துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா? இல்லை. இது பித்அத். மய்யித்தை அடக்கம் செய்தபின் இறந்தவரின் வீட்டிற்கு முன்னால் அணிவகுத்து நின்று ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து கைகொடுத்துக் கொள்ளும் வழக்கம் சில முஸ்லிம் ஊர்களில் காணப்படுகிறது. ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ளாதவர்கள் கூட கட்டாயம் இதில் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சிக்கு வராதவர்கள் இறந்தவருக்கு மிகப்பெரும் எதிரி போல் சில ஊர்களில் கருதப்படுகின்றனர். ஒரு முஸ்லிம் சகோதரர் மரணித்துவிட்டால் அவருக்காக ஜனாசா தொழுகையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்வது […]