
இன்றைய நவீன காலத்தில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கின்ற ஏராளமான கண்டுபிடிப்புகள் புதிதாக உருவாக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய மேலை நாட்டவர்களால் தயார் செய்யப்பட்டு, ஊடுருவ செய்கின்ற கார்ட்டூன் சேனல்கள், வீடியோ கேம்கள், செல்ஃபோன்களில் செயலிகள் மூலமாக உருவாக்கப்படுகின்ற விளையாட்டு கேம்கள் இதுபோன்ற பலதரப்பட்ட முறைகளின் வாயிலாக பலதரப்பட்ட பாதிப்புகள் உலக அரங்கில் பரவுகின்றது. இதுபோன்ற கேம்கள், கார்ட்டூன் சேனல்கள் வெறுமனே பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டு அதுபோன்ற காரியங்களை அனுமதித்து வருகின்றோம்! […]