
யார் தமது தேவைகளுக்காக அவரை (அப்துல் காதிர் ஜீலானியை) வஸீலாவாக ஆக்கிக் கொள்வார்களோ அவர்களின் தேவைகள் குல்சும் கடலளவு இருந்தாலும் நிறைவேற்றப்படும். இஸ்லாத்திற்குள் இணை வைக்கும் கொள்கையை உருவாக்கியவர்கள் அதை நியாயப்படுத்துவதற்காக வஸீலா எனும் ஆயுதத்தைக் கையில் எடுப்பது வழக்கம். வஸீலா தேடுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டுள்ளான். நாங்கள் அவ்லியாக்களை வஸீலாவாகத் தான் பயன்படுத்துகிறோம். எனவே இது இணை வைத்தலில் சேராது என்று வாதிடுகின்றனர். இறந்து போனவர்களிடம் பிரார்த்திப்பதும் இன்னாரின் பொருட்டால் இதைத் தா என்று இறைவனிடம் கேட்பதும் […]