முன்னுரை
பயான் குறிப்புகள்:
10 நிமிட உரைகள்
ஏன் இந்த பகுதி?
10 நிமிட உரைகள் பகுதி மிகவும் பயனுள்ளது. பெரும்பாலும் 1 மணி நேர, 2 மணி நேர உரைகள் என்றால், பேச்சாளாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விடும். எனவே, குறிப்புகளை தேடி எடுத்து, தொகுக்க நேரம் கிடைக்கும்.
ஆனால், 10 நிமிட உரை என்பது, எதாவது சபையில் இருக்கும் போது தீடீரென தரப்படும். பல வருடங்கள் அனுபவம் இருப்பினும், பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில் இருக்கும் போது, எதை பேசுவதென்று நினைவிற்கு வராது. எனவே தான், இந்த 10 நிமிட உரைகள் பகுதியை ஏற்படுத்தியுள்ளேன்.
இதில் 10 அல்லது 15 நமிடம் மட்டுமே பேசத் தேவையான குறைவான குறிப்புகள் இருக்கும். இதை ஜும்மா இரண்டாம் உரைக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.