அந்த 72 கூட்டத்தினர் யார்? -4
ஏனெனில் அக்கொள்கையைக் கூறக் கூடியவர்கள் இன்றைக்கும் இருக்கலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோன்றி அழிந்து போன அக்கொள்கைக்கு உயிரூட்டக் கூடியவர்கள் இன்றைக்கும் நாளைக்கும் வரலாம். நம்மில் கூட அந்த வழி கெட்ட கொள்கையில் சில கொள்கைகளை சரியென்று நினைத்திருக்காலம். அதனால் நாம் பார்க்க விருப்பது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு தோன்றிய தவறான கொள்கைகள் குர்ஆன் ஹதீஸ்க்கு மாற்றமான சித்தாந்தங்கள். எதுவல்லாம் இஸ்லாத்தின் பெயரால் வந்தது? அதை ஆய்வு செய்வோமையானால் இன்றைக்கும் அக்கொள்கை வேறு ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு வந்தால் நம்மை நாம் அதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். இக்கொள்கை அன்றைக்கு அடையாளம் காட்டப்பட்ட கொள்கை அன்றைக்கு தவறு என்று நிரூபிக்கப்பட்ட கொள்கை இது அல்குர்ஆனின் இத்தனை வசனங்களுக்கு மாற்றமான கொள்கை என்றும் விளங்கிக் கொள்ள முடியும்.
கொள்கைகளில் பட்டியலையும் அது எப்படித் தவறு என்பதையும் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம். இடையிடையே இக்கொள்கை எக்கலாத்தில் தோன்றியது என்பதற்குரிய வரலாறுகள் வரும் வரலாறாக மட்டும் இல்லாமல் இஸ்லாத்தின் பெயரால் இவைகள் சமுதாயத்தில் எவ்வாறு நுழையப்பார்த்தது என்பதையும் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் இஸ்லாத்தின் பெயரால் சண்டைகளும் பிளவுகளுக்கும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கவில்லை அவ்வாறு ஒரு பிரச்சனை வந்தாலும் உடனே நபி (ஸல்) அவர்களிடம் தீர்த்துக் கொள்வார்கள். அது நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படும் காலமாக இருந்ததால் அல்லாஹ் அதற்கு வஹீயை அறிவித்து அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள். அவர்களுடைய தீர்ப்புக்கு மாற்றுக் கருத்து அவர்கள் மத்தியில் இருக்கவில்லை நபி (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு மாற்றுக் கருத்துக் கொண்டோர்கள் அவர்கள் முஸ்லீம்களாக இருந்திருக்க மாட்டார்கள். இஸ்லாத்தை ஏற்று அதை வாழ்க்கையாக கடைபிடித்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு நம்பிக்கை கொண்டோம், ஏற்றுக் கொண்டோம் என்று சொல்லக் கூடியவர்களாகத்தான் நபித் தோழர்கள் இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மரணித்த அடுத்த வினாடியே இந்த சமுதாயத்தில் குழி தோன்றிப் புதைக்கப்பட்டிருந்த தவறான கொள்கை தலை காட்ட ஆரம்பித்தது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி மரணம் வரும் அவர்களுக்கு மரணம் என்ற ஒன்று உள்ளதா? நாங்கள் இறைத் தூதர் என்றால் மரணிக்க மாட்டார்கள் என்றுதான் நபித்தோழர்களில் பலர் நம்பிக் கொண்டிருந்தனர்.
நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று கேள்விப் பட்டதும் பஹ்ரைனில் இருந்து ஏராளமான நாடுகள் கிட்டத்தட்ட ஐயாயிரம் பேருக்கு மேல் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறிச் சென்றார்கள். அவர்களின் வாதம் இறைத் தூதர்கள் என்றால் அவர்களுக்கு மரணம் ஏற்படாது இவர் தன்னை இறைத் தூதர் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது இவர் மரணித்து விட்டார் என்பது அவர்களின் வாதமாக இருந்தது.
நபி (ஸல்) அவர்கள் அம்மக்களுக்கு இஸ்லாத்தை போதித்த போதும் வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்த மக்கள் இஸ்லாத்தின் அடிப்படையைப் புரிந்து வைத்திருக்கவில்லை அவர்களுக்கு நபி என்றாலும் மரணிப்பார். இது தான் அல்லாஹ்வின் நியதி என்று அவர்கள் அறியாத காரணத்தினால் வந்த வழிக்கு திரும்பிச் சென்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மரணித்ததும் அரபுக்களில் யாரெல்லாம் நிராகரிப்போராக ஆக வேண்டுமென்று அல்லாஹ் எழுதி வைத்திருந்தானோ அவர்கள் எல்லாம் இறை நிராகரிப்பாளர்களாக மாறினார்கள் என்று பல சான்றுகளைப் பார்க்க முடியும்.
இஸ்லாத்தில் முதன் முதலாக ஏற்பட்ட கொள்கைக் குழப்பம் இறைத் தூதர்கள் மரணிக்க மாட்டார்கள் என்ற தவறான கொள்கை இன்று மகான்கள் இறக்கமாட்டார்கள் என்று கூறுவோறிடம் இருக்கிறது. இக்கொள்கையை ஒட்டி வரக்கூடிய கொள்கையாக எந்தக் கொள்கை இருந்தாலும் அவையும் வழி கெட்ட கொள்கை தான்.
நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அபூ பக்கர் (ரலி) அவர்கள் அந்த இடத்தில் இருக்க வில்லை தேவை காரணமாக ஆலியா என்ற ஒரு இடத்திற்குச் சென்றிருந்தார்கள். அந்த நேரத்தில் அங்கு உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு தலைமை தாங்க வேண்டிய நிலை இருந்தது.
அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் மார்க்த்தை கற்றிந்தும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களும் மனிதர்தான் அவர்களுக்கு இறப்பு ஏற்படும் என்பதை அறியாதவராக இருந்தார்கள். உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அவருடைய உள்ளத்தில் சில உண்மைகளை வெளிக் கொண்டு வர விடாமல் அவர்களின் உள்ளத்தில் திரையை ஏற்படுத்தி விட்டது. அவர்கள் அறியாத காரணத்தினால்தான் இவ்வாறான ஒரு நிலைக்கு ஆளானார்கள். அவர்கள் நினைக்கிறார்கள் நபியவர்கள் தூங்கிக்கொண்டிருக்கலாம் இப்போது கண்விழித்து எழுந்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள்.
இந்த சமுதாயத்தில் நபி (ஸல்) அவர்கள் ஆண்களில் ஒருவருக்கு நற்சான்று கூறி இருக்கின்றார்கள் என்றால் அது உமர் (ரலி) அவர்களாகத்தான் இருக்கமுடியும். பல விசயங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கருத்துச் சொல்வார்கள் உமர் (ரலி) அவர்கள் அவருடைய கருத்திற்கு எதிரான ஒரு கருத்தைச் சொல்வார்கள். இது மார்க்க செய்திகள் அல்லாத நிர்வாகம் தொடர்பான விசயங்களில் இதை இப்படி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று உமர் (ரலி) அவர்கள் கூறிய ஆலோசனை கூறுவார்கள் இறுதியில் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் அல்லாஹ் அவருடைய கருத்தைப் பிரதி பலிக்கும் முகமாக வஹீயை அருள்வான். அல்லாஹ்வின் தூதருடைய கருத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) அவர்களின் கருத்துக்கு ஏற்ப இறக்குவான்.
உமர் (ரலி) அவர்கள் இதை சந்தோசமாகக் கூறுவார்கள் மூன்று விசயங்களில் என்னுடைய இறைவன் என்னுடைய கருத்திற்கு இசைவாக வஹீ இறக்குகின்ற படி நான் கூறிவிட்டேன். அதிகப் பிரசங்கித்தனமாக இல்லாமல் இருப்பதற்கு நான் கூறிய படி அல்லாஹ் வஹீ இறக்கி விட்டான் என்று கூறாமல் அல்லாஹ்வுக்கு இசைவாக நான் கூறினேன் என்று கூறுவார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்’ அல்லது “என் இறைவன் மூன்று விஷயங் களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான்’. நான் நபி (ஸல்) அவர்களிடம்ன “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும்போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே!” என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.) மேலும் நான், (அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லா வகை மனிதர்களும்) வருகின்றார்கள். ஆகவே, (தங்கள் துணைவியரான) இறைநம்பிக்கை யாளர்களின் அன்னையரை பர்தா அணியும் படி தாங்கள் கட்டளையிடலாமே!” என்று கேட்டேன். உடனே, அல்லாஹ் பர்தா (சட்டம்) குறித்த வசனத்தை அருளினான். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. ஆகவே, அவர்களிடம் நான் சென்று, “நீங்கள் ளநபி (ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதைன நிறுத்திக்கொள்ள வேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர்களை (உங்களுக்கு) பதிலாகத் தருவான்” என்று சொன்னேன். இந்நிலையில் அவர்களுடைய துணைவியரில் ஒருவரிடம் நான் சென்ற போது, “உமரே! தம்முடைய துணைவியருக்கு உபதேசம் செய்ய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்!” என்று கேட்டார். அப்போது அல்லாஹ், “இறைத்தூதர் உங்களை விவாக விலக்குச் செய்துவிட்டால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிமான துணைவியரை (உங்களுக்கு பதிலாக) அல்லாஹ் அவருக்கு வழங்கலாம்” எனும் (அல்குர்ஆன்: 66:5) ➚ஆவது) வசனத்தை அருளினான்.
(புகாரி: 4483)
அல்லாஹ் உமரின் நாவில் பேசுகிறான். என்று அவர்களுக்கு நற்சான்று கூறினார்கள்.
இறைவனின் கருத்துக்கு இசைவாக பேசக் கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களும் உமர் (ரலி) அவர்களைப் நபி (ஸல்) அவர்கள் பாரட்டுகிறார்கள்
மற்றொரு சந்தர்ப்பத்தில்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக் கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் அவர்கள் தாம்.
இறைவனிடம் இருந்து செய்திகள் உள்ளத்தில் போடக்கூடியவர்கள் முந்தைய சமுதாயத்தில் இருந்தார்கள். என்னுடைய சமுதாயத்தில் அப்படி ஒருவர் இருப்பாரையானால் அவர் உமராகத்தான் இருப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறு சரியாக நடக்கக் கூடிய ஒருவர் தடுமாறிக் கூறுகிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்கள் மரணிக்க வில்லை. முதல் கொள்கைக் குழப்பமாக அல்லாஹ்வின் தூதர் என்பது ஒரு சாதாரண அந்தஸ்தா அவர் எப்படி மரணிப்பார்? பெண்களில் அறிவுச் சுடர் என்றால் ஆயிஷா (ரலி) அவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு நிகரான ஒரு அறிவைப் பெற்ற ஒரு பெண்னை அவர்கள் காலம் முதல் இன்று வரைக்கும் இஸ்லாமிய வரலாற்றில் பார்க்க முடியவில்லை அந்த அளவுக்கு கூர்மையாக சின்னச் சின்ன நுணுக்கமான விசயங்களை எல்லாம் கவனித்து தீர்பளிக்கக் கூடியவராக இருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான்லி நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான்லி தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபிலிஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள் என்று சொன்னார்கள்.
அறிவில் சிறந்த ஆயிஷா (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறு கூறுகிறார்கள். அந்த சந்தர்பத்தில் அபூ பக்கர் (ரலி) அவர்கள் வருகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் போர்வையால் போர்த்தப்பட்டு இருந்தார்கள். அந்த போர்வை விலக்கி நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் முத்தமிடுகிறார்கள். பிறகு சொன்னார்கள். தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். அழகான வார்த்தையைச் சொன்னார்கள் மக்கள் அனைவர்களும் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்ற ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களை நோக்கிப் பேசுவது போல் பேசுகிறார்கள். அவருடைய நோக்கம் அதுவாக இருக்க வில்லை பிறகு மக்களின் பக்கம் வந்து என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டான்” மக்களின் ஒரு சாராரின் நிலைப்பாடு இப்போது எழுந்து விடுவார்கள் அதன் பின்னர்தான் மரணிப்பார்கள். என்று நினைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்று உமர் (ரலி) அவர்களும் மரணித்து விட்டாலும் மீண்டும் எழுந்து விடுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களின் நிலைப்பாடாக இருந்து. அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட் டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந் தாரோ அவர் “அல்லாஹ் (என்றும்) உயிராயி ருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.
அபூ பக்கர் (ரலி) அவர்களின் வாழ்நாளில் முன்னர் முஹம்மத் என்று மற்ற மனிதர்களைப் பெயர் சொல்லி அழைப்பது போன்று நபியர்வர்களை பெயர் சொல்லி அழைத்ததில்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் முஹம்மத் என்று வேற்று மனிதனை அழைப்பது போன்று அழைத்துக் கூறுகின்றார்கள். இதற்குரிய காரணம் அந்த மக்கள் அல்லாஹ்வின் அந்தஸ்த்தில் நபி (ஸல்) அவர்களை வைக்கப் பார்க்கிறார்கள் இதை இப்படியே விட்டு வைத்து விட்டால் நிலமை பாரதூரமானதாகச் சென்று விடும். இதை முளையிலே கிள்ளி எறிந்து விட வேண்டும் என்பதற்காக வேண்டியே இப்படி நபிகளாரைப் பெயர் சொல்லி அழைத்தார்கள். மரணிக்காமல் உயிருடன் இருந்தல் என்பது இறைவனுக்குரிய தன்மையாகும். அந்தத் தன்மையை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு நீங்கள் கொடுத்து விடாதீர்கள் அவர்கள் மரணிக்க வில்லையென்று நீங்கள் சொன்னால் அவரை அல்லாஹ்வாக்கி விட்டீர்கள் என்பதுதான் அதனுடைய அர்த்தமாகி விடும் எனவே அல்லாஹ் என்றும் நித்திய ஜீவன் அவனுக்கு மரணம் என்பது கிடையாது ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் அவருக்கு மரணம் என்ற ஒன்று இருக்கின்றது அந்த நிலையைத் தான் அவர்கள் இப்போது அடைந்துள்ளார்கள் என்று மக்களுக்கு எச்சரித்து விளக்கிக் கூறுகின்றார்கள். மக்கள் யாரிடமும் அவர்கள் சண்டையிடவில்லை அல்லாஹ்வின் வேதத்தில் இருந்து இரண்டு வசனங்களை எவ்வாறு ஓதிக் காட்டினார்கள் என்பதை பின்வரும் செய்தி நமக்கு தெளிவு படுத்துகின்றது.
இன்னும் வளரும்