Category: நேர்ச்சையும் சத்தியமும்

u320

5) சிறந்ததை கண்டால் முறிக்கலாம்

சிறந்ததைக் கண்டால் சத்தியத்தை முறிக்கலாம் ஒரு காரியத்தைச் செய்வதாக நீ சத்தியம் செய்த பின் அது அல்லாத காரியத்தைச் சிறந்ததாக நீ கண்டால் உன் சத்தியத்தை முறித்து அதற்கான பரிகாரத்தைச் செய்து விட்டு அந்தச் சிறந்த காரியத்தைச் செய்து விடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் சமூரா (ரலி) (புகாரி: 6622) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எங்களுக்கு வாகனம் (ஒட்டகம்) வேண்டும் எனக் கேட்டோம். நபிகள் நாயகம் […]

4) சத்தியம் செய்தல்

சத்தியம் செய்தல் தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்குவதற்காகவோ, தனக்குத் தேவையானதைக் கோருவதற்காகவோ இறைவனிடம் அளிக்கும் வாக்குறுதியே நேர்ச்சை என்பதை அறிந்தோம். எவ்விதக் கோரிக்கையின் அடிப்படையில் இல்லாமல் அல்லாஹ் வைச் சாட்சியாக்கி அளிக்கும் உறுதி மொழியே சத்தியம் எனப்படும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் சொல்வது உண்மை! அல்லாஹ்வின் மீது சத்தியமாக வாங்கிய கடனை அடுத்த வாரம் திருப்பித் தருவேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பொருள் மிகவும் தரமானது. என்றெல்லாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் சத்தியம் செய்கிறோம். […]

3) நேர்ச்சையை முறிப்பதன் பரிகாரம்

நேர்ச்சையை முறிப்பதன் பரிகாரம் மார்க்கம் அனுமதிக்கின்ற வகையில் ஒருவர் நேர்ச்சை செய்து அவரால் அதை நிறைவேற்ற இயலாது போனால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். ‘சத்தியம் செய்து விட்டு அதை நிறைவேற்றத் தவறினால் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதுவே நேர்ச்சைக்கும் பரிகாரமாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)(முஸ்லிம்: 3103) நேர்ச்சையை முறிப்பதற்கான பரிகாரம் சத்தியத்தை முறிப்பதற்கான பரிகாரமே என்று […]

2) நேர்ச்சையின் சட்டங்கள்

நேர்ச்சையின் சட்டங்கள்! நேர்ச்சை செய்வது, சத்தியம் செய்வது குறித்த சட்டங்கள் பற்றி முஸ்ம் சமுதாயத்தில் அதிக அளவில் அறியாமை நிலவுகின்றது. இஸ்லாத்தில் நேர்ச்சை செய்வதும், சத்தியம் செய்வதும் ஏறக் குறைய ஒரே விதமான சட்டங்களைக் கொண்டுள்ளன. ஆயினும் சில விஷயங்களில் இவ்விரண்டின் சட்டங்களும் வேறுபடுகின்றன. நேர்ச்சையைத் தவிர்ப்பது நல்லது ‘இறைவா! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இது வரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகிறேன்; நோன்பு நோற்கிறேன்; ஏழைகளுக்கு […]

1) முன்னுரை

முன்னுரை முஸ்லிம்கள் தமது அனைத்து வணக்க வழிபாடுகளையும் திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்ளக் கட்டளையிடப்பட்டுள்ளனர். எந்த வணக்கத்தையாவது அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத முறையில் ஒருவர் செய்தால் அந்த வணக்கம் இறைவனால் நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். திருக்குர்ஆனையும் நபிவழியையும் ஆதாரமாகக் கொண்டு செயல்படும் முஸ்லிம்கள் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களை தக்க முறையில் நிறைவேற்றினாலும் நேர்ச்சை, சத்தியம் செய்தல் போன்ற வணக்கங்களைப் பற்றி அறியாமையில் […]