21) கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பாரா?
நூல்கள்:
மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்
கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பாரா?
கடவுள் தான் ஏசுவாகப் பிறந்து வந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றார்கள். மற்ற சமுதாய மக்களும் கடவுள் பல்வேறு பிராணிகள் வடிவத்தில் உருவமெடுப்பார், அவதாரம் எடுப்பார் என்று நம்புகின்றார்கள்.
لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ۚ
அவனைப் போல் எதுவும் இல்லை.
கடவுளுக்கு ஒப்பு, உவமை அறவே கிடையாது. அதனால் கடவுள் எந்த மனிதரின் தோற்றத்திலும் ஊர்வன, பறப்பன, மிதப்பனவற்றில் எவரிலும் எவற்றிலும் அவதாரமெடுக்க மாட்டார், வடிவமெடுக்கமாட்டார்.