
வெள்ளிக்கிழமை மரணிப்பதை சிறந்த மரணம் என்று பலரும் ம்புகின்றனர். இந்தக் கருத்தில் சில நபிமொழிகளும் பதிவாகியுள்ளன. அவை பலவீனமாகவே உள்ளன. யார் வெள்ளிக்கிழமை மரணிக்கிறாரோ அவர் கப்ரு வேதனையிலிருந்து காக்கப்படுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ யஃலா (7/146) எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை யஸீத் அர்ரகாஷீ என்பவர் அறிவித்துள்ளார். இவர் பலவீனமானவர். இது போன்ற கருத்தில் மற்றொரு ஹதீஸ்(திர்மிதீ: 994) ➚வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பலவீனமானது என்பதை […]