17) ஃபலக் விளக்கவுரை-3
நாம் திருக்குர்ஆனில் உள்ள சின்னஞ்சிறிய அத்தியாயங்களுக்கு விரிவுரையைப் பார்த்து வருகிறோம். அந்தத் தொடரில் நபியவர்களுக்கு யூதர்களால் சூனியம் வைக்கப்படுவதாகச் சொல்லப்படும் செய்தி, குர்ஆனிலுள்ள பல்வேறு வசனங்களுக்கு நேரடியாக முரண்படுவதாலும், அது சம்பந்தமாக அறிவிக்கப்படுகிற செய்திகளில் பல்வேறு முரண்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாலும் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தி சரியானதாக இல்லை. ஒரு மனிதரை சூனியம் செய்து அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்பது தான் இதுவரை நாம் பார்த்ததின் சாராம்சம்.
இதன் தொடர்ச்சியாக, சூனியம் சம்பந்தமாக திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயமான சூரத்துல் பகராவின் 102 வது வசனம் தெளிவாகப் பேசுகிறது. இன்று நம் காலத்தில் வாழ்கிற பெயர் தாங்கி ஆலிலிம்கள் நாங்கள் ஜின்களை அடக்கிவைத்திருக்கிறோம் என்றும் எங்களுக்கு மாயமந்திரம் தெரியும், பில்லிலிசூனியம் தெரியும் என்றும் கூறி மக்களைப் பயங்காட்டி பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அது போல் நபிகள் நாயகத்தின் காலத்தில் வாழ்ந்த யூதர்களும் அன்றைய மக்களிடத்தில், எங்களை ஏதாவது செய்தீர்களென்றால் நாங்கள் சூனியம் செய்து உங்களை வீழ்த்திவிடுவோம் என்று சொல்லிலி மாயமந்திரங்களாலும் பில்லிலிசூனியத்தினாலும் அச்சுறுத்தி வந்தனர்.
இந்த சூனியத்தை அவர்கள் எதனடிப்படையில் நியாயப்படுத்தி வந்தார்களென்றால், சுலைமான் நபியைக் காரணம் காட்டித்தான். சுலைமான் இறைமறுப்பாளராக இருக்கவில்லை; சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் தான் இறைமறுப்பாளர்களாக ஆனார்கள் என்ற சொற்றொடரில் இருந்து இதை நாம் அறியலாம். சுலைமான் நபி மூலமே எங்களுக்கு சூனியம் வந்தடைந்த்து என்று கூறுவோருக்கு மறுப்பாக சூனியம் என்பது இறை மறுப்பாகும். அதை சுலைமான நபி செய்ததில்லை என்று அல்லாஹ் அவர்களுக்கு மறுப்பு கொடுக்கிறான். சுலைமான் நபியவர்களுக்கு ஏராளமான சக்திகளை அற்புதமாக அல்லாஹ் கொடுத்திருந்தான். ஜின்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தன. காற்றை அல்லாஹ் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தான். பறவைகளும் எறும்புகளும் பேசுவதைக்கூட கேட்கிற அதிசயமான ஆற்றலையும் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்திருந்தான். இதனால் தான் யூதர்கள், தாங்கள் செய்துவந்த சூனியத்தை நியாயப்படுத்துவதற்கு சுலைமான் நபிக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட இவ்வளவு அற்புதத்தையும் ஆற்றலையும் சூனியத்தினால்தான் அவர்கள் பெற்றார்கள் என்று சொல்லிலி சூனியத்தை நியாயப்படுத்தினார்கள். நாங்களும் சுலைமான் நபி வழியாக வாழையடி வாழையாக அதைக் கற்று வருகிறோம் என்று சொல்லிலியும் வந்தனர்.
இந்த சூனியக்கலை இறைவனால்தான் நபி சுலைமான் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று மதத்தின் பெயராலேயே மக்களை நம்பவைத்தனர். இன்றும்கூட நமது சமூதாய பெயர்தாங்கி ஆலிம்கள் தகடு, தாயத்து, பில்லிலிசூனியம், பேய்பிசாசு என்பதை நம்ப வைப்பதற்கு குர்ஆன் ஹதீஸ் என்றும் நமது முன்னோர்களான பெரும்பெரும் இமாம்கள் இப்படிச் சொல்லிலித் தந்தார்கள் என்றெல்லாம் சொல்லிலி மதச்சாயம் பூசி மக்களை நம்ப வைக்கின்றனர். இதே போல் தான் யூதர்களின் நடவடிக்கைகளும் இருந்தன. மேலும் இந்த சூனியக்கலை ஜிப்ரயீல் மற்றும் மீக்காயீல் என்ற இரண்டு வானவர்கள் வழியாகத்தான் நபி சுலைமான் அவர்களுக்குக் கிடைத்தது என்றும் சொல்லிலிக் கொண்டிருந்தார்கள். இப்படி தங்களது பித்தலாட்டத்தைச் சரிக்கட்டுவதற்காக மேற்சொன்ன காரணங்களைக் கூறிக்கொண்டிருந்த யூதர்களைக் குறித்து அருளப்பட்ட வசனம்தான் அல்குர்ஆன் 2 ஆம் அத்தியாயம் 102 வது வசனம். இந்த வசனம் ஸிஹ்ரை வைத்து ஏமாற்றுபவர்கள் சம்பந்தமாகவே அருளப்பட்ட வசனம். இதில் அல்லாஹ், ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள்.
அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக்கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்துவிடாதே! என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்யமுடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா? (அல்குர்ஆன்: 2:102) ➚ சுலைமான் நபிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுவதுடன் இந்த சூனியம் எனும் பித்தலாட்டம் யாரால் கற்பிக்கப்பட்டது என்பதை அடுத்து கூறுகிறான். சூனியத்தைக் கற்றுக் கொடுத்து ஷைத்தான்கள் காபிர்களாகி விட்டனர் என்பதில் இருந்து இதை ஷைத்தான்கள் தான் கற்றுக் கொடுத்தனர் என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த இடத்தில் ஷைத்தான் என்று சொல்லப்படுவது தீய மனிதர்களைத் தான் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வீணாண காரியத்தை செய்கின்ற மனிதர்களுக்கும் ஷைத்தான் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பதை கடந்த வசனங்களில் விளக்கும் போதே சொல்லிலியிருக்கிறோம். உதாரணமாக கவிஞர்களை ஷைத்தான் என்று குர்ஆனிலும் நபிவழியிலும் பயன்படுத்துவதாகப் பார்த்தோம். மனிதனையும் ஷைத்தான் என்று சொல்வதற்கு நிறைய சான்றுகள் இருக்கிறது என்பதையும் பார்த்தோம். இதே 2 அத்தியாயமான சூரத்துல் பகராவில் மனிதனை ஷைத்தான் என்று சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறது. முனாஃபிக்குகளைப் பற்றிப் பேசுகிற வசனத்தில், கெட்ட தலைவர்களை ஷைத்தான் என்ற கருத்தில் அல்லாஹ் பயன்படுத்துகிறான். நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது நம்பிக்கை கொண்டுள்ளோம் எனக் கூறுகின்றனர்.
தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலிலி செய்வோரே எனக் கூறுகின்றனர். (அல்குர்ஆன்: 2:14) ➚ மேற்சொல்லப்பட்ட வசனத்தில் ஷைத்தான்களுடன் முனாஃபிக்குகள் தனித்திருக்கும் போது என்றால், மக்கத்து குரைஷிக் காஃபிர்களிலுள்ள கெட்ட தலைவர்களுடன் தனித்திருக்கும் போது என்று பொருள். அதற்காக ஷைத்தான் என்ற வார்த்தைக்கு எல்லா இடத்திலும் கெட்ட மனிதர்கள் என்ற பொருள் கொள்ளக் கூடாது. அதிகமான இடங்களில் ஷைத்தான் என்ற வார்த்தைக்கு அப்படியே நேரடியாக ஷைத்தான் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். குறைந்த அளவில் ஷைத்தான் என்ற வார்த்தை தீங்கிழைக்கிற மனிதர்களுக்கும் விஷ ஜந்துக்களுக்கம் பயன்டுத்தப்படும். எனவே ஷைத்தான் என்ற வார்த்தைக்கு மனித ஷைத்தான் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். இப்படி மனிதனை ஷைத்தான் என்று பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இந்த 2:102 வசனமும் ஒன்றாகும். இந்த வசனத்தில் பொதிந்துள்ள கருத்து மிகவும் கவனிக்கத்தக்க விசயமாகும். அதாவது சுலைமான் அவர்கள் இந்த சூனியக்கலையைக் கற்றுக் கொடுக்கவில்லை என்றும் அப்படி சூனியக்கலையைக் கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதுவும் குஃப்ர் (இறைவனை மறுப்பது) என்றும் அல்லாஹ் சொல்லுகிறான். குஃப்ர் என்பது சாதாரணப் பாவமில்லை. இறைவனை நிராகரிப்பதுவும் ஸிஹ்ரைக் கற்றுக் கொள்வதும் பாவத்தில் சமமானது என்கிறான். எனவே இப்படிப்பட்ட வேலையை சுலைமான் நபியவர்கள் செய்யவே மாட்டார்கள். இப்படிப்பட்ட வேலையை சுலைமான் நபியவர்கள் செய்யவே மாட்டார்கள் என்பதைக் குறிக்க மூலத்தில்
(வமா கஃபர சுலைமானு) என்று வந்துள்ளது. எனவே அவர் எப்படி நிராகரிப்பவராக இல்லையோ அவர் ஸிஹ்ரும் செய்து இருக்க மாட்டார். ஏனெனில் ஸிஹ்ர் என்பது நிராகரிப்பாகும் என்று இறைவன் இந்த வசனத்தில் சொல்கிறான். பிறகு யார் இந்த சூனியக் கலையைக் கற்றுக் கொடுத்திருப்பார் என்பதை அல்லாஹ்வே சொல்லுகிறான். சுலைமான் நபி காலத்தில் இருந்த சில கெட்ட மனிதர்கள்தான் இதைக் கற்றுக் கொடுத்தனர் என்கிறான்.
சில கெட்ட மனித ஷைத்தான்கள் என்பதைக் குறிக்க மூலத்தில்,
(வலாகின்னஷ் ஷையாதீனு கஃபரூ(வ்) யுஅல்லிமூனன்னாஸஸ் ஸிஹ்ர) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. கெட்டவர்கள்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து காஃபிராகி விட்டார்கள் என்று சொல்கிறான். எனவே இந்த வசனத்தின் மூலம் இறைவன் நமக்குச் சொல்லும் செய்தி, ஸிஹ்ர் என்ற சூனிய வித்தைக்கும் சுலைமான் நபியவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மாறாக, சில ஷைத்தான்கள் காலங்காலமாக சொல்லிலிக் கொடுத்து விட்டார்கள். அதற்கு மார்க்கத்தின் அங்கீகாரம் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி சூனியத்தைச் செய்து வருகிறார்கள். எனவே இதிலிலிருந்தே இந்த வசனத்தில் ஷைத்தான் என்ற வார்த்தைக்கு மனித ஷைத்தானைத் தான் குறிக்கிறது என்பது விளங்குகிறது. எப்படியெனில், ஸிஹ்ரைக் கற்றுக் கொடுத்ததின் மூலம் ஷைத்தான்கள் காஃபிராகி விட்டார்கள் என்கிறான்.
ஆனால் உண்மையில் ஷைத்தான் ஸிஹ்ரைக் கற்றுக் கொடுத்துத்தான் காஃபிராக வேண்டும் என்பதில்லை. அவன் ஏற்கனவே காஃபிராகத்தான் இருந்து கொண்டிருக்கிறான். அப்படியெனில் ஸிஹ்ரைக் கற்றுக் கொடுத்துத்தான் காஃபிராக மாறி விட்டனர் என்று அல்லாஹ் சொல்வதின் மூலம், இந்த இடத்தில் ஷையாதீன் என்ற வார்த்தை மனிதர்களிலுள்ள கெட்டவர்களைக் குறிப்பதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். ஆக, நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த யூதர்கள், சுலைமான் நபி காலத்தில் கெட்டமனிதர்கள் சொல்லிலிக் கொடுத்த சூனியத்தை சுலைமான் நபியுடன் பொய்யாகச் சம்பந்தப்படுத்தி தங்களது சுயநலத்தை அடைந்து கொண்டிருந்தனர். அதனால்தான் அல்லாஹ் சுலைமான் நபி மறுப்பவராக இல்லை என்று யூதர்களுக்குச் சம்மட்டி அடிகொடுத்து யூதர்கள் சுலைமான் நபி மீது சொன்ன பொய்க்காரணத்தைக் களைகிறான். அதற்கடுத்ததாக இறைவன்,
(வமா உன்ஸில அலல் மலக்கைனி) என்று சொல்லுகிறான். இந்த வசனத்தில் இறைவன் மலக்கைனி என்று பயன்படுத்துகிறான். மலக் என்றால் அரபி மொழியில் ஒரு வானவர் என்று அர்த்தம். அல்மலக்கைனி என்றால் அந்த இரண்டு வானவர்கள் என்று அர்த்தம். எல்லா மொழியிலும் ஒருமை பன்மை மட்டும்தான் இருக்கும். ஆனால் அரபி மொழி போன்ற ஒருசில மொழிகளில் மட்டும் ஒருமை, இருமை, பன்மை போன்ற மூன்று வார்த்தை அமைப்பு உள்ளது. அதாவது ஒரு மனிதனைக் குறிப்பதற்கு ஒரு வார்த்தை, இரண்டு மனிதர்களைக் குறிப்பதற்கு வேறு ஒரு வார்த்தை, இரண்டுக்கு மேலுள்ள மனிதர்களைக் குறிப்பதற்கு வேறு ஒருவார்த்தை. ஆனால் தமிழில் மனிதன்லிமனிதர்கள் பேனாலிபேனாக்கள், கழுதைலிகழுதைகள், குதிரைலிகுதிரைகள் என்று சொல்கிறோம். ஆங்கிலம் உட்பட பலமொழிகளிலும் இப்படித்தான் உள்ளன. ஆனால் அரபு மொழியில் மலக் (மலக்குன்) லி ஒரு வானவர், மலக்கானி அல்லது மலக்கைனி லி இரண்டு வானவர்கள், மலாயிகத்து லி பல வானவர்கள் என்று அர்த்தம். இப்படி ஒருமைக்கும் இருமைக்கும் பன்மைக்கும் தனித்தனியான வார்த்தை அமைப்பைக் கொண்ட மொழி அரபுமொழி. எனவே இந்த அடிப்படையில் மேற்சொன்ன வசனத்தில், மலக்கைனி என்று இருமையாக வந்துள்ளதால் இரண்டு வானவர்கள் என்று மொழி பெயர்க்க வேண்டும். அதுவும் வெறுமனே மலக்கைனி என்று வராமல் மலக்கைனி என்ற வார்த்தைக்கு முன்னால் அல் (ஒரு அலீஃப் மற்றும் ஒரு லாம் சேர்ந்தது) என்ற வார்த்தை வந்துள்ளது. இப்போது இன்னொரு அரபிமொழி இலக்கணத்தையும் இந்த இடத்தில் சொன்னால் தான் சரியாக இந்த வசனத்தின் வார்த்தை அமைப்பைப் புரிந்து கொள்ள முடியும். அரபி மொழியில் ஒரு பெயர்ச்சொல் வார்த்தைக்கு முன்னால் அல் (ஒரு அலீஃப் மற்றும் ஒரு லாம் சேர்ந்தது) என்ற இரண்டு எழுத்துக்களைச் சேர்த்தால், அந்த என்ற அர்த்தத்தைச் சேர்த்து பெயர்ச்சொல் பொருள் தரும். உதாரணமாக மலக் என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளலாம். மலக் ஒரு வானவர். மலக்கைனி லி இரண்டு வானவர்கள். அல் மலக்கைனி அந்த இரண்டு வானவர்கள் என்று பொருள்வரும். இதே போன்று வேறொரு வார்த்தையையும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
கிதாப் என்றால் ஒருபுத்தகம். அல் கிதாப் என்றால் அந்தப் புத்தகம் என்று அர்த்தம். அது என்ன அந்தப் புத்தகம்? என்று சொன்னால், நேற்று பேசிக் கொண்டிருந்தோமே அல்லது காலையில் பேசிக் கொண்டிருந்தோமே அந்தப் புத்தகம் என்று அர்த்தம். அதாவது ஏதேனும் ஒரு புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே பேசிக் கொண்டிருந்து மறுபடியும் அதே புத்தகத்தைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் அல்கிதாப் என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும். முதல் தடவை சொல்லும் போது வெறுமனே கிதாப் என்கிற வார்த்தையை மட்டும் சொன்னால் போதுமானது. இரண்டாம் முறை அதைப் பேசவேண்டுமானால் அல்கிதாப் என்று சொல்ல வேண்டும். இப்போது மீண்டும் இந்த வசனத்தில் இறைவன் பயன்படுத்தும் வார்த்தையைப் பிரயோகத்தைப் பாருங்கள். அலா மலக்கைனி என்று இறைவன் சொல்லவில்லை. அலல் மலக்கைனி லி அலா அல்மலக்கைனி என்று இறைவன் பயன்படுத்துகிறான்.
இப்போது அந்த வசனத்திலுள்ள தனித்தனி வார்த்தைகளின் பொருளை தெரிந்து கொண்டு பிறகு சேர்த்தால் தெளிவாகிவிடும். வமா உன்ஸில அருளப்படவில்லை அலா+அல்+மலக்கைனி = அலல் மலக்கைனி லி அந்த இரு வானவர்கள் மீது அந்த இரு வானவர்களின் மீது (இந்த ஸிஹ்ர் என்ற சூனியக்கலை) அருளப்படவில்லை என்று அல்லாஹ் சொல்லுகிறான். அந்த இரு வானவர்கள் என்றாலேயே ஏற்கனவே சொல்லப்பட்ட வானவர்களா என்று அந்த வசனத்திற்கு முன்னால் சென்று பார்க்க வேண்டும். அப்படி முன்னால் சென்று பார்த்தால், இந்த வசனத்திற்கு நான்கைந்து வசனங்களுக்கு முன்னால் ஜிப்ரயீலையும் மீக்காயிலையும் பற்றிப் பேசுகிறான். யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார். இது, தனக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்தக் கூடியதாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் உள்ளது என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 2:97-98) ➚
இந்த வசனங்களுக்குப் பின்னால்தான் ஸிஹ்ர் சம்பந்தமான வசனம் வருகிறது. மேற்சொன்ன வசனங்களில் ஜிப்ரயீல் மீக்காயீல் என்ற இரண்டு வானவர்களைப் பற்றி கூறுவதால், அந்த இரண்டு மலக்குகளுக்கும் சூனியம் இறக்கியருளப்படவில்லை என்ற வாசகம் ஜிப்ரயீலையும் மீக்காயிலையும் தான் குறிக்கிறது. ஆனால் சிலர், இந்த வசனத்தில் அல்மலக்கைனி என்பது அதற்குப் பின்னால் வருகிற ஹாரூத்,மாரூத் என்ற இரண்டு பேரைத்தான் குறிக்கும் என்று வாதிடுகின்றனர். அப்படி பொருள் செய்ய இலக்கணப்படி இடமிருந்தாலும் இவ்வாறு பொருள் கொள்ளும் போது மலக்குகள் சிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்ற கருத்து வரும். ஆனால் ஸிஹ்ர் என்பது இறைமறுப்பு என்று சொன்ன இறைவன் அதற்கும் சுலைமான் நபிக்கும் சம்மந்தம் இல்லை என்றும் சொன்ன் இறைவன் அதையே மலக்குகளுடன் சம்மந்தப்படுத்த மாட்டான். இந்த வசனத்தில், சுலைமான் நபிக்கும் சூனியக்கலை என்ற பித்தலாட்டத்திற்கும், ஜிப்ரயீல் மீக்காயீல் என்ற இருவானவர்களுக்கும் இந்தப் பித்தலாட்டத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று இரண்டு விசயங்களை இறைவன் மறுக்கிறான். எனவே ஷைத்தான் சொன்ன பேச்சைக் கேட்டுக் கொண்டு ஏமாந்து ஸிஹ்ரை நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்று இறைவன் சொல்லுகிறான்.
நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக யூதர்கள்தான் சொல்லிலிக் கொண்டிருந்தார்கள் என்று பல்வேறு அறிவிப்புக்களில் ஹதீஸ்கள் வருகிறது. அவைகள் சரியில்லாதவைகள் என்பதைத்தான் இந்த வசனமும் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. மலக்கு விசயத்தை முடித்ததற்குப் பின்னால், ஷைத்தானைப் பற்றியும் இறைவன் அந்த வசனத்தில் பேசுகிறான். ஹாரூத், மாரூத் என்ற இரண்டு ஷைத்தான்கள்தான் மக்களுக்கு சூனியக்கலையைக் கற்றுக் கொடுத்தனர் என்று இறைவன் சொல்லுகிறான். இந்த வசனத்தில் வருகிற ஷைத்தான்கள் என்றால், நிஜமான உண்மையான ஷைத்தான் இல்லை. மாறாக இதை ஓதினால் இப்படி நடக்கும், அதை ஓதினால் அப்படி நடக்கும் என்று சொல்லிலி மக்களைப் பயங்காட்டுவதற்காக, ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மனித ஷைத்தான்கள்தான் இந்த சூனியத்தைப் பரப்பினார்கள் என்று அல்லாஹ் சொல்லுகிறான். இன்னும் சிலர், ஹாரூத் மாரூத் ஆகிய இருவரும் மலக்குகள்தான் என்ற வாதத்தை வைக்கின்றனர். அப்படியெனில் மலக்குமார்கள் பாவம் செய்வார்கள் என்றாகிவிடுமே? ஆனால், மலக்குமார்கள் இறைவனின் கட்டளைப்பிரகாரம் நடப்பவர்கள், ஒருபாவமும் அறியாதவர்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்லிலியிருக்க, அவர்கள் எப்படி இறை மறுப்பான சூனியத்தைக் கற்றுக் கொடுப்பார்கள் என்ற நியாயமான கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதினால், ஹாரூத் மாரூத் ஆகிய இருவரையும் வைத்து மலக்குமார்களாகச் சித்தரித்து ஒருகட்டுக்கதையைப் புனைந்துள்ளனர். . இவ்வளவு பாவம் செய்கிற மனிதனை ஏன் படைத்தாய்? அவர்கள் உலகத்தை வீணடிக்கிறார்களே! நீ ஏன் அவர்களின் மீது கருணை காட்டுகிறாய்? என்றெல்லாம் மலக்குமார்கள் இறைவனிடம் சவால் விட்டார்களாம். உடனே அல்லாஹ் கேள்விகேட்ட மலக்குமார்களைப் பார்த்து, அவர்களைப் போன்று உங்களைப் படைத்தால், நீங்கள் அவர்களை விடவும் அதிகமாகத் தவறிழைப்பீர்கள் என்று அல்லாஹ் சொன்னானாம். மலக்குமார்களுக்கும் மனிதனுக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால், நமக்கு ஆசாபாசங்கள் இருக்கிறது, மலக்குகளுக்கு அது கிடையாது. அதேபோன்று நமக்கு சுயமாகச் சிந்திக்க ஆற்றலும் சுயமாகச் செயல்படுகிற ஆற்றலும் இருக்கிறது. ஆனால் இது மலக்குமார்களுக்குக் கிடையாது. உதாரணமாக, அல்லாஹ் மலக்குகளைப் பார்த்து குனிந்து நில் என்று கட்டளை போட்டால் உடனே குனிந்து விடுவார்கள். பிறகு அல்லாஹ்வே, நிமிர்ந்து நில் என்று சொல்லும்வரை குனிந்தே நிற்பார்கள். ஒரு இலட்சம் வருசம் வரை வேண்டுமானலும் குனிந்தே நிற்பார்கள்.
ஆனால் மனிதனிடத்தில் அதே கட்டளையைச் சொன்னால், எவ்வளவு நேரத்திற்கு என்று கேட்போம். அப்படியே குனியும் போது கேட்காவிட்டாலும், குனிந்து சிறிது நேரம் கழித்த பிறகாவது இப்படியே எவ்வளவு நேரத்திற்கு நிற்க வேண்டுமென்று கேட்டுவிடுவோம். எனவே மலக்குகளைப் பொறுத்தவரை சொன்னவுடனே செய்து விடுவார்கள். மறு பேச்சுக்கோ மறு பரிசீலனைக்கோ இடமே இல்லை. ஆனால் மனிதன் அப்படிப்பட்டவனாக இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். சரி! கட்டுக் கதையைத் தொடருவோம். ..தவறிழைப்பீர்கள் என்று அல்லாஹ் சொன்னானாம். அப்படிச் சொல்லிலிவிட்டு, கேள்விகேட்ட மலக்குமார்களுக்கு, நான் உங்களை வேறு மாதிரி படைத்துள்ளேன். உங்களுக்குச் சுயமாக சிந்திப்பதற்கோ முடிவு எடுப்பதற்கோ நல்லது கெட்டதை ஆய்வு செய்து நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது போன்ற சுபாவங்கள் உங்களுக்குக் கிடையாது. நான் எப்படி உங்களைப் படைத்து வைத்திருக்கிறேனோ அப்படியே போய்க்கொண்டிருப்பீர்கள். ஆனால் மனிதனை நான் அப்படியா படைத்துள்ளேன்? அவனுக்கு அறிவு என்று ஒன்றைக் கொடுத்துள்ளேன்.
அவன் நினைத்தால் நல்வழியிலும் நினைத்தால் தீயவழியிலும் போகலாம் என்கிற மாதிரி படைத்துள்ளேன். இப்படிப் படைத்திருக்கும் போது அவன் தவறுகள் செய்யத்தானே செய்வான் என்று அல்லாஹ் பதில் சொன்னானாம். உடனே அந்த மலக்குகள் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வேண்டுமானால் மனிதர்களைப் போன்று எங்களுக்கும் ஆசாபாசத்தையும் சிந்திக்கிற ஆற்றலையும் தந்து மனிதர்களின் உலகத்திற்கு அனுப்பிப் பார். நாங்கள் ஒன்றும் கெட்டு விடமாட்டோம் என்று இறைவனிடம் சவால் விட்டார்களாம். உடனே அல்லாஹ், மலக்குமார்களைப் பார்த்து உங்களிலேயே சிறப்புமிக்க இரண்டு மலக்குமார்களை அழைத்து வாருங்கள். அவர்களை சோதனைக்காக அனுப்பி வைப்போம் என்றானாம். உடனே மலக்குமார்கள் அதிக வணக்கசாலிலியாக இருந்த இந்த ஹாரூத் மாரூத் ஆகிய இருவரையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்களாம். உடனே அல்லாஹ். இந்த இரண்டு பேருக்கும் மனிதர்களுக்குள்ள எல்லாத் தன்மைகளையும் கொடுத்து பூமிக்கு அவர்களை அனுப்பிவைத்து விட்டானாம்.
இவர்கள் வான் உலகத்திலிலிருந்து வந்ததினால் இவர்களுக்கு அங்குள்ள (வானத்தில்) சில விசயங்கள் தெரியுமாம். வானத்திலுள்ள ஸஹ்ரா என்ற நட்சத்திரத்தை அல்லது விடிவெள்ளியைப் பெண்ணாக மாற்றி அவர்களிருவரிடமும் இறைவன் அனுப்பினானாம். அப்பெண்ணைப் பார்த்தவுடன் இவர்கள் இருவருக்கும் ஆசை ஏற்பட்டு அவளை அடைய முற்பட்டார்களாம், அப்பெண் அவர்களிடம், என்னை நீங்களிருவரும் அடைய வேண்டுமானால் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாளாம். அதற்கு அவர்களிருவரும் அதெல்லாம் முடியவே முடியாது என்று சொல்லிலிவிட்டார்களாம். பிறகு அடுத்த நாள் அந்தப் பெண் ஒரு குழந்தையுடன் சென்றாளாம். அப்போதும் இருவரும் அவளை அடையவேண்டுமென ஆசைப்பட்டு நெருங்கினார்களாம், அப்பெண் நீங்களிருவரும் இந்தக் குழந்தையைக் கொன்றால் என்னை அடையலாம் என்றாளாம். அதற்கு அவ்விருவரும் நாங்கள் அல்லாஹ்வுக்கு இணையும் கற்பிக்க மாட்டோம், கொலையும் செய்யமாட்டோம் என்றார்களாம். மூன்றாவது நாள் அப்பெண் கையில் மதுக்குவளையுடன் வந்து என்னை அடைய வேண்டுமானல் நீங்கள் இந்த மதுவைக் குடிக்க வேண்டும் என்றாளாம். உடனே இருவரும் மது குடித்தார்களாம். போதை தலைக்கு ஏறியவுடன், அல்லாஹ்வுக்கு இணையும் கற்பித்து, அக்குழந்தையையும் கொன்று, அவளுடன் தவறான பாலிலியல் உறவு கொண்டார்களாம். இதனால் இறைவன் அவர்களிருவரையும் தண்டிப்பதற்காக அவர்களிடம், உங்களுக்கு மறுமையில் தண்டனை தரட்டுமா? அல்லது இம்மையிலேயே தண்டனை தரட்டுமா என்று கேட்டானாம். அதற்கு அவர்களிருவரும் இந்த உலகத்திலேயே தண்டனையைத் தந்துவிடு அல்லாஹ்வே! என்று சொன்னதினால், அவர்களிருவரையும் தலைகீழாகக் கட்டி ஒருகிணற்றில் தொங்க விட்டு விட்டானாம்.
இன்றுவரை அவர்கள் கிணற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறார்களாம். மேலும் இப்படியே கியாம நாள்வரை அந்தக் கிணற்றிலேயே தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பார்களாம். இதுதான் ஹாரூத் மாரூத் ஆகிய இருவரையும் பற்றிய கடைந்தெடுத்த கட்டுக்கதை. இந்தக் கதையைத்தான் தப்ஸீர்கள் என்ற பெயரில் சில கிரந்தங்களில் எழுதி வைத்துள்ளனர். அதிலிலிருந்து காப்பியடித்து நம்மிடம் சொல்லுகிறார்கள் இந்த பெயர்தாங்கி ஆலிலிம்கள். இந்தக் கதைக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? நபியவர்கள் இப்படி இந்தச் செய்தியைச் சொன்னதாக அறிவிப்பாளர் தொடர் வரிசையுடன் அறிவிக்கப்பட்டுள்ளதா? ஒன்றுமில்லை. எவனோ ஒருவன் அடித்துவிட்ட இந்தக் கப்ஸாவை வைத்துக் கொண்டு, ஹாரூத் மாரூத் மலக்குகள் என்கின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இந்தக் கதையில் வருகிறதைப் போன்று நட்சத்திரத்தைப் பெண்ணாக மாற்றுவதெல்லாம் புராணங்களில் உள்ளதைப் போன்று இருக்கிறது. இப்படியெல்லாம் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டக்கூடாது. அல்லாஹ் களிமண்ணால் மனிதனைத் தனிப் படைப்பாகத்தான் படைத்துள்ளான். மலக்குகளைப் பொறுத்தவரை, அவர்களின் தன்மைகளை மாற்றி அல்லாஹ் அனுப்ப மாட்டான். இறைவனால் மாற்றமுடியாது என்பதற்காகச் சொல்ல வரவில்லை. மாறாக இறைவன் அப்படி செய்தமாதிரி ஒருஆதாரப் பூர்வமான செய்தியும் இல்லை. மேலும் நபியவர்கள் பிரச்சாரம் செய்த சமூக மக்கள், மலக்குமார்களை அல்லாஹ் தூதராக அனுப்ப வேண்டியதுதானே என்றெல்லாம் கேட்டுப் பார்த்தார்கள். அதற்கு அல்லாஹ் அப்படி மலக்குமார்களைத் தூதராக அனுப்ப மாட்டான் என்று பதில் சொல்லச் சொல்லுகிறான். இந்தச் செய்தியை மறைகூறும் இறைத்தூதர்கள் என்ற தலைப்பில் நபிமார்களின் இலக்கணத்தில் விரிவாகப் விளக்கியுள்ளோம். எனவே மேற்சொன்ன கதை கட்டுக்கதை. ஹாரூத் மாரூத் என்பவர்கள் மலக்குமார்களாக இல்லை.
ஹாரூத் மாரூத் என்ற இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் சில தந்திரங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு, அந்த வித்தையைப் பிறமக்களுக்குச் சொல்லிலிக் கொடுத்தார்கள் என்பது மேற்சொன்ன வசனத்திற்கு அர்த்தமாகும். பி பாபில ஹாரூத வமாரூத் லி பாபில் என்ற நகரத்தில் இரண்டு ஷைத்தான்கள் தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்று சொல்லுகிறான். இதன்மூலம் மலக்குமார்களுக்கும் சூனியத்திற்கும் சம்பந்தமில்லை என்றும், அது இறைவன் புறத்திலுள்ளது இல்லை என்பதையும் இறைவன் மறுத்து விடுகிறான். மக்களை ஏமாற்றுவதற்காக இவர்களால் உருவாக்கப்பட்டது என்பதையும் சொல்லிலி இந்த வசனத்தைத் துவக்குகிறான்.
லி நாங்கள் சோதனையாக இருக்கிறோம். எனவே எங்களை மறுத்து விடாதீர்கள் என்று சொல்லாமல் எவருக்கும் அவர்களிருவரும் (சூனியத்தைக்) கற்றுக் கொடுப்பதில்லை. எனவே எவர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தாலும், நாங்கள் சோதனையாக இருக்கிறோம் என்பதைச் சொல்லிலி பயமுறுத்தித்தான் கற்றுக் கொடுப்பார்கள் என்று அல்லாஹ் சொல்லுகிறான். இப்படித்தான் ஒவ்வொரு வித்தைக்காரனும், இது பயங்கரமான விசயம். ஒரு வார்த்தையை மாற்றிச் சொன்னால் உன்னையே மாற்றி அடித்துவிடும் என்றெல்லாம் மக்களிடத்தில் எதையாவது ஒன்றைச் சொல்லிலி பயமுறுத்துவார்கள்.
இதுபோன்று தான் அந்தக் காலத்திலிலிருந்து இந்தக் காலம் வரை சூனியம் செய்பவர்கள் மக்களைப் பயமுறுத்தியும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்துகிறான். அதற்கடுத்ததாக,
லி (இதன் மூலம்) ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் எவ்வாறு பிரிப்பது என்பதை அவர்களிருவரிடமிருந்தும் கற்றுக் கொண்டார்கள். என்று அல்லாஹ் கூறுகிறான். கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிப்பதைத்தான் இந்த சூனியத்தின் மூலம் செய்யமுடியும் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டு, அடுத்ததாக,
அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் இவர்களால் யாருக்கும் எந்தத் தீங்கையும் செய்யமுடியாது. என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிலிக்காட்டுகிறான். அல்லாஹ்வின் அனுமதி என்றால், விதியில் இருந்தாலே தவிர எவர்களுக்கும் எந்தத் தீங்கும் செய்யவே முடியாது என்று சொல்லு கிறான். இப்படி இறைவன் சொல்வதின் மூலம், சூனியம் என்பது வெறுமனே பொய் என்று உறுதியாகி விடுகிறது. ஆனால் சூனியத்தின் மூலம் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்திவிடலாம், மாயமந்திரத்தின் மூலம் வஸியம் செய்துவிடலாம் என்று நினைத்தே அதைக் கற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தாலே தவிர எந்த ஒன்றையும் இவர்களால் செய்யவே முடியாது என்பதை இறைவன் தெள்ளத்தெளிவாக விளக்கி விட்டான். அப்படியெனில் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட விதியின் மூலம் உண்மையிலேயே கணவன் மனைவி பிரிவதை சிலர் சூனியத்தின் மூலம் நடந்ததாக நம்பிக் கொண்டு சூனியம் இருப்பது உண்மை என்று வாதிடுகிறார்கள். இதனால் ஏதாவது செய்யமுடியுமா? என்றால் முடியவே முடியாது என்று அல்லாஹ் சொல்லுகிறான். அதற்கடுத்தாக
மேலும் தங்களுக்கு எந்தத் தீங்கும் நன்மையும் செய்து கொள்ள முடியாததைக் கற்றுக் கொள்கிறார்கள். இப்படி சூனியத்தை வைத்து பிறருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்திட முடியாது என்பதோடு இதனைக் கற்றுக் கொள்பவர்களுக்குத்தான் இது கேடானது என்றும் சொல்லுகிறான். இதனால் எந்த நன்மையும் இல்லை என்றும் சொல்லுகிறான். இந்த வசனத்தில் சூனியம் இறைவனிடத்திலிருந்து வந்தது என்பதையும் மறுக்கிறான். சூனியத்திற்கும் சுலைமான் நபிக்கும், சூனியத்திற்கும் மலக்குமார்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதையும் மறுக்கிறான்.
மேலும் இந்த சூனியத்தின் மூலம் எந்த ஒன்றையும் செய்யமுடியாது என்று சொல்லிலி சூனியத்தையும் மறுக்கிறான். இந்த சூனியத்தின் மூலம் எவரது கைகால்களையாவது முடக்கமுடியுமா? ஒருவரை மெண்டலாக்க முடியுமா? ஒருவருக்குப் பிள்ளை இல்லாமல் ஆக்கிவிட முடியுமா? ஒருவரை நோயாளியாக ஆக்கிவிட முடியுமா? ஒன்றுமே முடியாது என்கிறான் அல்லாஹ். அல்லாஹ் தனது விதியில் ஏதேனும் தீங்கு நேரவேண்டும் என எழுதியிருந்தால் மட்டுமே தீங்கு ஏற்படும். ஆனால் சூனியத்தின் மூலம் ஒருவருக்குக்கூட எந்தத் தீங்கும் ஏற்படாது. இந்த வசனத்தில் சூனியத்தின் மூலம் ஒருவருக்குக்கூட கேடு செய்ய முடியாது என்று இறைவன் சொன்ன வார்த்தை என்னையும், உங்களையும், ஏன் உலகத்தில் இருக்கிற எல்லோரையும் குறிக்கும். அற்பத்திலும் அற்பமானவர்களையெல்லாம் அது குறிக்கும். அதுவும் ஈமான் கொள்ளாத மனிதர்களையும் குறிக்கும். அப்படியிருக்கும் போது, நபிகள் நாயகம் அவர்கள் அந்த வார்த்தையினுள் வரமாட்டார்களா? எவருக்கும் என்ற வார்த்தைப் பிரயோகம் நபியவர்களையும் சேர்த்துத்தான் குறிக்கிறது. இந்தச் சாதாரண அறிவுகூட சூனியத்தை ஆதரிப்பவர்களுக்கு இல்லையே! நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியை ஆராய்ந்து பார்த்தால், நபியவர்கள் பல நாட்கள் மறதியாளராக இருந்ததாகவும், தான் செய்த காரியத்தைச் செய்யவில்லை என்றும் சொல்லிலியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நபியவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு மதியிழந்தவர்களாக நபிகளாரைச் சித்தரிக்கப் பார்க்கிறார்கள். இதனை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
எனவே முஹம்மது நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வருகிற செய்திகள் (அல்குர்ஆன்: 2:102) ➚ ஆகிய இந்த வசனத்துடன் நேரடியாக மோதுகிறது.
இதை (சூனியத்தை) விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை> என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.
லி தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா? இந்த வசனத்தில் அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள் என்றால், அவர்கள் என்பது யூதர்களைக் குறிப்பதாகும். இந்த வசனத்தில் இறைவன் சொல்வது இதுதான். ஸிஹ்ர் லி சூனியம் என்பது பெரும்பாவம். இந்தப் பாவத்தை எந்த நபியும் செய்ய மாட்டார்கள் என்றும் வானவர்களும் சூனியம் என்ற பெரும்பாவத்தைட் செய்ய மாட்டார்கள். மூன்றாவதாக, ஸிஹ்ர் லி சூனியத்தினால் யாருக்கும் எதனையும் செய்யவே முடியாது என்றும் சொல்லுகிறான். அது பொய் என்றும் உறுதிப்படுத்துகிறான். நான்காவது, யார் இதனை நம்புகிறாரோ செய்கிறாரோ அவரது மறுமை வாழ்க்கையும் நாசமாகிவிடும் என்றும் அல்லாஹ் சொல்லுகிறான். அப்படியெனில், இன்று வாழக்கூடிய ஆலிம்களில் அதிகமானவர்கள் சூனியத்தை உண்மையென்றும், அது வைக்கப்பட்டால் முட்டையை ஓதிவைக்க வேண்டும், வெற்றிலையில் எழுதிக் குடிக்க வேண்டும், அந்தப் பரிகாரம் இந்தப் பரிகாரம் என்றெல்லாம் பொய்புரட்டுகளைச் சொல்லிலி மக்களை ஏமாற்றுபவர்களின் மறுமை வாழ்க்கை பாழாகிவிடும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை என்பதை உணர வேண்டும்.
எனவே மாயமந்திரம், சூனியம், தாயத்து, தல்ஸமாத் போன்றவைகள் எதுவுமே இஸ்லாத்தில் இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் உங்களால் சூனியத்தினால் ஏதாவது செய்ய முடியும் என்றால், எனக்கு எனது கால்கைகளை சூனியத்தினால் முறித்துப் பாருங்கள் என்று கடந்த 30 வருடங்களாக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சூனியம் உண்மை என்பவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கத்தானே செய்கிறோம். இப்போதும் சவால் விடுகிறோம். எனக்குச் செய்வினை வைப்பதற்கு எனக்குச் சொந்தமான எனது தலைமுடி, காலடிமண், சட்டை, வியர்வை சம்பந்தமான….. இப்படி எதை வேண்டுமானாலும் தருகிறேன். உங்களால் எனக்குச் செய்வினை மூலம் ஏதேனும் ஒன்றை செய்து காட்ட முடியுமா? மத்ஹப்வாதிகளின் பார்வையில் நாம் அவர்களின் எதிரிகளாக இருக்கிறோம். ஏன் எங்களை உங்களது சூனியத்தினால் முறியடிக்க முடியவில்லை. ஏனென்றால் அது பொய் என்று நாங்கள் நம்புகிறோம். எவர்கள் அதனை நம்பி ஏமாளிகளாக இருக்கிறார்களோ அல்லது பயந்து கொண்டிருக்கிறார்களோ, இல்லாததை இருப்பதாக வஸ்வாஸை ஏற்றுக் கொண்டுள்ளார்களோ அவர்களைத் தான் சூனியத்தை வைத்து பயங்காட்ட முடியும் என்பதையும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இன்னும், நபியவர்கள் மக்காவிலிலிருந்து மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து போனபோது மதினாவில் யூதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்களிடமே ஆதிக்கம் இருந்தது. அதன் பிறகு, நபியவர்களை இறுதித் தூதராக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து, சிறிது நாட்களிலேயே இஸ்லாமியர்கள் அதிகமாகி நபியவர்களிடம் ஆட்சிப் பொறுப்பு வந்தது. இஸ்லாமிய ஆட்சியிலிலிருந்த சிறிய தொகை யூதர்கள், முஸ்லிலிம்கள் மீது பொறாமை கொண்டு முஸ்லிலிம்கள் அனைவருக்கும் சூனியம் வைத்துவிட்டோம். இனிமேல் ஒருவருக்கும் பிள்ளை பிறக்காது என்று பயங்காட்டினார்கள். இப்படியெல்லாம் வெற்று வாய்வார்த்தைகளில் மிரட்டினார்கள். இப்போதும் சூனியம் செய்பவர்கள் மக்களைப் பயங்காட்டுவதற்கு, இரத்தம் கக்கி இறப்பாய் என்றும் இப்படி எதாவது ஒன்றைச் சொல்லுவார்கள்.
அப்படியெல்லாம் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அது நடக்காவிட்டாலும், அவர்கள் சொல்லுகிற வேகத்தைப் பார்த்ததும் நமக்கெல்லாம் பயம் வரத்தான் செய்யும். இப்படித்தான் குரளி வித்தை காட்டுவார்கள். நமது சமுதாயத்திலும்கூட இதுபோன்று மக்களை பயங்காட்டுகிற வேலையைச் செய்யும் பெயர்தாங்கி ஆலிலிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தாயத்து வாங்காமல் போனாய் என்றால் உன்னை இரத்தம் கக்க வைத்து சாகடித்து விடுவேன் என்று பயம் காட்டுவார்கள். இதைத் தாண்டி காலடி எடுத்து வைத்தாய் என்றால் அப்புறம் நடப்பதற்கு நான் பொறுப்பு இல்லை என்றெல்லாôம் பயங்காட்டும்போது நாம் பயப்படத்தான் செய்கிறோம். இதுபோன்றே ஸஹாபாக்களையும் அன்றைய காலத்து யூதர்கள் பயங்காட்டியதினால், நமக்கெல்லாம் சூனியம் வைத்துவிட்டர்களாமே! இதுவரைக்கும் பிள்ளைகள் பிறந்ததோடு சரி. இனிமேல் நம்மில் யாருக்குமே பிள்ளையே பிறக்காமல் போய்விடுமாமே? என்றெல்லாம் ஸஹாபாக்கள் பயந்தும் இருக்கிறார்கள். அதற்கான ஆதாரத்தை புகாரியில் பார்க்கலாம். மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் பின் ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) குபாவில் தங்கினேன். குபாவிலேயே எனக்குப் பிரசவமாகிவிட்டது. பிறகு குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று அவர்களுடைய மடியில் வைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் உமிழ்நீராகத்தான் இருந்தது. பிறகு, அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். ஆகவே, முஸ்லிலிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில், அவர்கüடம், யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள். ஆகவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது எனக் கூறப்பட்டுவந்தது. அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலிலி), (புகாரி: 5469)
யூதர்கள் முஸ்லிலிம்களுக்குச் சூனியம் வைத்துவிட்டதால் இனிமேல் முஸ்லிம்களுக்குப் பிள்ளை பிறக்காது என்று மக்களுக்கு மத்தியில் பரப்பிக் கொண்டிருந்த போதுதான், அஸ்மா (ரலிலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸுபைரைப் பெற்றெடுத்தார்கள். பொதுவாக ஒருவருக்குக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையின் தாய் தந்தையருக்குத்தான் பெருமகிழ்ச்சி, பிறகு அந்தக் குடும்பத்திற்கே மகிழ்ச்சி என்றும் சொல்லலாம். ஆனால் ஒரு ஊரைச் சார்ந்த மக்கள் அனைவரும் சந்தோசப்பட முடியுமா? என்றால் முடியாது. ஆனால் இந்தச் செய்தியை உன்னிப்பாகப் பார்க்கும் போது, மதினாவிலுள்ள எல்லா முஸ்லிலிம்களும் சந்தோசப்பட்டார்கள் என்று வருகிறது. ஏனெனில், யூதர்கள் யாருக்கும் குழந்தை பிறக்காது என்று சொல்லிலிக் கொண்டிருந்ததை அஸ்மா அவர்கள் குழந்தை பெற்ற செய்தி யூதர்களுக்குச் சரியான மூக்கறுப்பாக ஆக்கிவிட்டது. அதுபோக முஸ்லிம்களுக்கு சூனியத்தின் மூலம் ஒன்றும் செய்யவே முடியாது என்ற நம்பிக்கை வலுப்பெற்றதை கண்கூடாக்க் காணமுடிந்தது. இதில் யூதர்கள் சொன்னதைப் போன்று பிள்ளை பிறக்காமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் எந்த மந்திரமும் மாயமும் செய்யாமல் இறைவனால் பிள்ளை கொடுக்கப்பட்டு, பிள்ளைகளும் பிறந்து கொண்டுதான் இருந்தது என்பதை மேற்சொன்ன சம்பவத்தில் விளங்கிக் கொள்ள முடியும். எனவே ஸிஹ்ர் லி சூனியம் என்பதெல்லாம் வெறுமனே பித்தலாட்டம்தானே தவிர அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் சேர்த்து விளங்கிக் கொள்ளவேண்டும். இது முக்கியமான விசயம்தான். அடுத்ததாக, ஸிஹ்ர்லிசூனியம் செய்யும் மார்க்க அறிஞர்களுக்கு ஒரு விசயத்தைச் சொல்லிலிக் கொள்கிறோம். சூனியம் என்பது பெரும்பாவம் ஆகும். அதுவும் இறைமறுப்பு எனும் குஃப்ர் என்ற பாவத்தில் சேர்த்துவிடுகிற குற்றமாகும். அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகüன் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கüன் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று (பதில்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிலி), நூல்கள்: (புகாரி: 2766), முஸ்லிலிம்-451
மக்களின் உள்ளத்தில் ஈடுபாடாக பதியவைப்பதற்காக நபியவர்கள் கேள்வியைக் கேட்டு பதில் சொல்லுவார்கள். இப்படிப் பேசுவதும் நபியவர்களின் நடைமுறையில் உள்ளதாகும். முதலாவது விலகிக் கொள்ளவேண்டிய பாவம், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, இரண்டாவதாக விலகிக் கொள்ள வேண்டிய பாவம் ஸிஹ்ர்லிசூனியம். விலகிக் கொள்வது என்றால், அதைச் செய்யவும் கூடாது, நம்பவும் கூடாது என்பதாகும். ஒன்றிலிருலிருந்து விலகுதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றை செய்வது கூடாது என்றால் அதைச் செய்வதற்குக் கொடுக்கவும் கூடாது என்றுதானே பொருள். வட்டி வாங்குவது கூடாது என்றால் வட்டிக்குக் கொடுப்பதுவும் கூடாதுதான். பச்சை குத்தக்கூடாது என்றால் பச்சை குத்துவதற்குக் கொடுக்கவும் கூடாதுதான். ஜோதிடம் பார்ப்பது கூடாது என்றால் அவனிடம் போய் கையை நீட்டவும் கூடாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியெனில் சூனியத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் என்றாலே வாயை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் இன்று மக்கள் அப்படியில்லை. அதனால்தான் நபியவர்கள் இணைவைத்தலுக்கு அடுத்தபடியாக இதனை எச்சரிக்கிறார்கள். இன்னொரு இடத்தில் இரண்டு பாவங்களை மட்டும் குறிப்பிட்டு நபியவர்கள் சொல்லும் போது இணைவைத்தலையும் சூனியத்தையும் மட்டுமே முக்கியத்துவப்படுத்தி சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரழிவை உண்டாக்கும் பெரும்பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிலி), (புகாரி: 5764)
அப்படியெனில் மார்க்கத்தில் இவ்வளவு பெரிய பயங்கரமான குற்றம் என்று சொல்லிலித்தரப்பட்ட விசயத்தில் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் இருந்து கொண்டு மக்களை வழிகெடுக்கின்றனர். அறியாத மக்கள் வயிற்று வலிலிக்காகவும் காய்ச்சலுக்காகவும் ஏதேனும் ஒரு பிரச்சினைக்கு மார்க்க அறிஞர்களிடத்தில் வரும்போது அவர்களிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்லாமல், உனக்கு அவர் சூனியம் வைத்துவிட்டார் இவர் சூனியம் வைத்துவிட்டார் என்றெல்லாம் இல்லாத சூனியத்தை வைத்து மக்களை பயங்காட்டி ஏமாற்றி, அண்ணன் தம்பிக்குள் சண்டையை மூட்டிவிடுவது, சம்பந்தம் செய்த குடும்பங்களிலும் சண்டையை மூட்டிவிட்டு குடும்பங்களை சூனியத்தின் பெயரால் பிரிப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். கணவன் மனைவிக்குள் ஏதாவது பிரச்சினைகள் நடப்பது என்பது எல்லோரின் குடும்பங்களிலும் உள்ளதுதான். இது அதிசயம் ஒன்றுமில்லை. இரண்டு மனிதர்களின் உள்ளங்கள் எல்லாவற்றிலும் ஒத்துப் போவது என்பது எந்தக் காலத்திலும் முடியாது. ஏனெனில் எந்த இரண்டு மனிதர்களும் ஒரே மாதிரி எல்லா விசயத்திலும் முடிவெடுக்க மாட்டார்கள். அண்ணன் தம்பியாக இருந்தாலும் தகப்பனும் பிள்ளையுமாக இருந்தாலும் சரியே. அது போன்று கணவன் மனைவிக்கும் அப்படித்தான். விதிவிலக்கெல்லாம் ஒன்றுமில்லை. எப்படி முடிவெடுத்தாலும் ஒருவரின் கருத்து ஒருநேரம் மிகைத்தும் ஒருவரின் கருத்து சிலநேரம் மிகைக்காமலும் இருக்கத்தான் செய்யும் என்கிற இந்த சாதாரண விசயத்தைக்கூட புரிந்து கொள்ளாத சிலர், சூனியத்தை வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்துகிற இந்த மோசடிக்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள். மனைவி, கணவன் என்னைச் சரியாகக் கவனிக்காமல் இருக்கிறார் என்றும் கணவன் மனைவியைப் பற்றி மனைவி எனக்குக் கீழ்படிந்து நடக்காமல் இருக்கிறாள் என்றும் குறை சொல்லுவார்கள். உடனே அந்தப் பெண்மணியிடம் உனக்கு மாமியார் வீட்டில் சூனியம் வைத்திருக்கிறார்கள் என்று இல்லாத சண்டையை மூட்டிவிட்டு பெரியளவுக்கு குடும்பங்களில் பிரிவினையை உண்டுபண்ணி விடுவார்கள். நாம் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பேச்சுக்காக சூனியம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய செய்திகள் குர்ஆனுக்கு நேரடியாக மோதுவதால் அவை பலவீனமான செய்தி என்று சொல்லிலி நாம் அந்தச் செய்திகளை மறுக்கிறோம். இருந்தாலும் ஒரு வாதத்திற்காக நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக அவர்கள் சொல்லுவதைப் போன்று வைத்துக் கொள்வோம்.
நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை அந்த ஹதீஸில் உள்ளபடி எப்படி அறிந்து கொண்டார்கள். அந்த ஹதீஸில் நபியவர்களின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் இரண்டு மலக்குமார்கள் அமர்ந்து கொண்டு பேசியபோதுதான் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியைக் கூறுகின்றனர். அதன்படி ஆராய்ந்தால், ஒரு மனிதனுக்கு சூனியம் வைக்கபட்டிருக்கிறது என்கிற செய்தி இறைவனால் மலக்குமார்களின் மூலமாகத்தான் அறிவிக்கப்பட்டது என்பதை அறிவுடைய யாரும் ஏற்றுக் கொள்வார்கள். மறுக்க மாட்டார்கள். விசயம் இவ்வாறு இருக்க, இன்று சமுதாயத்தில் மதரஸாக்களில் ஏழுவருடம் படித்து பட்டம் பெற்ற போலிலித்தனமான உலமாக்கள் என்ற பெயரில் இருந்து கொண்டு, வயிற்றுவலிலிக்காக வருகிற நபரிடம் சூனியம் வைக்கப்பட்டிருக்கிறது என்று எப்படிச் சொல்லமுடியும்?. மலக்கு வந்தல்லவா சூனியம் வைக்கப்பட்ட செய்தியை அவருக்குச் சொல்ல வேண்டும். நபியவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியத்தையே நபியவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே!. தனக்கு என்ன நடக்கிறது என்பதே நபியவர்களுக்குத் தெரியாமல் குழம்பி இருந்ததாகத்தான் சூனியம் வைக்கப்பட்டதாக வருகிற செய்திகளில் உள்ளது. முதலிலில் அந்தச் செய்தி சரியில்லை என்பதுதான் உண்மை. இருப்பினும் அதைச் சரியென்று வைத்துக் கொண்டு பேசினாலும், அந்தச் செய்திகளில் உள்ள தகவல்களை நன்றாக ஆராய்ந்து பார்க்கும் போது, ஐம்பது நாட்களாக எனக்கு என்ன நடக்கிறது என்று என்னால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை என்றும் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது என்றெல்லாம் நபியவர்கள் சொன்னதாகவும் அதில் இருக்கிறது. பிறகு தான் இரண்டு வானவர்களில் ஒருவர் நபியவர்களின் தலைமாட்டிலும் இன்னொருவர் கால்மாட்டிலும் உட்கார்ந்து கொண்டு பேசியதின் மூலம் தனக்கு சூனியம் வைக்கப்பட்டது நபியவர்களுக்குத் தெரிகிறது என்று பதிவாகியுள்ளது.
வஹீயின் மூலமாக அல்லாஹ்வோடு தொடர்பு வைத்துக் கொண்டுள்ள நபியவர்களுக்கே தனக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. நபிக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வானவர்கள் சொன்ன பிறகுதான் நபியவர்களுக்கே சூனியம் வைக்கப்பட்டதென அறிந்து கொண்டார்கள் என்றால் இன்று மந்திரவாதி என்பவர்கள் எப்படி ஒருமனிதனுக்கு சூனியம் வைக்கப்பட்டதை கண்டுபிடித்தார்கள். அதுவும் இவர்தான் வைத்தார்கள் என்று எப்படி கண்டுபிடித்தார்கள். லபீத் இப்னு அஃஸம் என்பவன்தான், இந்தக் கிணற்றில்தான் நபியவர்களுக்கு சூனியம் வைத்தான் என்பதையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே நபியவர்களுக்குச் சொல்லப்படுகிறது என்பதை ஆராயும் போது அந்த ஹதீஸ்கள் சரியென்று வைத்துக் கொண்டாலும் இவர்கள் செய்கிற பித்தலாட்டத்திற்கு ஆதாரம் அதில் இல்லவே இல்லை. இதற்கு இப்படியெல்லாம் விளக்குவது, ஹதீஸை சரியென்று நம்புபவர்களுக்குத்தான் சொல்லுகிறோமே தவிர இந்த பிராடுகளுக்கு அதில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அடுத்து, நபிமார்களைப் பொறுத்த அளவில் அவர்களுக்கு இறைவன் புறத்திலிலிருந்து மலக்குமார்களின் மூலமாக வஹீ வருவதால் அவர்களுக்கு தெரிகிற வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்றாவது நம்பலாம். ஆனால் நபிமார்கள் அல்லாத நம்மைப் போன்ற மற்ற மனிதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வஹீ எதுவும் வராது என்பதினால் அதைத் தெரிந்து கொள்ளவே முடியாது. எனவே அல்லாஹ்விடம் பொதுவாக பிரார்த்தனை செய்துவிட்டுப் போவதுதான் சரியான வழிமுறையாகும். அதனால் இந்த ஸிஹ்ர்லிசூனியத்தை வைத்துக் கொண்டு வஸியம் பண்ணி விட்டார்கள், அதுபண்ணி விட்டார்கள் இது பண்ணி விட்டார்கள், மருந்து கொடுத்து விட்டார்கள், முகம்மாத்து பண்ணிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றுவதை நாம் நம்பக்கூடாது என்பதற்காகத்தான் இதை சொல்லுகிறோம்.