(ISIS) கருப்புக்கொடி வந்தால் சேர்ந்து கொள்!
தற்போது ஐஎஸ்ஐஎஸ் போராட்டக்காரர்கள் ஈராக்கில் பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தங்களுடைய அமைப்பின் அடையாளமாக கருப்புக் கொடியைப் பயன்படுத்துகின்றனர்.
பிற்காலத்தில் கருப்புக் கொடி ஏந்திய ஒரு கூட்டம் வரும். அந்தக் கூட்டத்தின் தலைவர் நேர்மையான சிறந்த தலைவராக இருப்பார். அவருக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஐஎஸ்ஐஎஸ் கூட்டத்தை ஆதரிக்கும் சிலர் இது போன்ற ஹதீஸ்கள் இவர்கள் குறித்து முன்னறிவிப்புச் செய்வதாக கூறுகின்றனர்.
எனவே கருப்புக் கொடி ஏந்திய கூட்டம் தொடர்பாக வரும் அனைத்து ஹதீஸ்களின் உண்மை நிலையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக பல அறிவிப்புக்கள் வந்தாலும் அனைத்து செய்திகளும் பலவீனமாகவே உள்ளன. இந்தக் கருத்தில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை.
ஹதீஸ் 1
21353 حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شَرِيكٍ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَيْتُمْ الرَّايَاتِ السُّودَ قَدْ جَاءَتْ مِنْ خُرَاسَانَ فَأْتُوهَا فَإِنَّ فِيهَا خَلِيفَةَ اللَّهِ الْمَهْدِيَّ رواه أحمد
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் குராசானிலிருந்து கருப்புக் கொடிகள் வருவதைக் கண்டால் அங்கு செல்லுங்கள். ஏனென்றால் அங்குதான் நேர்வழி காட்டப்பட்ட அல்லாஹ்வின் பிரதிநிதி உள்ளார்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
நூல் : அஹ்மது (21353)
இந்த அறிவிப்பில் மூன்று பலவீனங்கள் உள்ளன. ஷரீக் மற்றும் அலீ பின் ஸைத் ஆகிய இருவரும் பலவீனமானவர்கள். இவ்வாறு பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
ஷரீக் பின் அப்தில்லாஹ் நல்லவர் என்றாலும் மோசமான நினைவாற்றலின் காரணத்தால் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர் அவர்களும், தஹபீ அவர்களும் கூறியுள்ளனர். யஃகூப் பின் ஷைபா, அபூ சுர்ஆ, நஸாயீ, ஹாகிம், தாரகுத்னீ மற்றும் பலர் குறை கூறியுள்ளனர்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 4 பக்கம் 336)
அலீ பின் ஸைத் பின் ஜத்ஆன் என்பவரும் பலவீனமானவர் ஆவார். இப்னு ஹஜர், தஹபீ, தாரகுத்னீ, அஹ்மது பின் ஹன்பள், முஹம்மது பின் சஅத், யஹ்யா பின் மயீன், அபூசுர்ஆ, அபூஹாதிம், நஸாயீ, இப்னு குஸைமா, ஹாகிம், இப்னு ஹிப்பான் மற்றும் பலர் இவர் மோசமான நினைவாற்றல் உள்ளவர் என்றும் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 7 பக்கம் 324)
மேலும் சவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் அபூ கிலாபாக என்பவர் சவ்பான் (ரலி) அவர்களிடம் நேரடியாக எதையும் செவியுறவில்லை என அறிஞர் இஜ்லீ கூறியுள்ளார்.
மேலும் இவர் தத்லீஸ் என்ற இருட்டடிப்பு வேலையைச் செய்யக்கூடியவர். இவரைப் போன்றவர்கள் நான் நேரடியாகக் கேட்டேன். எனக்கு அறிவித்தார் என்பது போன்ற வாசகங்களைக் கூறினால்தான் இவருடைய அறிவிப்புகள் ஏற்கப்படும். ஆனால் இவர் தான் நேரடியாக கேட்டதாகக் கூறவில்லை. இதன் காரணத்தாலும் இது பலவீனமான செய்தியாக உள்ளது.
4074 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى وَأَحْمَدُ بْنُ يُوسُفَ قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْتَتِلُ عِنْدَ كَنْزِكُمْ ثَلَاثَةٌ كُلُّهُمْ ابْنُ خَلِيفَةٍ ثُمَّ لَا يَصِيرُ إِلَى وَاحِدٍ مِنْهُمْ ثُمَّ تَطْلُعُ الرَّايَاتُ السُّودُ مِنْ قِبَلِ الْمَشْرِقِ فَيَقْتُلُونَكُمْ قَتْلًا لَمْ يُقْتَلْهُ قَوْمٌ ثُمَّ ذَكَرَ شَيْئًا لَا أَحْفَظُهُ فَقَالَ فَإِذَا رَأَيْتُمُوهُ فَبَايِعُوهُ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ فَإِنَّهُ خَلِيفَةُ اللَّهِ الْمَهْدِيُّ رواه إبن ماجه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கிழக்கிலிருந்து கருப்புக்கொடிகள் தோன்றும். வேறு எந்தக் கூட்டமும் உங்களிடம் சண்டையிடாத அளவுக்கு அவர்கள் உங்களிடம் சண்டையிடுவார்கள். அவர்களை நீங்கள் கண்டால் பனிக்கட்டியில் தவழ்ந்து சென்றாவது அக்கூட்டத்தின் தலைவரிடம் உடன்படிக்கை செய்யுங்கள். ஏனென்றால் அவர் தான் நேர்வழி காட்டப்பட்ட அல்லாஹ்வின் பிரதிநிதியாவார்.
இந்தச் செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றாலும் அபூ கிலாபா என்ற அறிவிப்பாளர் தத்லீஸ் என்ற இருட்டடிப்பு வேலையைச் செய்யக்கூடியவர். இவர் இந்தச் செய்தியை அபூ அஸ்மா என்பவரிடமிருந்து அறிவிக்கின்றார். இவரிடம் தான் நேரடியாகக் கேட்டதை அபூகிலாபா தெளிவுபடுத்தவில்லை. எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.
ஹதீஸ் 2
2195 حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَخْرُجُ مِنْ خُرَاسَانَ رَايَاتٌ سُودٌ لَا يَرُدُّهَا شَيْءٌ حَتَّى تُنْصَبَ بِإِيلِيَاءَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ رواه الترمذي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : குராசானிலிருந்து கருப்புக்கொடிகள் வரும். அதை யாராலும் தடுக்க முடியாது. இறுதியில் அவை ஈலியாவில் (பைத்துல் முகத்தஸ்) நிறுவப்படும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதீ (2195)
இந்தச் செய்தியில் ரிஷ்தீன் பின் சஅத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அபூ சுர்ஆ, அபூஹாதிம், நஸாயீ, தாரகுத்னீ, அபூதாவுத் மற்றும் பலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் மோசமான நினைவாற்றல் உள்ளவர் என தஹபீ கூறியுள்ளார். எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.
தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 3 பக்கம் 278)
ஹதீஸ் 3
4072 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ صَالِحٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَقْبَلَ فِتْيَةٌ مِنْ بَنِي هَاشِمٍ فَلَمَّا رَآهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْرَوْرَقَتْ عَيْنَاهُ وَتَغَيَّرَ لَوْنُهُ قَالَ فَقُلْتُ مَا نَزَالُ نَرَى فِي وَجْهِكَ شَيْئًا نَكْرَهُهُ فَقَالَ إِنَّا أَهْلُ بَيْتٍ اخْتَارَ اللَّهُ لَنَا الْآخِرَةَ عَلَى الدُّنْيَا وَإِنَّ أَهْلَ بَيْتِي سَيَلْقَوْنَ بَعْدِي بَلَاءً وَتَشْرِيدًا وَتَطْرِيدًا حَتَّى يَأْتِيَ قَوْمٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَعَهُمْ رَايَاتٌ سُودٌ فَيَسْأَلُونَ الْخَيْرَ فَلَا يُعْطَوْنَهُ فَيُقَاتِلُونَ فَيُنْصَرُونَ فَيُعْطَوْنَ مَا سَأَلُوا فَلَا يَقْبَلُونَهُ حَتَّى يَدْفَعُوهَا إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ بَيْتِي فَيَمْلَؤُهَا قِسْطًا كَمَا مَلَئُوهَا جَوْرًا فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلْيَأْتِهِمْ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ رواه إبن ماجه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கிழக்கிலிருந்து ஒரு கூட்டம் புறப்படும். அவர்களுடன் கருப்புக்கொடிகள் இருக்கும். அவர்கள் நல்லதை வேண்டுவார்கள். அது அவர்களுக்கு வழங்கப்படாது. எனவே அவர்கள் சண்டையிடுவார்கள். உதவி செய்யப்படுவார்கள். இதன் பின் அவர்கள் கேட்டது அவர்களுக்கு வழங்கப்படும். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்ப்கொள்ளாமல் ஆட்சிப் பொறுப்பை எனது குடும்பத்தைச் சார்ந்த ஒரு மனிதரிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அதில் அநீதியை நிரப்பியதைப் போன்று இவர் அதனை நீதத்தால் நிரப்புவார். உங்களில் யார் அந்நேரத்தை அடைகின்றாரோ அவர் அவர்களிடம் பனிக்கட்டியின் மீது தவழ்ந்தாவது செல்லட்டும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : இப்னு மாஜா (4072)
இந்தச் செய்தியில் யசீத் பின் அபீ சியாத் என்பவர் இடம்பெற்றுள்ளார். அஹ்மது பின் ஹன்பள், யஹ்யா பின் மயீன், அபூசுர்ஆ, அபூஹாதிம், ஹாகிம், நஸாயீ, தாரகுத்னீ மற்றும் பலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் மோசமான நினைவாற்றல் உள்ளவர் என தஹபீ கூறியுள்ளார்.
இத்துடன் இவர் ஷியாக்களுக்கு மிகப் பெரிய தலைவராக இருந்துள்ளார். மேற்கண்ட ஹதீஸ் ஷியாக்களின் கொள்கைக்கு ஆதரவாக இருப்பதால் இது போன்ற ஹதீஸை ஷியாக்களில் யார் அறிவித்தாலும் ஏற்க முடியாது. இந்த அடிப்படையிலும் இந்த ஹதீஸ் பலவீனமாக உள்ளது.
நூல் தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 11 பக்கம் 330)
இதே செய்தி சற்று அறிவிப்பாளர் தொடர் மாற்றத்துடன் ஹாகிமில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
ஹதீஸ் 4
المستدرك على الصحيحين للحاكم – كتاب الفتن والملاحم
أخبرني أبو بكر بن دارم الحافظ ، بالكوفة ، ثنا محمد بن عثمان بن سعيد القرشي ، ثنا يزيد بن محمد الثقفي ، ثنا حنان بن سدير ، عن عمرو بن قيس الملائي ، عن الحكم ، عن إبراهيم ، عن علقمة بن قيس ، وعبيدة السلماني ، عن عبد الله بن مسعود رضي الله عنه ، قال : أتينا رسول الله صلى الله عليه وسلم فخرج إلينا مستبشرا يعرف السرور في وجهه ، فما سألناه عن شيء إلا أخبرنا به ، ولا سكتنا إلا ابتدأنا ، حتى مرت فتية من بني هاشم فيهم الحسن والحسين ، فلما رآهم التزمهم وانهملت عيناه ، فقلنا : يا رسول الله ما نزال نرى في وجهك شيئا نكرهه ، فقال : ” إنا أهل بيت اختار الله لنا الآخرة على الدنيا ، وإنه سيلقى أهل بيتي من بعدي تطريدا وتشريدا في البلاد ، حتى ترتفع رايات سود من المشرق ، فيسألون الحق فلا يعطونه ، ثم يسألونه فلا يعطونه ، ثم يسألونه فلا يعطونه ، فيقاتلون فينصرون ، فمن أدركه منكم أو من أعقابكم فليأت إمام أهل بيتي ولو حبوا على الثلج ، فإنها رايات هدى يدفعونها إلى رجل من أهل بيتي يواطئ اسمه اسمي ، واسم أبيه اسم أبي ، فيملك الأرض فيملأها قسطا وعدلا كما ملئت جورا وظلما ” *
இந்த அறிவிப்பில் ஹன்னான் பின் சுதைர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் ஷியாக்களின் தலைவர் என தாரகுத்னீ கூறியுள்ளார். இவர் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என தஹபீ அவர்களும் இப்னு ஜவ்ஸீ அவர்களும் கூறியுள்ளனர்.
இதற்கு முன்பு நாம் சுட்டிக்காட்டிய யசீத் பின் அபீ சியாதின் அறிவிப்பை சற்று மாற்றி புதிய அறிவிப்பாளர் தொடரை இவராக உருவாக்கி இட்டுக்கட்டியுள்ளார்.
எனவே கருப்புக்கொடி ஏந்தி ஒரு கூட்டம் வரும் என்று சிறப்பித்து வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாக உள்ளது. கருப்புக்கொடியுடன் வருபவர்களை மார்க்க அடிப்படையில் ஆதரிக்க வேண்டும் என்று கூறக்கூடாது.
யாராக இருந்தாலும் அவர்களின் கொள்கை கோட்பாடு செயல்பாடுகள் ஆகியவற்றைக் கவனித்தே அவர்கள் நல்லவர்களா? தீயவர்களா? என்பதை குர்ஆன் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.