ஆதமுடைய மக்கள் தவறிழைப்பவர்களே!
முக்கிய குறிப்புகள்:
மாற்றப்பட்ட நிலைப்பாடுகள்
ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் தவறிழைப்பவர்களே! தவறிழைப்பவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதீ (2423), இப்னுமாஜா (4241), அஹ்மத்(12576), தாரமீ (2611), முஸ்னதுல் பஸ்ஸார் (7236), முஸ்னத் அபீ யஃலா(2922), ஹாகிம் (7617)
இச்செய்தியில் அலீ பின் மஸ்அதா அல்பாஹிலீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.
எனினும் இதே கருத்தில் அஹ்மதில் ஆதாரப்பூர்வமான செய்தி இடம்பெற்றுள்ளது.
ஆதமுடைய மக்கள் ஒவ்வெருவரும் பகலிலும் இரவிலும் தவறிழைக்கிறார்கள். பின்னர் என்னிடம் பாவமன்னிப்பு தேடுகிறார்கள். நான் அவர்களை மன்னிக்கிறேன்… என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூதர் (ரலி), நூல்: அஹ்மத் (20451)