Author: Trichy Farook

136. நபியின் கப்ரு ஸியாரத்தின் போது என்ன ஓத வேண்டும்?

மஸ்ஜிதுந் நபவிக்குத் தொழும் நோக்கத்திற்காக சென்றால், அங்கே நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அப்போது பொது மையவாடிகளில் ஓதும் பொதுவான துஆவினை ஓதினால் போதுமா? பதில் மஸ்ஜிதுந்நபவிக்கென்றோ, நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கென்றோ தனிப்பட்ட எந்த துஆவும் ஹதீஸ்களில் இல்லை. “அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்’ (அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை […]

135. தவாஃபுல் விதாவுக்குப் பிறகு மக்காவில் தங்கலாமா?

தவாஃபுல் விதாவுக்குப் பிறகு மக்காவில் தங்கக்கூடாது என சொல்லப்படுவதால், அதற்கு பிறகு உபரியான உம்ராக்கள் செய்யவோ, மார்க்கம் சேராத சொந்த வேலைகளுக்கோ கூட தங்கக் கூடாதா? அப்படி மற்ற தேவைகளுக்காக தங்கவேண்டி இருந்தால் அதுவரை தவாஃபுல் விதாவை தள்ளிபோடலாமா? அதிகப்பட்சமாக எத்தனை நாள் வரை தள்ளிப் போடலாம்? பதில் (ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்! அவன் […]

134. இஸ்திஹாளா தொடர் உதிரப் போக்கு இருந்தால், தொழுகை, தவாஃப், ஸயீ செய்யலாமா?

தொடர் உதிரப்போக்கு போல் நாள் கணக்கின்றி தொடர்ந்து, அதே சமயம் அதிகமாகவும் இல்லாமல் மிகக் கொஞ்சமாக தொடர்ந்து மாதவிடாய் இருப்பதை இஸ்திஹாளா (தொடர் உதிரப் போக்கு) கணக்கில் எடுத்துக் கொண்டு தொழுகை, தவாஃப், ஸயீ போன்ற அமல்களை செய்யலாமா? பதில் மூன்று அல்லது ஏழு என ஒரு பெண்ணுக்கு வழக்கமாக வரக்கூடிய நாட்களைத் தாண்டி அதிகமான நாட்கள் உதிரப் போக்கு ஏற்பட்டால் அது இஸ்திஹாளா தான். இரத்தம் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: […]

133. தஹ்மீதும், ஸலவாத்தும் சொல்லிதான் துஆ செய்ய வேண்டுமா?

? எந்த இடத்தில் துஆ செய்தாலும் தஹ்மீதும், ஸலவாத்தும் சொல்லிதான் துஆ செய்ய வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகளின்போது கைகளை உயர்த்தி பிரார்த்தித்ததால் நாமும் கைகளை உயர்த்தி பிரார்த்திப்பது தான் சுன்னத் என்பது சரியா? அரபாவில் மட்டும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தால் போதுமா? பதில் தஹ்மீது, ஸலவாத் சொல்லித் தான் துஆ செய்ய வேண்டும் என்று ஹதீஸ் எதுவும் வரவில்லை. பொதுவாக சாப்பிடும் போது, சாப்பிட்டு முடித்ததும், கழிவறை செல்லும் போது. படுக்கும் போது […]

132. 13வது நாளில் கல் எறியாமல் கிளம்ப விரும்பினால்?

12வது நாளில் சூரியன் மறையும் முன்பாக கல்லெறிந்துவிட்டவர்கள் 13வது நாளில் கல் எறியாமல் கிளம்ப விரும்பினால், அவர்கள் அந்த நாளில் புறப்படும் நேரம் சூரியன் மறையும் முன்பாக இருக்கவேண்டுமா? அல்லது கல்லெறிவது மட்டும் சூரியன் மறையும் முன்பாக இருந்தால் போதுமா? பதில் 12ஆம் நாள் சூரியன் மறைவதற்கு முன்னால் புறப்படுவதாக இருந்தால் மட்டுமே 13ஆம் நாள் கல் எறியத் தேவையில்லை.

131. 2 நாட்கள் எறிய வேண்டிய கற்களை, ஒரே நாளில் எறியலாமா? எப்படி?

தக்க காரணம் உள்ளவர்கள் இரண்டு நாட்கள் எறியவேண்டிய கற்களை ஒரே நாளில் எறியலாம் என்றால், ஒவ்வொரு ஜம்ராவிலும் தலா 14 என தொடர்ந்து ஒரே நேரத்தில் எறிந்துவிடலாமா? பதில் மினாவில் தங்காமல் இருப்பதற்கும், 10ஆம் நாள் கல்லெறிவதற்கும், அதன் பிறகு இரண்டு நாட்களுக்குரிய கல்லெறிதலை ஒரே நாளில் சேர்த்து எறிவதற்கும் ஒட்டகம் மேய்ப்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (திர்மிதீ: 878) இதன் அடிப்படையில் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து 14 கற்கள் எறிந்து கொள்ளலாம்.

130. கல் எறிந்த பிறகு, அவசியம் எனில் வேறு இடங்களுக்கு செல்லலாமா?

கல் எறிந்த பிறகு வேறு இடங்களுக்கு செல்லத் தக்க காரணம் இல்லாமல், சொந்தத் தேவைகளுக்காக மக்காவிலுள்ள ரூமுக்கோ, ஹோட்டலுக்கோ பகலில் செல்ல அனுமதி உண்டா? கல்லெறிந்து முடியும்வரை முழு நாட்களும் மினாவில்தான் தங்கி இருக்கவேண்டுமா? பதில் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (புகாரி: […]

129. கல்லெறியும் நாட்களில் வேறு அமல்கள் செய்யலாமா?

கல் எறிவது அல்லாமல் இந்த நாட்களில் வேறு அமல்கள் எதுவுமுள்ளதா? நாம் விரும்பி செய்யக்கூடிய உபரியான அமல்கள் மட்டும்தானா? வாய்ப்பு கிடைத்தால் தவாஃப் செய்ய மக்காவுக்கு வரலாமா? பதில் அதிகமதிகம் தவாஃப் செய்து கொள்ளலாம். தொழுகை, திக்ர் என விரும்பிய அமல்களைச் செய்து கொள்ளலாம். “அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்:(திர்மிதீ: 795),(அபூதாவூத்: 1618), நஸயீ 2875)

128. 3வது ஜம்ராவில் தள்ளி நின்று துஆ செய்யவேண்டுமா?

3வது ஜம்ராவில் கல்லெறிந்த பின், அந்த இடத்தில் நிற்காமல் சற்று தள்ளி நின்று துஆ செய்யவேண்டுமா?  பதில் (புகாரி: 1751, 1753)ஆகிய ஹதீஸ்களின்படி முதல் இரண்டு ஜம்ராக்களில் துஆச் செய்வது நபிவழியாகும். மூன்றாவது, கடைசி ஜம்ராவில் துஆச் செய்வது இல்லை.

127. எதற்கு வலது பக்கமாக துஆ செய்ய வேண்டும்? நமக்கா?

முதல் ஜம்ராவில் கல் எறிந்த பிறகு வலது பக்கமாக நகர்ந்து நின்றும், இரண்டாவது ஜம்ராவில் கல் எறிந்த பிறகு இடது பக்கமாக நகர்ந்து நின்றும் கிப்லாவை நோக்கி துஆ செய்யவேண்டுமா? இதில் வலது பக்கம், இடது பக்கம் என்பது ஜம்ராவுக்கு வலது / இடது பக்கம் என்று குறிக்குமா? அங்குள்ள மஸ்ஜிதுல் ஹீஃபாவுக்கு வலது / இடது பக்கம் என்று குறிக்குமா? பதில் கல்லெறிபவரின் வலது பக்கம், இடது பக்கத்தையே குறிக்கும். இப்னு உமர் (ரலி) அவர்கள் […]

126. 3 நாட்களுக்கும், ஒரே நாளில் கற்களை பொறுக்கிக் கொள்ளலாமா?

11, 12, 13 ஆகிய நாட்களில் எறியவேண்டிய கற்களை எப்போது, எங்கு பொறுக்க வேண்டும்? 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரே நாளில் பொறுக்கி வைத்துக் கொள்ளலாமா? பதில் மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக மினாவில் பொறுக்கிக் கொள்ளலாம்.

125. 10ம் நாள் லுஹரை எங்கு தொழுவது? கஸ்ராகவா?

பத்தாம் நாளின் ளுஹர் தொழுகையை மக்காவில் தொழுவதுடன் மினாவிலும் வந்து 2வது முறை தொழ வேண்டுமா? இரண்டு முறையும் 4 ரக்அத்கள் முழுமையாக தொழ வேண்டுமா? அன்றைய தொழுகைகளில் எல்லா வக்துகளையும் கஸ்ரு இல்லாமல் முழுமையாகத் தான் தொழவேண்டும்? பதில் பத்தாம் நாள் அன்று மினாவில் “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும். இது “தவாஃப் ஸியாரா’ […]

124. மாதவிடாய் பெண்கள் தவாஃப், ஸயீ எப்போது செய்வது?

அன்றைய தினம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தவாஃபுல் இஃபாளாவையும், ஸயீயையும் எப்போது செய்வது? தூய்மையாவதற்கு ஒரு வாரம் ஆகிவிட்டால் ஹஜ்ஜுடைய நாட்கள் முடிந்துவிடும் நிலையில் எப்படி அவற்றை நிறைவேற்றுவது? பதில் இத்தகைய பெண்களுக்கு இரண்டு விதமான நெருக்கடிகள் ஏற்படலாம். 1. தூய்மையாவதற்கு முன்னால் பயணம் புறப்பட நேரிடலாம். 2. தூய்மையாவதற்குரிய காலம் ஹஜ்ஜின் 11, 12, 13 நாட்களையும் தாண்டிச் செல்லலாம். தவாஃபுல் இஃபாளா என்பது ஹஜ்ஜின் தவாஃபாகும். இதைச் செய்யாவிட்டால் ஹஜ் நிறைவேறாது. இதைக் கீழ்க்காணும் […]

123. 10ம் நாள் அஸருக்குள் தாவாஃபுல் இஃபாளா செய்யத் தவறியவர்கள் இரவில் செய்யலாமா?

தவாஃபுல் இஃபாளாவை 10வது நாளின் அஸர் நேரம் முடிவதற்குள் செய்யத் தவறியவர்கள் இரவில் செய்யலாமா? அப்படி அஸர் முடிய முன் ‘தவாஃபுல் இஃபாளா’வை தவறவிட்டவர்கள், அதற்கு முன்பே இஹ்ராம் ஆடையைக் களைந்திருப் பார்களேயானால், மீண்டும் இஹ்ராம் ஆடை அணிந்து, நிய்யத் செய்து, மறுநாள் வந்துதான் தவாஃபுல் இஃபாளா செய்ய வேண்டுமா? பதில் பத்தாம் நாள் சூரியன் மறைவதற்கு முன்னால் தவாப் செய்து விட்டால் சட்டை பேண்ட் போன்ற தையல் ஆடை அணிந்து தவாப் செய்யும் சலுகை கிடைக்கும். […]

122. அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் பரிகார நோன்பு நோற்கலாமா?

குர்பானி கொடுக்க இயலாதவர்கள் அங்கு இருக்கும்போது நோற்க வேண்டிய அந்த மூன்று நோன்புகளை அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில்  நோற்கலாம் என்று கூறுகிறீர்கள். பொதுவாகவே அந்த மூன்று நாட்களும் நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் அல்லவா? ஹாஜிகளுக்கு மட்டும் அந்த நாட்களில் நோன்பு நோற்க சலுகை உள்ளதா? அல்லது அய்யாமுத் தஷ்ரீக் முடிந்த பிறகு நோன்பு நோற்றுவிட்டு தவாஃபுல் விதா செய்யவேண்டுமா? பதில் ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறியதாவது: குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர […]

121. பலவீனர்களுக்கு உதவியாக நாம் கல் எறியலாமா?

நமக்கு கல் எறிந்த பிறகு, நோயாளி மற்றும் பலவீனர்களுக்கு உதவி செய்ய அவர்களுக்கு பதிலாக நாம் கல் எறியலாமா? பதில் உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (அல்குர்ஆன்: 64:16) ➚ முடிந்தவரை அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தாங்களே கல்லெறிய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் பிறரிடம் பொறுப்புச் சாட்டலாம். ஆனால் இவ்வாறு பிறருக்காக எறிபவர்கள் முதலில் தமக்காக எறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு தான் மற்றவர்களுக்காகக் கல்லெறிய வேண்டும்.

120. உதயத்திற்கு முன் கல்லெறியும் சலுகை பெண்களுக்கு மட்டுமா?

10ஆம் நாள் சூரிய உதயத்திற்கு முன் கல்லெறிந்துவிடக்கூடிய சலுகை பெண்களுக்கு மட்டும்தானா? வயோதிகர்கள் ஆண்களாக இருந்தால் இது பொருந்துமா? சூரிய உதயத்திற்கு முன் கல்லெறிந்துவிட அனுமதியளிக்கப் பட்டவர்கள் அன்றைய ஃபஜ்ரைத் தொழுவதற்காக மீண்டும் முஸ்தலிஃபாவில் தங்கிய இடத்திற்கே வந்துவிட வேண்டுமா? அல்லது கல் எறிந்த பக்கத்து இடங்களிலேயே தொழலாமா? பெண்களுக்கு துணையாக உடன் வந்த ஆண்கள் ஃபஜ்ரை எங்கு நிறைவேற்ற வேண்டும்? பதில் சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் […]

119. மஷ்அருல் ஹராம் திக்ரு எத்தனை தடவை?

முஸ்தலிஃபாவில் ஃபஜ்ரைத் தொழுதுவிட்டு, ‘மஷ்அருல் ஹராம்’முக்கு வந்து கிப்லாவை நோக்கி துஆ செய்துவிட்டு (முஸ்லிமின் 2137 ஹதீஸ்படி) சொல்லவேண்டிய “அல்லாஹ் அக்பர், லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு” என்பதை ஒருமுறை சொன்னால் போதுமா? பதில் எண்ணிக்கை எதுவும் ஹதீஸில் இடம்பெறவில்லை. எனவே, ஒரு முறை சொன்னால் பொதுமானது.

118. கற்களை எங்கு பொறுக்குவது?

முஸ்தலிபாவில் தான் கல் பொறுக்கவேண்டும் என்பது சரியானதல்ல என்றாலும், வாய்ப்பு கிடைத்தால் அங்கேயே பொறுக்கி வைத்துக் கொள்வது தவறாகுமா? கற்களை நமக்காக நம்முடனிருக்கும் பிறர் பொறுக்கித் தரலாமா? அவரவர் தான் பொறுக்க வேண்டுமா? பதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹஸ்ஸருக்கு வந்ததும், “ஜம்ராவில் எறிவதற்கு பொடிக் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். முஹஸ்ஸர் என்பது மினாவாகும். (முஸ்லிம்: 2248) இயன்றவர்கள் நபி (ஸல்) அவர்களின் இந்த வழிமுறையைப் பின்பற்றுவது தான் சரியாகும். இயலாதவர்களுக்கு கற்களைப் […]

116. மினாவில் 8ஆம் எந்த சுன்னத் தொழுகையோ, நஃபிலோ, வித்ரோ கிடையாது என்பது சரிதானா?

மினாவில் 8ஆம் நாளன்று எந்த சுன்னத் தொழுகையோ, நஃபிலோ, வித்ரோ கிடையாது என்பது சரிதானா? முஸ்தலிபாவில் படுத்து உறங்கிய பிறகு அன்றைய ஃபஜ்ருடைய முன் சுன்னத் தொழாமல் ஃபர்ளை மட்டும்தான் தொழ வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் அங்கு கடமையான தொழுகைகளை மட்டுமே தொழுததாக ஹதீஸில் (முஸ்லிம்: 2137) வருகின்றது. இந்த ஹதீஸின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழவில்லை, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழவில்லை என்று வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும். “நபி (ஸல்) […]

115. அரஃபா, ஜபலுர் ரஹ்மாவில் என்ன செய்ய வேண்டும்?

அரஃபாவில் போய் சேர்ந்தது முதலே துஆ செய்யலாமா? ‘ஜபலுர் ரஹ்மா’ மலையடிவாரத்திலோ, அரஃபாவில் மற்ற எங்குமோ துஆ  செய்யும்போது நின்றுக்கொண்டுதான் துஆ செய்ய வேண்டுமா? இயலாதவர்கள் உட்கார்ந்த நிலையிலும் செய்யலாமா? அங்கு எப்போது தல்பியா சொல்லவேண்டும்? துஆ செய்யாத இடைப்பட்ட நேரங்களில் சொல்லவேண்டுமா? பதில் அரபாவில் திக்ரு, துஆக்கள் என்ற எந்த வணக்கத்திலும் ஈடுபடலாம். நிற்க இயலாதவர்கள்  உட்கார்ந்தும் செய்து கொள்ளலாம். துஆ செய்யும் நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் தல்பியா சொல்லிக் கொள்ளலாம். ஜபலுர்ரஹ்மத் என்று […]

114. ஜபலுர் ரஹ்மா மலையில் பெண்கள் ஏறக்கூடாதா?

அங்குள்ள ‘ஜபலுர் ரஹ்மா’ மலையில் ஏறுவது சுன்னத் அல்ல என்றாலும், பெண்கள் அதில் ஏறக்கூடாது என்று சொல்வது சரியா? பதில் அதில் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் ஹஜ்ஜின் கிரியை என்றோ சுன்னத் என்றோ கருதி ஏறக் கூடாது. மற்ற இடங்களுக்கு செல்வது போன்று இங்கும் செல்லலாம்.

113. ரூமுக்கு வந்தவுடன் முடி குறைத்துக் கொள்ளலாமா?

ஹரமுக்குள் கத்தரிக்கோல் போன்றவை அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் ரூமுக்கு வந்தவுடன் முடி குறைத்துக் கொள்ளலாமா? உடனே தான் குறைக்க வேண்டுமா? பதில் உடனே குறைத்து விட்டால் இஹ்ராமை விட்டு வெளியே வந்து விடலாம். இல்லையேல் இஹ்ராமிலிருந்து வெளியேறத் தாமதமாகும்.

112. முடியைக் குறைப்பது என்றால், எல்லா பக்கத்திலுமா?

உம்ராவை முடிக்கும்போது சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் ஆண்களுக்கு தலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் மட்டும் சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளலாமா? தலை முழுதுமே ஏகத்துக்கும் சிறிது குறைக்கவேண்டுமா? தலை முழுவதும் சிறிதளவு ஹஜ் அல்லாத காலங்களில் உம்ரா செய்பவர்களும், ஹஜ் காலத்தில் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுபவர்களும் மழிப்பது தான் சிறந்தது. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ […]

111. தவாஃப், ஸஃயீ அல்லாத நேரங்களில் ஓதுவதற்கென துஆ எதுவுமுள்ளதா?

சயீ செய்யும்போது ஸஃபா, மர்வாவில் ஓதும் திக்ரு, துஆக்கள் அல்லாமல் நடந்துக் கொண்டிருக்கும்போதே ஓதுவதற்கென பிரத்யேகமாக எதுவுமுள்ளதா? பதில் நபி (ஸல்) அவர்கள் ஸயீயின் போது எந்த திக்ரையும் கற்றுத் தரவில்லை. நபிவழி என்றில்லாமல் சாதாரணமாக ஏதேனும் திக்ருகளை ஓதிக் கொண்டு சென்றால் தவறில்லை.

110. குர்ஆனை குறைந்த பட்சம் எத்தனை நாட்களில் முடிக்கலாம்?

குர்ஆனை குறைந்த பட்சம் எத்தனை நாட்களில் முடிக்கலாம்? 3 நாட்கள் நபி(ஸல்) அவர்கள் என்னிடம், “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்புநோற்பீராக!” என்று   கூறினார்கள். “இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது!” என்றுநான் கூறினேன். முடிவில், “ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!”என்று கூறினார்கள். மேலும் “ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை(முழுமையாக) ஓதுவீராக!” என்றார்கள். “இதைவிட அதிகமாக(ஓத) எனக்கு சக்திஉள்ளது!” என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக் கொண்டே வந்துமுடிவில், “மூன்று நாட்களில் ஒரு தடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (புகாரி: 1978)

109. வேட்டி இல்லாவிட்டால் பேண்ட் அணியலாமா?

வேட்டி இல்லாவிட்டால் பேண்ட் அணியலாமா? பதில் இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும் வரை, தைக்கப்படாத மேலாடை மற்றும் வேட்டி அணிய வேண்டும். தைக்கப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது. இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால்சட்டையையோ அணிய வேண்டாம். …..” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) (புகாரி: 134, 366, 1542, 1842, […]

108. ஹெட்ஃபோன், வாக்மேனில் குர்ஆனை கேட்கலாமா?

ஹெட்ஃபோன், வாக்மேனில் குர்ஆனை கேட்கலாமா? கேட்கலாம் அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) ‘அபூ மூஸா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என என்னிடம் கூறினார்கள்.(புகாரி: 5048) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ‘குர்ஆனை எனக்கு ஓதிக்காட்டுங்கள்!’ என்று கூறினார்கள். நான் ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?’ என்று […]

107. மீகாத்தை அடைந்தும் இஹ்ராம் கட்டாதவர்கள் என்ன செய்வது?

மீகாத்தை அடைந்தும் இஹ்ராம் கட்டாதவர்கள் என்ன செய்வது? பதில் நான் எங்கிருந்து உம்ரா செய்ய வேண்டும்? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், நஜ்து வாசிகளுக்கு கர்ன்என்ற இடத்தையும், மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாஎன்ற இடத்தையும், ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாஎன்ற இடத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஸைத் பின் ஜுபைர் (புகாரி: 1522) ஹரம் எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள் அங்கிருந்து ஹரம் […]

106. தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா?

தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா? குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்குங்கள்! சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுகிறதே! கூடாது தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம். حدثنا محمد بن بشار حدثنا عبد الصمد بن عبد الوارث حدثنا هاشم وهو ابن سعيد الكوفي حدثني كنانة مولى صفية قال سمعت صفية تقول دخل علي رسول […]

105. பச்சை விளக்கு இடத்தில் வேகமாக ஒடுவது ஹதீஸில் உள்ளதா?

ஸஃபா மர்வாவுக்கிடையில் உள்ள முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரை ஆண்கள் மட்டும் சிறிது வேகமாக ஓடும்போது தோள்களை லேசாக குலுக்கவேண்டும் என்பது சரியா? சரியென்றால் எவ்வாறு குலுக்கவேண்டும்? இப்படி ஹதீஸில் உள்ளதா? பதில் நபியவர்கள் காலத்தில் பச்சை விளக்கு இல்லை. இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் வேகமாக ஓடினார்கள் என்பதற்காக இன்றைக்கு சவுதி அரசாங்கம் அங்கு ஒரு விளக்கை அமைத்து நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. நபியவர்கள் […]

104. பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் என்ன செய்வது?

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் என்ன செய்வது? பதில் ஹஜ்ஜுக்காகச் சென்றுள்ள பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்? இதனையும் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும். மாதவிலக்கு ஏற்பட்டாலும் ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம். ஆயினும் அவர்கள் தவாஃப் செய்வதும், ஸஃபா, மர்வா இடையே ஓடுவதும் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டைத் தவிர ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம். மக்காவுக்குள் நுழைந்ததற்காக ஆரம்பமாக தவாஃபுல் குதூம் செய்ய வேண்டும் என்பதை முன்னர் அறிந்தோம். இதுவே உம்ராவுக்காகவும், […]

103. மாடியில் தவாஃப் செய்யலாமா?

மாடியில் தவாஃப் செய்யலாமா? செய்யலாம். தவாஃபை தரைத் தளத்தில் செய்ய முடியாவிட்டால் மேல்மாடியில் செய்து கொள்ளலாம். தவறில்லை. மேல் மாடியில் செய்தாலும், ஹஜருல் அஸ்வத்துக்கு நேராக வரும் போது, சைகை செய்ய வேண்டும். அந்தந்த  இடங்களில் கேட்க வேண்டிய பிரார்த்தனையை கேட்க வேண்டும்.

102. மதீனாவுக்குச் செல்ல வேண்டுமா?

மதீனாவுக்குச் செல்ல வேண்டுமா? கடமை இல்லை ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டு மதீனாவுக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்தாலே ஹஜ் முழுமை பெறும்என்று பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றனர். உண்மை என்னவென்றால் மதீனாவுக்குச் சென்று ஸியாரத் செய்வதற்கும் ஹஜ்ஜுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. மதீனாவுக்குச் சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ, அல்லது சுன்னத்தாகவோ, அல்லது விரும்பத்தக்கதாகவோ எந்த ஒரு ஹதீஸிலும் கூறப்படவில்லை. ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்று மினாவில் மூன்று நாட்கள் […]

101. தான் ஹஜ் செய்யாமல் பிறருக்காக ஹஜ் செய்யலாமா?

தான் ஹஜ் செய்யாமல் பிறருக்காக ஹஜ் செய்யலாமா? கூடாது ஒருவரது பிள்ளைகள் தவிர மற்ற உறவினர்களும் அவருக்காக ஹஜ் செய்யலாம். ஆயினும் முதலில் தனக்காக அவர் ஹஜ் செய்திருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு மனிதர் லப்பைக்க அன் ஷுப்ருமா(ஷுப்ருமாவுக்காக இஹ்ராம் கட்டுகிறேன்) என்று கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷுப்ருமா என்பவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கவர், என் சகோதரர் என்றோ என் நெருங்கிய உறவினர் என்றோ […]

100. பிறருக்காக ஹஜ் செய்வது கூடுமா? யார் யாருக்கு செய்யலாம்?

பிறருக்காக ஹஜ் செய்வது கூடுமா? யார் யாருக்கு செய்யலாம்? கூடும். நெருங்கிய உறவினருக்கு மட்டும் ஒவ்வொருவரும் தத்தமது செயலுக்குப் பொறுப்பாளியாவார்; ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. என்றாலும் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. ஹஸ்அம்கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத முதிய வயதுடையவராக இருக்கும் போது ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை […]

099. ஸம்ஸம் நீரை ஊருக்கு எடுத்துச் செல்வது சரியா?

ஸம்ஸம் நீரை ஊருக்கு எடுத்துச் செல்வது சரியா? சரி தான் மக்காவில் ஸம்ஸம் என்று கூறப்படும் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்று நீர் புனிதமானதாக அமைந்துள்ளது. வயிறு நிரம்ப அதை அருந்துவதும், தத்தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்வதும் விரும்பத்தக்கதாகும். ஆயிஷா (ரலி) அவர்கள் ஸம்ஸம்நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர். நூல்: (திர்மிதீ: 963) (886)  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஸம்ஸம்) நீர் […]

098. கபனிடுவதற்கு ஸம்ஸம் நீரை பயன்படுத்தலாமா?

கபனிடுவதற்கு ஸம்ஸம் நீரை பயன்படுத்தலாமா? தேவையற்ற வேலை ஸம்ஸம் நீர் குறித்த பல தவறான நம்பிக்கைகள் நம் சமுதாயத்தில் நிலவுகிறது. இதில் சில. இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்கக் கூடாது என்பதால் இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்காமல் இதை அருந்துவார்கள். இஹ்ராமிலிருந்து விடுபட்டவர்களும், தங்கள் சொந்த ஊரில் அருந்துபவர்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பது கிடையாது. மேலும் இஹ்ராம் ஆடையை ஸம்ஸம் நீரில் கழுவி அதைக் கபனிடுவதற்காகப் பத்திரப்படுத்த வேண்டும் என்பதற்கும், குளிப்பாட்டும் போது ஸம்ஸம் நீரை […]

097. குர்பானி பற்றி விளக்கவும்

குர்பானி கொடுக்க வேண்டும் ஹஜஜுப் பெருநாள் தினத்தில் வசதியுள்ளவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் கொடுக்க வேண்டிய குர்பானி பற்றி மட்டும் இங்கு நாம் விளக்குவோம். கிரான், தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர்கள் பத்தாம் நாளன்று குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் அறிந்துள்ளோம். இத்தகையவர்கள் குர்பானி கொடுக்க வசதியில்லா விட்டால் அதற்குப் பகரமாக வேறு பரிகாரம் செய்து கொள்ளலாம். இயலாவிட்டால் பகரமும் உண்டு அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! […]

095. மக்காவில் 40 ரகஅத்/40 நாட்கள் தொழ வேண்டும் என்று உள்ளதா?

மக்காவில் 40 ரகஅத்/40 நாட்கள் தொழ வேண்டும் என்று உள்ளதா? இல்லை மக்காவில் 40 ரகஅத் தொழ வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை. பலவீனமான ஹதீஸ்கள் மட்டுமே உள்ளன. எனினும், மக்காவில்-மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது மற்ற இடங்களில் தொழுவதை விடப் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியது. ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட வேண்டும். ”எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிது நபவியில்) தொழுவது மஸ்ஜிதுல் ஹராம் தவிர ஏனைய […]

094. நஃபில் தவாஃப் எத்தனை முறை செய்யலாம்? எப்படி செய்வது?

நஃபில் தவாஃப் எத்தனை முறை செய்யலாம்? எல்லை எதுவும் இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். 1) மக்காவுக்குச் சென்றவுடன் செய்யும் தவாஃபுல் குதூம் 2) பத்தாம் நாளன்று செய்ய வேண்டிய தவாஃபுல் இஃபாளா அல்லது தவாஃபுஸ் ஸியாரா 3) மக்காவை விட்டும் ஊர் திரும்பும் போது கடைசியாகச் செய்ய வேண்டிய தவாஃபுல் விதாஃ இவை தவிர விரும்பிய நேரமெல்லாம் நபிலான- உபரியான- தவாஃப்கள் செய்யலாம். ”அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் […]

093. தவாஃபின் போது, அந்நிய ஆண்கள் மீது கை பட்டால் உளுச் செய்ய வேண்டுமா?

தவாஃபின் போது, அந்நிய ஆண்கள் மீது கை பட்டால் உளுச் செய்ய வேண்டுமா? இல்லை பெண்களும் ஆண்களுடன் தவாஃப் செய்யலாம். அவர்களுக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஆயினும், ஆண்களுடன் கலந்து விடாத வண்ணமாக அவர்கள் தவாஃப் செய்ய வேண்டும். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களை விட்டு விலகி (தூரத்திலிருந்து) தவாஃப் செய்ததாக புகாரியில் (1618) காணப்படுகின்றது. எனவே ஆண்களுடன் இரண்டறக் கலந்து விடாதவாறு ஆண்களுக்குப் பின் வரிசையில் அவர்கள் தவாஃப் […]

092. இயலாவிட்டால் வீல் சேரில் தவாஃப் செய்யலாமா?

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால், வீல் சேரில் தவாஃப் செய்யலாமா? செய்யலாம். பொதுவாக, பொருளாதாரம் மற்றும் உடல் சக்தியற்றவர்களுக்கு, ஹஜ் கட்டாயக் கடமையல்ல. எனினும் வயதானவர்கள் ஹஜ் செய்வது தடுக்கப்பட்டதும் அல்ல. மிகவும் நெரிசலான பகுதிகளில், அவர்களால் சமாளிக்க இயலாது, என்பதையும் கவனத்தில் கொள்ளவும். ஹஜ்ஜுக்கு வந்த பிறகு, ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், அவர் வீல் சேரில் தவாஃப் மற்றும் மற்ற கிரியைகளைச் செய்வது குற்றமாகாது. நடந்து தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது […]

091. தவாஃபின் போது தேவைப்பட்டால் பேசலாமா?

தவாஃபின் போது தேவைப்பட்டால் பேசலாமா? அவசியம் என்றால் பேசலாம் தவாஃப் என்பது தொழுகை போன்றதாக இருப்பதால் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதால் தவாஃபுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. ஒரு மனிதர் தனது கையை இன்னொருவருடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டு தவாஃப் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித்தார்கள். இவரது கையைப் பிடித்துக் கொண்டு செல்வீராக என்றும் கூறினார்கள். (புகாரி: 1620, 6703)

090. அரஃபாவில் லுஹர் அஸரை, ஜம்வு தக்தீமாக்குவது சரியா?

அரஃபாவில் லுஹர், அஸ்ரை கஸ்ரு – ஜம்உ செய்யும்போது, அதை ஜம்உ தக்தீமாக (லுஹருடைய வக்திலேயே) தொழவேண்டும். இது சரிதானே? பதில் தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை. (முஸ்லிம்: 2137) ஜம்வு தக்தீமாக, லுஹர் நேரத்தில் லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழ வேண்டும் என்பது சரியானது தான்.

089. தக்பீர் எப்பது கூறுவது?

மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக்கொண்டும், தக்பீர் கூறிக் கொண்டும் செல்லலாம்? இதில் ‘தக்பீர்’ என்பது ‘அல்லாஹு அக்பர்’ என்பது மட்டுமா? மற்றவர்கள் சொல்வதுபோல் கூடுதல் சிறப்பு வார்த்தைகள் எதுவும் ஹதீஸ்களில் உள்ளதா? பதில் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்கüடம் தல்பியாச் சொல்வது குறித்து, “நீங்கள் (மினாவிலிருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?” […]

088. இரவு மினாவில் திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா?

அரஃபாவுக்கு முந்திய அன்று (8ஆம் நாள் முடிந்த) இரவு மினாவில் துஆ, திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா? தூங்கி விடுவது தான் சுன்னத்தா? பதில் மினாவில் துஆ, திக்ரு போன்றவை செய்ததாக எந்த ஹதீசும் இல்லை. எனவே சுன்னத்தான திக்ரு, துஆ போன்றவை இல்லை. எனினும், இந்த நேரத்தில் இன்ன திக்ரு ஓத வேண்டும் என்று நபியவர்கள் காட்டித்தந்த இடங்களைத் தவிர,  ”சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்” போன்ற பொதுவான திக்ருகளை எந்த நேரத்திலும் சொல்லலாம். துஆவும் செய்யலாம். தடையில்லை. 

087. 8க்கு பதிலாக, மினாவிற்கு 7ஆம் நாளே போகலாமா?

எட்டாம் நாள் காலை ஃபஜ்ரு தொழுதுவிட்டு குளித்து இஹ்ராம் அணிந்துக் கொண்டு, லுஹரை மினாவில் தொழுவது போன்ற நேரத்தில் புறப்பட்டால் போதுமா? முற்கூட்டியே செல்லவேண்டுமா? இங்கு சில குழுவினர் 7ஆம் நாள் மாலை இஷாவுக்குப் பின்னர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு மினாவுக்குப் புறப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் 8ஆம் நாள் லுஹர், அஸர், மஃரிப், இஷா மற்றும் மறுநாள் ஃபஜ்ரு ஆகியவற்றை மினாவில் தொழுகிறார்கள். அப்படியானால் 8ஆம் நாளின் ஃபஜ்ரை மக்காவில்தானே தொழுதிருப்பார்கள்? நாம் அந்தக் குழுவினருடன் […]

086. இமாம் எப்போது குத்பா நிகழ்த்தவேண்டும்?

பிறை 7ல் லுஹருக்குப் பின் இமாம் குத்பா நிகழ்த்தவேண்டுமா? ஏற்கனவே சென்று வந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்ததில் அங்கு அவ்வாறு நடத்தப்படுவதில்லை என்று சொல்கிறார்கள். பதில் பிறை 7ல் இமாம் உரை நிகழ்த்த வேண்டும் என்று இல்லை. பிறை 9ல் அரஃபாவில் இமாம் உரை நிகழ்த்த வேண்டும். சூரியன் உச்சி சாய்ந்ததும் “கஸ்வா’ எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் (“உரனா’) பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (முஸ்லிம்: 2137)

085. பெண்கள் எவ்வளவு முடியை வெட்டுவது?

பெண்கள் இஹ்ராமை களையும் முன், ஒரு விரல் நுனியளவு மட்டுமே முடியை வெட்ட வேண்டும் என்று அளவு சொல்கிறார்களே, இது சரியா? பதில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே ஹதீஸில் வருகின்றதே தவிர எவ்வளவு குறைக்க வேண்டும் என்று வரவில்லை.

Next Page » « Previous Page