17) இறப்பே இல்லாதவன்

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்

இறப்பே இல்லாதவன், என்றும் இருப்பவன்

கடவுள் என்பவன் எப்போதும், என்றும், என்றென்றும் இருப்பவனாக, நித்திய ஜுவனாகஇருக்கவேண்டும். அவன் சாகக்கூடாது. பிறப்பில்லாதவனைப் போன்று அவன் இறப்பும் இல்லாதவன்.

اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ؕ

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.

(அல்குர்ஆன்: 2:255)