبان عن خالد بن سمير قال قدم علينا عبد الله بن رباح الأنصاري وكانت الأنصار تفقهه فأتيته وهو في حواء شريك بن الأعور الشارع على المربد وقد اجتمع عليه ناس من الناس فقال حدثنا أبو قتادة الأنصاري فارس رسول الله صلى الله عليه وسلم قال بعث رسول الله صلى الله عليه وسلم جيش الأمراء فقال عليكم زيد بن حارثة فإن أصيب زيد فجعفر بن أبي طالب فإن أصيب جعفر فعبد الله بن رواحة الأنصاري فوثب جعفر فقال بأبي أنت وأمي يا رسول الله ما كنت أرهب أن تستعمل علي زيدا قال امضه فإنك لا تدري أي ذلك خير فانطلقوا فلبثوا ما شاء الله ثم إن رسول الله صلى الله عليه وسلم صعد المنبر وأمر أن ينادى الصلاة جامعة فقال رسول الله صلى الله عليه وسلم ناب خير أو بات خير أو ثاب خير شك عبد الرحمن ألا أخبركم عن جيشكم هذا الغازي إنهم انطلقوا فلقوا العدو فأصيب زيد شهيدا فاستغفروا له فاستغفر له الناس ثم أخذ اللواء جعفر بن أبي طالب فشد على القوم حتى قتل شهيدا أشهد له بالشهادة فاستغفروا له ثم أخذ اللواء عبد الله بن رواحة فأثبت قدميه حتى قتل شهيدا فاستغفروا له ثم أخذ اللواء خالد بن الوليد ولم يكن من الأمراء هو أمر نفسه ثم رفع رسول الله صلى الله عليه وسلم إصبعيه فقال اللهم هو سيف من سيوفك فانصره فمن يومئذ سمي خالد سيف الله ثم قال انفروا فأمدوا إخوانكم ولا يتخلفن أحد قال فنفر الناس في حر شديد مشاة وركبانا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (போருக்காக) ஒரு படையை அனுப்பினார்கள். அவர்களுக்கு ஸைத் பின் ஹாரிஸாவை அமீராக நியமித்தார்கள். ஸைத் கொல்லப்பட்டு விட்டால் உங்கள் அமீர் ஜஃபர் ஆவார். அவர் கொல்லப்பட்டுவிட்டால் உங்களுடைய அமீர் அப்துல்லாஹ் பின் ரவாஹா ஆவார் என்று கூறி ஸைத் பின் ஹாரிஸாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமீராக நியமித்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி).
(அஹ்மத்: 21523)

حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا وكيع بن الجراح عن سفيان ح و حدثنا إسحق بن إبراهيم أخبرنا يحيى بن آدم حدثنا سفيان قال أملاه علينا إملاء ح و حدثني عبد الله بن هاشم واللفظ له حدثني عبد الرحمن يعني ابن مهدي حدثنا سفيان عن علقمة بن مرثد عن سليمان بن بريدة عن أبيه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أمر أميرا على جيش أو سرية أوصاه في خاصته بتقوى الله ومن معه من المسلمين خيرا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இராணுவத்திற்கு, அல்லது ஒரு சிறு படைக்கு அமீரை நியமித்தால் தனிமையில் இருக்கும் போது அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என்று அறிவுரை வழங்குவார்கள். அறிவிப்பவர் : சுலைமான் பின் புரைதா (ரலி)
(முஸ்லிம்: 3261)

حدثنا علي بن عبد الله حدثنا سفيان قال الذي حفظناه من عمرو بن دينار قال سمعت جابر بن عبد الله يقول بعثنا رسول الله صلى الله عليه وسلم ثلاث مائة راكب أميرنا أبو عبيدة بن الجراح نرصد عير قريش فأقمنا بالساحل نصف شهر فأصابنا جوع شديد حتى أكلنا الخبط فسمي ذلك الجيش جيش الخبط فألقى لنا البحر دابة يقال لها العنبر فأكلنا منه نصف شهر وادهنا من ودكه حتى ثابت إلينا أجسامنا فأخذ أبو عبيدة ضلعا من أضلاعه فنصبه فعمد إلى أطول رجل معه قال سفيان مرة ضلعا من أضلاعه فنصبه وأخذ رجلا وبعيرا فمر تحته قال جابر وكان رجل من القوم نحر ثلاث جزائر ثم نحر ثلاث جزائر ثم نحر ثلاث جزائر ثم إن أبا عبيدة نهاه وكان عمرو يقول أخبرنا أبو صالح أن قيس بن سعد قال لأبيه كنت في الجيش فجاعوا قال انحر قال نحرت قال ثم جاعوا قال انحر قال نحرت قال ثم جاعوا قال انحر قال نحرت ثم جاعوا قال انحر قال نهيت

குறைஷிகளின் ஒட்டகக் கூட்டத்தை எதிர்பார்த்துத் தாக்குவதற்காக எங்களை நபியவர்கள் அனுப்பினார்கள். எங்கள் படையில் முன்னூறு குதிரை வீரர்கள் இருந்தார்கள். எங்களுடைய அமீராக அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் இருந்தார்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல் : புஹாரி 4361

حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن نافع عن نبيه بن وهب أن عمر بن عبيد الله أراد أن يزوج طلحة بن عمر بنت شيبة بن جبير فأرسل إلى أبان بن عثمان يحضر ذلك وهو أمير الحج فقال أبان سمعت عثمان بن عفان يقول قال رسول الله صلى الله عليه وسلم لا ينكح المحرم ولا ينكح ولا يخطب

உமர் பின் உபைதுல்லாஹ், ஷைபாவின் மகளை தல்ஹாவுக்கு நிக்காஹ் முடித்து வைக்க விரும்பினார். இதில் கலந்து கொள்வதற்காக அபான் பின் உஸ்மானுக்கு அழைப்பு அனுப்பியிருந்தார். அப்போது அவர் ஹஜ் விவகாரத் துறைக்கு அமீராக இருந்தார்.

அறிவிப்பவர் : நபீஹ் பின் வஹப்

நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நல்லாட்சி நடத்திய கலீஃபாக்களும் குறிப்பிட்ட பணிகளைச் செய்து முடிக்க அதிகாரம் கொடுத்து அமீர்களை நியமித்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.

குறிப்பிட்ட பகுதிகளுக்கு அமீர்களை நியமித்தல்
حدثنا إسماعيل بن عبد الله قال حدثني إسماعيل بن إبراهيم بن عقبة عن موسى بن عقبة قال ابن شهاب حدثني عروة بن الزبير أن المسور بن مخرمة أخبره أن عمرو بن عوف وهو حليف لبني عامر بن لؤي كان شهد بدرا مع رسول الله صلى الله عليه وسلم أخبره أن رسول الله صلى الله عليه وسلم بعث أبا عبيدة بن الجراح إلى البحرين يأتي بجزيتها وكان رسول الله صلى الله عليه وسلم هو صالح أهل البحرين وأمر عليهم العلاء بن الحضرمي فقدم أبو عبيدة بمال من البحرين فسمعت الأنصار بقدومه فوافته صلاة الصبح مع رسول الله صلى الله عليه وسلم فلما انصرف تعرضوا له فتبسم رسول الله صلى الله عليه وسلم حين رآهم وقال أظنكم سمعتم بقدوم أبي عبيدة وأنه جاء بشيء قالوا أجل يا رسول الله قال فأبشروا وأملوا ما يسركم فوالله ما الفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها وتلهيكم كما ألهتهم

நபியவர்கள் பஹ்ரைன் நாட்டு மக்களிடம் உடன்படிக்கை செய்து அந்நாட்டு மக்களுக்கு அலா பின் அல் ஹழ்ரமியை அமீராக நியமனம் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அம்ரு பின் அல் அவ்ஃப் அல் அன்சாரி (ரலி)

(புகாரி: 6425)

حدثنا يحيى حدثنا وكيع عن شعبة عن سعيد بن أبي بردة عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم بعث معاذا وأبا موسى إلى اليمن قال يسرا ولا تعسرا وبشرا ولا تنفرا وتطاوعا ولا تختلفا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆதையும், அபூ மூஸாவையும் யமனுக்கு (அமீர்களாக) அனுப்பிய போது நீங்கள் இருவரும் நளினமாக நடங்கள்! கடுமையாக நடக்காதீர்கள். மக்களிடம் மகிழ்ச்சியை உருவாக்குங்கள். வெறுப்பை உருவாக்கி விடாதீர்கள். ஒருவர் இன்னொருவருக்கு இணங்கி நடங்கள்! கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள் என்று அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூ புர்தா (ரலி)

(புகாரி: 3038)

و حدثني سلمة بن شبيب حدثنا الحسن بن أعين حدثنا معقل عن زيد بن أبي أنيسة عن يحيى بن حصين عن جدته أم الحصين قال سمعتها تقول حججت مع رسول الله صلى الله عليه وسلم حجة الوداع فرأيته حين رمى جمرة العقبة وانصرف وهو على راحلته ومعه بلال وأسامة أحدهما يقود به راحلته والآخر رافع ثوبه على رأس رسول الله صلى الله عليه وسلم من الشمس قالت فقال رسول الله صلى الله عليه وسلم قولا كثيرا ثم سمعته يقول إن أمر عليكم عبد مجدع حسبتها قالت أسود يقودكم بكتاب الله تعالى فاسمعوا له وأطيعوا

காய்ந்த திராட்சையைப் போன்ற தலையைக் கொண்ட அபீஸீனியர் உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும் நீங்கள் செவிசாயுங்கள், கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

حدثنا أبو اليمان أخبرنا شعيب عن الزهري سمعت عروة بن الزبير يحدث عمر بن عبد العزيز في إمارته أخر المغيرة بن شعبة العصر وهو أمير الكوفة فدخل عليه أبو مسعود عقبة بن عمرو الأنصاري جد زيد بن حسن شهد بدرا فقال لقد علمت نزل جبريل فصلى فصلى رسول الله صلى الله عليه وسلم خمس صلوات ثم قال هكذا أمرت كذلك كان بشير بن أبي مسعود يحدث عن أبيه

கூஃபாவின் அமீராக முகீரா இருக்கும் போது நான் பள்ளிக்கு வந்தேன்……என அலீ பின் ரபீஆ அறிவிக்கின்றார்.

(புகாரி: 4007)

أخبرنا محمد بن المثنى قال حدثنا خالد وهو ابن الحارث قال حدثنا حميد عن الحسن قال قال ابن عباس وهو أمير البصرة في آخر الشهر أخرجوا زكاة صومكم فنظر الناس بعضهم إلى بعض فقال من هاهنا من أهل المدينة قوموا فعلموا إخوانكم فإنهم لا يعلمون أن هذه الزكاة فرضها رسول الله صلى الله عليه وسلم على كل ذكر وأنثى حر ومملوك صاعا من شعير أو تمر أو نصف صاع من قمح فقاموا خالفه هشام فقال عن محمد بن سيرين

பஸராவுடைய அமீராக இருக்கும் போது இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவித்தார்கள்……

அறிவிப்பவர் : ஹஸன்

நூல் : நஸயீ 2461

قال حدثنا عبد الرازق أخبرنا داود بن قيس الصنعاني قال حدثني عبد الله بن وهب عن أبيه قال حدثني فنج قال كنت أعمل في الدينباذ وأعالج فيه فقدم يعلي بن أمية أميرا على اليمن وجاء معه رجال من أصحاب النبي صلى الله عليه وسلم فجاءني رجل ممن قدم معه وأنا في الزرع أصرف الماء في الزرع ومعه في كمه جوز فجلس على ساقية من الماء وهو يكسر من ذلك الجوز ويأكل ثم أشار إلى فنج فقال يا فارسي هلم قال فدنوت منه فقال الرجل لفنج أتضمن لي غرس هذا الجوز على الماء فقال له فنج ما ينفعني ذلك فقال الرجل سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بأذني هاتين من نصب شجرة فصبر على حفظها والقيام عليها حتى تثمر كان له في كل شيء يصاب من ثمرتها صدقة عند الله عز وجل فقال فنج أنت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم قال نعم قال فنج فأنا أضمنها قال فمنها جوز الدينباذ

ஏமனுக்கு அமீராக யஃலா பின் உமையா அவர்கள் வருகை தந்தார்கள். அவருடன் நபித் தோழர்களில் முக்கியமானவர்களும் வந்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் வஹப்

(அஹ்மத்: 15991)

حدثنا شيبان بن فروخ حدثنا سليمان بن المغيرة حدثنا حميد بن هلال عن خالد بن عمير العدوي قال خطبنا عتبة بن غزوان فحمد الله وأثنى عليه ثم قال أما بعد فإن الدنيا قد آذنت بصرم وولت حذاء ولم يبق منها إلا صبابة كصبابة الإناء يتصابها صاحبها وإنكم منتقلون منها إلى دار لا زوال لها فانتقلوا بخير ما بحضرتكم فإنه قد ذكر لنا أن الحجر يلقى من شفة جهنم فيهوي فيها سبعين عاما لا يدرك لها قعرا و والله لتملأن أفعجبتم ولقد ذكر لنا أن ما بين مصراعين من مصاريع الجنة مسيرة أربعين سنة وليأتين عليها يوم وهو كظيظ من الزحام ولقد رأيتني سابع سبعة مع رسول الله صلى الله عليه وسلم ما لنا طعام إلا ورق الشجر حتى قرحت أشداقنا فالتقطت بردة فشققتها بيني وبين سعد بن مالك فاتزرت بنصفها واتزر سعد بنصفها فما أصبح اليوم منا أحد إلا أصبح أميرا على مصر من الأمصار وإني أعوذ بالله أن أكون في نفسي عظيما وعند الله صغيرا وإنها لم تكن نبوة قط إلا تناسخت حتى يكون آخر عاقبتها ملكا فستخبرون وتجربون الأمراء بعدنا و حدثني إسحق بن عمر بن سليط حدثنا سليمان بن المغيرة حدثنا حميد بن هلال عن خالد بن عمير وقد أدرك الجاهلية قال خطب عتبة بن غزوان وكان أميرا على البصرة فذكر نحو حديث شيبان

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் (இஸ்லாத்தின் துவக்க காலத்தில்) இருந்த ஏழு பேரில் நானும் ஒருவன். எங்களுக்கு இலை, தழைகளைத் தவிர வேறு உணவு கிடையாது. இதனால் எங்கள் வாய்கள் புண்ணாகி விட்டன. நான் ஒரு போர்வையை எடுத்து எனக்கு ஒரு துண்டு, ஸஅதுக்கு ஒரு துண்டு என இரண்டாகக் கிழித்தேன். பாதியை அவர் அணிந்தார். மீதிப் பாதியை நான் அணிந்தேன். ஆனால் இன்று எங்களில் யாரும் நகரங்களில் ஏதாவது ஒரு நகரத்தில் அமீர் பொறுப்பை வகிக்காமல் இல்லை.

அறிவிப்பவர் : உத்பா பின் கஸ்வான் (ரலி)

நூல் : முஸ்லிம்

حدثنا شيبان بن فروخ حدثنا سليمان بن المغيرة حدثنا حميد بن هلال عن خالد بن عمير العدوي قال خطبنا عتبة بن غزوان فحمد الله وأثنى عليه ثم قال أما بعد فإن الدنيا قد آذنت بصرم وولت حذاء ولم يبق منها إلا صبابة كصبابة الإناء يتصابها صاحبها وإنكم منتقلون منها إلى دار لا زوال لها فانتقلوا بخير ما بحضرتكم فإنه قد ذكر لنا أن الحجر يلقى من شفة جهنم فيهوي فيها سبعين عاما لا يدرك لها قعرا و والله لتملأن أفعجبتم ولقد ذكر لنا أن ما بين مصراعين من مصاريع الجنة مسيرة أربعين سنة وليأتين عليها يوم وهو كظيظ من الزحام ولقد رأيتني سابع سبعة مع رسول الله صلى الله عليه وسلم ما لنا طعام إلا ورق الشجر حتى قرحت أشداقنا فالتقطت بردة فشققتها بيني وبين سعد بن مالك فاتزرت بنصفها واتزر سعد بنصفها فما أصبح اليوم منا أحد إلا أصبح أميرا على مصر من الأمصار وإني أعوذ بالله أن أكون في نفسي عظيما وعند الله صغيرا وإنها لم تكن نبوة قط إلا تناسخت حتى يكون آخر عاقبتها ملكا فستخبرون وتجربون الأمراء بعدنا و حدثني إسحق بن عمر بن سليط حدثنا سليمان بن المغيرة حدثنا حميد بن هلال عن خالد بن عمير وقد أدرك الجاهلية قال خطب عتبة بن غزوان وكان أميرا على البصرة فذكر نحو حديث شيبان

முஆவியா (ரலி) ஸஅத் அவர்களை அமீராக நியமித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீ வக்காஸ்

நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அமீர்கள் நியமிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன.

இதிலிருந்து தெரிவதென்ன?

இஸ்லாமிய ஆட்சி முறையில் ஒரே ஒரு தலைவர் இருப்பார். அவர் கலீஃபா அல்லது அமீருல் மூமினீன் என்று கூறப்படுவார். அவர் பல பணிகளுக்கும், பகுதிகளுக்கும் அதிகாரிகளை நியமிப்பார். அவர்களே அமீர்கள் எனப்பட்டனர் என்பதை மேலே நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளிலிருந்து அறியலாம்.

ஒருவர் அமீராக இருக்க வேண்டுமானால் அவருக்கு மேலே ஒரு இமாம், கலீஃபா, சுல்த்தான், அமீருல் மூமினீன் இருந்தாக வேண்டும். அவர்களால் அவர் நியமிக்கப்பட்டிருக்கவும் வேண்டும்.

மேலே நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகமும் கூட இதை விளக்குகின்றது. அமீராக ஆக்கினார்கள், அமீராக நியமித்தார்கள் போன்ற வார்த்தைகள் தான் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர அவர்களாக அமீராக ஆனார்கள் என்று கூறப்படவில்லை. அல்லது மக்களால் அமீராக ஆக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படவில்லை.

மக்கள் ஒரேயொரு தலைவரை, கலீஃபாவை மட்டும் தான் தேர்வு செய்வார்கள். அவர் தான் எல்லாப் பகுதிகளுக்கும் அமீரை நியமிப்பார்.

எனவே நாம் ஒருவரை அமீர் என்று கூறுவதானால் அவரை அமீராக நியமித்த இமாம் ஒருவர் இருந்தாக வேண்டும். எவ்வித அதிகாரமும் இல்லாமல் தானாக ஒருவர் அமீராகலாம், அல்லது மக்களில் சிலர் ஒருவரை அமீராக்கலாம் என்று கூறுவோர் அதற்கான ஒரே ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாது. நாம் தேடிய வரை அப்படி ஒரு ஆதாரத்தைக் காண முடியவில்லை.

– சேர்க்கை – சிவப்பு வண்ணத்தில் உள்ளவை சிலரது விமர்சனத்துக்கு விளக்கம் தரும் வகையில் தர்போது சேர்க்கப்பட்டதாகும் . அடுத்த பதிப்பில் எவ்வித அதிகாரமும் இல்லாமல் என்ற வாசகம் இன்ஷா அல்லாஹ் சேர்க்கப்படும்

இந்த இடத்தில் சிலர் ஒரு மறுப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது அமீர் என்ற வார்த்தை கலீபாவுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் அந்த மறுப்பு. புஹாரி 4642, 3670 ஆகிய ஹதீஸ்களில் ஒட்டு மொத்த ஜனாதிபதியைக் குறிக்க அமீர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது அவர்களின் மறுப்பு. நாம் எழுதியதன் கருத்தைப் புரிந்து கொள்ளாமல் இவ்வாறு மறுப்பு வெளியிட்டுள்ளனர். ஒரு குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் ஒருவரை அமீர் என்று நியமித்துக் கொள்கின்றனர். அப்வரிடம் அதிகாரமும் இருக்காது. அவர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கவும் மாட்டார். அமீர் செய்யும் எந்தப் பணியும் அவரால் செய்ய இயலாது. இத்தகையவர் தன்னை அமீர் என்று கூறிக் கொள்வதற்கு ஆதாரம் இல்லை என்பதைத் தான் இவ்வாறு குறிப்பிட்டூளோம். ஒட்டு மொத்த நூலும் இந்தக் கருத்தைச் சொல்வதற்குத் தான் எழுதப்பட்டது. ஜனாதிபதியையே அமீர் என்று குறிப்பிட்ட ஆதாரத்தைக் காட்டி நமது வாதத்தை மறுக்க முடியாது. மேற்கண்ட பாராவில் எவ்வித அதிகாரமும் இல்லாமல் என்ற வார்த்தையை நாம் சேர்த்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்காததால் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த விளக்கத்தை நாம் புதிதாகக் கண்டுபிடித்து விடவில்லை.

புகாரி இமாம் அவர்கள் இமாமுக்குக் கட்டுப்படுதல் என்ற தலைப்பில் ஒரு பாடத்தை புகாரியில் இடம் பெறச் செய்துள்ளார். ஆனால் அப்பாடத்தில் அவர் எடுத்துக் காட்டும் ஹதீஸ்கள் அமீருக்குக் கட்டுப்படுவதைத் தான் கூறுகின்றன. இமாமுக்கு கட்டுப்படுவதைப் பற்றி எந்த ஹதீஸையும் அப்பாடத்தில் அவர் கூறவில்லை.

இதற்கு விளக்கம் கூறும் போது ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்: “இப்பாடத்தில் இமாமுக்குக் கட்டுப்படுதல் பற்றி ஒரு ஹதீஸையும் கூறாமல் இமாமுக்குக் கட்டுப்படுதல் என்று தலைப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் அமீர் என்பவர் இமாமால் நியமிக்கப்பட்டவர் தான். எனவே அமீருக்குக் கட்டுப்படுவது உண்மையில் இமாமுக்குக் கட்டுப்படுவது தான்” இவ்வாறு இப்னு ஹஜர் அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.

அமீர் என்பவர் இமாமால் நியமிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை இவ்விளக்கம் உறுதி செய்கிறது. இது வரை நாம் பார்த்த செய்திகளிலிருந்து எல்லா அதிகாரங்களும் படைத்த ஒரு ஆட்சியாளரால் ஒரு குறிப்பிட்ட பகுதியை நிர்வகிக்க அல்லது ஒரு குறிப்பிட்ட பணியைப் பூர்த்தி செய்ய நியமிக்கப்பட்டவர்கள் தான் அமீர்கள். எனவே அமீர் என்பவர் குறுகிய அதிகாரம் படைத்த அதிகாரி என்பது தெளிவாகின்றது.

அதிகாரம் இல்லாமல் இமாமோ, அமீரோ இருக்க முடியாது.

ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் இமாமாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கோ, பணிக்கோ நியமிக்கப்பட்ட அமீராக இருந்தாலும் சரி தம்முடைய தலைமையின் கீழ் உள்ளவர்கள் மீது அதிகாரம் செலுத்துபவராக அவர்கள் இருக்க வேண்டும். தனது உத்தரவுக்குக் கட்டுப்பட மறுப்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் உட்பட எல்லா அதிகாரங்களையும் உடையவராக இருக்க வேண்டும்.

இதற்கான ஆதாரங்கள் இன்னும் உள்ளன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்ப்போம்.

حدثنا عبدان أخبرنا عبد الله عن يونس عن الزهري أخبرني أبو سلمة بن عبد الرحمن أنه سمع أبا هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني

யார் எனக்குக் கட்டுப்பட்டாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யார் எனக்கு மாறு செய்வாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டார். யார் எனது அமீருக்கு கட்டுப்பட்டாரோ அவர் எனக்குக் கட்டுப்பட்டார். யார் என்னுடைய அமீருக்கு மாறு செய்கிறாரோ அவர் எனக்கு மாறு செய்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரலி

(புகாரி: 7147)

ஒருவர் அமீருக்கு மாறு செய்தால் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தார் என்று மக்கள் பரவலாகக் கூறி வருகின்றனர். ஆனால் இந்த ஹதீஸில் என்னுடைய அமீருக்கு யார் கட்டுப்பட்டாரோ என்ற வாசகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

என்னுடைய அமீர் என்றால் என்னால் நியமிக்கப்பட்ட அமீர் என்பது கருத்தாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை அமீராக நியமித்தால் அவரை எதிர்ப்பது நியமித்தவரையே எதிர்ப்பதாகும் என்ற கருத்து தான் இதில் அடங்கியுள்ளது. அது அறிவுக்கும் பொருத்தமாக உள்ளது.

நாலு பேர் கூடிக் கொண்டு ஒருவரை அமீர் என்று இவர்களாக நியமித்துக் கொண்டு அவருக்குக் கட்டுப்படுவது அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுவதற்குச் சமம் என்று கூறினால் அது மாபெரும் மோசடியாகும்.

எவனோ ஒருவனுக்குக் கட்டுப்படுவது ஒரு காலத்திலும் அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுவதாக ஆகவே ஆகாது.

இன்றைக்குக் கூட ஒரு அதிபர் சில பகுதிகளை நிர்வாகம் செய்ய ஒரு அமீரை நியமித்தால் அவருக்குக் கட்டுப்படுவது அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுவதாக ஆகாது. மாறாக எந்த அரசாங்கம் அவரை நியமித்ததோ அந்த அரசாங்கத்துக்கும் அதன் அதிபருக்கும் கட்டுப்படுவதாகத் தான் அது அமையும்.

என்னுடைய அமீருக்கு என்ற வாசகத்தில் இருந்து இதை நாம் சிந்தித்து விளங்கலாம்.

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்விற்குக் கட்டுப்படுங்கள். (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கட்டுப்படுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் அதை அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இது தான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான அழகான முடிவாக இருக்கும்.

திருக்குர்ஆன் (4:59)

அமீருக்குக் கட்டுப்படுவதை வலியுறுத்தும் அல்லாஹ்வின் கட்டளை இது. அமீருக்குக் கட்டுப்படுங்கள் என்று இறைவன் கூறாமல் உலில் அம்ரி என்று கூறுகிறான்.

உலு என்றால் உடையவர்கள் என்று பொருள்.

அம்ர் என்றால் அதிகாரம் என்று பொருள்.

இரண்டையும் சேர்த்து உலுல் அம்ர் எனக் கூறினால் அதிகாரம் உடையவர் என்பது பொருளாகும்.

ஆட்சி, அதிகாரம் உள்ளவர்களுக்குக் கட்டுப்படுவதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.

அதிகாரம் உடையவர்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது அதிகாரம் இல்லாதவர்கள் தங்களுக்கு மக்களைக் கட்டுப்பட வைக்க இவ்வசனத்தைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் செய்யப்படும் மிகப் பெரும் மோசடியாகும்.

அகராதியின் பொருளின் படியும், அல்லாஹ் பயன்படுத்திய வாசக அமைப்பின் படியும் அமீர் என்பவர் ஆட்சி அதிகாரம் உடையவரே! அவ்வாறில்லாதவர் ஒரு போதும் அமீராக மாட்டார்.