15) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-15
15) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-15
நபிமொழி-71
பிறருடைய நிலத்தை அபகரித்தல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறருடைய நிலத்தின் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டவரின் கழுத்தில் (மறுமையில்) ஏழு பூமிகளை தொங்க விடப்படும்
அறிவிப்பவர்: சயீத் பின் ஸைத் (ரலி)
நபிமொழி-72
பூனைக்கு தீனி போடாததால் நரகம் சென்ற பெண்மணி
ஒரு பெண் ஒரு பூனையால் தண்டிக்கப்பட்டாள். அந்தப் பூனை பசியால் துடித்துச் சாகும் வரை அடைத்து வைத்திருந்தாள் அதனால் அவள் நரகம் சென்றாள். அல்லாஹ்வே மிக அறிந்தவன் அதைக் கட்டி வைத்தாய். தீனி போடவில்லை; தண்ணீர் தரவில்லை பூமியிலுள்ள புழு பூச்சிகளை உண்பதற்கு அதை அவிழ்த்து விடவுமில்லை’ என்று அல்லாஹ் கூறினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நபிமொழி-73
தொழுகையின் முக்கியத்துவம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்புக்கும் இடையே (உள்ள வேறுபாடு) தொழுகையை விடுவது தான்
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நபிமொழி-74
மண்ணறைக்குள் வேதனை செய்யப்பட்டு
கொண்டிருந்த இரண்டு நபர்கள்
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மதீனாவில் உள்ள தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, மண்ணறைக்குள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய ஒலத்தை உணர்ந்தார்கள். “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள் பெரிய செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை ஆம்! ஒருவர், சிறுநீர் (அசுத்தத்தில்) இலிருந்து தன்னை காத்துக் கொள்ளாமலிருந்தார். இன்னொருவர் கோள் சொல்லி அலைந்து கொண்டிருந்தார்” என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நபிமொழி-75
அல்லாஹ் மறுமையில் பார்க்காத, பேசாத நபர்கள்
நபி (ஸல்) அவர்கள் மூன்று நபர்களிடம் மறுமையில் அல்லாஹ் பேசவுமாட்டான்; பார்க்கவுமாட்டான்; தூய்மைப்படுத்தவுமாட்டான் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று மூன்று முறை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நஷ்டத்திற்கும் இழப்புக்கும் உரிய அவர்கள் யார் என்று கேட்டேன் தமது ஆடையை (கணுக்காலுக்குக் கீழே இறக்கிக் கட்டியவர் (செய்த உதவியை) சொல்லிக் காட்டுபவர், (அவர் எதை வழங்கினாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்க மாட்டார் பொய்ச் சத்தியம் செய்து விற்பன செய்பவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)