
நாஸிக் எத்தனை வகைகளில் இருக்கும்? மாற்றப்பட்ட முந்தைய சட்டத்திற்கு ‘‘மன்ஸூக்” என்றும் முந்தைய சட்டத்திற்கு மாற்றாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் ‘‘நாஸிக்” என்றும் குறிப்பிடப்படும் என்பதை முன்னர் கண்டோம். இந்த ‘‘நாஸிக்” பின்வரும் வகைகளில் இருக்கும். குர்ஆனின் வசனத்தை குர்ஆன் வசனமே மாற்றுதல் திருமறைக்குர்ஆனில் ஒரு வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை மற்றொரு திருக்குர்ஆன் வசனம் மாற்றிவிடும். இதற்கு உதாரணமாக(அல்குர்ஆன்: 8:65) ➚வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை 8:66 வது வசனம் மாற்றிவிட்டதைக் கூறலாம். இது பற்றி நாம் […]