07) காளை, பசு மாடுகள் கடவுளாக முடியுமா?

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்

காளை, பசு மாடுகள் கடவுளாக முடியுமா?

யூத சமுதாயம் நகைகளிலிருந்து வார்த்து வடிக்கப்பட்ட செயற்கையான காளை மாட்டைக் கடவுளாக வணங்கினர். அவர்களை நோக்கி அவர்களது இறைத்தூதர் கண்டித்த கண்டனத்தை திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.

7:148 وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰى مِنْۢ بَعْدِهٖ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ‌ ؕ اَلَمْ يَرَوْا اَنَّهٗ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيْهِمْ سَبِيْلًا ۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِيْنَ‏

மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின் அவர்களது நகைகளால் காளைக் கன்றின் வடிவத்தை (கடவுளாக) கற்பனை செய்து கொண்டனர். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. “அது அவர்களிடம் பேசாது என்பதையும் அவர்களுக்கு எந்த வழியையும் காட்டாது என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா? அவர்கள் இதைக் கற்பனை செய்து அநீதி இழைத்தோரானார்கள்.

(அல்குர்ஆன்: 7:148) 

கடவுள் என்றால் பேச வேண்டாமா? என்று திருக்குர்ஆன் கேட்கின்றது இது போன்று தான் பசுவும் கடவுளாக முடியாது அது மட்டுமல்லாமல், அவை கடவுள் என்றால் அவை அறுக்கப்படும் போது தங்களை ஏன் தற்காத்துக் கொள்ள முடியவில்லை என்று மக்கள் சிந்திப்பதில்லை. காளை, பசு மட்டுமல்ல! ஊர்வன, பறப்பன, மிதப்பன போன்ற எந்த ஒரு பிராணியும் கடவுளாக முடியாது என்பதை இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.