
6. பண்டிகைகளின் பெயரால்… மதங்கள் அர்த்தமற்றவை’ எனக் கூறும் சிந்தனையாளர்கள் பண்டிகைகள் கொண்டாடும் முறைகளைப் பார்த்து விட்டு மதங்களை வெறுக்கின்றனர். ‘நாம் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக மற்றவர்களைத் துன்பத்திற்குள்ளாக்குவது எப்படி அர்த்தமுள்ள செயலாக இருக்கும்?’ என்று அவர்கள் எண்ணுகின்றனர். பண்டிகைகளின் போது பலவிதமான பட்டாசுகள் வெடிக்கப் படுகின்றன. அந்தச் சப்தமும், நெருப்பினால் ஏற்படும் வர்ண ஜாலங்களும் நமக்குச் சிறிது நேர மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக உள்ளன. எத்தனையோ குடிசைகள் இதனால் எரிந்து சாம்பலாகின்றன. […]