மனைவி விபச்சாரத்தில் ஈடுபட்டால்? – ஹிலால் பின் உமய்யா
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் (கர்ப்பவதியான) தம் மனைவியை ஷரீக் பின் சஹ்மா என்பவருடன் இணைத்து (இருவருக் குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி வழங்கப்படும் என்று சொன்னார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தம் மனைவியுடன் ஓர் அன்னிய ஆடவன் இருப்பதைக் கண்டாலுமா ஆதாரம் தேடிக் கொண்டு செல்லவேண்டும்? என்று கேட்டார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், (உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென் றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும் என்று சொன்னார்கள். அதற்கு ஹிலால்
(ரலி) அவர்கள், தங்களைச் சத்திய(மார்க்க)த் துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். எனது முதுகைக் கசையடியிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான் என்று சொன்னார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி (ஸல்) அவர்களுக்கு யார் தம் துணைவியர் மீது அவதூறு கூறி என்று தொடங்கும் (24:6-9) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.5
நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால் (ரலி) அவர்களுடைய மனைவிக்கு ஆளனுப்பினார்கள். (இதற்கிடையே) ஹிலால் (ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை) சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் இருவரில் பாவ மன்னிப்புக்கோரி (தவறு தன்னுடயது தான் என்று ஒப்புக் கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகின்றவர் யார்? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால் (ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி இது (பொய்யான சத்திய மாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்திவிடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!) என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திலிருந்து பின்வாங்கி விடுவார் என்றே எண்ணினோம். ஆனால் பிறகு அவர், காலமெல்லாம் என் சமுதாயத் தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவ தில்லை என்று கூறி (சாப அழைப்புப் பிரமாணத்தைச்) செய்துமுடித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் இவளைக் கவனித்து வாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது ஷரீக் பின் சஹ்மாவுக்கே உரியதாகும்என்று சொன்னார்கள். அப்பெண் நபியவர்கள் வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி (ஸல்) அவர்கள், இது பற்றிய இறைச்சட்டம் (-ஆன் விதி) மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன் என்று சொன்னார்கள்.