அபுதாலிஃபிற்கு பாவமன்னிப்பு கேட்டபோது
முஸய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தைன அபூ தா-ப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா பின் முஃகீராவையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் பெரிய தந்தையே! லா இலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரு மில்லை) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதி மொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன் என்று சொன்னார்கள்.
அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் அபூ தா-பே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்த-பின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள்.
இறுதியில் அபூ தாலிஃப் கடைசியாக அவர்களிடம் பேசியது, நான் (என் தந்தை) அப்துல் முத்த-பின் மார்க்கத்தில் இருக்கிறேன் என்பதாகவே இருந்தது. லாஇலாஹா இல்லல்லாஹ் எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன் என்று சொன்னார்கள்.
அப்போது தான் , ”இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத் தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை எனும் (9:113 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதா-ப் தொடர்பாக (நபியவர்கள் வருந்திய போது) அல்லாஹ் (நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர் வழியில் செலுத்திவிடமுடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்” எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.