அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நம்பிக்கை கொண்டவர்களே! என்று குர்ஆனில் அதிகமாக இந்த வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துகிறான். அல்லாஹ் இந்த வாசகத்தின் மூலம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு செய்யும் உபதேசம் என்ன? என்பதை இந்த உரையில் காண்போம். நம்பிக்கைக் கொண்டவர்களே! திருக்குர்ஆனில் (யா அய்யுஹல்லதீன் ஆமனூ) ஈமான் கொண்டவர்களே என்று அழைத்து பல முக்கியமான விஷயங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். திருக்குர்ஆனில் மொத்தம் 89 இடங்களில் இவ்வாறு கூறுகின்றான். அவற்றில் சில அறிவுரைகள் அந்த காலத்தை கருத்தில் […]