தொழுகைக்கு முன் சிறுநீர் மற்றும் காற்றை அடக்கலாமா?
தொழுகைக்கு முன் சிறுநீர் மற்றும் காற்றை அடக்கலாமா?
மலம், ஜலம், காற்று ஆகியவற்றை அடக்கிக் கொண்டு தொழக் கூடாது. இவற்றை வெளியேற்றி நிதானமான பின்பே தொழ வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது”
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
தொழ ஆரம்பிக்கும் போது கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை உங்களில் ஒருவருக்கு ஏற்பட்டால் முதலில் அவர் கழிப்பிடத்திற்குச் செல்வாராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உர்வா பின் ஜூபைர் (ரலி)