
6 மாத ஆட்டுக் குட்டியை அகீகா கொடுக்கலாமா? பதில் தடையில்லை. எனினும், 1 வருடம் பூர்த்தியாகி இருப்பது சிறந்தது. குர்பானி பிராணியின் வயது சம்பந்தமாகத் தான் ஹதீஸ்கள் உள்ளன. அகீகா பிராணியின் வயது சம்பந்தமாக ஹதீஸ்கள் இல்லை. எனினும், பொதுவாகவே, 6 மாத ஆட்டுக் குட்டி என்பது, 1 வருடம் பூர்த்தியடைந்த முஸின்னா என்ற நிலையை அடைந்த ஆட்டை விட தகுதி குறைவானது. இதனை குர்பானி சம்பந்தமாக நபியவர்கள் கூறியுள்ள ஹதீஸ்களிலிருந்து விளங்கலாம். ”இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது […]