18) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-18
18) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-18
நபிமொழி-86
குழப்புவது ஷைத்தானின் ஆயுதம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்லீஸின் சிம்மாசனம் கடலில் மீதுள்ளது. அவன் தன் படைகளை அனுப்பி மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகிறான். இப்லீஸிடம் மிகவும் மரியாதைச் குரியவன் மக்களிடையே அதிக குழப்பம் செய்பவனே!
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நபிமொழி-87
தீமையின் வெளிப்பாடு
தீமை என்பது உனது உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்தும் மக்கள் அதை தெரிந்து கொள்வதை நீ வெறுப்பாய்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி)
நபிமொழி-88
சாபத்திற்குரிய இரு செயல்கள்
நபி (ஸல்) “சாபத்திற்குரிய இரண்டை தவிர்த்திடுங்கள்” என்றனர் சாபத்திற்குரியவை என்ன? அல்லாஹ்வின் தூதரே” என மக்கள் கேட்டனர். “மக்களின் நடைபாதையிலோ, நிழல்களிலோ மலம் கழிப்பது” என நபி (ஸல்) அவர்கள் விடை அளித்தனர்
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நபிமொழி-89
மூன்று நாட்களுக்கு மேல்
பேசாமல் இருக்க அனுமதி இல்லை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் மூன்று நாட்களுக்கு மேல் தன் சகோதரனிடம் பேசாமல் இருக்க அனுமதி இல்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நபிமொழி-90
அநீதி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதி இழைக்காதீர்கள். மறுமையில் அது பல இருள்களாகக் காட்சி தரும் கஞ்சத்தனம் செய்யாதீர்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களை அது அழித்தது; இரத்தங்களைச் சிந்துவதற்கும், இறைவன் அவர்களுக்குத் தடை செய்ததை அவர்கள் ஆகுமாக்கிக் கொண்டதற்கும் தூண்டுகோலாக இருந்தது.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)