பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா?

கேள்வி-பதில்: பெண்கள்

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா?

அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும்.

மனைவி, தாய், மகள், சகோதரி போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது குற்றமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இரு சக்கர வாகனம் இருந்த்தில்லை. ஆனால் அவர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்த ஒட்டகம் என்ற வாகனத்தில் தமது மனைவியை பின்னால் அமர வைத்து அழைத்துச் சென்றுள்ளதற்கு ஆதாரம் உள்ளது. இது டூ வீலருக்கும் பொருந்தும்.

أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خَيْبَرَ، وَإِنِّي لَرَدِيفُ أَبِي طَلْحَةَ وَهُوَ يَسِيرُ، وَبَعْضُ نِسَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَدِيفُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ عَثَرَتِ النَّاقَةُ،

فَقُلْتُ: المَرْأَةَ، فَنَزَلْتُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا أُمُّكُمْ» فَشَدَدْتُ الرَّحْلَ وَرَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

فَلَمَّا دَنَا، أَوْ: رَأَى المَدِينَةَ قَالَ: «آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ»

5968 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரிலிருந்து (மதீனாவை) நோக்கிப் புறப்பட்டோம். அபூதல்ஹா (ரலி) அவர்கள் சென்று கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நான் (வாகனத்தில்) அமர்ந்து கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களுடைய ஒட்டகத்தில்) அவர்களின் துணைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா) அமர்ந்து கொண்டிருந்தார். அந்த ஒட்டகம் இடறிவிழுந்தது. நான் (அந்த ஒட்டகத்தில்) பெண் இருக்கிறாரே! என்று சொன்னேன்.

பிறகு நான் (என் வாகனத்திலிருந்து) இறங்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் உங்கள் அன்னை என்று சொனனார்கள். பிறகு, நான் சேணத்தைக் கட்டினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏறிக் கொண்டு) பயணம் செய்யலானார்கள்.

மதீனாவை நெருங்கிய போது பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாகவும் (நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறோம்) என்று கூறினார்கள்.

(புகாரி: 5968)