கொட்டாவி வந்தால் அவூது பில்லாஹி என்று கூற வேண்டுமா?

கேள்வி-பதில்: மற்ற கேள்விகள்

கொட்டாவி வந்தால் அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தான் நிர்ரஜீம்

என்று கூற வேண்டுமா?

இதற்க்கு ஹதீஸில் ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்ரனர்.

التَّثَاؤُبُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا قَالَ: هَا، ضَحِكَ الشَّيْطَانُ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் தம்மால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் “ஹா“ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(புகாரி: 3289).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கொட்டாவி ஷைத்தானிடமிருந்தே ஏற்படுகிறது. எனவே, உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது இயன்ற வரை அவர் (அதைக்) கட்டுப்படுத்திக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),

(முஸ்லிம்: 5718)

 

إِنَّ اللَّهَ يُحِبُّ العُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ وَحَمِدَ اللَّهَ، كَانَ حَقًّا عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يَقُولَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، وَأَمَّا التَّثَاؤُبُ: فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَثَاءَبَ ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் “அல்ஹம்துலில்லாஹ்“ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (“அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக“ என) மறுமொழி கூறுவது அவசியமாகும்.

ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டப்படுத்தட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் (கட்டுப்படுத்தாமல் “ஹா“ என்று சப்தமிட்டுக்) கொட்டாவிவிட்டால் அதைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)

(புகாரி: 6226)

கொட்டாவி என்பது ஷைத்தானின் புறத்திலிருந்து வருவதாகும்.,என்றாலும் அதற்கு அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம் என்று கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. கொட்டாவியை இயன்றவரை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். “ஹா” என்று சத்தமிட்டு விடக்கூடாது. ஏனெனில் அதில் ஷைத்தானின் சிரிப்பு உள்ளது. எனவே,அதை கட்டுப்படுத்தத்தான் நபி(ஸல்)அவர்கள் தவிர வேறு எதை ஓதுவதற்கும் கூறவில்லை.