14) இஃதிகாஃப் சட்டங்கள் சட்ட சுருக்கம்

நூல்கள்: சட்டங்களின் சுருக்கம்

  • இஃதிகாப் என்ற சொல்லுக்கு ”தங்குதல்” என்ற பொருள். பள்ளியில் தங்குவதைக் குறிக்கும். இதுவும் ஓரு வணக்கமாகும். இந்த வணக்கம் முந்தைய காலத்திலும் இருந்துள்ளது.
  • (அல்குர்ஆன்: 2:125)
  • நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.
  • (புகாரி: 813)

இஃதிகாஃப் இருப்பதின் நோக்கம்

  • அதிகமான அமல்களைச் செய்வதற்கும், அந்த அமல்கள் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவில் செய்து நன்மைகளை அள்ளிக் கொள்ள வேண்டும் என்பதே ரமளானில் இஃதிகாஃப் இருப்பதின் நோக்கம். எனவே, ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பது சிறந்தது.
  • (புகாரி: 813)

இஃதிகாஃபின் துவக்கம்

  • இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
  •  (முஸ்லிம்: 2007)

இஃதிகாபின் முடிவு நேரம்

  • இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரி பில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம். ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.
  • (புகாரி: 2018)
  • இஃதிகாஃப் இருப்பவர்கள் பெருநாள் தொழுகைக்குப் பிறகு தான் செல்ல வேண்டும் என்பதற்கு ஆதாரம் இல்லை.

இஃதிகாஃப் இருக்க கூடாரம் அமைக்கலாமா?

  • ஆண்களோ, பெண்களோ, இஃதிகாஃபின் போது கூடாரங்களை அமைப்பது கூடாது. 

இஃதிகாஃபில் பேண வேண்டிய ஒழுங்குகள்

  • நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியைத் தீண்டாமலும், அணைக்காமலும் இருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமல் இருப்பதும் நபிவழியாகும்.
  • (அபூதாவூத்: 2115)
  • குளிப்புக் கடமையானால், குளித்து விட்டு தான் பள்ளிக்குள் இஃதிகாஃபை தொடர  வேண்டும். அவ்வாறு குளிப்பதற்காக பள்ளிவாசலை விட்டு வெளியேறுவது இஃதிகாஃப் இருப்போர் மீது குற்றமாகாது.
  • (அல்குர்ஆன்:)

பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?

  • பெண்கள்களோ, ஆண்களோ, பள்ளிவாசலில் தான் இஃதிகாஃப் இருக்க வேண்டும். வீட்டில் இருப்பது பித்அத்.
  • நூல்:பைஹகீ-8573
  • அந்நிய ஆணுடன் எந்தப் பெண்ணும் தனியாக இருக்கக் கூடாது என்பது பொதுவான சட்டம். எனவே, இஃதிகாஃப் இருக்கும் பெண்ணுக்குத் துணையாக இன்னொரு பெண்ணோ அல்லது மஹ்ரமான ஆணோ இஃதிகாஃப் இருப்பது அவசியம்.
  • மாதவிடாய் பெண்கள் இஃதிகாஃப் இருக்க கூடாது. சிலருக்கு மாதவிடாய் நாட்களுக்கு பிறகும் தொடர்ந்து உதிரப் போக்கு ஏற்பட்டு கொண்டே இருக்கும். இது ஒரு நோயாகும். இந்தப் பாதிப்புள்ளவர்கள் வழக்கமான மாதவிடாய் நாட்களுக்குப் பிறகு குளித்துவிட்டு இஃதிகாஃப் இருக்கலாம்.
  • (புகாரி: 309, 310)

மற்ற மாதங்களில் இஃதிகாஃப் இருக்கலாமா?

  • அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் இஃதிகாஃப் இருந்துள்ளதால், ரமளான் அல்லாத மாதங்களிலும் நாம் இஃதிகாஃப் இருக்கலாம்.
  • (புகாரி: 2041)

ஒரு நாள் இஃதிகாஃப் இருக்கலாம்?

  • இஃதிகாஃப் இருந்தால் பத்து நாட்கள் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நாளும் கூட இருக்கலாம். எந்த மாத்தில் வேண்டுமானாலும் இஃதிகாஃப் இருக்கலாம்.
  • (புகாரி: 2032)
  • அதேசமயம், ரமளானில் லைலத்துல் கத்ரை அடைய இஃதிகாஃப் இருப்பவர்கள் கடைசி பத்து நாட்களிலும் இருப்பதே சிறந்தது. அவ்வாறுதான் நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.