23) இறைவனுக்கு இணையில்லை, நிகரில்லை

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்

இறைவனுக்கு இணையில்லை, நிகரில்லை

112:4 وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ

அவனுக்கு நிகராக யாருமில்லை.

(அல்குர்ஆன்: 112:4) 

 لَا شَرِيْكَ لَهٗ‌ۚ

அவனுக்கு நிகரானவன் இல்லை.

(அல்குர்ஆன்: 6:163)

وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهٗ وَلِىٌّ

ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.

(அல்குர்ஆன்: 17:111)

25:2 اۨلَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை.

(அல்குர்ஆன்: 25:2) 

இவை அனைத்தும் திருக்குர்ஆன் கூறுகின்ற கடவுள் தொடர்பான இலக்கணங்கள். இந்த இலக்கணங்கள் உரைகற்களும் இரசாயனப் பரிசோதனைகளும் ஆகும்.

நீங்கள் கடவுள் என்று நம்பக்கூடியவர்களை, நம்பக்கூடியவைகளை இவற்றுடன் உரசிப் பாருங்கள். இந்த இலக்கணங்களின் படி கல்லையோ களிமண்ணையோ கடவுளாக்க முடியாது. அதுபோல் மனிதனையும் நீங்கள் கடவுளாக்க முடியாது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த இலக்கணங்களுக்குட்படாதவர்களை கடவுளின் பட்டியலிலிருந்து தூக்கி விடுங்கள் என்பது திருக்குர்ஆன் விடுக்கும் அறிவார்ந்த கட்டளையாகும்.

இந்தத் திருக்குர்ஆனை உலக மக்களிடம் சமர்ப்பிக்க வந்த சத்தியத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் கடவுள் கிடையாது திருக்குர்ஆன் அகில உலக மக்களுக்கு இதனைப் பகிரங்கமாகப் பிரகடனப் படுத்துகின்றது.