
பெருநாளின் போது தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் என்று கூறலாமா இரண்டு பெருநாட்களின் போதும் “தகப்பல்லாஹூ மின்னா வமின்கும்” என்று கூறும் பழக்கம் அரபு தேசத்து மக்களிடையே காணப்படுகிறது. அவர்களிடமிருந்து பிர தேசத்து முஸ்லிம்களும் அவ்வாறு கூறுவதை பின்பற்றி வருகின்றனர். பெருநாளின் போது “தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்” என்று கூறலாம் என வரும் செய்திகள் அனைத்தும் மிக மிகப் பலவீனமானவையாக உள்ளன. பலவீனத்துடன் அவை ஒன்றுக் கொன்று முரணாகவும் உள்ளன. ஒரு செய்தியில் நபியவர்கள் அவ்வாறு சொன்னார்கள் என்றும் […]