இலாஹி என்று பெயர் வைக்கலாமா?

கேள்வி-பதில்: குழந்தை வளர்ப்பு

இலாஹி என்று பெயர் வைக்கலாமா?

இலாஹ் என்றால் கடவுள் – இறைவன் – என்று பொருள். இச்சொல்லுடன் யா என்ற எழுத்தைச் சேர்த்து இலாஹீ என்று நெடிலாக உச்சரிக்கும் போது என் இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனைச் சேர்ந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

முதல் அர்த்தத்தைக் கவனத்தில் கொண்டால் இவ்வாறு மனிதர்களுக்கு பெயர் வைக்க கூடாது. ஏனெனில் இது மனிதனைக் கடவுளாக்குவதாக ஆகி விடும்.

இரண்டாவது அர்த்தத்தை கருத்தில் கொண்டால் அவ்வாறு பெயர் வைக்கலாம்.

ஆனாலும் தவறான இன்னொரு அர்த்தமும் அதற்கு உள்ளதால் இந்தப் பெயரைத் தவிர்ப்பது தான் நல்லது