Author: Trichy Farook

வறுமை என்பதும் சோதனையே

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். வறுமை சிறப்பிற்குரியது, வறுமை, கஷ்டம் ஏற்பட்டால் அதனை சோதனை என்று விளங்காமல் இறைவன் நம்மை தண்டித்து விட்டான் என்று என்ணும் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் இறைவன் நம் துஆவையெல்லாம் ஏற்கமாட்டான். இது முஸீபத்து என்று எண்ணி கவலைப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய மார்க்கத்தை […]

ஸஜ்தா வசனம் ஓதி சஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் கூற வேண்டுமா?

ஸஜ்தா வசனம் ஓதி சஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டுமா? குர்ஆன் வசனங்களை ஓதி ஸஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை பலவீனமான ஹதீஸ்களாக உள்ளன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர். அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் செய்வோம் என்று இப்னு உமர் […]

நபி முஆதிடம் இஜ்திஹாத் செய்ய சொன்னார்களா?

நபி முஆதிடம் கூறியது நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி)யை யமனுக்கு அனுப்பும் போது, நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வுடைய வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று முஆத் (ரலி) பதிலளித்தார். அல்லாஹ்வுடைய வேதத்தில் இல்லையென்றால்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதரின் சுன்னத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று முஆத் (ரலி) கூறினார். அல்லாஹ்வின் தூதருடைய சுன்னத்திலும் இல்லையென்றால்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, என்னுடைய சிந்தனையைக் கொண்டு […]

பாதத்தை மறைப்பது

பாதத்தை மறைப்பது உம்மு ஸல்மா (ரலி­) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் கீழங்கி இல்லாத போது நீளமான சட்டையுடனும் ஒரு முக்காடு உடனும் தொழலாமா என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீளமான சட்டை (பெண்ணுடைய) பாதங்களை மறைக்கக் கூடிய அளவிற்கு இருந்தால் தொழுது கொள்ளலாம் என்று பதிலளித்தார்கள். நூல் : அபூதாவூத் இதில் அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் (தீனார்) என்பவர் இடம்பெருகிறார். இவர் பலவீனமானவர். இவரை பற்றி இப்னு மயீன் […]

ஒரு ஆண்டு நிறைவடைந்தால் தான் ஜகாத் கடமை

ஒரு ஆண்டு நிறைவடையும் வரை ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஒரு ஆண்டு நிறைவடையும் வரை அதற்கு ஜகாத் இல்லை என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்களையும் மாற்றுக் கருத்துடையோர் ஆதாரமாகக் காட்டி வந்தனர். இந்த ஹதீஸ்களில் எந்த ஒன்றும் சரியானதல்ல ஆண்டுக்கான ஜகாத்தை முன் கூட்டியே வாங்கிய ஹதீஸ் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இரண்டு வருடங்களுக்கான ஜகாத்தை நபிகள் நாயகம் அவர்கள் முன் கூட்டியே வாங்கினார்கள் இந்தக் கருத்தில் உள்ள அறிவிப்புக்கள் ஒன்றுகூட சரியானவை அல்ல அனாதைகளின் […]

இப்றாஹீம் நபியின் தந்தை சம்பவம்

இப்றாஹீம் நபி சம்பவம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸரை, மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், ”நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை ”இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் ”இறைவா! மக்களுக்கு […]

அபூபக்கர் தர்மம் – ஈமான் – குகை

அபூபக்கர் தர்மம் உமர் (ர­லி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்நேரத்தில் என்னிடத்தில் இதற்குத் தோதுவாக செல்வம் இருந்தது. ஒரு நாளும் அபூபக்ரை (நன்மையில்) நான் முந்தியதில்லை. எனவே நான் இன்று அபூபக்ரை (தர்மம் செய்வதில்) முந்தி விடுவேன் என்று (மனதில்) கூறிக் கொண்டேன். எனது செல்வத்தில் பாதியை (நபி (ஸல்) அவர்களிடத்தில்) நான் கொண்டு வந்தேன். உமது குடும்பத்தாருக்காக நீங்கள் என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று […]

குர்ஆனில் 15 ஸஜ்தாக்கள்

ஸஜ்தா வசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் 15 ஸஜ்தாக்களை என்னிடம் ஓதிக் காண்பித்தார்கள் என்றும், அவற்றில் (காஃப் அத்தியாயத்தி­ருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம் பெறும் மூன்று ஸஜ்தாக்களும், சூரத்துல் ஹஜ்ஜில் இடம் பெறும் இரண்டு ஸஜ்தாக்களும் அடங்கும்” என்று அம்ர் பின் அல்ஆஸ் (ர­) அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் 1193வது ஹதீஸாகவும் இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் மேற்கண்ட 15 இடங்களிலும் ஸஜ்தா செய்யப்படுகின்றது. ஆனால் இந்த ஹதீஸ் […]

தஸ்பீஹ் ஹதீஸ்

தஸ்பீஹ் ஹதீஸ் ”உங்கள் விரல்களால் (தஸ்பீஹ் செய்து) எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்பட்டு அவைகள் பேச வைக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: யுஸைரா (ர­), நூல்கள்:(அஹ்மத்: 25841),(திர்மிதீ: 3507) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றி சில அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். இரண்டாவது அறிவிப்பாளர் ஹுமைளா பின்த் யாஸிர் என்பவரும் மூன்றாவது அறிவிப்பாளர் ஹானீ பின் உஸ்மான் என்பவரும் யாரென அறியப்படாதவர்கள். இவ்விருவரையும் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் […]

உடலுறவுக்குப் பின்னர் தான் வலீமா கொடுக்க வேண்டுமா?

உடலுறவுக்குப் பின்னர் தான் வலீமா கொடுக்க வேண்டுமா? இல்லை. திருமணம் முடித்த பின் மணமகன் வலீமா விருந்து கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் வலீமா விருந்தளிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் நபி (ஸல்) அவர்கள் விதிக்கவில்லை. முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னையும் ஸஅது பின் ரபீஃ அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி), “நான் அன்சாரிகளில் அதிக […]

திருமணத்திற்கும் வலிமாவிற்கும் அவசியமானது என்ன? 

திருமணத்திற்கும் வலிமாவிற்கும் அவசியமானது என்ன?  திருமணம் செய்வதற்கு பெண்ணின் மீது எந்த பொருளாதாரச் சுமையையும் இஸ்லாம் சுமத்தவில்லை. பெண்ணுக்கு மஹர் வழங்குவது, வலீமா என்ற விருந்தை வழங்குவது போன்ற கடமைகள் ஆண் மீதே சுமத்தப்பட்டுள்ளது. திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக் கொடை) எனப்படும். ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக […]

நபியின் மாமனார் திருமண விருந்து கொடுத்தார்களா?

நபியின் மாமனார் திருமண விருந்து கொடுத்தார்களா? வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் மார்க்கத்திற்கு முரணாண காரியமாகும். ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண்ணிடமிருந்து எதையும் வாங்கக் கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது. இதே போன்று திருமணத்துக்கென்று வலீமா என்ற விருந்தை ஆண் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண் வீட்டு விருந்து கூடாது என்ற தடை இந்த உத்தரவில் […]

திருமண அன்றே விருந்து வைக்கலாமா?

திருமண அன்றே விருந்து வைக்கலாமா? மணம் முடித்துக் கொண்ட அன்றோ, அல்லது அடுத்தடுத்த நாட்களிலோ எப்போது வேண்டுமானாலும் விருந்தளிக்கலாம். திருமணம் முடித்த மணமகனை வலீமா விருந்து கொடுக்குமாறு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். அவர்கள் திருமணம் முடித்த போதும் வலீமா விருந்தளித்துள்ளார்கள். எனவே ஒருவர் திருமணம் முடித்தால் அவர் விருந்தளிப்பது நபிவழியாகும். அதே சமயம், திருமணம் நடந்த அன்றே வைக்க வேண்டும் என்றோ, அல்லது ஓரிரு நாட்கள் கழித்து வைக்க வேண்டும் என்றோ நபிகள் நாயகம் […]

ஏழைகளுக்கு தனியாக விருந்து வைக்கலாமா?

ஏழைகளுக்கு தனியாக விருந்து வைக்கலாமா? கூடாது. ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படும் விருந்துகள் தான் மிக கெட்ட விருந்து என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் ஏழைகளுக்குத் தனியாக விருந்து வைக்கலாமா? நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பயன்படுத்திய வாசகம் என்ன கருத்தைக் கூறுகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும். ஏழைகள் விடப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படுவதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடுத்தது ஏழைகளுக்கு உணவு கிடைக்க வேண்டும் […]

திருமணநாள், பிறந்தநாள் கொண்டாடலாமா?

திருமணநாள், பிறந்தநாள் கொண்டாடலாமா? கூடாது. பிறந்த நாள், இறந்த நாள், திருமண நாள் என்று பல்வேறு நினைவு நாட்களைக் கொண்டாடுவது இஸ்லாத்தில் இல்லை. இவை அனைத்துமே பிற மதக் கலாச்சாரமாகும். இது போன்று நினைவு நாள் கொண்டாடுவதை மதச் சடங்காகக் கருதி மாற்று மதத்தவர்கள் செய்து வருவதால் அதை முஸ்லிம்கள் செய்யக் கூடாது. யார் இன்னொரு சமுதாயத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சார்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் – இப்னு உமர் (ரலி). […]

நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தை குறையுடன் பிறக்குமா?

நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தை குறையுடன் பிறக்குமா? இல்லை. நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் குறைபாடுள்ள குழைந்தகளாகப் பிறக்கும் என்று மூடத்தனமான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு சில மருத்துவர்கள் கூறுவதாகவும் அவர்கள் வாதங்களை வைக்கின்றனர். ஆனால் பலகாரணங்களால் இது தவறாகும். நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுள்ள குழைந்தைகளாகப் பிறக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. மாறாக குறைபாடுடன் பிறக்கும் சில குழந்தையின் பெற்றோர்கள் தங்களுக்கு மத்தியில் நெருங்கிய உறவு […]

பெண்ணின் திருமண வயது என்ன?

பெண்ணின் திருமண வயது என்ன? பருவவயது அடைந்து விட்டால் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று இஸ்லாம் அனுமதித்துள்ளது. பதினெட்டு வயதில் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பல நாடுகளில் சட்டம் போடப்பட்டாலும் அதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது. சிறு வயதுப் பெண்ணுக்கு குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா? என்று கேட்டுள்ளீர்கள். குடும்ப நிர்வாகத்துக்காகத் தான் திருமணம் என்பது அடிப்படையில் தவறாகும். உடல் தேவைக்காகத் தான் திருமணம். எத்தனை வயதில் திருமணம் நடந்தாலும் அடுத்த நாளே […]

மணப்பெண் ஆண் வயது வித்தியாசம் எவ்வளவு?

பெண்ணின் திருமண வயது என்ன? திருமணத்தில் வயது வித்தியாசம் இஸ்லாத்தில் ஒரு பிரச்சனையே இல்லை. மனம் விரும்பினால் ஒருவர் தன்னை விட வயது குறைந்தவரையோ வயது அதிகமானவரையோ மணந்து கொள்ளலாம்.

சித்தி மகளை மணமுடிக்கலாமா?

சித்தி மகளை மணமுடிக்கலாமா? திருமணம் முடிக்கலாம். தாயின்  சகோதரியுடைய மகளைத் திருமணம் செய்துகொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது. திருமணம் செய்துகொள்ள தடை செய்யப்பட்டவர்களை திருக்குர்ஆனில் இறைவன் பட்டியலிடுகின்றான். இறைவன் குறிப்பிட்டுக் காட்டிய நபர்களைத் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்பட்டவர்கள் என்று இறைவன் தெளிவுபடுத்துகிறான்.  حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمْ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنْ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمْ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمْ اللَّاتِي […]

தாலி கருகமணி அணியலாமா?

தாலி கருகமணி அணியலாமா? கூடாது. திருமணத்தின் போது தாலி அணிவதும், கருகமணி கட்டுவதும் முழுக்க முழுக்க பிற மதக் கலாச்சாரமாகும். حدثنا عثمان بن أبي شيبة حدثنا أبو النضر حدثنا عبد الرحمن بن ثابت حدثنا حسان بن عطية عن أبي منيب الجرشي عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

ஏகத்துவ கொள்கையுடைய மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் இணை கற்பிப்பவரை மணமுடிக்கலாமா?

ஏகத்துவ கொள்கையுடைய மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் இணை கற்பிப்பவரை மணமுடிக்கலாமா? கூடாது. இணை கற்பிக்கும் பெண்கள், ஆண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் என்று குர்ஆன் (2:221) கூறுகின்றது.  இணை வைப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் தெளிவாகக் கூறி விட்டான். எனவே எந்தக் காரணம் கூறியும் அதை நியாயப்படுத்த முடியாது. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் […]

பிற மத பெண்ணை விரும்பலாமா?

பிற மத பெண்ணை விரும்பலாமா? முஸ்லிமல்லாத ஆணோ, பெண்ணோ அவர் இஸ்லாத்தை எற்றுக் கொள்ள முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க தக்க காரணம் இல்லாமல் மறுக்கலாகாது. கணவனை இழந்திருந்த அனஸ் ரலி அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் அவர்களை அபூதல்ஹா விரும்பினார். ஆனால் அவர் அப்போது முஸ்லிமாக இருக்கவில்லை. ஆனால் உம்மு ஸுலைம் அவர்கள் இஸ்லாத்தை நீர் ஏற்றுக் கொண்டால் அதையே மஹராகக் கருதி உம்மைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உம்மு ஸுலைம் […]

காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா? காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பித் தான் திருமணமே செய்ய வேண்டும். அதைத் தாண்டி காதல் என்ற பெயரில் தற்போது நடக்கும் செயல்களுக்கு அனுமதியில்லை. இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. வலிமையான ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.  காத்திருக்கும் […]

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் போனில் பேசலாமா?

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் போனில் பேசலாமா? கூடாது. ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். 5141حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ مَا […]

திருமணம் கட்டாயமா? மணமுடிக்க உரிய சக்தி எது?

திருமணம் கட்டாயமா? மணமுடிக்க உரிய சக்தி எது? திருமணம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: وَأَنكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمْ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ(32)32 உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் […]

சிறுவயது ஆயிஷாவை நபி திருமணம் செய்தது ஏன்?

சிறுவயது ஆயிஷாவை நபி திருமணம் செய்தது ஏன்? சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப்பட்டுள்ளது. 5133 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ […]

ஒழுக்கம் கெட்டவருக்கு அதேமாதிரி துணைதான் அமையுமா?

ஒழுக்கம் கெட்டவருக்கு அதேமாதிரி துணைதான் அமையுமா? இல்லை. ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று ஹதீஸ் உள்ளதா?  ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை. ஆனால் குர்ஆன் வசனங்கள் இக்கருத்தைக் கூறுவதாக சிலர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர். குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் கொண்டு இந்தத் தவறை செய்து வருகின்றனர். الزَّانِي لَا يَنكِحُ إلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ […]

திருமணத்துக்கு பத்திரிகை அடிக்கலாமா?

திருமணத்துக்கு பத்திரிகை அடிக்கலாமா? அவசியம் எனில் சாதாரண காகிதத்தில் குறைந்த செலவில் அச்சிட்டுக் கொண்டால் அது குற்றமாகாது. தவிர்ப்பது நல்லது. பத்திரிகை அடித்தல், திருமண மண்டபம் பிடித்தல் போன்றவை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலத்தில் இல்லாமல் பிற்காலத்தில் உருவானதாகும். இதற்கு நேரடியான அனுமதியை அல்லது நேரடியான தடையை நாம் குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ காண முடியாது. ஆனாலும் இஸ்லாமியத் திருமணத்துக்கு என பொதுவான ஒழுங்கும் நெறியும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதற்கு முரணில்லாத வகையில் தான் திருமணத்தை அமைத்துக் கொள்ள […]

திருமணத்தில் கழுத்துப்பட்டி அணியலாமா?

திருமணத்தில் கழுத்துப்பட்டி அணியலாமா? இது போன்ற ஆடைகளை பொதுவாக ஒருவர் அணியலாம் என்றாலும் திருமணத்தின் சரத்துகளில் ஒன்றாக ஆக்கி மக்களுக்குச் சிரமத்தைக் கொடுப்பதால் இதைத் தவிர்ப்பது தான் நல்ல முஸ்லிமுக்கு அழகாகும். திருமணத்தின் போது கழுத்துப்பட்டி, Dress Code அணியும் வழக்கம் இலங்கை முஸ்லிம்களிடம் உள்ளது. இதற்காக பத்தாயிரம் முதல் பதினந்தாயிரம் வரை செலவு செய்கிறார்கள். சிலர் இந்த உடையை அதன் பின்னர் ஒரு தடவை கூட அணிவதில்லை.  பொதுவாக உடைகளில் பல வகைகள் உள்ளன. அன்றாடம் […]

மத்ஹப் பெண்ணை மணக்கலாமா?

திருமணத்தில் கழுத்துப்பட்டி அணியலாமா? கூடாது. தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர் தன்னைப் போன்ற தவ்ஹீத் கொள்கையில் உள்ள பெண்ணை மணமுடிப்பதே நபிவழி. இதற்கு மாற்றமாக தர்ஹா போன்ற இணைவைப்புக் காரியங்களில் ஈடுபடும் பெண்கள் மத்ஹப் போன்ற பித்அத்களை பின்பற்றக்கூடிய பெண்கள் ஆகியோர் தவ்ஹீத் கொள்கையை ஏற்காதவரை அவர்களைத் திருமணம் செய்வது கூடாது.   இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை […]

எனது விருப்பமின்றி, மாப்பிள்ளையை பார்க்கின்றனர்!

பெண்ணின் புகார் எனது விருப்பம் இல்லாத மாப்பிள்ளையை எனக்கு திருமணம் செய்வதற்காக எனது பெற்றோர் நிச்சயித்துள்ளனர். நான் என்ன செய்வது? அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று மறுக்கலாமா?   மறுக்கலாம். தனக்குப் பிடித்தவரைக் கணவனாக தேர்வு செய்ய பெண்ணிற்கு இஸ்லாத்தில் உரிமைவழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம்செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “கன்னி கழிந்த பெண்ணை, அவளது(வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப்பெண்ணிடம் (ஏதேனும் ஒரு […]

5) பங்கிடுதல் மற்றும் பிற சட்டங்கள்

பங்கிடுதல் குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை. அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள். அல்குர்ஆன் (22 : 36) இந்த […]

4) பிராணியை அறுத்தல்

எங்கே கொடுப்பது? முஸல்லா எனும் திடலில் நபி (ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தார்கள்.”  அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி). நூற்கள் : புகாரி(5552), அபூதாவூத் (2428), நஸயீ (1571) நபி (ஸல்) அவர்கள் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் முஸல்லா என்ற திடலில் குர்பானி கொடுத்துள்ளார்கள். பொதுவான ஒரு இடத்தில் வெளிப்படையாக அறுக்கும் போது ஏழை எளியவர்கள் இதைக் கண்டு கொள்வார்கள். குர்பானி கொடுத்தவர்களிடம் சென்று இறைச்சியை அவர்கள் வாங்குவதற்கு இம்முறை உதவியாக இருக்கும். இந்த நோக்கத்திற்காக நபி (ஸல்) […]

3) குர்பானிப் பிராணிகள்

குர்பானிப் பிராணிகள் ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது. கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதில் இருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்.  (அல்குர்ஆன்:) ➚ இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது அன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை […]

2) யார்மீது கடமை?

யார்மீது கடமை? குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) […]

1) முன்னுரை

குர்பானியின் சட்டங்கள் தொகுப்பு : இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர்கள், மேலப்பாளையம்)   முன்னுரை நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியதைப் போல் குர்பானியின் சட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஆனால் குர்பானி தொடர்பாக பல தவறான நம்பிக்கைகள் மக்களிடத்தில் […]

ருகூவிற்குப் பிறகு என்ன கூற வேண்டும்?

ருகூவிற்குப் பிறகு என்ன கூற வேண்டும்? தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்று கூறுவது நபிவழி என்ற கருத்தை நாம் கூறி அதனை நடைமுறைப்படுத்தியும் வந்தோம். அதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துரைக்கப்பட்டது. நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது “ஸமி அல்லாஹூ லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை […]

நடுவிரலில் மோதிரம் அணியலாமா?

நடுவிரலில் மோதிரம் அணியலாமா? நடுவிரலிலும் அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைப்பாட்டைத் தான் நாம் முன்னர் கொண்டிருந்தோம். இவ்வாறு தான் நேரடி கேள்வி பதிலின் போதும் நமது பத்திரிகைகளிலும் இவ்வாறே முன்னர் கூறியுள்ளோம். ஆனால் அது குறித்த ஹதீஸை மறு ஆய்வு செய்த போது இந்த விரல்களில் மோதிரம் அணிவது தவறல்ல என்ற முடிவுக்கே வர முடிகிறது. இது குறித்த விபரம் வருமாறு: இதற்கு அடிப்படையாக முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் […]

தொழுகையில் சப்தமிட்டு ஆமீன் கூறுவது கட்டாயமா?

தொழுகையில் சப்தமிட்டு ஆமீன் கூறுவது கட்டாயமா? தொழுகையில் கண்டிப்பாக சப்தமிட்டே ஆமீன் கூற வேண்டும் என்பதற்கு ஆதாரமாகப் பின்வரும் செய்தி எடுத்து வைக்கப்பட்டது. இந்தப் பள்ளிவாசலில் 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். இமாம் “கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்’ எனக் கூறும் போது அந்த நபித் தோழர்களிடமிருந்து “ஆமீன்’ என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அதா.  நூல்: பைஹகீ (2556), பாகம்: 2 பக்கம்: 59 நபியவர்கள் காலத்தில் நடந்த சம்பவமாகக் கருதியே இது ஆரம்ப காலத்தில் […]

வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதலாமா?

வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதலாமா? வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்பதே ஆரம்பத்தில் நம்முடைய நிலைப்பாடாக இருந்தது. இது தொடர்பாக ஏகத்துவம் மற்றும் தீன்குலப் பெண்மணி இதழ்களில் நாம் எழுதியுள்ளோம். இதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாக எடுத்து வைத்தோம். ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீது (ரலி).  நூல்: ஹாகிம் (3392) ஆனால் மேற்கண்ட […]

நோன்பு திறக்கும் துஆ

நோன்பு திறக்கும் துஆ நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது “தஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள். (பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தது. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்). அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி). நூல்கள்: அபூதாபூத் 2010, ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம் கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்தோம். […]

முன்னுரை

மார்க்க ஆய்வுகளும் மாற்றப்பட்ட நிலைப்பாடுகளும் திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம். இதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் வளைந்து கொடுத்ததில்லை. இந்த அடிப்படைக் கொள்கையில் நம்மிடம் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டு அதை அவ்வப்போது பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறோம். நம்மை விடப் பல […]

மட்டம் தட்டாதீர்!

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பிறருடைய மானம் புனிதமானது மறுமையை நம்பி வாழும் முஸ்லிம்களில் பலர் பிறருடைய  பொருளை திருடுவது கிடையாது. பிறருடைய சொத்துக்களை அபகரிப்பது பெரும்பாவம் என்று உணர்ந்திருக்கிறார்கள். எனினும் பிறருடைய மானம் அதை விட புனிதமானது, மதிப்பு மிக்கது என்பதை விளங்காமல் இருக்கிறார்கள்.  நண்பர்கள் பலரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு […]

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய கண்ணியம்

பெண்களை பற்றி உலகில் உள்ள பல்வேறு மதங்கள், கொள்கைகள், சித்தாந்தங்கள் என்ன சொல்கிறது என்று ஆய்வு செய்து பார்த்தால், இஸ்லாம் தவிர உள்ள மற்ற கொள்கைகள் பெண்களை எவ்வளவு இழிவாக மதிக்கிறது என்பதையும் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். அதே வேளையில் இஸ்லாம் பெண்களுக்கு எவ்வளவு கண்ணியம் தருகிறது என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும். பெண்களைப் பற்றி பிறமதங்கள், கொள்கைள் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ ‘பெண் புத்தி பின் புத்தி’ ‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’ 04.09.1987 அன்று […]

மறுமையை நாசமாக்கும் கடன்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கடன் கொடுக்கக் கூடியவர்களாகவோ, கடன் வாங்கக் கூடியவர்களாகவோ இருப்போம். கடன் பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் நடந்துக் கொள்ள வேண்டிய முறைகளை இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது. கடன் வாங்குவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. எனினும், கடன் வாங்குபவர், தான் […]

3) வரலாற்றுப் பின்னணியில்

வரலாற்றுப் பின்னணியில் இந்திய முஸ்லிம்களிடம் தொப்பி மிகுந்த முக்கியத்தைப் பெற்றதற்கு வரலாற்று ரீதியான காரணமும் உள்ளது. உலக இஸ்லாமியர்களுக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒரு நாடு தலைமை வகித்து வந்தது. கிலாஃபத் என்று சொல்லப்பட்ட இந்த தலைமைத்துவம் கடைசியாக துருக்கி வசம் வந்தது. துருக்கி தான் இஸ்லாமிய உலகின் தலைமையாக கருதப்பட்ட நேரத்தில் இந்தியாவைப் போல் துருக்கியும் அடிமைப்படுத்தப்பட்டது. எனவே இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட அதே நேரத்தில் துருக்கியின் கிலாஃபத்தை மீட்பதற்கும் பாடுபட்டனர். இதற்காக கிலாஃபத் […]

2) குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இல்லை.

திருக்குர்ஆனில் ஆதாரம் இல்லை. இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் தொப்பி அணிவது பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது? தொப்பி அணிவதை வலியுறுத்தியோ ஆர்வமூட்டியோ திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்பது தான் இக்கேள்விக்கான விடையாகும். தொப்பியை வலியுறுத்துவது ஒரு புறமிருக்கட்டும். தொப்பியைக் குறிப்பதற்கு அரபு மொழியில் பல சொற்கள் உள்ளன. அந்தச் சொற்களில் ஒரு சொல் கூட குர்ஆனில் கூறப்படவில்லை. தொப்பி என்ற சொல்லே குர்ஆனில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தொப்பி அணிவது […]

1) முன்னுரை

அறிமுகம் தொப்பி அணிவது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடையாளம் என இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். தொழுகை நோன்பு போன்ற வணக்கம் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ தாடி போன்ற வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ அதைப் பெரிதுபடுத்தாத முஸ்லிம்கள், ஒருவர் தொப்பி அணியத் தவறினால் அதைப் பெரிதுபடுத்துவதைக் காண முடிகிறது. தமிழகத்தில் பல பள்ளிவாசல்களில் தொப்பி அணியாதவர் பள்ளிவாசலில் தொழ அனுமதிக்கப்பட மாட்டார் என்று அறிவிப்பு பலகையே வைத்துள்ளதைக் காண முடிகிறது. எல்லா நேரத்திலும் தொப்பி அணியாவிட்டாலும் தொழுகை, […]

2) இறைவனை காண முடியுமா?

இறைவணைக் காண முடியுமா? மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காணும் வரை உம்மை நம்பவே மாட்டோம் என்று (மூஸாவை நோக்கி) நீங்கள் கூறினீர்கள். உடனேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடி உங்களைப் பிடித்துக் கொண்டது. பிறகு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களை மரணிக்கச் செய்தபின் உங்களை நாம் எழுப்பினோம். (அல்குர்ஆன்: 2:55-56) ➚ மூஸா (அலை) அவர்களது காலத்து இஸ்ரவேலர்களின் விபரீதமான கோரிக்கையையும் அதனால் ஏற்பட்ட விளைவையும் நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு இறைவன் […]

1) முன்னுரை

இறைவனைக் காண முடியுமா? பதிப்புரை இறைவனை நேரில் கண்டதாக கூறுவர் பலர். இறைவன் என்னுள் ஐக்கியமாகி விட்டான் என்று கூறுவர் பலர். இறைவன் உருவமற்றவன் என்றும், அவன் ஒரு ஒளி என்றும் கூறி அவனை காணவே முடியாது என்று கூறுபவர் பலர். இறைவனைk காண முடியுமா? முடியாதா? முடியும் என்றால் எப்போது காண்பது? யார் காண்பது? என்பன போன்ற விசயங்களுக்கு விளக்கமளிக்கிறது இந்நுால் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களால் ‘அல்ஜன்னத்‘ இதழில் எழுதப்பட்டு தற்போது இதனை நுாலாகத் […]

Next Page » « Previous Page